Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 55


அழகான மாலை இருபுறமும் பச்சை படுக்கை மகிழுந்துவின் பின் இருக்கையில் சன்னலோரத்தில் தென்றல் வருட இயற்கையை கண்டு களித்து இசை கேட்டு மகிழ்கிறேன்.

என்னவர் வண்டியை ஓட்ட அவர் அருகில் தோழன். இருவரும் கதைத்துக் கொண்டு வருகிறார்கள்.

நான் இருவரையும் பார்க்கவேயில்லை. அவர்கள் பேச்சை கேட்கவும் இல்லை. என் பார்வை எல்லாம் இயற்கையை இரசித்துக் கொண்டே இருந்தது. என் செவிகள் இசையை கேட்டுக் கொண்டே இருந்தது.

என் விரல்கள் மழைத்துளிகளை பிடித்துக் கொண்டே இருந்தது. தென்றல் என்னை வருடிக் கொண்டே இருந்தது. பாண்டிச்சேரி கடற்கரை காற்று உச்சி முகர்கிறது. என் தாய் மண்ணை நேசிக்கிறேன்.

தமிழ்நாடும் பாண்டிச்சேரியும் கைகோர்க்கும் அழகான ஊர்கள்.
இருவரின் ஊர்களே வேறு உள்ளங்கள் ஒன்று உணர்வுகள் ஒன்று
உணர்வு என்றும் தமிழ்.

இளையராஜாவும் மாலை நேரத்து தென்றலும் இதமாக தாலாட்டு பாட
கண்ணுறங்கி போனேன்.

இறங்க வேண்டிய இடம் வந்திருக்கிறது. இருவரும் இறங்க வேண்டிய
இடம் வந்துவிட்டது பிரபா என்று சொல்ல கண் விழித்தேன்.

மகிழுந்துவை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்து கடற்கரையில் கால் நனைத்தேன். பௌர்ணமி நிலவும் வண்ண விளக்குகளும். கடற்கரை ஊதக்காற்றும் அலைகளும் மணல் பரப்புகளும் ரம்மியமான அழகு.
சொல்ல மறந்து விட்டேனே எங்கள் குட்டி தேவதை என் கண்ணம்மா,
என் அம்மாவோடு அவளின் பெரியம்மாவோடு அம்மா என்று அழைத்தபடி அவள் பிஞ்சு பாதத்தால் மணல் பரப்பில் எனை நோக்கி
ஓடி வர அவளை நோக்கி மனம் பறந்து வேகமாக விரைந்து சென்று
அணைத்து முத்தமிட்டேன்.

என் மகன் என்னையும் மகளையும் ஒரு சேர அணைத்துக் கொண்டான்.

அவனை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டு இருவரையும் எப்படி இருக்கிறீர்கள் அம்மு பட்டு என்று கேட்க.

அண்ணன் தங்கை இருவரும் நன்றாக இருக்கிறோம் அம்மா என்றார்கள்.

சாப்டிங்களா பாட்டி வீட்டில் சாப்பிட்டு விட்டு தான் அம்மா வருகிறோம்...
தாத்தா பாட்டி எல்லோரும் நலமா, எல்லோரும் நலம், ஊரில் எல்லோரும் உங்களை கேட்டார்கள். ஊரில் காப்பு கட்டுவதால் தான் உங்களை அழைத்து வரச்சொன்னேன். 

இல்லை என்றால் நீங்கள் கொஞ்ச நாட்களுக்கு அங்கே இருந்திருக்கலாம்.
நானும் வெளி ஊரில் இருந்ததால் என்னால் வீட்டில் வந்து அழைத்து வர முடியவில்லை. உங்களுக்கு ஆடைகள் எடுக்க செல்கிறோம்
என்றார்கள். சரியென்று நேராக பாண்டிக்கு வந்துவிட்டோம்.

அக்கா அக்காவை அணைத்து நலமா அக்கா. மகன்கள் மாமா நலமா,
எல்லோரும் நலம் பிரபா, முதுகை தட்டிக் கொடுத்து சாரு தனியாக துணி எடுக்கிறான். ஓ அக்கா இன்னும் எடுத்து முடியலையா. நீ வேறு புடவை எடுக்க பல நேரம் பிடிக்குமே அக்கா.

ஏய், ஹா ஹா  சரி விரைந்து சென்று விரைவாக எடுங்கள்.

அவன் சாரு பிரபா அல்ல ஹா ஹா சரி பிரபா உடம்பை பார்த்துக்கொள். எங்கே உன் கணவர் உணவு சொல்ல சென்றிருக்கிறார். சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் அக்கா.

நான் கேட்டதாக சொல் வீட்டிலேயே சாப்டு தான் வந்தோம்...வீட்டிற்கு வா.
நிச்சயம் அக்கா வீட்டில் அம்மா அப்பா அண்ணா எல்லோரும் நலமா.
எல்லோரும் நலம் எல்லோரும் உன்னை விசாரித்ததாக சொன்னார்கள்.

ம் சரி அக்கா பார்த்துச் செல்லுங்கள். கண்டிப்பாக வருகிறோம்.

இவர் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

ம் ...நன்றாக தெரியுமே மாமா எப்படி இருக்கிறீர்கள் மாமா.
சாப்பிட்டீங்களா, மகளையும் மகனையும் தூக்கி கொஞ்சி நன்றாக இருக்கிறேன்.

மருமகளே மருமகனே என்கிறார்.

இருவரும் அப்பாவை கட்டிக்கொண்டார்கள். நானும் அம்மாவும்
மாமாவை சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகிறோம். இன்னும் மாமா சாப்பிடவில்லை தங்கம் சாப்பிடலாமா.

ம் சரி அப்பா நீங்கள் சென்று சாப்பிடுங்கள், நாங்கள் கடலில் விளையாடுகிறோம். பார்த்து விளையாடுங்கள், மணலிலேயே விளையாடுங்கள்.

பிரபா எங்கே அதோ குழந்தைகளோடு விளையாடுகிறாளே, பிரபா வா சாப்பிடலாம். நான் கடற்கரையில் அமர்ந்து சாப்பிடுகிறேன். உணவை இங்கே எடுத்து வரச் சொல்லுங்கள். இதுவும் நல்ல எண்ணம். இங்கேயே அமர்ந்து சாப்பிடலாம் எல்லோரும், ம்...சரி சாப்பாட்டை இங்கே கொண்டுவந்து விடுங்கள். சரி...இதோ கொண்டு வருகிறேன்.

அம்மு அம்மாவை பிடி பிடி அம்முவை இப்ப நான் பிடிக்கிறேன் பாரு,
பிடி பிடி, அலைகளில் நீரில் நனையாமல் ஓடி விளையாடும் விளையாட்டு விளையாடி. நீரில் உருண்டு பிரண்டு நீரை அள்ளி ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடி மகிழ்கிறார்கள்.

மணலை எடுத்து அள்ளி வீசிக்கொள்கிறார்கள்.

கடலில் குளித்து முடித்த பின் எல்லோரும் அவர் அவர் அறைகளுக்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு வந்து இரவு உணவை
கடற்கரை அலையோடும். மணலோடும்,காற்றோடும், இசையோடும், அன்போடும்,
சாப்பிட, பிரபா தன் பிள்ளைகளை மடியில் தாங்கி உணவை அன்போடு ஊட்டி விடுகிறாள். உணவு முடித்துபின் சிறிது நேரம் பாடல் மழலைகளின் ஆடல் எல்லோரும் மனதால் இங்கே மழலைகள் தான்.

இளையராஜா,ரஹ்மான்,இமான் என்று நீண்டுக்கொண்டே இருக்க, இந்த பொழுது நீண்டுக்கொண்டே இருக்க மழலைகள் விரும்புகிறார்கள்.
ஊஞ்சல் ஆட ஒருவரையொருவர் வேகமாக ஆட்டிவிட்டோம்.

கடற்கரையில் பாய் விரித்து சிறிது நேரம் இயற்கையோடு ஒரு குட்டி தூக்கம். மகளை அள்ளி எடுத்து தாலாட்டு பாடி தட்டி கொடுத்து மார்பு கூட்டில் உறங்க செய்தேன். மகனின் தலையை வருடிக்கொண்டிருந்தேன்.

இருவரும் உறங்கிவிட்டார்கள் நானும் உறங்கினேன்.சிறிது நேரம் கழித்து கணவரும் நண்பனும் எழுந்து விட்டு. என்னருகில் கணவர் வந்து என்னை எழுப்பி அறையில் சென்று தூங்கலாம் என்று மகனை தூக்கிக் கொள்ள மகளை தூக்கிக் கொண்டு அறைக்கு சென்றோம்.

மகளை என் அறைக்கு நான் தூக்கி சென்று படுக்கையில் கடத்தி
தூங்கிவிட்டேன். அவர்கள் மூவரும் பக்கத்து அறையில் தூங்கினார்கள்.

காலை சூரியோதயம் எழுந்து சன்னல் வழியே உலகை கண்டு ரசித்து
கண்ணம்மாவை கிளப்பி விட்டு கிளம்பி நின்றேன். இருவரும்
சன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி காப்பி குடிக்க மூவரும் கிளம்பி வந்து கதவை தட்ட கதவை திறந்து பேகை எடுத்துக்கொண்டு சென்றோம்.

பாண்டிச்சேரியையும் தமிழ்நாட்டையும் சுற்றப் போகிறோம். சுற்றுலா செமையாக இருக்கிறது, சாலையில் முன்னே நண்பனும் கணவரும் நடக்க பசங்களும் நானும் பின்னால் கடைகளை பார்த்தபடி நடந்தோம். 

அந்தந்த ஊரின் சிறப்புகளை வாங்கினோம் அதே போல் இப்பொழுதும்
வேடிக்கை பார்த்தபடி தற்செயலாக முன்னால் பார்க்க கட்டிடங்களுக்கு தேவையான கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வண்டி முன்னால் செல்ல. கம்பி ஒன்று உருவிக் கொண்டு இருந்தது. தோழனை நோக்கிய படி இருந்தது. சத்தமாக தோழா என்று கத்தினேன்.

வண்டிகளின் சத்தத்தில் கேட்கவில்லை போல. மீண்டும் என்னங்க என்று கத்தினேன் அவருக்கும் கேட்கவில்லை.

விரைவாக முன்னோக்கி ஓடி இருவரையும் சாலையில் இருந்து தள்ள முயற்சித்த உடன் கம்பி வேகமாக வர நண்பனுக்கு முன்னால் நிற்க.கம்பி ஒன்று வேகமாக வந்து நெஞ்சில் குத்தியது. இருவரையும் வேகமாக தள்ள. பின்னால் பசங்க ஓடி வர மீண்டும் இன்னொரு கம்பி உருவ
நகராமல் நிற்க சொருகியது வயிற்றில் வண்டியை நிறுத்திவிட்டார்கள்.

பின் மயங்கி விழ கணவனும் தோழனும் பிடித்துக்கொள்ள. கம்பிகளை பிடித்து இழுக்க வலியில் துடிக்கிறாள். வலிக்கிறது என்று துடி துடிக்கிறாள். மகளும் மகனும் அழுகிறார்கள். அவர்களுக்கு வலியிலும் வலிக்கவில்லை என்று நம்பிக்கை தருகிறாள். வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்ல இரத்தம் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.

உள்ளே அறுவை சிகிச்சைகள் நடக்க ரத்தம் ஏற்ற வெளியே நால்வரின்
வேண்டுதலும் உண்மையானது. பிரபா உயிருக்கு ஒன்றும் இல்லை என்று வைத்தியர் சொல்ல நால்வரும் உள்ளே சென்று பிரபாவை பார்க்கிறார்கள். பிரபா உறங்கிக் கொண்டிருந்தாள். பிரபாவின் கரத்தை பற்றியதை உணர்ந்த பிரபா எழுந்து கிளம்புங்கள் உலகை சுற்றலாம் என்கிறாள்.

உலகை காலங்கள் கடந்து மகிழ்ச்சியாக மழலைகளாக சுற்றுகிறார்கள்.
இயற்கையுடன் இசையுடன். நண்பனின் மனைவி நண்பனின் மகன் மகளோடு. முதுமைகள் கடந்தும் நட்பு தொடரும்.

நட்பிற்கு எல்லை இல்லை...!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro