தென்றல் 33
"அப்போ எதுக்கு ஷாக்சி என்ன நீ அன்னைக்கு லவ் பண்றேன்னு சொன்ன" என்று கேட்க ஷாக்சி என்ன கூறுவது என்று புரியாமல் முழித்தாள்.
"அன்னைக்கு என்ன சொன்ன ஷாக்சி, இனிமே நீங்களே உங்கள தரக்குறைவா பேசினா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுன்னு. அப்போ உனக்கு நான் நடக்க முடியாம இருந்தப்போ என் மேல பரிதாபப்பட்டு காதல் வந்திருக்கு. இப்போ நான் நல்லானதும் உனக்கு என்மேல இருந்த பரிதாப காதல் காணாம போயிடிச்சி, அப்படித்தானே?" என்று கேட்க ஷாக்சியோ தான் மித்ரனிடம் வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்தாள்.
"ஆமா மித்ரன் நீங்க எப்படி வேணா நினைச்சிக்கோங்க. என்னால ஒரு சாதாரன குடும்ப வாழ்க்கைய வாழமுடியாது. அன்னைக்க்கு நான் உங்க கிட்ட அப்படி சொல்ல காரணம் நிஜமாவே உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாதுன்னுதான். நீங்க அத தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க" என்று கூறிய வேலை திவ்யா வந்து கதவைத்தட்ட சரியாக இருந்தது.
"ஓய் கல்யான மாப்பிள்ளை அன்ட் பொண்ணே வெளில வாங்கப்பா. உங்களுக்காக எல்லோரும் வெயிட்டிங்க்" என்று கூற மித்ரன் ஷாக்சியிடம்
"ஷாக்சி நம்ம விசயத்த அப்புறமா பேசிக்கலாம். முதல்ல நம்ம வெளில போகலாம் " என்று கூற ஷாக்சியும் சரி என தலை அசைத்தாள்.
இருவரும் குளித்து முடித்து வெளியில் வர திவ்யாவை கண்ட ஷாக்சியின் முகத்தில் ஒரு குழப்பமும் பூரிப்பையும் கண்ட திவ்யா அவள் அருகில் வந்து குறும்புடன்
"என்னடி கல்யான பொண்ணே முகமெல்லாம் வெக்கத்துல சிவந்து போய் இருக்கு, என்ன விசேசம்? " என்று கேட்க ஷாக்சியோ அவளை முறைக்க
"லூசு மாதிரி பேசாத திவ்யா. ஆமா நைட் ஏன் நீ எனக்கு டேப்லட்ட கொடுக்கல? " என்று கேட்க திவ்யாவுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது ஷாக்சி தினமும் சாப்பிடும் தூக்க மாத்திரையை நேற்றைய இரவு கொடுக்க மறந்ததை. என்ன நடந்ததோ என்ற பயத்தில் இருக்க ஷாக்சியோ
"லூசு ஏன்டி கொடுக்கல்ல" என்று கேட்க
"இல்ல ஷாக்சி நிஜமாவே எனக்கு மறந்திடிச்சிடா" என்று கூற ஷாக்சி எதுவும் கூறாமல் மனதுக்குள்
'நீ டேப்லட்ட எனக்கு கொடுக்காதது நல்லதா போச்சு திவ்யா. என் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும்னு என் கனவுலயும் நான் நினைக்கல. எனக்கு இந்த ஒரு நாளே போதும் இந்த நாளோட நினைவுகளோட நான் வழ்ந்துக்குவேன்' என்று என்னியவளை திவ்யா
"என்னடி ரொம்ப ஓவரா யோசிக்கிற " என்று கூற அவளோ எதுவும் கூறாமால் புன்னகைத்தவள்
"சரி வா நம்ம போய் சமையல பார்க்கலாம்" என்று கூறினாள்.
அன்றைய நாள் மித்ரன் ஷாக்சியுடன் பேச எவ்வளவோ முயன்றும் அவள் அவனுக்கு பிடிகொடுக்காமலேயே சுற்றிக்கொண்டிருந்தாள்.
ஷாக்சியை அன்றைய பகல் முழுவதும் அவள் போக்கிலேயே விட்டவன் மனதுக்குள்
'என்ன என்கிட்ட பேச மாட்டியா. சரி எப்படியும் நைட்டானா என்கிட்டதானே வரனும். அப்போ உன்ன பார்த்திர்க்குறேன்' என்று நினைத்துக்கொண்டான்.
இரவு மித்ரன் அறைக்கு வரும் முன்வே ஷாக்சி தான் சாப்பிடும் டாப்லட்டை போட்டு விட்டு நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தாள். அவளிடம் ஏதாவது பேசி மனதை மாற்றிக்கொள்ளலாம் என நினைத்தவனுக்கு என்னவோ ஏமாற்றமே மிஞ்சியது.
நாட்கள் அதன் போக்கில் மெதுவாக நகர மித்ரன் தந்தையின் கம்பனியில் சிறிய சிறிய ஆடர்கள் கிடைத்து ஓரளவுக்கு அவர்களது வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது. ஷாக்சியோ மித்ரனிடம் அளவுக்கு அதிகமாக பேசிக்கொள்வதில்லை. அவனாகவே ஏதும் பேச வந்தாள் அவள் ஒரே வார்த்தையில் பேசி அவனை பேச விடாமல் செய்துகொண்டாள்.
ஒரு நாள் இரவு மித்ரன் வேன்டுமென்றே ஷாக்சி வழமையாக உண்ணும் டாப்லட்டை மாற்றி வைக்க அது தெரியாமல் ஷாக்சி அதை உட்கொன்டு தூங்க ஆரம்பித்தாள். தூங்க ஆரம்பித்து சரியாக 30 நிமிடத்தில் முழிப்பு வந்தவள் முதல் இரவில் நடந்தது போலவே அழ ஆரம்பித்தால். இன்று என்ன நடந்தாலும் ஷாக்சியிடம் இருந்து அவளின் மனதில் என்ன இருக்கின்றது என்று அறியாமல் விடுவதில்லை என மித்ரன் நினைத்திருந்தான்.
அவளின் அழுகை சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக மித்ரனால் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருக்க அவனோ ஷாக்சிக்கு மாத்திரையை கொடுத்தே இருக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு அவள் செயல்பாடுகள் இருந்தது. கடைசியாக ஏதோ உளறியவள்
"மித்ரன் நான் கெட்ட பொண்ணு இல்ல. என்ன விட்டு போயிடாதீங்க. நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்காட்டியும் பரவாயில்லை, நான் உங்க கூடவே இருக்கேன். இந்த சொசைட்டி என்ன பத்தி எது சொன்னாலும் பரவாயில்லை" என்றவளை மித்ரன் மீண்டும் அவளை அதே போல பேச செய்து அவன் மொபைலில் ரெக்கார்ட் செய்து கொண்டான். மித்ரனுக்கு தெளிவாக தெரிந்த விடயம் ஷாக்சியின் ஆழ் மனதில் தன் மீதான காதல் இருக்கின்றது எனபது. ஆனால் அவளுக்கு நடந்த கொடுமையை விட்டு அவளால் வெளியில் வர முடியவில்லை என்பதும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. இதனை திவ்யாவின் உதவியை கொண்டு ஏதும் சரி செய்ய முடியுமா என்று யோசித்தான்.
திடீரென்று அவினாஷுக்கும் கீர்த்திக்கும் திருமணம் நிச்சயமாக எல்லொரும் அவர்களது திருமணத்திற்கு செல்ல தயாராகினர்.
திருமணம் எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லோரும் மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க அதே நேரம் அர்ஜுனும் மேகாவும் மண்டபத்திற்கு வந்தனர். அர்ஜுனை கண்ட திவ்யாவின் மனதில் ஒரு வித கவலை படர அதை அவள் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். என்னதான் திவ்யா தன் உள்ளத்தில் இருக்கும் கவலையை மறைத்தாலும் ஷாக்சி அதை மிக எளிதால கண்டுகொண்டாள்.
மற்றவர்கள் எல்லோரும் திருமண நிகழ்வுகள் முடிந்து செல்ல திவ்யா, ஷாக்சி, மித்ரன், அர்ஜுன், மேகா ஐவரையும் அவினாஷும் கீர்த்தியும் அவர்களுடனேயே வீடு வரை வந்து இரவு உணவு உண்டு செல்லுமாறு வற்புறுத்த அவர்களால் எதுவும் மறுத்து பேச முடியவில்லை. ஏனென்றால் உறவினர்களுக்கு விருந்து வைத்து திருமணம் செய்யும் அளவுக்கு வசதி கொஞ்சம் பற்றாக்குறையாக இருந்தது.
இது அறிந்திருத்ந இவர்களால் மணமக்களின் வேண்டுகோலை தட்ட முடியவில்லை. ஆனால் திவ்யாவின் நிலைதான் மிகவும் இக்கட்டாக கானப்பட்டது. அவள் இருக்க வேண்டிய இடத்தில் மேகா அர்ஜுனின் பக்கத்தில் இருப்பதை கண்டவளுக்கு வயிறு எரிந்தது.
எல்லோரும் அவினாஷின் வீட்டிற்கு செல்ல அங்கு அவர்களுக்கு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். மணமக்களுடன் எல்லோரும் பேசிக்கொண்டிருக்க கீர்த்தி
"திவ்யா உனக்குத்தாண்டி நான் தாங்க்ஸ் சொல்லனும். நீ மட்டும் இல்லைன்னா எனக்கு அவினாஷ் மாதிரி ஒரு நல்லவன் கூட வாழ்ற கொடுப்பினை இல்லாம போய் இருக்கும்" என்று கூற திவ்யாவோ
"என்னடி புருசன அவன் இவன்னு சொல்ர" என்று கலாய்த்ததற்கு மணப்பெண்ணான கீர்த்தி வெட்கப்படுவதை கண்ட அவினாஷ்
"ஹைய்யா என் பொண்டாட்டி வெட்கப்பட்டுட்டா" என்று சத்தமிட்டவனை மித்ரன் மெதுவாக அவினாஷுக்கு மட்டும் கேட்கும் விதமாக
"டேய் இதுக்கே நீ இப்படி எக்சைட் ஆனா அப்புறம்..." என்று இழுக்க அவினாஷோ
"போதும்ப போதும், யாருக்காச்சும் கேட்டிச்சி தப்பா எடுத்துக்க போறாங்க" என்று கூற மித்ரனோ
"இல்லடா நான் அத சொல்லல நைட் அவ உனக்கு செம்புல பால் கொண்டு வந்து உன் கால்ல விழுவால்ல அப்போ இன்னும் வெக்கப்படுவான்னு சொல்ல வந்தேன். ஆமா நீ என்ன நினைச்ச " என்று கேட்க அவனோ
"ஆமாடா நீ எத சொல்ல வந்தேன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான்லாம் ஒன்னும் உன்ன மாதிரி சாமியாரெல்லாம் இல்லைப்பா. நீ என்ன சொல்ல வந்தேன்னும் தெரியும். எப்படி அந்த டாபிக்கை மாத்திட்டேன்னும் தெரியும். ஆமா மித்ரா கல்யாணமாகி கொஞ்ச நாள்ளயே இப்படி மாறிட்ட. எல்லாம் என்ன ஷாகிச்யோட மகிமையா?" என்று கேட்க அவனோ ஆமாம் என்று தலையசத்தவனை
"அட்ராசக்கை, அப்போ உங்களுக்குள்ள ராசி ஆகிடிச்சா" என்று கேட்க மித்ரனோ
"50% ஆகிடிச்சி, மீதி 50% கொஞ்சம் நாந்தான் டிரை பண்ணனும். சரியான நேரத்துக்கு காத்திக்கிட்டு இருக்கேன்" என்று கூற அவினாஷ்
"பெஸ்ட் ஆப் லக்" என்று கூறினான். இவர்கள் இருவரும் குசு குசு என்று பேசுவதை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன்
"என்னப்பா நீங்க ரெண்டு பேரும் எங்க எல்லோரையும் வெச்சிக்கிட்டு இப்படி ரகசியம் பேசுறீங்க. எங்களுக்கு சொன்னா நாங்களும் ஜாயின் பண்ணிக்குவோம்ல" என்று கூற மித்ரனோ
"வேணாம் அர்ஜுன் நாங்க பேசினத வெளில சொன்னா உன் இமேஜ் தான் டேமேஜ் ஆகும்" என்று முகத்தை பாவமாகா வைத்து கூற அர்ஜுன் மேலும் அவர்களை வழ்பிழுக்க எண்ணி
"என்ன என் பெயர வெச்சி எஸ்கேப் ஆகலாம்னு பார்க்குறீங்களா" என்றவன்
"பரவாயில்ல என் பெயர் டெமேஜ் ஆனாலும் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, நீங்க சொல்லுங்க" என்று கூற மித்ரனோ அன்று காபி சாப்பில் வைத்து அவினாஷுடன் ஏற்பட்ட கைகலப்பை ஜாலியாக சொல்லிக்கொண்டிருந்தான். இதை எல்லாம் சர்வசாதரனமாக கேட்டுக்கொண்டிருந்த மேகாவை ஷாக்சி
"ஹேய் மேகா நாங்க அர்ஜுன் திவ்யாவுக்காக சண்டை போட்டான்னு சொல்ரோம் நீ இவ்வளவு கூல் ஆஹ் இருக்க?" என்று கேட்க அவள் கூறிய பதில் அங்கிருந்த எல்லோரையும் ஆச்சரியப்படவைத்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro