Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் 3

அப்போது இரு பெண்கள் அங்கே நின்றனர். வகுப்பில் இருக்கும் ஆசிரியை அவர்கள் இருவரையும் கெட் இன் என்று கூறிவிட்டு, போத் பிலாங்க்ஸ் டூ திஸ் கிளாஸ் என்று கேள்வி எழுப்பினார். அவர்களும் ஆமாம் என்று தலையசைத்து இருவரில் ஒருவர் மூன்றாவது பெஞ்சிலும் இன்னொருவர் கடைசி பெஞ்சிலும் அமர்ந்தனர்.

அவர் அமர்ந்த பொழுது சாம் ஹாய் என்று கைகுலுக்கினாள்

சாம் MV : என்ன இந்த பொண்ணு ஒரு எக்சைட்டேஷன் இல்லாம இப்படி குழப்பத்துல இருக்குற மாதிரியே ஃபேஸ் இருக்கே.

சிறிது நேரம் கழித்து சம்யுக்தாவே முன் வந்து அப்பெண்ணிடம் பேச தொடங்கினாள்.

சாம் : ஹாய் நான் சம்யுக்தா. உங்க நேம்

பெண் : பாரதி

சாம் : நைஸ் நேம். ரொம்ப டென்ஷனா இருக்குற மாதிரி இருக்கு. என்ன ஆச்சு?

பாரதி: நான் 12th Std வரைக்குமே girls School தான் படிச்சேன். அங்கலாம் நல்லா தைரியமா இருந்துச்சு. Sudden ஆ கோயெட் காலேஜ் ஆ அதான் ஒரு மாதிரி இருக்கு

சாம் : நீங்க விருப்பப்பட்டு தான கோயெட் ஜாயின் பண்ணிங்க

பாரதி : ஆமா பா. ஒரு புது அனுபவம் கிடைக்கும் ல அதான், பழகுற வர எனக்கு இப்படி தான் இருக்கும் நினைக்குறேன்

சாம் : அதலாம் விடுங்க ஒரு பிரச்சனையும் இல்ல. ஜாலியா இருக்கலாம். நீங்க School ல எப்படி இருந்திங்களோ அந்த மாதிரி யே இருங்க என்ன இங்க கொஞ்சம் பசங்க இருப்பாங்க அதான் 

பாரதி : இப்பதான் ஒரு மாதிரி relax ஆ feel ஆகுது ரொம்ப தேங்க்ஸ் பா

சாம் : இதுல என்ன இருக்கு…. 

சாம் friends என்று கூறி கையை நீட்டினாள். அவளும் சிரித்துக்கொண்டே கண்டிப்பா என்று கூறினாள்.

முதல் வகுப்பிற்கான மணி ஒலித்தது…

கெமிஸ்ட்ரி வகுப்பின் ஆசிரியை உள்ளே நுழைந்தார். அனைவரும் வியந்து தங்களின் மரியாதை செலுத்தி அமர்ந்தனர். 

ஆசிரியை தன்னைத்தானே அறிமுகம் செய்து தன் பெயரை ஹேமமாலினி என்று அனைவரிடமும் கூறினார். சிறிது நேரம் தன்னுடைய வகுப்பு எப்படி இருக்கவேண்டும் என்று பேசிவிட்டு அனைவரையும் செல்ப் இன்ட்ரோ தருமாறு கேட்டார்.

அனைவரும் தங்களின் பெயர் ஊர் மற்றும் படித்த பள்ளியின் பெயரை கூறி விட்டு அமர்ந்தனர். 

ஹேமமாலினி : உங்க பேர் எல்லாம் போகப்போக எனக்கு பழகிடும். அண்ட் ஐ அம் யூர் கிளாஸ் இன்சார்ஜ் ஐ வில் ஹேண்டல் யூ  பாரன்சிக் கெமிஸ்ட்ரி அண்ட் இன் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.

ஆஃப்ட்ர் டூ டேஸ் வில் லெட் யூ நோ தி டைம் டேபிள் அண்ட் வில் ஸ்டார்ட் தி கிளாஸ் ஓகே.

மாணவர்கள் : ஓகே மேம்.

ஹேமமாலினி: ஓகே ஸ்டுடென்ட்ஸ் டைம்ஸ் ஆப் ஐ வில் லீவ் நவ் தேங்க்யூ

மாணவர்கள்:  தேங்க்யூ மேம்

ராம் : என்ன டா இந்த மேம் இரண்டு சப்ஜெட் எடுக்க போறாங்களாம். ஒரு ஆள் ஒன்னு ஹேண்டில் பண்ணாவே எனக்கு என்ன தான் எடுக்குறாங்க னு முடிக்கும் போது தான் விளங்கும்.

கவி : டேய் நல்லவனே நடிக்காத டா. 

கவி அங்கிருக்கும் சம்யுக்தாவை பார்த்து சைகை காட்டி கூப்பிட்டான்.

கவி : என்ன ஆல் ஓகே வா

சாம்: பாப்போம்

ராம் : இவங்க terror லாம் இல்ல பாக்க friendly மாதிரி தான் இருக்காங்க. கொஞ்ச நாள் போட்டும் பார்ப்போம்.

சாம் : பாய்ஸ் (கவி, ராம்) இவங்க பாரதி

கவி,ராம் : ஹாய் பாரதி, 

யோசித்துக்கொண்டே இவளும் ஹாய் என்று காண்பித்தாள்

சாம் : அவங்க நேம் கவி இவங்க நேம் ராம்.

பாரதி : okay (ஓகே என்று கூறி விட்டு அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்). 

நெக்ஸ்ட் பீரியட் எப்போ.

சாம் : தெரிலையே பாப்போம். ஆ பாரதி அவங்க இரண்டு பேரும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் தான் ஓகேவா. நாங்க மார்னிங் தான் அறிமுகம் ஆனோம். 

கவி ராம் பாரதி நீங்க எல்லாரும் உங்களோட நம்பர் எனக்கு குடுங்க.

அனைவரும் சம்யுக்தாவிடம் தங்களது போன் நம்பரை கொடுத்தனர் மற்றவர்களும் மற்றவர்  போன் நம்பரையும் வாங்கினர்.

கவி : பாரதி உங்க போன் நம்பர் சொல்லுங்க நாங்க ரெண்டு பேரும் சேவ் பண்ணிக்கிறோம்.

பாரதி உடனே சம்யுக்தாவின் முகத்தை பார்த்தாள். சம்யுக்தா நம்ம பசங்க தான் குடுங்கள் என்று அவளிடம் கண் காண்பித்தாள்.

ராம் உடனே தனி வாட்ஸ்அப்  குரூப் கிரியேட் செய்து தங்கள் நால்வரையும் ஆட் செய்தான்.

(எல்லா இடங்களிலும் வாட்ஸ் அப் குரூப் கிரியேட் பண்ணுவது ஒரு சாதாரணமான விஷயமே)

ராம் : கைஸ் ஒரு நல்ல குரூப் நேம் சொல்லுங்க பாப்போம்.

சாம் : கெமிஸ்ட்டு குரூப்

கவி : ஏங்க ஏன் ?

பாரதி : உங்க மூணு பேருக்கும் பரோட்டா புடிக்குமா?

மூவரும் புடிக்குமே என்று கூறினர்.

பாரதி : அப்போ ஃபுட்டீஸ் மச்சிஸ் இல்லான பரோட்டா Squad ஏதோ வைங்க

ராம் : ஏ பா அப்போ ஃபுட்டீஸ் Squad எப்படி?

கவி, சாம் : சூப்பரு

சாம் : பாரதி இப்பதான் நீங்க form கு வந்திருக்கிங்க. first period ல பாத்த பாரதியா நீங்க?

பாரதி: பழக டைம் ஆகும் சாம். பழகிட்டா இப்படி தான் பரோட்டா பிரியாணி னு பேசிட்டு இருப்பேன்.

ராம் : அது சரி. இப்ப அதலாம் நியாபகபடுத்தி டெம்ப்ட் ஆகுதே

கவி: கன்ட்ரோல் மச்சா. ஆமா இனிமே இந்த வாங்க போங்க லாம் வேணா நார்மல் ஆ பேசுங்க பா எல்லோரும்.

சாமிற்கு அந்த ஃபுட்டீஸ் Squad இல் இருந்து நோடிபிகேஷன் வந்தது.

ராம் ஆடட் என்று ஒரு போன் நம்பர் சேர்ந்தது.

ராம் : அது சர்வேஷ் தான்…. இனி நம்ம Squad தான் அவனும்…

SARVESH

பழகிய சில மணி நேரத்திலேயே எல்லாரும் நல்லா பழகிட்டாங்கலே என்று சம்யுக்தா நினைத்தாள்.

னைவரும் டன்👍 என்று கூறினர்.

ஹேமமாலினி மேம் சென்ற ஒரு 10 நிமிடங்கள் கழித்து வேறு ஒரு ஆசிரியர் உள்ளே நுழைந்தார்.

ஆசிரியர் : ஹாய் பசங்களா (என்று... வரும்போது மகிழ்ச்சியாகவும் புன்னகையுடனும் உள்ளே நுழைந்தார்.)

மாணவர்கள் : குட் மார்னிங் சார்.

சில மாணவிகள் தங்களுக்குள் சார் ரொம்ப youth ஆ இருக்காரு என்று பேசிக் கொண்டனர்.

ஆசிரியர் : வெரி ஹேப்பி மார்னிங்… என்ன செகண்ட் பீரியட் கே இவ்வளவு வாடி போய் இருக்கிங்க… சரி அப்போ உங்கள ஜாலி பண்ற மாரி இப்ப ஒரு சாங் கேம் வெக்கலாம் ஆ

மாணவர்கள் : ஓகே சார்.

ஆசிரியர் : அடடா இதுக்கெல்லாம் Chorus போடுறிங்கலே…

மாணவர்கள் அமைதி காத்தனர்

ஆசிரியர் : சரிடா கேம் கு வா னு நீங்க மனசுல நினைக்குறது எனக்கு கேட்குது.. இதோ சொல்றேன்.

சர்வேஷ் கவியிடமும் ராமிடமும் புரிஞ்சா சரி என்று முணுமுணுத்தான். இருவரும் சிரித்தனர்.

எல்லாரும் அந்தாக்க்ஷரி விளையாடலாம் ஆன Individual தான் ஓகே வா. ரூல்ஸ் என்னனா நீங்க அட்லீஸ்ட்டு 4 lines பாடனும் அப்படியே முடியுர word ல அடுத்த ஆள் பாட்டு பாடனும். யாரும் கூச்சம் லாம் படாதீங்க சரியா

வில் start. திஸ் ைசட் first row first guy Start. 

அனைவரும் பாட்டுப்பாடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல என்று தொடங்கி காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான் என்று முடிந்தது. 

ஆசிரியர் : தளபதி பாட்டுல ஆரம்பிச்சி தலைவர் பாட்டுல முடிச்சு இருக்கீங்க.. வெரி நைஸ் டா எல்லாரும் நல்லா பாடுறீங்க.

ஆசிரியர் : என்ன பசங்களா ஓகேவா இப்ப மைண்ட் பிரஷ்ஷா இருக்கா.

அண்ட் ஐ அம் அரவிந்த்குமார். ஐ அம் யூவர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி டீச்சர். என்ன பத்தி இப்போதைக்கு இது போதும்... இப்போ உங்கள பத்தி சொல்லுங்க.

வேண்டாம் வேண்டாம் அது நான் போகப் போக தெரிஞ்சுக்கிறேன். வித்தியாசமான ஒன்னு கேட்கிறேன். இங்க இருக்கற நீங்க எல்லாம் ஏன் கெமிஸ்ட்ரியை ச்சூஸ் பண்ணிங்க காரணம் என்ன?

ARAVIND KUMAR (RJ SHA ANNA)


அரவிந்த் : என்ன ஓகே ல ? எல்லாரும் சொல்றீங்களா? funny யா இருந்தாலும் பரவால்ல உண்மையை சொல்லுங்க.



👻👻👻👻👻

"Guys, அங்க கிளாஸ் கு  வினிதா மேம் வந்துர்காங்க, ஷீ வான்ட்ஸ் டூ டெல் அபௌட் பிராக்டிகல்ஸ்"  என்று ஒருவள் கேன்டினில் இருக்கும் ஃபுட்டீஸ் Squad ற்கு தெரிவித்தாள்.

ராம் : அதான நிம்மதியா கதை பேச விடமாட்டாங்களே. இந்த மேம் கு டிஸ்டப் பண்றதே வேலையா போச்சு. வாங்க போவோம் இல்லன்னா வெளிய நிக்க வச்சிட போறாங்க. 

கவி : அடேய்

பாரதி : ஒரு ரீவைண்ட் கூட பண்ண விட மாட்டிராங்களே.. அய்யோ பகவானே

சாம் : அய்யோ பெருமாளே இவ பொளம்ப ஆரமிச்சிடாலே

கவி : சரியான லுசுங்க. அடச்சீ வாங்க கிளாஸ் கு போலாம். 

அவர்கள் நால்வரும் தங்கள் வகுப்பிற்கு வேகமாக நடந்து சென்றனர். 

தொடரும்-3

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro