15
எனக்கு நட்பு நடத்திய
நட்பு வனம் நீ
எனக்கு நண்பனாய் வந்து
தாயுமானவனே
தந்தை போல் நின்றவனே
பிள்ளை போல் சுமந்தவனே
உனக்குள் கருவறை இருந்திருந்தால்
மீண்டும் உயிர் கொண்டிருப்பேன் அதில்,
என் கைக்குள் அடங்கிய
நட்பு வானமே...!
உன் தோள்களுக்குள் தொலையும் வரை
புரியவில்லை எனக்கு தோழமையின் வலிமை
வாழ்வை நட்புமயமாக்கினாய்
நந்தவனமாக்கினாய்
உனக்கு சொந்தமானவனாக்கினாய்
எந்தன் மானம்
உந்தன் மானம் என்றாக்கினாய்
உந்தன் மனம்
எந்தன் மனம் என்று உணர்த்தினாய்
புது உலகம் என் வசம் ஆக்கினாய்
போதும் என்று உன்னிடம்
ஏதும் தோன்றவில்லை எனக்கு
மீண்டும் மீண்டும் உன் நட்புக்குள்ளே
உயிர் கொள்ளத் துடிக்கிறது மனது
இந்தியப் பெருங்கடல் கடந்து
எனக்கோர் இன்னொரு
இதயம் கண்டெடுத்திருக்கிறேன் நான் ...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro