Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தென்றல் 34

ஷாக்சியின் கேள்விக்கு மேகாவோ புன்னகயுடன்

"ஐயோ ஷாச்கி நீங்க வேற.அர்ஜுன் என்னோட மாமா பையன் தான்.சின்னவயசுல இருந்தே அர்ஜுன எனக்கு ரொம்ப பிடிக்கும்.எனக்கு மொத்தமா 4 முறைப்பசங்க இருக்காங்க.ஆனா எனக்கு எப்பவுமே அர்ஜுன்னா கொஞ்சம் ஸ்பெசல்.அதுவே நாளாக நாளாக காதாலா மாறிடிச்சு. நாந்தான் சார உருகி உருகி காதலிச்சேன்.ஆனா சார் என்னமோ திவ்யாமேலதான் தனக்கு லவ் இருக்குன்னு சொல்லிட்டாரு" என்று கொஞ்சம் இடைவெளி விட ஷாக்சிக்கோ எதற்கு இப்போது இந்த பேச்சை எடுத்தோம் என்றாகிவிட்டது.மேலும் தொடர்ந்த மேகா

"திவ்யாவுக்கு லவ் இல்லன்னு தெரிஞ்சதும் அர்ஜுன் கொஞ்ச நாளா ரொம்ப மூட் அவுட்டா இருந்தாங்க.அப்போ நீங்க எல்லோரும் யூ எஸ் போயிட்டீங்களா அந்த நேரத்துல நான் அர்ஜுன் கிட்ட கேட்டேன்.அவர லவ் பண்றதா சொன்னேன்.கொஞ்ச நாள் என்கிட்ட பேசவே இல்லை.அந்த நேரத்துல திவ்யாவ வாட்சப்ல எத்தனையோ தடவை காண்டாக்ட் பண்ண டிறை பண்ணியும் பேச முடியல.ஒரு வேலை அர்ஜுன் பேசுறது பிடிக்காமத்தான் அவங்க நம்பர கூட மாத்திட்டாங்களோன்னு அர்ஜுன் யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ நான் திரும்ப திரும்ப விடாம கேட்டுக்கிட்டே இருந்தேன்.ஏதோ என்னோட நல்ல நேரம் அவங்களால மறுக்க முடியல.ஆனா அர்ஜுன் சொன்ன ஒரே ஒரு கண்டிசன் அவங்களால உடனே மனச மாத்திக்க முடியாது என்றும் கொஞ்ச நாளைக்கு ப்ரெண்ட்சா இருக்கலாம்னும் சொன்னாங்க.எனக்கு அர்ஜுன் ப்ரெண்ட்லியா இருக்கலாம்னு சொன்னதே பெரிய விசய்மா தோனிச்சி.நானும் உடனே ஓக்கேன்னு சொல்லிட்டேன்" என்று கூறி முடிக்க அங்கிருந்த எல்லோருக்கும் இந்த கதையை நம்புவதா இல்லையா என்ற குழப்பம் இருந்தது.இருந்தாலும் மேகா கொஞ்சம் உணர்ச்சி மிகுதியாக பேசியதாலும் அர்ஜுன் அமைதியாக இருப்பதை கண்டதும் அது உண்மை என என்னிய எல்லோரும் அங்கு நிலவிய ஒரு வித அமைதியை கலைக்கும் வகையில் அவினாஷோ

"ஹேய் எல்லோரும் சாப்பிடலாம் வாங்க" என்று இரவு உணவு உண்ண அழைத்து சென்றான்.எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க திவ்யாவின் மனதோ தான் யூஎஸ் சென்ற அன்று அவளது மொபைல் காணாமல் போனது ஞாபகம் வந்தது.மொபைல் தொலந்ததும் அவளால் அவளது இந்திய நாட்டு நம்பரில் வாட்சப்பில் இனைய முடியவில்லை.தன் விதியை நொந்து கொண்ட திவ்யா என்ன இருந்தாலும் இறைவன் விதித்ததுவே எல்லோருக்கும் நடக்கும் என்று தன் மனதை ஆறுதல் படுத்துக்கொண்டாள்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்து அவரவர் வீடு செல்ல தயாரான வேளை அர்ஜுனிடம் வந்த மித்ரன்

"என்னடா இப்படி பண்ணிட்ட.அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்டா.ஜானவி அவ மேல இவ்வளவு கோவத்தோட இருக்குறப்போ இவ எப்படி உங்க வீட்டுக்கு வந்து வாழ முடியும்னு நினைச்சிதான் அவ உன்ன பிடிக்கலன்னு சொல்லிட்டா.ஆனா அவ மனசுல நீ இருந்த.அது ஏன் உனக்கு தெரியாம போச்சு.என்ன இருந்தாலும் நீ இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணிருக்கலாம்" என்று கூற அர்ஜுனோ

"நான் என்ன பண்ன மித்ரன் ,நான் உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு என்ன வேணாம்னு விட்டுட்டு போயிட்டா.அவ என்ன காதலிச்சா என்கிற விசயம் கூட இப்போ நீ சொல்லிதான் எனக்கே தெரியுது.நான் எப்படி திவ்யாவ காதலிச்சேனோ அத விட அதிகமா மேகா என்ன காதலிச்சா.எனக்கு காதலோட வலி எப்படி இருக்கும்னு புரிஞ்சப்போ மேகாவுக்கு அந்த வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரிஞ்சது.சரி நம்ம வாழ்க்கைதான் இப்படி ஆகிடிச்சு.எதுக்கு மேகா வாழ்க்கையும் நம்ம வாழ்க்கை போலவே சோகமா போகனும்னு நினைச்சுதான் அவளுக்கு சரின்னு சொன்னேன்.அவளுக்கு நடந்த எல்லாவற்றையும் சொல்லி இதுக்கு அப்புறமும் என் மேல காதல் இருந்தா சொல்லு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனா எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுனு சொன்னேன்.அவ எதுவுமே யோசிக்காம சரின்னு சொல்லிட்டா.இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல.நீயே சொல்லு பார்க்கலாம்" என்று கூற மித்ரனுக்கோ அர்ஜுன் பேசுவதுதான் ரியாலிட்டியாக தோன்றியது.அதுவும் திவ்யா எதுவும் சொல்லிக்கொள்ளாமல் யூஎஸ் சென்றது அவளுக்கு பாதகமாக அமையும் என்பதை அவன் நினைக்கவேயில்லை.இருந்தாலும் நடந்ததை மாற்ற முடியாது என்பதை உணர்ந்த மித்ரன்

"சரி அர்ஜுன் நடந்தது நடந்திடிச்சி.இனி அது எதையுமே மாத்தமுடியாது.அப்படியே எல்லாத்தையும் உடனே மாத்த இது சினிமாவும் இல்ல. பெஸ்ட் விசஷ் பார் யு வர் வெட்டிங்க் லைப்" என்று கூற அர்ஜுன் ஒரு சிறிய புன்னகையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அன்று இரவு ஷாக்சி அறைக்குள் தூங்க வந்ததும் அவள் மாத்திரையை போடும் முன்

"ஷாக்சி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்று கூற அவளோ

"காலைல பேசிக்கலாம் மித்ரன்.காலைல இருந்து ஓடிக்கிட்டே இருக்கோமா எனக்கு ரொம்ப தூக்கமா இருக்கு, டாப்லெட் வேற போடனும்" என்று கூற மித்ரன்

"ஷாக்சி நீ அந்த டாப்லெட் போட முன்னாடிதான் உன்கிட்ட பேசனும்" என்று கூறிய பதில் ஏதும் கூறாமல் முகபாவனையாலேயே என்ன என்பது போல கேட்டாள்.

"ஷாக்சி எனக்கு என்னமோ நீ பாவிக்கிற டாப்லெட் உனக்கு ஏதும் பக்க விளைவுகளை ஏற்படுத்துன்னு பயமா‌‌ இருக்கு.நம்ம எதுக்கும் டாக்டர் யாரயும் கன்சல்ட் பண்ணலாம் " என்று கூற அவளோ

"என்ன மித்ரன் என்ன பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா? ஆமா நீங்க எப்ப டாக்டரானீங்க" என்று கேட்க அவனோ அவள் மீது கோவம் வந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல்

"இங்க பாரு ஷாக்சி, நீ யூஸ் பண்ற டாப்லட் பத்தி நான் நெட்ல தேடி பார்த்தேன்.அது நார்மலாவே 40 வயசுக்கு மேல உள்ளவங்க யூஸ் பண்றது.அதுவும் அவங்களுக்கு டெய்லி கொடுக்க மாட்டாங்க. உனக்கு கொடுத்த மருந்துல ஏதோ தப்பு நடந்திருக்கு.ஏன்னா உனக்கு அத போட்டாதான் தூக்கமே வருது.அது போடலன்னா உனக்கு நைட்ல என்ன நடக்குது என்றே தெரிய மாட்டேங்குது.சோ முதல்ல நம்ம ஒரு டாக்டர கன்சல்ட் பண்ணலாம்" என்று கூற கொஞ்சம் யோசித்த ஷாக்சி

"சரி நம்ம டாக்டர பார்க்கலாம்.ஆனா எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுங்க.நான் வர்ரேன்" என்று கூறியவளை அவனோ முறைத்து

"என்ன நீ டாக்டர் கிட்ட வந்தா உனக்கு டிவோர்ஸ் வேணும் அதுதாதானே.அம்மா தாயே உன் கால்ல வேணா விழுகிறேன்.எடுத்ததுக்கெல்லாம் டிவோர்ஸ் கேட்காத முடியல.கொஞ்ச நாள் போகட்டும் ,ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் நம்ம டிவோர்ஸ் பத்தி பேசலாம்.நம்ம நாளைக்கே டாக்டர பார்க்க போறோம் ,இப்ப ஆள விடு" என்று கிளம்பியவன் அவனுக்குள் மெதுவாக

'எவ்வளவு கெத்தா இருந்த மித்ரன இப்படி கெஞ்ச வெச்சிட்டாலே.பாவி பாவி ,இந்த பாழா போன காதல் வந்தாலே இப்படித்தான் போல ' என்று முனுமுனுப்பது ஷாக்சிக்கு தெளிவாகவே கேட்க அவள் புன் முறுவல் பூத்தால்.

மேகா மற்றும் அர்ஜுனின் திருமணத்திற்க்கு நாள் நெருங்கி கொண்டிருக்க நகை வாங்குவதற்காக ரோஹித்,ஜானவி,மேகா,அர்ஜுன் என்று நால்வரும் நகை கடைக்கு சென்றனர்.அர்ஜுனுக்கு ஜானவி செய்த காரியத்தால் அவள் மேல் கோவம் இருந்தாலும் தங்கை பாசம் அவளை முழுவதும் வெறுக்க முடியாமல் தடுத்தது. திருமணத்திற்கு நகை எடுப்பதற்கு ஜானவியும் வரவேண்டும் என்று மேகா கேட்டுக்கொள்ள ஜானவியால் மறுக்க முடியவில்லை.

இந்த சில நாட்களில் ஜனவியும் ரோஹித்தும் நெருங்கி பழக ஆரம்பித்திருந்தனர்.ரோஹித் பல தடவை அவளிடம் தன் காதலை சொல்லியிருந்தும் ஜானவியோ அவனுக்கு சாதகமான பதிலை கூறாமல் மெளனம் காத்தால்.

எல்லோரும் நகை கடையில் இருக்க ஒவ்வொரு நகையாக போட்டு பார்த்து செலக்ட் செய்து கொண்டிருந்தனர்.கடைசியில் ரோஹித் ஒரு தாலிச்சரடை எடுத்து கையில் வைத்துக்கொண்டிருப்பதை கண்ட ஜானவி ரோஹித்திடம்

"என்ன ரோஹித் கையில தாலிய வெச்சிக்கிட்டு இருக்குற.எனக்கு கட்டாய தாலி கட்டலாம்னு பார்க்குறியா.ஏற்கனவே இங்க ஒருத்தன் கட்டாய தாலி கட்டி படுற அவஸ்த்தை போதாதா.இதுல நீ வேறயா" என்று கேட்க அங்கு எதேர்ச்சையாக வந்த மேகா

"ஆமா யாரு கட்டாய தாலி கட்டினா .என்ன மேட்டர் " என்று கேட்க ஜானவியோ அர்ஜுன் திவ்யாவுக்கு தாலி கட்டிய விடயத்தை விளையாட்டாக கூறி முடிக்க மேகாவின் முகம் ஒரு வித கவலையால் வாடியது.இதை உணர்ந்த ஜானவி

"ஹேய் மேகா, லீவ் இட் டா.அது ஏதோ அவன் அவசரத்துல பண்ணது.அவதான் ஏதோ பெரிய உலக அழகி என்ற நினைப்புல எங்கண்ணன வேணாம்னு சொல்லிட்டாலே.திமிரு பிடிச்சவ" என்று கூற பதில் எதுவும் கூறாமல் மேகா அர்ஜுனிடம் சென்றால்.மேகாவின் மெளனம் ஜானவிக்கு ஏதோ தவறாகா தோன்ற அவள் பின்னாலேயே செல்ல அவள் அர்ஜுனிடம் பேசியதை கேட்ட ஜானவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro