5
தெருவெல்லாம் தேவதைகள் நிறைந்திருக்க
அதைப் பாடக் கவிஞர் பலர் பிறந்திருக்க
அதனாலே நம் நட்பு மறைந்திருக்க
வருகிறேன் தமிழோடு அதன் பெருமை நிலைநிறுத்த...!
உனைப் போல் நண்பனைத் தேடி
எனைப்போல் அலைந்திடும் உயிர்களும் கோடி
உயிராய் இருக்கும் நண்பனே ,
நீயோ எனக்குள் ஒருவன்
உனை நான் பெற்றதால்
நானோ ஆயிரத்திலொருவன்..!
ஊரெல்லாம் திரிந்தோம்
ஓய்வின்றி அலைந்தோம்
அளவின்றிச் சிரித்தோம்
அழகுத் தேவதைகளை ரசித்தோம்..!
தொலைவால் தொலையாது நம் நட்பு
என அறிந்தும் ,
உண்மைகள் புரிந்தும்
நீ பிரிவதை நினைந்திடும் பொழுது
கண்களின் ஓரம்
வழிந்திடும் துளிகளால் ஈரம்....!
நடித்திடும் உலகில்
துடித்திடும் உறவாய் வந்தவனே ,
சிரித்திடும் பொழுதும்,
கலங்கிய பொழுதும்
துணையாய் என்னுடன் நின்றவனே...!
தென்றல் தொட்டுச் சென்றால் இனிமை
நட்பு விட்டுச் சென்றால் தனிமை
இனிமையைக் கண்டேன் அன்று
தனிமையில் நின்றேன் இன்று !!
கவலைகள் வேண்டாம்
பிரிவினால் கலங்கிட வேண்டாம்
சென்ற வினையைச் சிறப்பாய் முடித்திடு
சிறகடிக்கும் பறவையாய் பறந்திடு
தமிழ் மொழியின் அன்பனாய்
இயற்றினேன் பலக் கவிதை
பிரிந்திடும் நண்பனாய்
பிரியா நட்புடன் முதல் கவிதை.....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro