தென்றல் 3
நாட்கள் மிக வேகமாக கடக்க ரவியிடம் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.ஷாக்சியும் வேலை பழு காரணமாக ரவியை மறந்திருந்தால்.ஆனால் கடந்த சில நாட்களாக அவளால் முன் போன்று உற்சாகமாக இருக்க முடியவில்லை.அடிக்கடி சோர்ந்து போய் விடுவது வாடிக்கையாகிவிட்டது.
"அப்பா ,எனக்கு இன்னைக்கு புளிப்பான ஏதும் சாப்பிடனும் போல இருக்க்குப்பா"என்றவளை அவளின் தந்தை
"என்னம்மா உடம்புக்கு ஏதும் முடியல்லையா?"என்று அக்க்றையாக கேட்ட அதே நேரத்தில் ஷாக்சி வாந்தி எடுத்து அப்படியே மயக்கமானாள். வீட்டில் வினய்யும் இல்லாத்தால் அவளின் தந்தை பதறி உடனே அவளின் முகத்தில் தண்ணீரை தெளிக்க எழுந்தவள்
"அப்பா ரொம்ப டய்ர்ட்டா இருக்குப்பா.டாக்டர் கிட்ட போகலாமா?"என்று கேட்ட தன் மகளை அவர் வினோதமாக பார்த்தார்.ஏனென்றால் ஷாக்சி எப்பொழுதும் எந்த நோயாக இருந்தாலும் ஹாஸ்பிடல் போகமாட்டாள்.உடனே அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டவர் தனது டூ வீலரில் பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்.
ஷாக்சியை பரிசோதித்த டாக்டர் மலர்ந்த முகத்துடன் அவளின் தந்தை நோக்கி வர அவரோ
"டாக்டர் என் மகளுக்கு எப்படி இருக்கு.இப்போலாம் அடிக்கடி டயர்ட் ஆகிடுறால்"என்று பதட்டத்துடன் கூற டாக்டரோ
"சார் முதல்ல டென்சனாகாம ரிலாக்ஸ்டா இருங்க.அன்ட் கங்க்ராட்ஸ்.நீங்க தாத்தா ஆக போறீங்க"என்று கூறியதும் அவருக்கோ எதுவுமே புரியவில்லை. தலையும் காலும் புரியாமல்
"டாக்டர் என்ன சொல்ரீங்க?" என்று கேட்க அவரோ
"உங்க பொண்ணு கர்ப்பமாக இருக்காங்க"என்று கூற ஷாக்சியும் அவளின் தந்தையும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.
இருவரும் அமைதியாக இருப்பதை கண்ட டாக்டர்
"என்னங்க ஏதும் பிரச்சினையா?"என்று கேட்க ஏதோ கூற வாயெடுத்த ஷாக்சியை அவரின் தந்தை அவளின் கையை பிடித்து அழுத்தி எதுவும் பேச வேண்டாம் என்றார்.இருவரும் ஹாஸ்பிடலை விட்டு வெளியேறியதும் ஷாக்சியோ
"அப்பா அவங்க ஏதோ தப்பா பார்த்திருக்காங்கப்பா.நம்ம இன்னொரு ஹாஸ்பிடல்ல போய் பார்க்கலாம்பா"என்றவளை அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல்
"சரி"என்று கூறியவர் தனது டூ வீலரை ஸ்டார்ட் செய்து பக்கத்தில் இருந்த இன்னுமொரு ஹாஸ்பிடல் செல்வதற்கு ஷாக்சியை ஏற்றியவர் முன்னாள் வந்த லாரியை கவனிக்காமல் அதன் மீது இருவரும் மோதி தூக்கி வீசப்பட அவ்விடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது .மறுபக்கத்தில் துக்கிவீசப்பட்ட ஷாக்சி அப்படியே மயக்கமானாள்.
வழியில் சென்றவர்கள் ஷாக்சியை ஹாஸ்பிடலுக்கு அழைத்த சென்று சிகிச்சை அளித்தனர். ஷாக்சியின் போனுக்கு ஒரு கால் வர ஷாக்சியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த ஒருவர் அதை அட்டன் செய்ய
"ஹலோ ஷாக்சி எங்க இருக்க.ரெண்டு நாளா ஆளவே காணோம் "என்று மறுபுறத்தில் திவ்யா கேட்க இங்கு
"ஹலோ, இந்த போன வெச்சிருந்த பொண்ணுக்கு ஆக்சிடன்ட் ஆச்சுங்க.நாந்தான் அவங்கள அட்மிட் பண்ணேன்.இப்போ அவங்க ------ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.கூட இருந்த வயசானவவரு ஸ்பாட் அவுட்"என்று கூற திவ்யா
"என்ன சார் சொல்ரீங்க.கூட இருந்தது யாரு?"என்று கேட்க போனில் பேசியவனோ
"யாருன்னு தெரிலங்க.அவங்க வீட்டுல வேற யாருமிருந்தா உடனே கூட்டிகிட்டு ஹாஸ்பிடல் வாங்க"என்று கூறி காலை கட் செய்தான்.
சரியாக அரை மணி நேரத்தில் ஹாஸ்பிடலில் வினய்யும் திவ்யாவும் இருக்க போனில் தன்னுடன் பேசியது யார் என்று திவ்யா தேடிக்கொண்டிருந்தால்.இவர்களை கண்டதும் தூரத்தி இருந்த ஒருவன்
"ஹாய் ஐ அம் அர்ஜுன்.நாந்தான் உங்களுக்கு கால் பண்ணேன்.அவங்க போன்ல உங்க போட்டோ இருந்திச்சி.அதான் ஈசியா உங்கள ஐடிண்டிபை பண்ணிட்டேன்"என்று கூற அவளோ
"சரி சார்.அவ இப்போ எப்படி இருக்கா.கூட இருந்தவரு யாரு?"என்று திவ்யா கேட்க உள் அறையில் ஸ்ட்ரெச்சரில் இருந்த உடலை பார்த்த வினயும் திவ்யாவும் வாய் விட்டு அழுதனர்.
"அய்யோ அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டீங்களே"என்று அவன் கதறுவதை திவ்யாவால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.அர்ஜுனின் பக்கம் திரும்பிய திவ்யா
"என்ன ஆச்சு"என்று கேட்க அர்ஜுனோ
"லாரில அடிபட்டு ஆக்சிடண்ட் ஆகிட்டாங்க.கூட இருந்தவரு சாரி அவங்க அப்பா ஸ்பாட்லயே இறந்துட்டாரு.அந்த பொண்ணு அடிபட்டு மயக்கமாகிட்டா .இன்னும் மயக்கம் தெளியல"என்று கூறியவனை
"ரொம்ப தேங்க்ஸ் சார்.நான் இனிமே பார்த்துக்கிறேன்.நீங்க பண்ண ஹெல்ப்புக்கு ரொம்ப நன்றி"என்று கூற அர்ஜுனோ
"சரி என்னோட நம்பர நோட் பண்ணிக்கோங்க .ஏதும் ஹெல்ப் வேணும்னா எனக்கு கால் பண்ணுங்க"என்று கூறி அவ்விடத்தை விட்டு மறைந்தான்.
ஷாக்சிக்கு நினைவு திரும்பாமலேயே அவளின் தந்தையின் இறுதிக்கடமைகளை முடித்தனர்.
மூன்று நாட்களின் பின் ஷாக்சிக்கு நினைவு வர
"அப்பா ,,அப்பா"என்று ஏதோ பிதற்ற ஆரம்பித்தால்.பக்கத்தில் இருந்த திவ்யா
"ஷாக்சி,இப்போ எப்படி இருக்கு"என்று கேட்க ஷாக்சியோ
"திவ்யா அப்பா எங்க.அப்பாக்கு லாரில அடிபட்டுச்சே"என்றவளுக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் திவ்யா அணைத்துக்கொள்ள ஷாக்சிக்கு எல்லாலே புரிந்தது.
உடனே தலையில் அடித்துக்கொண்டி
"ஐயோ அப்பா உங்க சாவுக்கு நானே காரணம் ஆகிட்டேனே"என்று அழ ஷாக்சி ஏன் இப்படி பேசுகிறாள் என்று புரியாமல் திவ்யா ஷாக்சியை பார்க்க அவளோ
"திவ்யா ,டாக்டர உடனே வர சொல்லு "என்று கூறினால்.என்னமோ ஏதோ என்று பயந்த திவ்யா டாக்டரை அழைத்து வர ஷாக்சி அவரிடம்
"டாக்டர் ,நான் கர்ப்பமா இருந்ததா ஒரு டாக்டர் கன்பார்ம் பண்ணாங்க.அத ரீ கன்பார்ம் பண்ணதான் இன்னொரு ஹாஸ்பிடலுக்கு போர வழியில இப்படி ஆச்சு"என்று கூற டாக்டரோ
"சாரிமா நீங்க தூக்கி வீசப்பட்டதுல அபார்சன் ஆச்சு"என்று கூறி அவர் அறையை விட்டு செல்ல ஷாக்சி தலையில் கையை வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தால்.இங்கு என்ன நடக்கின்றது என்று புரியாமல் நின்று கொண்டிருக்க ,பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து ஷாக்சி தன் கையை அறுத்துக்கொண்டால்.
வெட்டுப்பட்ட கையில் இருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டிருக்க திவ்யாவோ
"டாக்டர்,டாக்டர்"என்று சத்தமிட உள்ளே வந்த டாக்டர்
"என்னம்மா என்னாச்சு"என்று கேட்க
"டாக்டர் இவ கைய அறுத்துக்கிட்டா.ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணுங்க"என்று கூறினால்.உடனே டாக்டரும் அவளுக்கு முதலுதவி செய்து அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்தனர்.அதன் பின் டாக்டரிடம் சென்ற திவ்யா
"டாக்டர் நான் ஷாக்சியோட மெடிகல் ரிப்போர்ட்ட பார்க்கலாமா" என்று கேட்க அவர் அவளிடம் மெடிக்கல் ரிப்போர்ர்டை கொடுத்து விட்டு சென்றார்.மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்தவள் ஷாக்சியின் வயிற்றில் இருந்த கருவும் இவர்கள் பார்டிக்கு சென்ற தினமும் ஒன்றாக ஒத்துபோக திவ்யாவுக்கு மண்டையே குழம்பியது.
மறு நாள் காலை ஷாக்சி மயக்கம் தெளிந்து எழும்பியதும் திவ்யா பளாரென ஒரு அறை விட்டவள்
"என்னடி நினைச்சிக்கிட்டு இருக்குற.உன்ன ரொம்ப போல்ட் ஆன பொண்ணுனு நினைச்சிட்டு இருந்தேன்.நீ என்னடான்ன இப்படி கோழையா இருக்குறியே"என்று சத்தமிட்டவள்
"முதல்ல என்ன நடந்திச்சி அத சொல்லு"என்றாள்.
ஆரம்பம் முதல் ஆக்சிடன் ஆனது வரை கூறிய ஷாக்சி தான் எப்படி கர்ப்பம் ஆனது என்பது மட்டும் தனக்கு தெரியவில்லை என்று கூற திவ்யாவோ
"அன்னைக்கு பார்ட்டிலதான் ஷாக்சி ஏதோ நடந்திருக்கு.என்ன நடந்தது எப்படி நடந்ததுன்னு தெரியல.சரி இந்த விசயம் உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்.வேற யார்கிட்டயும் இத சொல்ல வேண்டாம்"என்றவள்
"இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க"என்று ஷாக்சியை பார்த்து கேட்டாள்.அதற்கு ஷாக்சியோ
"திவ்யா என் வாழ்க்கைய நாசமாக்கினவன் கண்டிப்பா அந்த பார்ட்டிக்கு வந்தவனாத்தான் இருப்பான்.சோ என்னால இனிமே அந்த கம்பனில வேலை பார்க்க முடியாது.நான் என் ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு வெளியூர் போக பேறேன்"என்றவளை
"சரிடி இப்போ எதுவுமே டிசைட் பண்ண வேணாம்.ஓக்கே.முதல்ல ஆபீசுக்கு 2 வாரம் லீவு போடு.அப்புறமா என்ன பண்றதுன்னு பார்க்கலாம்"என்றவள்
"ப்ளீஸ் ஷாக்சி,உனக்காக இல்லைன்னாலும் உன் தம்பிக்காகவாச்சும் நீ வாழனும்டி.என்ன மாதிரி அவனும் அனாதையா நின்னுடக்கூடாது.ப்ளீஸ்மா,இனிமே எந்த விதமான தப்பான முடிவும் எடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு "என்று கேட்டவளை ஷாக்சி இறுகிய முகத்துடன் சத்தியம் செய்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒரு ஜீவன் கண்களில் கண்ணீருடன் கேட்டுக்கொண்டிருந்தது.
---------_-----------------
ஹாய்,எந்த புதிய கதைகளும் படிக்காததால் புது கதை அறிமுகம் செய்ய முடியவில்லை.
நீங்கள் படிக்கின்ற புதிய நல்ல கதைகள் இருந்தால் மெசேஜ் செய்யவும்.
tharakannan இன் கல்யாணம் பண்ணிக்கலாமா சூப்பரா இருக்கு.18 எபிசோட் வரைக்கும் தங்க்லிஸ்ல இருக்கு.கொஞ்சம் பொறுமையா படிச்சீங்கன்னா அதுக்கு பிறகு உங்களுக்கு சூப்பர் கதை ஒன்று வாசித்த உணர்வு உண்டாகும்.
sahisahi1 இன் துளி துளியாய் இன்னும் படிக்கல.ஆனா 16 எபிசோட் போட்டிருக்காங்க.ஆனால் 250 கும் குறைவான ரீடர்ஸ்தான் மொத்தமாவே வாசிச்சிருக்காங்க.பல எழுத்தாளர்கள் forum களுக்கு மட்டுமே எழுத தொடங்கியுள்ளார்கள்.
சோ, நம்ம எல்லோரும் இப்படியான புதிய எழுத்தாளர்களுக்கு எப்பவும் ஆதரவு தெரிவிக்கனும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro