17
நண்பா...!
நீயும் நானும் தெருவில்
கைகோர்த்து நடந்த போது
அறிமுகமானோம்
என்னை பற்றி
உனக்கும்
உன்னை பற்றி
எனக்கு தெரியும்
காலத்தின் கட்டாயம்
நாம் பிரிந்திருக்க
நான் அயல் நாட்டில்
நீயோ நம் நாட்டில்
பாவை ஒருத்தியுடன்
உன் காதலை பகிர்ந்தேன் என்றாய்
போலியான காதலுடன்
நெருங்குபவர்கள் பலர்
நீ ஏமாந்துவிடாதே
உன்னவளை பற்றி
எனக்கு தெரியாது
அவள் எப்படி என்றும்
நான் அறிந்ததில்லை
உனக்காக எதையும்
செய்வாள் என்றால்
அவளுக்காக நீ
உயிரையும் கொடு
என்னை போல்
உன்னை புரிந்து கொள்ள
வேறொரு பாவை
இருக்கிறாள் சந்தோசம்
அவள் உன் மீது
வைத்த அன்பை
என்றும் வெறுக்காமல்
பார்த்து கொள்
நீ வைத்த அன்பும்
மாறமல் பார்த்து கொள்
உன்னவளும் நீயும்
சந்திக்கும் வேலை
என்னை பற்றி
அதிகம் பேசாதே
உன்னை முழுமையாக
புரிந்து கொண்டவள்
அவளாகதான் இருக்க
என்னுவாள்
நாம் சந்திக்கும் வேலை
பகிர்ந்து கொள்வோம்
நம் நட்பை
உன்னருகில் இருந்து
உன்னை காலமெல்லாம்
பார்த்து கொள்ள
ஒருத்தி வந்துவிட்டாள்
புரிந்து கொண்டால்தான்
காதலும் நட்பும்
உனக்காக நான்
அவளுக்காக நீ என்றும்
நட்புடன் உன் தோழன்....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro