அத்தியாயம் 5
அரவிந்த் சார் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் மே ஐ கம் இன் சார் என்று ஒரு குரல் வெளியே இருந்து ஒலித்தது………
வகுப்பறைக்குள் அவரை வரவேற்றார் அரவிந்த்.
சிவப்பாக ஒரு வெள்ளை bear போன்ற ஒருவர் உள்ளே நுழைந்தார்.
பாரதி : அய் டெட்டி பியர்
சாம் : ஹா ஹா
உள்ளே வந்தவர் : என்ன சார் விளையாடியாச்சா
ராம் : என்னடா Chinese மாதிரி இருக்காரு
சர்வேஷ், கவி : ஆமா டா
அரவிந்த் : Guys, ஹீ இஸ் சித்தார்த் சார், யுவர் ஃபார்மாசியூட்டிகல்ஸ் டீச்சர்.
Siddharth sir
Student: குட் மார்னிங் சார்
சித்தார்த் : குட் மார்னிங் Guys..
சாம்: ஏய் ஏய் என்னடி ஜன்னல் ஆ பாத்துட்டு இருக்க. இங்க பாரு எப்படி எல்லாரும் ஃபன் பண்ணிட்டு இருக்காங்க.
Back to present
பாரதி : சும்மா தான் டி
அவள் மறுபடியும் நினைவுகளில் தொடர்ந்தாள்.
பாரதி pov:
ஹேமா மேம், எவ்வளோ தான் Strict ஆ இருந்தாலும், எங்களுக்குனா கண்டிப்பா help பண்ணுவாங்க. Hod கிட்ட சண்ட போட்டு எங்க talent வெளியே வரணும் னு OD லாம் வாங்கி தருவாங்க. அந்த அளவுக்கு பிடிக்கும்.
வினிதா மேம், செம செம Strict. அந்த அளவுக்கு strict, அவங்க Character 50% டான் படத்துல வர எஸ்.ஜே சூர்யா மாதிரி, மீதி 50% அதே டான் Climax ல வர எஸ்.ஜே சூர்யா மாதிரி சொல்றதலாம் செஞ்சிருவாங்கலா னு. first year ல எனக்கு லாம் அவங்கள பாத்த செம கோவம் வரும். பிராக்டிகல்ஸ் ல டவுட் கேட்டா கூட திட்டுவாங்க. ஆனா அவ்ளோ Sweet அந்த மேம். பழக பழக தான் தெரிஞ்சிது அவங்க கேரக்டரே…
தென் சித்தார்த் சார் அண்ட் அரவிந்த் சார், இரண்டு பேருமே கிளோஸ் ஃபிரண்ட்ஸ். அரவிந்த் சார் எல்லாரையுமே நல்லா மோட்டிவேட் பண்வாரு, அவர் கிளாஸ் சூப்பரா நடத்துவாரு, எல்லாரும் equation நிறைய இருக்குனு பயபுடர ஆர்கானிக் ஆ அவ்ளோ இசியா நடத்துவாரு.
சித்தார்த் சார் ரொம்ப ஜாலி ங்க…. அவரும் ஒரு ஸ்டுடென்ட் ஆவே மாறி எல்லாரோட மைண்ட் செட் எப்படி இருக்கும் னு சொல்வாரு. செம Humour Sense உள்ள ஆளு.
Short ஆ சொல்லணும் னா எங்க ரெண்டு சாரும் ஒரு மினி சமுத்திரகனி மாதிரி….
சாம்: அடியே என்ன அப்பப்போ மியூட் ஆகிடுற.
பாரதி: நம்ம ஸ்டாஃப்ஸ் பத்தி லாம் flashback மாதிரி இந்த கதை படிக்கிறவங்க கிட்ட லாம் சொல்லிட்டு இருக்கேன்.
சாம்: நீ சொன்னது போதும் மீதிய கவி சொல்லிப்பான். இப்ப நீ என்ஜாய் பண்ணு……
கவி pov:
(flashback தான் வேற என்ன)
இப்படியே நல்லாதான் காலேஜ் போச்சி…. நாங்களும் ரெண்டு செம் முடிச்சி ஆல் கிளியர் பண்ணி செகண்ட் யியர் வந்தோம். எங்க பிரண்ட்ஷிப் கூட செம ஸ்டராங். செகண்ட் இயர் படிக்கிறவங்க எதற்கும் கவலை பட தேவை இல்லை. டிபார்ட்மெண்ட்டே நம்ம கண்ட்ரோல் மாஸ் காட்டிடலாம் இப்படி எல்லாம் நடக்கும் நான் பல மூவிஸ் ல பாத்திருக்கேன்.... அப்படிலாம் இருக்கலாம் நானும் நம்புன. ஆனா ரியல் லைஃப்ல எந்த மண்ணாங்கட்டியும் மூவிஸ்ல காட்டற மாதிரி கிடையாதுன்னு புரிஞ்சுகிட்டேன்..
*************
ஒரு நாள் மதிய உணவு சாப்பிடுவதற்காக ஐவரும் ஒரு மரத்தின் நிழலடியில் அமர்ந்தனர்.
பாரதி : என்ன ராம் சார் அடிக்கடி 3rd year கிளாஸ் கிட்ட சுத்திட்டே இருக்கிங்க போல..
ராம் : அப்படியா இல்லையே…
கவி, சர்வேஷ், சாம்: டேய்
ராம் : கண்டத பேசாதீங்க. எல்லாரும் சாப்பிடுங்க (முழித்தான்)
பாரதி : … நீ இப்ப படிக்கிற காலேஜ் ல நானும் ஸ்டுடெண்ட் தான் தம்பி
ராம் : ஆமா யார் இல்லனு சொன்னா….
கவி: மச்சி, அவங்க நம்ம சீனியர் டா…. நமக்கெல்லாம் அக்கா முறை வேணும்.
ராம் : டேய் யாருக்கு டா அக்கா, உங்களுக்கு மட்டும் தான் எனக்கு இல்……ல
ராம் எல்லாரையும் பார்த்தான்
சர்வேஷ்: மாட்டுனான் டா தோசை கல் மண்டையா…
ராம் சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர்…
***********************
ஒருநாள் மற்றொரு கல்லூரியில் இருந்து இவர்கள் கல்லூரிக்கு ஒரு காம்பெட்டிஷன் அழைப்பு வந்தது…
அப்போது இவர்கள் வகுப்பின் ரெப்பிரசன்டேட்டிவ் நதியா நடனப் போட்டி, தமிழ்ப் போட்டி, டிராமா போட்டிகும் பெயர் கொடுங்கள் என்று கேட்டப் பொழுது, எதையும் யோசிக்காமல் சாமிடம் கேட்டு விட்டு தமிழிப் போட்டிக்கு பெயர் தந்தாள் பாரதி.
இவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது பெரிதாக இவர்கள் வகுப்பிற்கு எந்த போட்டியும் வந்ததில்லை. இவர்கள் படிக்கும் கல்லூரியில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்போது இரண்டாம் ஆண்டு படிக்கும் இவர்களுக்கு போட்டிகள் கொடுக்கப்பட்டன. பாரதியின் வேண்டுகோளிற்கு இணங்க, இவளின் நண்பர்கள் நால்வரும் குழுவாக சேர்ந்து நடனப் போட்டிக்கு பெயர் கொடுத்தனர். வகுப்பில் மற்றொரு மாணவர்களும் குழுவாக சேர்ந்து நடனத்துக்கும் , டிராமாவிற்கும் பெயர் கொடுத்தனர்.
நதியா : இவளோதான நான் ஹேமா மேம் கிட்ட லிஸ்ட் கொடுத்துவிடுகிறேன்…அப்பதான் அவங்க காம்பெடிஷன் அன்னைக்கு OD கேட்க முடியும்
ராம் : சரி, டான்ஸ் கு நேம் குடுத்துடிங்க எந்த Staff நமக்கு சொல்லி தருவாங்க.
சர்வேஷ் : மச்சா, School ல மட்டும் தான் டீச்சர் எல்லாம் சொல்லிதருவாங்க, இங்க எல்லாம் நாம தான்.
ராம்: இஸ் இட்
கவி: யாஹ்
சாம்: ஒன்னும் பிரச்சனை இல்லை…அதலாம் நம்மலே பாத்துலாம்…
கவி: ஆர் யூ Sure..
ராம் :: நம்ம ஒன்னு பண்ணலாம், நம்ம Senior அவங்கள கூப்பிடலாம் ஆ
பாரதி : அப்படியா யாரு?
கவி: அதான் அந்த அக்கா
சாம்: final year பா அவங்க. சார் நீங்க சைட் அடிக்கிறதுக்காக லாம் அவங்கள டிஸ்டர்ப் பண்ண முடியாது….
ராம் : அப்போ விடு படிக்கட்டும்…
சர்வேஷ் : ஓகே சாங் நாளைக்கு செலக்ட் பண்ணிட்டு நம்ம பிராக்டீஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணிடலாம்.
நதியா : மேம் கிட்ட சொல்லிட்டேன். டான்ஸ் அண்ட் டிராமா பிராக்டீஸ் மட்டும் திஸ் வீக் லாஸ்ட் ஹவர் மட்டும் எடுத்துகலாம். அண்ட் இஃப் யூ வாண்ட் டு பிராக்டீஸ் ஆஃப்டர் தி கிளாஸ் ஹவர்ஸ் யூ கேன் கெட் பர்மிஷன் ஃப்ரம் அவர் HOD ஓகே வா….
சாம்: அப்போ நீயும் லாஸ்ட் ஹவர் வந்திடு எங்களோட
பாரதி : வேண்டாம்' கண்டுபிடிச்சா அவ்வளவுதான். நீங்க போங்க நான் கிளாஸ் ல நோட்ஸ் குடுத்தா எழுதுறேன். உங்களுக்கு அனுப்புவேன்.
சாம்: அவ்ளோ நல்லவளா நீ
பாரதி : நான் சொல்லல. ஊர்ல அப்படித்தான் பேசிக்கிறாங்க மை லார்ட்….
சாம்: அது சரி
பாரதி : நீ ஒன்னும் கவலபடாத, கிளாஸ்ல ஸ்டாஃப்ல யாரும் இல்லைனா நான் வந்திடுறேன்…
சாம் : அப்போ சரி டோலி …
மாணவர்கள்: குட் ஆஃப்டர்நூன் சார்…
சித்தார்த் : குட் நூன்…. அப்புறம் காம்பெட்டிஷன் கு போறவங்களாம் கிளாஸ் டைம் ல பிராக்டீஸ் பண்ண நாட் அலெளட் ஓகே.
பின்பு சிரித்துக்கொண்டே, யாராச்சும் கிளாஸ் டைம் ல பிராக்டீஸ் பண்ணனும் னு என்கிட்ட கேக்க வந்தீங்க தலைல தட்டி பூமில இறக்கிடுவேன்.
மாணவர்கள் சிரித்தனர்.
சித்தார்த் : ஆனா யாரும் பயப்படாதீங்க இந்த பில்டிங் ஸ்ராங் பூமியலாம் உங்கல வச்சி உடைக்க முடியாது.
ஓகே ஜோக்ஸ் அப்பார்ட், நவ் வீ மூவ் ஆன் டு த கிளாஸ்…. டுடே வி சீ அபௌட் அனஸ்தெட்டிக்ஸ்….
'
'
'
'
'
அவ்வளோ தான் சிம்பிள். புரிஞ்சிதா
மாணவர்கள் : எஸ் சார்…
சித்தார்த் : டேய் நான் காமெடி பண்ணல, சீரியஸா கேக்குறேன் , டவுட் நா கேளுங்க , 1000 வாட்டி கூட சொல்றேன்.
ஒரு மாணவன் : சீரியஸா புரியது சார்…
சித்தார்த்: அப்போ சரி, தென் நாளைக்கு டெஸ்ட்…
என்ன எல்லாரும் அப்படி பாகிறிங்க. ஈசியா தான் இருக்கும். இன்னக்கி டீச் பண்ணத ரிவைஸ் பண்ணாவே எழுதலாம்.
மாணவர்கள்: ஓகே சார்.
சித்தார்த்: நெக்ஸ்ட் லாஸ்ட் ஹவர் தான். பிராக்டீஸ் பண்ண போறவங்க இப்பயே போகுறதா இருந்தால் போலாம்.
ராமும் சர்வேஷம் ஒருவரைஒருவர் பார்த்து கொண்டு எழுந்து நின்றனர்.
சித்தார்த்: லாஸ்ட் பென்ச் லாஸ்ட் பென்ச் தான் டா. சரி கிளம்புங்க பிராக்டீஸ் பண்ண…
சம்யுக்தா பாரதியையும் கையை பிடித்து இழுத்துச் சென்றாள்…..
இவர்கள் சாங்கை மட்டும் தேர்வு செய்துவிட்டு ரீல்ஸ் செய்ய தொடங்கினர்.
பாரதி: அட பாவிங்களா பிராக்டீஸ் பண்ணுவிங்க னு பார்த்தா ரீல்ஸ் கேக்குதா உங்களுக்கு.
கவி: மேடம் உங்களையும் எதுக்கு கூட்டிட்டு வந்தோம் ஐஞ்சு பேரும் சேர்ந்து ரீல்ஸ் பண்ண தான்.
ரீல்ஸ் முடிந்த பிறகு… எல்லோரும் பாட்டுக்கு ஏற்றவாரு டான்ஸ் ஸ்டெப் போட தொடங்கினர். பாரதியும் இரண்டு ஸ்டெப் சொல்லிக்கொடுத்தாள்.
சர்வேஷ் : தமிழ் புலவரே நடனம் கூட ஆடுவீர்களா
பாரதி : நடனம் ஆடுவேன்.
சாம்: அப்போ நீயும் வரலாம் ல
பாரதி : ஒரு போட்டியில் தான் சேர வேண்டும் பெண்ணே
சாம்: அப்போ அத விடு டான்ஸ்ல நேம் குடு
பாரதி: மண்டைல ஒன்னு போட்டேன்னு வச்சிக்க…
சாம்: சரி சரி நீ எதும் பிராக்டீஸ் பண்ணல
பாரதி: அதான் சொன்னாங்களே ஆன் ஸ்பாட் டாபிக் தான் .....
பாரதி: Guys அப்புறம், கவி நீ கேட்ட ல சாங் சாய்ஸ் ஓகே வா னு நம்ம நாளைக்கு பிரேக் ல எனக்கு ஒரு சீனியர் தெரியும், அவங்க கிட்ட suggestion கேட்டுக்கலாம்.
கவி: ம்ம் சரி கவிஞரே
அனைவரும் பிராக்டீஸ் முடித்து விட்டு வீட்டிற்கு சென்றனர்….
தொடரும்....
படித்துவிட்டு வோட் செய்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும் நண்பர்களே......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro