Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தென்றல் 7

நாட்கள்‌ செல்ல செல்ல காலேஜில்‌ திவ்யா எல்லா விடயங்களிலும்‌ முதன்மையானவளாக திகழ எல்லோருக்கும்‌ மிகவும் பிடித்தமானவளாக மாறியிருந்தால்.ஒரு சில‌ மாணவர்களை தவிர மற்ற எல்லோரும் எதற்கு எடுத்தாலும் திவ்யா ,திவ்யா‌ என்று சுற்றும் அளவுக்கு மிகவும் பேமஸ் ஆகி இருக்க ஆண் மாணவர்களோ அவளின் அழகில்‌ மயங்கி‌ அவளது தோழமை மட்டும்‌ கிடைத்தால்‌ போதும் என்று அவள் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தனர். பெண் மாணவிகளோ அவளை‌ தத்தமது கேங்க்களில் சேர்த்துக்கொள்ள‌ மிகவும் சிரத்தை‌ எடுத்தனர்.காரணம் அழகிலும் சரி, படிப்பிலும் சரி திவ்யா சூரப்புலியாக திகழ்ந்தாள்.ஆனால் திவ்யாவோ பாராபட்சம்‌ இன்றி எல்லோருடனும்‌ சகஜமாக பழகினால்.

கல்லூரியில் சேர்ந்து 3 மாதங்களுக்குள் அவளிடம் கல்லூரி லெக்சரர் ஒருவரையும் சேர்த்து 12 லவ் ப்ரபோசல் வந்திருந்தது.எல்லாவற்றையும் நாசூக்காக தவிர்த்தவள் எல்லோருடனும் சகஜமாகவே பழகினால்.இவை‌‌ இப்படி‌ இருக்க அவளுக்கு‌ லவ் ப்ரபோசல் செய்த லெக்சரர் அஜய் அவளை விடாது பாலோ செய்து கொண்டிருப்பதை‌ அறிந்த மித்ரன் ஒரு நாள் கான்டீனில் இருந்த சதீசை கூப்பிட்டு

" இங்க பாரு சதீஸ், உங்கண்ணன் பண்றது கொஞ்சமும் சரியில்லை.திவ்யா உங்கண்ணன லவ் பண்ணலைன்னு சொல்லியும் அவன்‌ கேட்குற மாதிரி‌ தெரியல.ரொம்ப ஓவரா பண்ணிகிட்டு இருக்கான்.எல்லா நாளும்‌ நான்‌ ஒரே மாதிரி‌ இருக்க மாட்டேன்.ஒரு நாளைக்கு அவனுக்கு செமத்தியா அடி விழும் அப்போ எங்கிட்ட வந்து‌ எதுக்கு‌ இப்படி பண்ணேன்னு கேட்டின்னா உனக்கு விழும்.சொல்ரது புரியுதா" என்று கேட்க சதீஸ் எதுவும் பேசாமல் நின்றவன் சுதாகரித்து

" என்ன மச்சி லவ்ஸா.சொல்லவே இல்ல.நீ அவள லவ் பண்றேன்னு அண்ணன்கிட்ட சொன்னா அவன் எதுக்கு அவ பின்னாடி சுத்த போறான்.நீ டென்சன் ஆகாத .உன் ஆளு பின்னாடி அவன சுத்த வேணாம்னு சொல்ரேன்" என்றவனை மித்ரன் பளார் என்று அறைந்தவன்

" அடிங்க, நான் என்ன சொல்ரேன் நீ என்னடா பேசுர.இதுதான் லாஸ்ட் வார்னிங்க்.இனிமே அவ பின்னாடி அவன் சுத்தினான் அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் கொன்னு எரிச்சுடுவேன்.மைன்ட் இட்" என்று கூறி செல்ல எல்லோரும் சதீசை ஒரு மாதிரியாக பார்க்க அவனுக்கு அவமானமாக‌ இருந்தது.

ஒரு நாள்‌ இரவு தன்‌ தோழியின்‌ தாய்க்கு சுகமில்லை என் அறிந்தவள் அவசரமாக இரத்தம் தேவைப்பட மாலை பொழுது அந்தி சாயும் நேரம் ஹாஸ்பிடல் சென்று இரத்தம் கொடுத்துவிட்டு நேர தாமதமாகி வந்துகொண்டிருந்தவளை கண்ட மித்ரன்

'இவ இந்த நேரத்திற்கு எங்க போயிட்டு வாரா.இவ நடந்து வர்ர நடையே சரியில்லையே.விட்டா கீழ விழுந்துடுவா போல இருக்கு' என மனதுக்குள் நினைத்தவன் தனது காரின் கண்ணாடியை இறக்கி விட்டு அவளை நோக்கி

" ஏய் இன்னேரத்துக்கு எங்க போயிட்டு வார.ஆமா நீ ஏன் இப்படி தடுமாறிக்கிடே வர" என்று கேட்க அப்படியே மயக்கமானவளை மித்ரன் பதறி கீழே விழுந்த அவளை தனது காருக்குள் கிடத்தி அவளின் முகத்தில் தண்ணீரை தெளிக்க லேசாக கண் முழித்தவள்

" அண்ணா பசிக்குது" என்றவளை கண்களில் கண்ணீருடன் அப்போதுதான் Costa Coffe இல் வாங்கி ice coffe மற்றும் sandwich ஐ கொடுத்தவன் பசியில் அவள் உண்ணும் அழகை ரசித்தான்.அவளுக்கு இருந்த பசியில் எல்லாவற்றையும் லபக் லபக் என வாய்க்குள் திணித்தவள் கடைசியாக இருந்த ஒரு சிறிய சான்ட்விட்ச் துண்டை அவனுக்கு வேண்டுமா என சைகையால் செய்து கேட்க அவனோ சிரித்துக்கொண்டு

" பரவாயில்ல, நீயே சாப்பிடு.நான் இப்பதான் சாப்பிட்டேன்" என்றான்.எல்லாவற்றையும் சாப்பிட்டவள் ஐஸ் காபியையும் குடித்து முடிக்க அவனோ புன்னகை மாறாமல் இருப்பதை கண்ட திவ்யா

" அண்ணா , நீங்க சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா.அதவிட்டுட்டு ஏன் எப்ப பாரு உர்ருனு இருக்கீங்க.இனிமே எப்போமே சிரிச்சிகிட்டே இருங்க" என்றவளை மித்ரன் மனதுக்குள்

'இவ பெரிய வாயாடியா இருப்பா போலயே' என்று நினக்க அவன் நினைத்ததை அப்படியே அவள்

" என்னடா இவ இவ்வளவு பெரிய வாயாடியா இருக்காளேன்னு யோசிக்கிறீங்களா " என்று கேட்க முதலில் திகைத்தவன்

" ஆமா " என்றவன் பின்னர்

" இல்லை .நீ சாப்பிட்டு கொண்டிருந்தத பாத்திக்கிட்டு இருந்தனா.எனக்கு இப்படி ஒரு தங்கச்சி இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்குமேன்னு தோனிச்சுடா" என்றவனை

"இப்ப மட்டும் என்னவாம், நான் உங்கள அண்ணான்னுதானே சொல்ரேன்.நீங்கதான் இன்னமும் என்ன தங்கச்சின்னு சொல்லல" என்று கூற அவனோ என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்க மித்ரன்

" ஆமா இந்த நேரத்துக்கு எங்க போயிட்டு வர்ரே?" என்றவனை

" இல்லண்ணா , நம்ம தேவியோட அம்மாக்கு உடம்புக்கு முடியாம போயிடுச்சி.ஒவ்வொரு மாசமும் யாராச்சும் ஒருத்தர் மாத்தி மாத்தி ப்ளட் டொனேட் பண்ணிகிட்டு இருக்காங்க.இந்த மாசம் நான் வர்ரேன்னு சொன்னேன்.அதான் போயிட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடிச்சு.லன்ச் டைம் ஒண்ணுமே சாப்டல்லயா அதனால கொஞ்சம் மயக்கம் மாதிரி வந்திடுச்சி.நல்லவேலை நீங்க வந்தீங்க .இல்லன்னா நான் இங்க ரோட்லயே பாய போட்டு படுத்திருக்க வேண்டியதுதான்" என்று கூறி சிரித்தவளை

" சாப்பிடாம என்ன ------ கு போன நீ.லூசா உனக்கு " என்று உரிமையாக திட்டிய மித்ரனை ரசித்தவள்

" இல்லண்ணா எப்போமே ப்ளட் டொனேட் பண்ண போனா சாப்பிட ஏதும் கொடுப்பாங்க.ஆனா இது நம்ம தேவைக்காக கொடுக்குறதனால ஒன்னுமே தரலண்ணா" என்று தனது முகத்தை அப்பாவியாக வைத்து கூறியவளை இதற்கு மேலும் திட்ட மனம் வராமல்

"சரி நீ இப்போ வா.நான் உன்னை ஹாஸ்ட்டல்ல விட்டுட்டு போறேன் " என்றவனை அவனின் மனதில் என்ன உள்ளது என்பதை அறியாத திவ்யா

" சரிண்ணா " என்றால்.அவளை ஹாஸ்டலில் விட்டுட்டு மித்ரன் வீடு செல்லும் வழி முழுவதும் திவ்யாவின் குறும்புகளை மனதில் அசை போட்டுக்கொண்டே சென்றான்.அவளுடன் பேசியது சில நிமிடங்கள்தான் என்றாலும் அவள் அவன் மனதை ஒரு தங்கையாக ஆக்கிரமித்து இருந்ததை அவனால் உணர முடிந்தது.

அடுத்த நாள் காலை காலேஜ் சென்ற மித்ரனுக்கோ தலைகால் புரியாமல் கோவம் பொத்துக் கொண்டு வந்தது.எல்லோரும் அவனையே ஒரு மாதிரி பார்க்க அவனுக்கு கோவம் இன்னும் அதிகமாகி காலேஜ் காண்டீனில் ஒட்டி இருந்த நோட்டீசை கிழித்தவன் அதில்

" தனி ஒருவனும் காதல் கொண்டேன் நாயகியும் இரவு நேரம் ,தனிமையில் காரில் கசமுசா" என்றிருக்க ஏதோ தோன்றியவன் உடனே சதீசை தேட ஆரம்பித்தான்.

அதே நேரத்தில் அவ்விடத்துக்கு வந்த திவ்யாவின் தோழி ஒருத்தி ஹாஸ்டலில் திவ்யா பேச்சு மூச்சிமன்றி இருந்தவளை இப்போதுதான் ஹாஸ்ப்பிடலில் சேர்த்ததாக கூற எல்லோரும் இந்த நோட்டீசை கேள்விப்பட்டுதான் அவள் தற்கொலை முயற்சி மேற்கொண்டாள் என்று பேசிக்கொண்டனர்.

இதை கேட்டதும் ஆத்திரம் மேலோங்கியொருந்த மித்ரன் சதீஸ் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை காண அவ்விடம் சென்று அவனை தாறுமாறாக அடிக்க துவங்கினான். அங்கிருந்தவர்கள் எவ்வளவு சமாதானம் செயதும் அவனை கட்டுப்பாடுத்த முடியவில்லை.உடனே அங்கிருந்த சதீஷின் நண்பன் அவனின் அண்ணனுக்கு கால் செய்ய அவ்விடத்துக்கு வந்த அஜய்க்கும் தாறுமாறாக அடி விழத்துவங்கியது.

கீழே கிடந்த கட்டை ஒன்றை எடுத்து சதீசின் தலையில் அடிக்க அவனுக்கு தலையில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது.

இந்த கலவரத்தில் யாரோ போலீசுக்கு கால் செய்ய அந்த ஏரியா இன்ஸ்பக்டர் அஜய்க்கு வேண்டியவர் என்பதால் உடனே மித்ரனை அரஸ்ட் செய்து போலீஸ் ஸ்டேசன் கூட்டி சென்றார்.

இங்கு திவ்யாவை ஹாஸ்பிடலுக்கு பார்க்க சென்ற ஷாக்சி

" ஏய் என்னடி இப்படி பண்ணிட்ட.எவனோ ஒருத்தன் உன்ன தப்பா சித்தரிச்சு மொட்ட நோட்டீஸ் போட்டான்னதுக்காக இப்படி சூசைட் அட்டம்ப்ட் பண்ணுவியா" என்று திட்ட தொடங்கிய ஷாக்சியை

" ஏய் லூசு ஷாக்சி, யாரு சூசைட் அட்டம்ப்ட் பண்ணா.ஆமா காலேஜ்ல என்ன நடந்தது.என்ன நோட்டீஸ் அது" என்று கேட்க எல்லாவற்றையும் விலாவாரியாக சொன்ன ஷாக்சியிடம்

" அய்யோ ஷாக்சி, இதுக்குலாம் போய் யாரும் சூசைட் அட்டம்ப்ட் பண்ணுவாங்கலா.தனியா ஆஸ்ரமத்துல வளர்ந்த எனக்கு எவ்வளவு டார்ச்சர் வந்திருக்கு தெரியுமா.அதையே நான் கணக்கெடுக்காம விட்டவ.இது ஒரு பெரிய விசயமா? நேத்தைக்கு நைட் ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக்காம எனக்கு புட் பாய்சன் ஆயிடுச்சி.அதுவும் நேத்து நான் ப்ளட் டொனோட் பண்ணேனா அதுல கொஞ்சம் ஓவரா சீன் ஆகி மயக்கமாகிட்டேன்.இதுக்கு போய் நீங்கல்லாம் இபப்டி நினைச்சிங்களேன்னு நினைக்கும்போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.ஆமா இப்போ அண்ணா எங்க" என்று கேட்க ஷாக்சியோ

" உங்க நொண்ணன் சதீச அடிச்ச அடில மண்டை உடஞ்சி இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கான்.அந்த இன்ஸ்பெக்ட்டர் வேற அஜய்யோட ப்ரெண்டாம்.இதுல உங்கண்ணன் அஜய்ய வேற அடிச்சிருக்காரு.என்னாகுமோ தெரியலயே" என்று மித்ரனுக்காக கவலைபட்ட ஷாக்சியை திவ்யா

"ஒரு பிரச்சினையும் இல்ல.வா முதல்ல நம்ம போலீஸ் ஸ்டேசன் போகலாம்" என்ற திவ்யாவை நோக்கிய ஷாக்சி

" என்னடி நீ இவ்வளவு ஈசியா ஏதோ ரயில்வே ஸ்டேசன் போற மாதிரி வா போகலாம்னு சொல்ர.அது போலீஸ் ஸ்டேசன்டி" என்றவளை திவ்யா

" ஹேய் ஷாக்ஸ் ப்ளீஸ்டி.எனக்கு உடம்புக்கு முடியாம இருக்கு.இல்லன்னா நான் தனியாவே போய்க்குவேன்.ப்ளீஸ்டி இந்த ஒரு வாட்டி மட்டும ஹெல்ப் பண்ணுடி" என்று கெஞ்சியவளை ஷாக்சி ஏதுவும் எதிர்த்து பேசாமல்

" சரி வா போகலாம்.ஆனா அப்பா கேட்டா நீதான் பேசிக்கனும்" என்றவளை

" யாரு டார்லிங்கா..ஒரு ப்ராப்ளமும் இல்ல.அவர நான் பார்த்துக்கிறேன்" என்று கண்ணடித்தால்.

----+++++

கவிதை விரும்பிகள் PriyaRiya2 வின்
"விழியவன் தீண்டல்" படிங்க.
நல்லா இருக்கும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro