தென்றல் 22
வீடு வந்ததும் நம்பிக்கை இல்லாமல் திவ்யாவை பார்த்த ஷாக்சி
"இங்க பாரு திவ்யா நீ மனசுல ஏதோ ஒரு ப்ளான் பண்ணிருக்கேன்னு மட்டும்
தெரியுது. ஆனா எதுக்காக இப்படி பண்றேன்னு மட்டும் புரியல. எதுவா
இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய்டி" என்று கூற ஷாக்சியை
அணைத்துக்கொண்ட திவ்யா எதுவும் பேசாமல் அழுதாள். அவள் அழுது முடிக்கும்
வரை காத்திருந்த ஷாக்சி
"டேய் இங்க பாரு. எனக்கு வேற எதுவுமே தெரிய வேணாம். நன் கேட்குற ஒன்னுக்கு
மட்டும் பதில் சொல்லு" என்று கூற திவ்யாவோ
"நீ கேட்க போறேனு தெரியும் ஷாக்சி. எனக்கு நிஜமாவே கல்யாணம் ஆச்சான்னு
கேட்க போற அதுதானே" என்று கூறியவள் ஷாக்சியின் கையை பிடித்து அவள் தலையில்
வைத்து
"என் மேல சத்தியம் பண்ணி சொல்லு இத நீ வேற யார்கிட்டயும் சொல்ல
மாட்டேன்னு" என்று கேட்க ஷாக்சியும் சரி என்றவள்
"எனக்கு சத்தியமா கல்யாணம் ஆகல்ல. நான் அப்படி சொன்னதுக்கு பெரிய ரீசன்
இருக்கு.நாளைக்குள்ள தெரிய வந்துடும் சரியா" என்று கூற ஷாக்சியோ
"அடிப்பாவி அப்போ அங்க வெச்சி நீ மித்ரன் மேல சத்தியம் பண்ணி
சொன்னியேடி. உங்கண்ணனுக்கு ஏதும் ஆச்சுன்னா" என்று கூற அப்போதுதான் தான்
ஏற்கனவே ஒரு முறை மித்ரன் மீது பொய் சத்தியம் செய்தது நினைவுக்கு வந்தது.
"ஷாக்சி இரு நான் அண்ணன் பார்த்துட்டு வர்ரேன்" என்று கூறி மித்ரனின்
அறைக்குள் ஓடியவள் அங்கு அவன் தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி
"அண்ணா,அன்னைக்கு உனக்கு ஆக்சிடன்ட் ஆக நானே காரணம் ஆகிட்டேன்னா. உன் மேல
பொய் சத்தியம் பண்ணதாலதான் இப்படி ஆகிடிச்சோன்னு பயமா இருக்குன்னா" என்று
கூற அவனோ அவளை அணைத்து
"இங்க பாருடா,ஒருத்தன் தலை விதி வெறும் ஒரு சத்தியத்தால மாறிடாது. நான் இன்னும் உயிரோட தானே இருக்கேன். சோ உன் மனச போட்டு ரொம்ப குழப்பிக்காம போய்
தூங்கு. நாளைக்கு கல்யாணம் இருக்குல்ல. நான் போய் உன் அண்ணி கூட டூயட் பாடுறேன்" என்று கூறியவனை எதுவும் கூறாமல் கண்களில் வலியுடன்
பார்த்துகொண்டிருந்தாள்.
தன் அறைக்குள் வந்தவள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு
படுத்துக்கொண்டிருக்க நாளை தான் செய்ய போகும் காரியத்தால் எங்கே மித்ரன் தன்னை வெறுத்து விடுவானோ என்று ரொம்பவும் பயந்தாள். எது நடந்தாலும்
மித்ரன் வாழ்க்கையே தனக்கு முக்கியம் என நினைத்தவள் அப்படியே உறங்கியும் போனாள்,
திருமண நாள் அன்று அர்ஜுன் திருமண வேலைகள் ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்க
அவன் அவ்வப்போது திவ்யாவை கண்களில் வலியுடன் பார்த்துக்கொண்டிருப்பதை
கண்ட ஷாக்சியால் எதுவும் பேசமுடியாமல் இருக்க அர்ஜுனிடம் திவ்யாவுக்கு திருமணம் ஆகாவில்லை என்ற உண்மையை கூறுவோம் என்று அவன் அருகில் செல்ல முற்பட்ட வேலை அர்ஜுனிடம் சென்ற விஷ்வனாத்
"ஏன் அர்ஜுன் அப்பா எங்க இன்னும் கானோம்.கிளம்பிட்டாங்களா இல்லையா?" என்று கேட்டவரை அவன் கொஞ்சம் கவலை தேய்ந்த முகத்துடன்
"இல்லை அங்கிள் அவருக்கு ஒரு முக்கியமான பிஸ்னஸ் மீட்டிங்காம்னு
ப்ரான்ஸ் போயிட்டாரு" என்று கூற விஷ்வனாத்தோ
"ஏன் அர்ஜுன் அப்பாக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?" என்று வருத்தத்துடன் கேட்க அர்ஜுன்
"அடப்போங்க அங்கிள்,எங்கப்பாக்கு எப்ப பாரு பிஸ்னஸ் பிஸ்னஸ்
பிஸ்னஸ். அவ்வளவுதான்.நாங்க என்ன பண்றோம் ஏது பண்றோம் என்ற கவலை எல்லாம் இல்லை. சரி அத விடுங்க.அதான் அண்ணனா நான் இருக்கேனே. எல்லாத்தையும் சிறப்பா
செஞ்சிடலாம் " என்று கூற அரை மனதுடன் அவ்விடத்தை விட்டு சென்றார்.
குறித்த சிலரை மட்டும் அழைத்திருந்த திருமணம் என்பதால் மண்டபத்தில் பெரிதாக எதுவும் கலோபரம் இல்லாமல் அமைதியாக
இருந்தது. திருமணப்பெண்ணை ஜானவி யின் சில தோழிகள் அழைத்து வர திவ்யா, ஷாக்சி, ஜானவி மூன்று பேரும் அணிந்திருந்த சேலைகளை பார்க்க எல்லோருக்கும் ஒரு வித குழப்பமாக இருந்தது. திவ்யாவிடம் வந்த ஷாக்சி
"ஏய் என்னடி மூனு பேருக்கும் ஒரே மாதிரி டிறெஸ் எடுக்குறேன்னு சொல்லிட்டு உங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி எடுத்திட்டு எனக்கு அதைவிட காஸ்ட்லியா
க்ராண்ட்டாஎடுத்திருக்குற. என்னதாண்டி உன் ப்ளான். ஏடாகூடமா எதுவும் பண்ணிடாத திவ்யா "என்று கூறஅவளை பார்த்து
"கடவுள்கிட்ட எனக்காக வேண்டிக்கோ. என் அண்ணன் என்ன வெறுத்துடக்கூடாதுன்னு" என்றாள்.
மணமேடைக்கு வரும் போது ஜானவிக்கு மனதில் ஏதோ ஒன்று தோன்ற தன் தோழியிடம்
"ஹேய் உன் மொபைல கொஞ்சம் கொடு .நான் எங்கப்பாகிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்" என்றவள் உடனே கால் செய்து பேசினாள்.
மணமேடைக்கு சென்று அமர இருந்த ஜானவியை திவ்யா பார்த்து
"ஜானவி இது நீ இருக்க வேண்டிய மணமேடை இல்லம்மா. எங்க அண்ணி ஷாக்சி இருக்க
வேண்டியது. சோ அட்சதை தூவிட்டு சாப்பிட்டுட்டு நீ வீட்டுக்கு போகலாம் " என்று கேஷுவலாக கூற அங்கிருந்த எல்லோரும் திவ்யாவை ஒரு மாதிரியாக பார்க்க மித்ரனோ
"திவ்யா எப்ப பாரு உனக்கு விளையாட்டுத்தானா? சும்மா இரு "என்றவனை அவள்
"நான் விளையாடல்ல. சீரியசாதான் சொல்ரேன்" என்று அவள் முகத்தில் தெரிந்த
தீவிரத்தை கண்டவன் ஒரு நிமிடம் தடுமாறிப்போனான். மணமேடையில் இருந்து கீழே வந்த ஜானவி திவ்யாவை பார்த்து புன்னகைத்தவள்
"என்ன பார்த்தா எப்படி தெரியுது திவ்யா, பைத்தியம் மாதிரியா? " என்று
பேசிய ஜானவியை எல்லோரும் ஒரு மாதிரி நோக்க அவளோ
தொடர்ந்தவள்
"நீ அன்னைக்கு டாக்டர் கிட்ட மித்ரன் ஃபைல காட்டி பேசினப்போவே எனக்கு
எல்லாமே தெரிஞ்சிடிச்சி. ஆனா டூ லேட் திவ்யா என் ப்ளான்ல 50% ஆல்ரெடி ஃபினிஷ் பண்ணிட்டேன்" என்று கூற மித்ரனோ
"இங்க என்னதான் நடக்குது" என்று சத்தமிட்டான்.
"அண்ணா இவதான் அன்னைக்கு நான் கீழ விழனும்னு அந்த சேப்டி டூல்ஸ டேமேஜ் பண்ணிருக்கா. உங்கள கல்யாணம் பண்ணி நம்ம எல்லோரையும் பிரிக்கனும்
என்கிறதுதான் இவ ப்ளான். என் மேல இவளுக்கு என்ன கோவம்னு தெரியல. ஆனா என்ன பழிவாங்குறதா நினைச்சி உங்க லைப்பயும் சேர்த்து கெடுக்க பார்க்குறா" என்றவனை மித்ரன் கண்களின் காதல் வலியுடன்
"நிஜமாவா ஜானு" என்று கூற ஜானவியோ
"அடி செருப்பால யாரு.... யாருக்குடா ஜானு. இப்போ புரியுதா காதலோட வலி என்னான்னு. எனக்கு கோவம் எல்லாம் உங்க ரெண்டு பேரு மேலயும்தான். இதோ இங்க
இருக்காலே அனாதை குரங்கு. அவளுக்கு நீ சப்போர்ட் பண்ணதால உனக்கும் சேர்த்து
நான் ப்ளான் பண்ண வேண்டியதா போச்சு"என்று கூற அவ்விடத்திற்கு வந்த அர்ஜுன்
"ஜானவி என்ன நீ ரொம்ப மோசமா பேசுற. இங்க என்ன நடக்குது "என்று கூற அவளோ
"நீ பேசாத என்கிட்ட. எங்கம்மா வயித்துல ஒன்னா மட்டும்தான்
பொறாந்த. எப்பவாச்சும் நான் என்ன பண்றேன் என் ஆசைகள்,விருப்பங்கள்
என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு அத நிறைவேற்றி இருக்கியா. இல்லைல சோ நீ உன் திருவாய மூடிக்கிட்டு இரு"என்று அர்ஜுனை பேச விடாமல் செய்தாள்.
"இங்க பாரு மித்ரன் ,உன்ன கொல்றது எல்லாம் என் ப்ளான் இல்ல. உன் கம்பனிய உன்கிட்ட இருந்து பறிக்கனும் அவ்வளவுதான். அதுக்கு தேவையான எல்லாத்தையும்
நான் பண்ணிட்டேன். அன்னிக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது திவ்யாவுக்கும் கொஞ்சமா ஏதும் பண்றதுக்கு. ஆனா அதுலயும் நீயே மாட்டிக்கிட்ட" என்று கூற
திவ்யாவோ நக்கலாக
"ஹலோ மேடம் இன்னும் உங்களுக்கு விற்கிறோம்னு சொன்ன செயார்லாம் நாங்க உங்க பெயருக்கு மாத்தல்ல. சோ பகல் கனவு காண வேண்டாம்"என்று கூற ஜானவி திவ்யாவை நோக்கி
"அட போ திவ்யா நீ இன்னும் குழந்தையாவே இருக்க. 2 கோடி செயார உங்க அப்பா
ஓஹ் சாரி சாரி நீதான் அனாதை ஆச்சே அவரு எப்படி உனக்கு அப்பா ஆவாரு. மித்ரனோட அப்பா என்கிட்ட 50 லட்சம் வாங்கிட்டு கொடுத்துட்டாரு. மீதி பணத்த நான் கொடுப்பேன்னா நினைக்கிற. ஹாஹா"என்று சிரித்தவளை இப்போது எல்லோரும் ஜானவி எதுக்காக இப்படி செய்கின்றால் என்று புரியாமல் முழித்தனர்.
"இங்க பாரு ஷாக்சி நீயும் இவங்க கூட சேர்ந்து உன் வாழ்க்கைய
அழிச்சிக்காத.உன் வாழ்க்கை ஏற்கனவே அழிஞ்ச மாதிரிதான் இருக்கு .என்கூட வந்துடு உன் வீட்ட நான் மீட்டு தரேன்"என்றவளுக்கு ஷாக்சி பதில் ஏதும்
கூறாமல் திவ்யாவின் அருகில் வந்து அவளின் வலக்கரம் மீது தனது இடக்கரத்தை இணைத்து என்ன நடந்தாலும் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று சைகையாலேயே
உணர்த்தினால்.உடனே திவ்யா
"என்ன ஜானவி முதலாவது பாலே நோ போல் ஆச்சா.ஷாக்சி எங்க கூடதான் எப்போமே இருப்பா. ஆமா உனக்கும் எனக்கும் அப்படி என்ன பிரச்சினை. எதுக்கு என் மேல இவ்வளவு கோவமா இருக்க?" என்று கேட்க ஜானவியோ கோபத்துடன்
"என் காதல அழிச்சதே நீதாண்டி. எப்போ எப்படின்னு யோசிச்சிக்கிட்டே
இரு. அப்புறம் புருசன விட்டு ஓடி போனவ (மித்ரனோட அம்மா)பையனுக்கு அப்பன் யாருன்னு தெரியாம கர்ப்பம் ஆன பொண்ணுதான் கரக்ட்டா இருப்பா. சோ நீ உங்க அருமை நொண்ணனுக்கு
இந்த புனிதமான கற்புக்கரசியையே கல்யாணம் பண்ணி வை. ஆனா இதுக்கு அப்புறம் உங்க வாழ்க்கைல எல்லாமே நானேபார்த்து முடிவு செய்றதாத்தான் இருக்கும்" என்று கூற ஆத்திரம் வந்த திவ்யா பளார் என் ஜானவியை அறைந்தவள்
"எங்கம்மாவ பத்தி உனக்கென்னடி தெரியும். காதல் என்ற பேருல ஒருத்தங்க மனச ஏமாத்தி தில்லு முல்லு வேலை பார்க்குற உன்ன மாதிரி ஆளுக்கு எல்லாம்
எங்கம்மாவ பத்தி பேச தகுதியே இல்ல. என்ன சொன்ன எங்க வாழ்க்கை உன் கைலயா. அதையும் பார்க்கலாம் ஜானவி நீயா நாங்களானு" என்று கூறியவள்
மித்ரனிடம் திரும்பி
"அண்ணா நான் சொன்னா கேட்பேல்ல . இப்போ நீ ஷாக்சி கழுத்துல தாலிய கட்டு
" என்று கூறியவளைஅவன் அருகில் அழைத்த மித்ரன் பளார் என ஒரு அறைவிட்டான்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro