தென்றல் 5
எந்த கவலையும் இன்றி வானில் சிறகடித்து பறக்கும் பறவை போல தன் வாக்கையில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்த ஷாக்சிக்கு ஒரு சில நாட்களில் நடந்த சம்பவங்கள் அவள் வாழ்க்கையை சிறகொடிந்த பறவை போல மாற்றிவிட்டது.
ஹாஸ்பிடலில் இருந்து வந்து இரு வாரத்தில் இதுவரை நடந்து முடிந்த எல்லாவற்றையும் விட பெரிய ஒரு இடி அவளுக்காக காத்துக்கொண்டிருந்தது.
வீட்டின் காலிங்க் பெல் அடிக்க கதவை திறந்தவள் அங்கு அவர்களின் கடையின் அக்கவுண்ட்ஸை கவனித்துக்கொள்ளும் சுந்தரம் நின்று கொண்டிருப்பதை கண்டவள்
"வாங்க அங்கிள் எப்படி இருக்கீங்க"என்று கேட்க அவரோ
"இருக்கேன்மா.அப்பா போனதுக்கு அப்புறம் ரொம்பவே கஷ்டபடுறேண்டா.தனியா எதுவுமே பண்ண முடியல.அதான் என்ன பண்ணலாம்னு உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வந்தேன்"என்றவரை
"சரி சொல்லுங்க அங்கிள்"என்று கூற
"அம்மா ஷாக்சி ,நான் இத இப்போ பேசுரது சரியான்னு தெரியல.ஆனால் பேசித்தான் ஆகனும்டா"என்று பீடிகை போட்டு பேசியவரை ஷாக்சி
"அங்கிள் ப்ளீஸ் ,எதுவா இருந்தாலும் நேரடியா விசயத்துக்கு வாங்க"என்று கூற அவரோ
"கடையில இப்போ முன்ன மாதிரி பிஸ்னஸ் இல்ல.ஸ்டாக் ரொம்ப அதிகமா இருக்கு.ஆனா வியாபாரம் கம்மியா இருக்கு.சப்ளையர்ஸ் எல்லோரும் அவங்க பேமண்ட் கேட்குறாங்க.இது போக அப்பா பிஸ்னஸ் டெவலப் பண்ணுறதுக்காக பேங்க்ல வீட்ட அடமானம் வெச்சு 40 லட்சம் லோன் எடுத்திருக்காரு.இப்ப என்ன பண்ணலாம்னு நீதான் சொல்லனும்"என்று கூற ஷாக்சிக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.உடனே அவள்
"அங்கிள் கடையில இருக்கு ஸ்டாக் எவ்வளவு இருக்கும்"என்று கேட்க அவர்
"ஒரு 20ல இருந்து 22 லட்சம் வரைக்கும் இருக்கும்"என்றார்.
"சப்ளையர்ஸ் பேமண்ட் எவ்வளவு இருக்கு?"என்றதும் அவர் ஏதோ புரிந்தது போல
"16 லட்சம் இருக்குடா.நீ கேட்குறத பார்த்தா கடைய மூட போறியா?"என்றதற்கு
"ஆமா அங்கிள் எனக்கு வேற வழி தெரியல.நீங்க சப்ளையர்ஸ் பேமண்ட இருக்குற ஸ்டாக்க வெச்சி முடிக்க பாருங்க.அந்தந்த சப்ளையர்ஸோட சாமான அவங்க அவங்களுக்கு செண்ட் பண்ணுங்க.மீதி இருக்குற ஸ்டாக்க ஆபர் சேல் மூலமா கம்மி விலைக்கு வித்து காசாக்கிடுங்க.அப்போ எப்படியும் அதுல ஒரு 4 லட்சம் மிஞ்சும்.இருக்குற பர்னிச்சர்ஸ அண்ட் பிட்டிங்க்ஸ்லாம் வித்தா ஒரு 5 லட்சம் தேறும்.என்னோட செட்ட்டில்மண்ட் காசு ஒரு 8 லட்சம் இருக்கும் .எல்லாமா சேர்த்தா குறைஞ்சது நம்மகிட்ட ஒரு 17 லட்சம் வரும்.மீது 23 லட்சத்த என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்"என்றவளை அவரோ மிகவும் கவலையுடன்
"அம்மா ஷாக்சி, அப்பா ரொம்ப ஆசையா ஆரம்பிச்சி பிஸ்னஸ்மா அது.அதப்போய் மூடிடலாம்னு சொல்ரியேமா"என்று கேட்க அவளோ
"அங்கிள் ,அப்பா இருந்த வரைக்கும் எல்லாமே ஸ்மூத்தா போய்கிட்டு இருந்திச்சி.இப்ப யாரு பிஸ்னச கவனிப்பா.என்னாலயும் முடியாது.வினய் இப்போ லாஸ்ட் இயர் படிச்சிக்கிட்டு இருக்கான்.இப்போ இருக்குற நிலமைக்கு வீட்ட விக்க முடியாது.அத விட இது எங்க அப்பா அம்மா வாழ்ந்த வீடு.எனக்கு ஒரு 6 மாசம் டைம் எடுத்து கொடுங்க.நான் எப்படியாச்சும் மீதி பணத்த அரேஞ்ச் பண்ணிடுறேன்"என்றாள்.அவரும் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல்
"சரிம்மா.நான் பேங்க் கிட்ட பேசி 6 மாசம் டைம் கேட்குறேன்.அது வரைக்கும் இருக்குற காச வெச்சி ஒவ்வொரு மாசமும் தவனைக்காச கட்டிர்ரேன்"என்று கூறி விடை பெற்று சென்றார்.
அவர் சென்றதும் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஷாக்சிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை உடனே தன் தம்பி வினய்க்கு கால் செய்து நடந்தவற்றை கூறினால்.
"அக்கா நீ ஒன்னும் யோசிக்காத.என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு .இப்போ பைனல் இயர் எண்டதால என்னால அந்த காச வெச்சு என்னோட செலவுகள மெனேஜ் பண்ணிக்க முடியும்.இல்லன்னா நந்தினி இருக்கா.அவகிட்ட கேட்டுக்க முடியும்.திவ்யா அக்கா சொன்னாங்க நீ சென்னை போக போறேன்னு.ஒன்னும் யோசிக்காத எல்லாமே நல்லதாவே நடக்கும்.இன்னும் 10 மாசம் போயிடிச்சின்னா எனக்கும் ஜாப் கிடைச்சிடும்.அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்"என்றவனை ஷாக்சி மிகவும் ஆச்சரியமாக நோக்கினால்.விளையாட்டு பிள்ளையாக இருந்த வினய்யா இப்படி பொறுப்பாக பேசுகிறான் என்று.இழப்புகள் ஒரு மனிதனை எப்படி புடம் போடுகின்றது என்று ஷாக்சி வியப்பில் ஆழ்ந்திருந்தாள்.
"சரிடா, நான் அடுத்த வாரம் சென்னை போறேன்.திவ்யாதான் அங்க எனக்கு ஜாப் அரரேஞ்ச் பண்றதா சொல்லிருக்கா.போய் ஒரு மாசத்துக்கு அப்றமாதான் எப்படி இருக்குன்னு சொல்ல முடியும்"என்றவளை வினய்
"அக்கா நீ இப்போ எதுக்கு சென்னை போற,ஏன் உன்னோட இப்போ இருக்குற ஜாப்ப ரிசைன் பண்ணேன்னு எதுவுமே கேட்க மாட்டேன்கா.எனக்கு தெரியும் என் அக்கா பண்ணா எல்லாமே கரக்டாதான் இருக்கும்னு.ஒன்ன மட்டும் நல்லா நினைவுல வெச்சிக்க, உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் உன் தம்பி உன் கூடவே இருப்பேன்"என்று குரல் தழுதழுக்க கூறினான்.உடனே இந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற எண்ணிய ஷாக்சி
"அதெல்லாம் சரி பெரிய மனுசா,அது யார்ரா நந்தினி.கேர்ல் ப்ரெண்டா"என்று கேட்க அவனோ
"போதும் போதும் உன்னோட துப்பறியும் மூளைய கொஞ்சம் மூட்ட கட்டி வை.அவ என்னோட க்ளாஸ் மேட்தான்.அவ பேமிலி லண்டன்ல இருக்காங்க.இவ அங்க இருக்க பிடிக்காம இங்க அவங்க தாத்தா பாட்டி கூட இருக்கா.என்ன அவ படிக்கிறதுக்காக எல்லாம் இங்க வரல.இந்தியால இருக்கனுமாம்.சோ காசுக்கு பஞ்சமில்ல.அப்படியே அவசரமா காசு தேவப்பட்டுச்சின்னா அவ கிட்ட வாங்கிக்கலாம்னு சொன்னேன்.நீ என்னடான்னா...."என்றவனை
"சரிடா நல்லவனே உன்ன நம்புறேன்.ஆனா நாளைக்கு லவ்வு கிவ்வு வந்து பாரு அப்புறமா இருக்கு"என்று கூற வினய்யோ
"அப்படில்லாம் ஏதும் வரமாட்டேன்கா.போதுமா"என்று கூறி காலை கட் செய்ததும் ஷாக்சிக்கு இன்று வினய் பேசியது வித்தியாசமாக தோன்றியது.
ஒரு வேலை தனக்கு நடந்த சம்பவங்கள் வினய்க்கு தெரிந்திருக்குமோ என்று ஒரு கவலையும் வந்தது.அப்படியே தெரிந்திருந்தால் அவன் தன்னை கேவலமாக நினைப்பான் என்ற என்னமே அவளை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் அவன் பேசியதில் ஒருவேலை அவனுக்கு உண்மை தெரிந்திருந்திருந்தாலும் அவன் தன்னை கேவலமாக நினைக்கவில்லை என்பது ஷாக்சிக்கு புரிய மனம் சந்தோசமடைந்தது.
அன்று மாலை ஷாக்சியை பார்க்க திவ்யா வீட்டிற்கு வந்தாள்.
"ஷாக்சி ,உன்னோட லீவ் செட்டில்மண்ட் 8 லட்சம் அடுத்த வாரம் உன் அக்க்வுண்டுக்கு வந்திடும்.நீ ரிசைன் பண்ண போறேன்னு சொன்னதும் யாராச்சும் ஏதும் ரியாக்சன் காட்றாங்களான்னு பார்த்தேன்.எல்லோருமே சாதாரன ரியாக்சந்தான் காட்னானுங்க.அந்த நாயி எவன்னு தெரியவே இல்லடா"என்று நிஜமான கவலையுடன் கூறிவலை ஷாக்சி
"வேணாம் திவ்யா விடு.இப்போ அவன் யாருன்னு தெரிஞ்சு என்ன செய்ய.என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னா சொல்ல முடியும்.அப்படியே அவன கண்டுபிடிச்சாலும் அந்த ஒரு மாதிரி ஒரு கேடு கெட்டவன என் புருசனா ஏத்துக்க மாட்டேன்.அப்புறமா இன்னொரு விசயம் ஏதோ ஒரு ரீசனால ரவி கூட காண்டாக்ட் பண்ண முடியல"என்றவளை திவ்யா இடை மறித்து
"ஆமாண்டி கம்பனிக்கு ரெண்டு வாட்டி கால் பண்ணிருக்கான்.ஆனா அவனோட காண்டாக்ட் டீடைல்ஸ் எதுவுமே தெரில"என்று கவலையுடன் கூற ஷாக்சி
"அத விடு, எல்லாமே நல்லதுக்குதான்.அவன் காண்டாக்ட் பண்ணாம இருக்குறதும் ஒரு வகைல நல்லதுதான்.இல்லன்னா அவனுக்கு வேற விளக்கம் கொடுக்கனும்"என்று சலித்துக்கொண்டவளை
"இல்லடி ,சப்போஸ் உனக்கு நடந்தத அவரு பெரிய விசயமா நினைக்காம உன்னையே கல்யாணம் பண்ணிகுறேன்னு சொன்னா உன் லைப் நல்லா இருக்குமே"என்று ஆதங்கப்பட்ட திவ்யாவை ஷாக்சி
"லூசு மாதிரி பேசாத.யாரும் என்னோட நிலமைய பார்த்து எனக்கு வாழ்க்கை பிச்சை போட தேவையில்ல.அண்ட் மோர் ஓவர் நான் சென்னை போனதும் என்னோட எல்லா காண்டாக்ட் டீடைல்சும் சேஞ்ச் பண்ணிடுவேன்.உன்கூட மட்டும்தான் காண்டாக்ட்ல இருப்பேன்.நீயும் எக்காரணம் கொண்டும் யாருக்கும் என்னோட டீடைல்ஸ் கொடுக்க கூடாது.அதுக்கு நீ ஓக்கே சொன்னாதான் நான் உன் ப்ரெண்டோட அப்பா கம்பனில டெம்பரரியா ஜாய்ன் பண்ணுவேன்.இல்லன்னா நானே பார்த்துக்கிறேன்"என்று கராராக பேசிய ஷாக்சியை
"அம்மா தாயே,நீ சொன்ன எல்லாத்துக்கும் ஐ அம் அக்ரீ.சோ ரொம்ப பண்ணாத.ஆமா நீ எப்போ சென்னை போற?"என்றவளை
"இன்னும் ரெண்டு நாள்ள போறேன் திவ்யா "என்று கூறினால்.
--------------
The one of the best writer in wattpad Nivethamagathi அக்கா அவர்களின் புதிய கதையான
" உயிரோடு உறவாட" ஆரம்பித்துள்ளார்கள்.
அக்காவுக்கு ஒரு வேண்டுகோள் சாதனாவ(காதலின் மொழி) இடையில விட்டு எங்கள் எல்லோரையும் அப்டேட் கேட்டு கெஞ்ச வெச்ச மாதிரி இந்த ஸ்டோரிலயும் பண்ணிடாதீங்க.
வாசகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இனங்க shivaali எழுதும்
"என் ரதி நீயடி" கதைக்கு நம் எல்லோரும் ஆதரவை தெரிவிப்போம்.சூப்பரா இருக்குறதா சொன்னாங்க.நான் இன்னும் படிக்கல.இந்த வாரத்துக்குள்ள படிக்கனும்.
AnamikaMithu அவர்களின் முதல் இடத்தை பிடித்தமைக்கி வாழ்த்துக்கள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro