பதில்கள்
நான் உங்க எல்லோரோடயும் வில்லி ஜானவி பேசுறேன். என்கிட்ட நீங்க எல்லோருமே கேட்குறது ' நான் ஏன் சதீஷ தேடிப்போகல, அவன் போனதும் ஏன் அவன பத்தி விசாரிக்கல அப்புறம் திவ்யா மேல கோவம்னா ஏன் மித்ரன் குடும்பத்த பழி வாங்குற'.
இது எல்லாத்துக்குமே ஒரே பதில் காதல்தான். நான் சதீஷ காதலிச்சேன் அத எனக்கு சரியா சொல்ல தெரியல, சொல்லனும்னு நினைச்சப்போ காலேஜ்ல அந்த பிராப்ளம் ஆச்சு. அதனாலதான் திவ்யா மேல அவ்வளவு கோவம் எனக்கு. நமக்கு ஒருத்தங்க மேல கோவம் இருக்கும் போது அவங்க மேல இன்னொருத்தங்க அதிகமா பாசமா இருந்தா நமக்கு அவங்க மேலயும் கோவம் வரும். அந்த கோவம்தான் மித்ரன் மேல.
நீங்க எல்லாம் கேட்கலாம் உன் காதல் அவ்வளவு பெரிய அமரக் காவியமான்னு. ஒவ்வொருத்தங்களுக்கும் அவங்க அவங்க காதல் பெருசுதான்பா. என் காதலன நான் தூக்கி வீசிட்டேன் ஆனா என் காதல என்னால தூக்கி வீச முடியல. என் காதல் என்னைக்கும் என் மனசுல இருக்கும். பார்க்கலாம் ரோஹித்தால என் காதலன் இல்லாம இருக்குற காதலுக்கு காதலனாக முடியுமான்னு.
கடைசியா ஒன்னு சொல்ரேன் திவ்யாவையோ இல்லை மித்ரனையோ கொல்லனும்னா நான் வேற ஏதும் பண்ணிருப்பேன், ஆனா என் நோக்கம் அவங்கள கஷ்டபடுத்தனும். கடைசியா அவங்களுக்கு 50 லட்சம் கொடுக்காம கூட என்னால ஏமாத்திருக்க முடியும். ஏதோ என் மனசுக்கு அது சரியா படாததனாலதான் நான் அத கொடுத்தேன்.
ஹேய் ஜானவி போதும் பேசினது இரு நானும் கொஞ்சம் பேசுறேன். நான் யாருன்னு பார்க்குறீங்களா நாந்தான் ரோஹித்.
என்கிட்ட நீங்க கேட்டது ஒன்னே ஒன்னுதான். பொண்ணுங்கன்னாலே உனக்கு உடல் சுகத்துக்கு மட்டும்தானா, உன் அம்மாவும் ஒரு பொண்ணுதானேன்னு. நீங்க எல்லாம் அதிகமா டிராமா,நாவல்ஸ் படிச்சி கெட்டு போயிட்டீங்க. கொஞ்சம் நியூஸ் பேப்பர்ஸும் படிங்க.
5 வயசு குழ்ந்தை, தன் பொண்ணோட ப்ரெண்டு, பக்கத்து வீட்டு அக்கா, தங்கச்சி ஏன் தன் சொந்த பொண்ண கூட தப்பான நோக்கதுல பார்க்குறவன்லாம் வாழுற சமூகத்துலதான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். நம்ம என்ன மாதிரி சமூகத்துல இருக்கோம், நம்ம மனசு எதுல விருப்பமா இருக்குங்குறத வெச்சிதான் நம்ம சிந்தனை இருக்கும். அதுக்குன்னு பொண்ணுங்க பற்றிய என்னோட எண்ணம் சரின்னு சொல்ல வரல்ல. ரொம்ப தப்புதான், எனக்கு அத புரிய வெச்சதே உங்களுக்கு எல்லாம் ரொம்ப சிம்பலா தோன்றிய என் தேவதையோட காதல். எல்லோரும் எனக்காக உங்க அண்ணா கிட்ட சொல்லி என்னையும் என் டார்லிங்கையும் சேர்த்துவெச்சிடுங்கப்பா.
அப்புறம் லாஸ்ட்டா ஒரு கதைன்னு இருந்தா அதுல வில்லன் வேணும்ல. சோ நாங்க இது குடும்பமா உங்க எல்லோருக்கும் பிடிக்காத வில்லங்களாக இருந்துட்டு போறம். ஆனா நான் இந்த லூசு ரைட்டர் கிட்ட கேட்டான், உனக்கு யார ரொம்ப பிடிக்கும்னு.லஅவன் சொன்ன ஒரே பதில் மை டார்லிங்க் ஜானு என்று. அவன் எப்படி என் டார்லிங்க மை டார்லிங்க்னு சொல்லலாம்.சரி சரி பரவாயில்லை பய புள்ள பிழைச்சி போகட்டும்.
நாந்தான் ஷாக்சி பேசுறேன்.. ஏன் என்னால என்னோட கடந்த காலத்துல் நடந்த மோசமான சம்பவங்கள்ள இருந்து வெளில வர முடியலன்னு. உங்களுக்கு ஒன்னு தெரியுமா சில விசயங்கள் நம்ம ஆழ் மனசுல பதிந்திச்சின்னா நம்மலாள சாகுர வரைக்கும் மறக்க முடியாது. சில நேரங்கள்ள நம்ம அத மறந்திருப்போம். ஆனா அந்த விசயத்த ஞாபகபடுத்துற மாதிரி ஏதும் நடந்ததுன்னா நமக்கு பழசு எல்லாமே நினைவுகு வந்திடும். அப்புறம் கொஞ்ச நாளா எனக்கு மித்ரன ரொம்ப பிடிக்கும் . ஏன்னு கேட்குறீங்களா அவன் ஒருத்தந்தான் எனக்கு நடந்த எல்லாம் தெரிஞ்சிருந்தும் என்கிட்ட பரிதாபப்படாம ரொம்ப சாதாரனமா பேசுறான். அதுனாலயே ஐ லைக் ஹிம் சோ மச். ஆனா லவ் பண்றேன்னானு கேட்டா தெரியல. பழச மறந்துட்டு வாழ்ற வழிய பாருன்னு சொல்ரவங்களுக்கு ஒன்னு சொல்லட்டா. சொல்ரது ரொம்ப ஈசிங்க, வாழ்ந்து பாருங்க அப்போ புரியும்.
எனக்கு எந்த ஆம்பளய பார்த்தாலும் இவன் நம்மல கெடுத்திருப்பான, இவன் கெடுத்திருப்பான்னே இருக்கு. இப்படி எல்லோரையும் சந்தேகப்பட்டு வாழ்க்கை வாழ்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.
ஒரு வேலை நாளைக்கு நான் மித்ரன கல்யாணம் பண்ணி நாங்க எல்லோரும் ஒன்னா இருக்குறப்போ யாரச்சும் கெட்டுப்போனவளயா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு மித்ரன்ன பார்த்து கேட்டா நான் அங்கயே செத்துடுவேன். நான் செத்து போறது நல்லமா இல்லை இப்படி உசிரோட இருக்குறது பெட்டரா.
ஆனா ஒரு நாளைக்கு எனக்கும் குடும்ப வாழ்க்கைல ஆசை வரலாம். அந்த நேரத்துக்கு என் மனச நான் ரொம்ப திடப்படுத்தி என் வாழ்க்கைய வாழ ஆரம்பிப்பேன். ஆனா அதுக்கான நேரம் இன்னும் வரல்ல. வரும்னு நம்பிக்கை இருக்கு. அப்படி ஒரு வேல வராம போச்சின்னா நான் இப்படியே இருந்திர்ரேன். இப்பவும் சொல்ரேன் எனக்கும் மித்ரன ரொம்பவும் பிடிக்கும்.
நான் உங்க மித்ரன் பேசுறேன். என்னடா பொண்ணுங்க பக்கமே பார்க்காம இருந்த நீ அடுத்தடுத்து 2 பொண்ணுங்கள லவ் பண்றேன்னு சொல்ரியேன்னு என்மேல எல்லோரும் கடுப்பா இருக்குறது ரொம்ப் தெரியுது. ஏங்க நானும் இரத்தமும் சதையும் சேர்ந்து படைக்கப்பட்ட சாதாரன ஆளுதான். எனக்கும் உணர்வுகள் எல்லாம் இருக்கும். உங்களுக்கு திடீரென்று ஏதாச்சும் கிப்ட் ஒவ்வொரு நாளும் வருது. ஆனா அது யாருன்னு தெரியல. திடீரென்று உங்களுக்கு ஏதும் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்கும் அந்த கிப்ட் அனுப்பின ஆளு வந்து உங்கள காதலிக்கிறேன்னு சொன்னா என்ன செய்வீங்க. அதையேதான் நானும் செஞ்சேன். அப்புறம் அந்த காதல் ஒரு பொய்யின்னு அவங்களே சொல்லிட்டாங்க. அதுக்கு நடக்கவே முடியாதுன்னு இருந்த என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன், அதுவும் காதலிக்கிறேன்னு ஷாக்சி சொன்னப்போ எனக்கு அவ மேல ஒரு பிடிப்பு வராம இருக்க நான் என்ன ஜடமா. எனக்கு ஷாக்சிய காலேஜ்ல இருந்தே பிடிக்கும். ஏன்னா எனக்கு சரி சமமா அவதான் மல்லுக்கு நிப்பா. இனிமே நடக்கவே முடியாதுன்னு இருக்குறவன்கிட்ட ஒரி பொண்ணு காதலிக்கிறேன்னு சொன்னா சினிமால வேணும்னா அவன் அவ காதல அக்சப்ட் பண்ணிக்காம இருக்கலாம். என்னால எல்லாம் அப்படி இருக்க முடியாதுப்பா.
ஒரு தடவை காதல் ருசி கண்டா அது காலத்துக்கும் தேவைப்படும். எனக்கு பொண்ணுங்க அன்பு என் சின்ன வயசுல இருந்தே கிடைக்கல்ல. ஒரு வாட்டி கிடைச்சது. இனி எனக்கு அது ஆயுசுக்கும் தேவை. பெண் என்பவள் கடவுளிடம் இருந்து ஒரு ஆணுக்கு கிடைக்கும் விலை மதிப்பற்ற பரிசு. நான் அந்த பரிச என்னைக்குமே வீணாக்க மாட்டேன்.
ஹாய் ப்ரெண்ட்ஸ் நான் தான் உங்க வாயடி திவ்யா. என்கிட்ட கேட்ட ஒரே கேள்வி நீ அர்ஜுன லவ் பண்ணிய இல்ல ஜானவிய லவ் பண்ணியான்னு. நீங்க எல்லோரும் கெட்ட பசங்கப்பா. நான் எப்படி ஜானவிய.. ஹிஹி... கூல் கூல்.
அர்ஜுன காதலிச்சாலும் அவங்க குடும்பத்துல ஒருத்தங்க என்மேல கொலைவெறி கோவத்துல இருக்காங்க. ஆனா எதுக்குன்னு தெரியல. அப்படி இருக்கும் போது நான் எப்படி அந்த வீட்டுல போய் வாழ்றது, அது ப்ராக்டிக்கலா இருக்குமான்னு கொஞ்சம் யோசிங்க.
நாந்தாம்மா அப்பா பேசுறேன்ன். ஜானவியும் எனக்கு பொண்ணு மாதிரிதானேமா. நான் எப்படி அவள சந்தேகபட முடியும். சரி அவ ஏதோ கொவத்துல பண்றா. பார்க்கலாம் எவ்வளவு நாளைக்கு இது போகுதுன்னு.
கடைசியா ஷாக்சிய யாரு இப்படி பண்ணாங்கன்னு எல்லோருமே கேட்குறீங்க. வாழ்க்கைல எல்லா கேள்விகளுக்கும் பதில் நமக்கு கிடைக்காதுப்பா. அது போலதான் இதுவும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro