21
கல்லில் வடித்த கவிதை போல
வானவில்லின் ஓவியம் போல
பேசும் பொற்சித்திரம் போல
இருளுக்குபின் வரும் ஜோதி போல
இதுவரை சொல்லாத கவிதை
என் உயிர் தோழனுக்காக..!
தேவையின் போது தோள்களில் சாய
துன்பத்தில் கண்ணீர் துடைக்க
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்...!
திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்....!
இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ
வருவாய் என்ற நம்பிக்கையுடன்....!
நீ மௌனமாய் அழும் ஒவ்வொரு
நொடியும் உடன் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க
உரிமை தோழனாய்...!
இனி உன் மனம்
சோர்ந்து போகும் போதெல்லாம்
உன் தாய்மடி தேவையில்லை
சோகம் தீர்த்து தோள்கொடுக்கும்
அன்புத் தோழனாய்
என்றுமே உன்னுடன் நான்....!
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத இதயம்..!
மறந்தும் நினைத்து விடாதே
உன்னை மறப்பேன் என்று...!
மீண்டும் ஒரு ஜென்மமிருந்தால்
என் தோழனாக நீ வேண்டும்...!
என் துன்பங்களையும்
உன் தோளில் சுமந்தவனே
நீ எனக்கு நண்பன் அல்ல....!
இன்னொரு தகப்பன்
உள்ளம் மறக்குதில்லை உன்னை..!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro