தென்றல் 15
நாட்கள் யாருக்காவும் காத்திருக்காமல் வேகமாக நகர்ந்து கொண்டிருக்க மித்ரனை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்திருந்தனர்.அவனால் அன்றாடம் ஒரு மனிதனால் செய்ய கூடிய செயல்களுக்கு கூட மற்றவரின் உதவி இல்லாமல் செய்ய முடியாமல் இருந்தது.
தினமும் மித்ரனை கவனித்துக்கொள்ள ஒரு ஆண் நர்ஸை வேலைக்கு அமர்த்த விஷ்வனாதன் முடிவெடுத்த வேலை திவ்யா அதை மறுத்து விட்டாள்.அவளே தனது அண்ணனை பார்த்துக்கொள்ள போவதாக கூற அவரால் அதை மறுக்க முடியவில்லை.
ஒரு நாள் திவ்யா குளிக்க சென்றிருந்த வேலை மித்ரனை பார்க்க வந்த ஷாக்சி அவன் பக்கத்தில் இருந்த ஐபாட் ஐ எடுக்க சிரமப்பட்டு கீழே விழப்போன போது ஓடி வந்த ஷாக்சி அவன் தலை கீழே அடிபடாத வண்ணம் அவள் மடிகளில் தாங்கி கொண்டாள்.தன் நிலை உணர்ந்த மித்ரனுக்கோ மிகவும் கவலையாக இருக்க அவன் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக ஓடிக்கொண்டே இருந்தது.
"ஷாக்சி என்னோட ஆயுள் பூராவும் நான் இப்படியேதான் இருக்கனுமா?எதுக்கு எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை.நான் என்ன பாவம் செஞ்சேன்.ஏன் கடவுள் எனக்கு இப்படி ஒரு தண்டனைய கொடுத்தாரு?" என்று அழத்துவங்கியவனை என்ன கூறி சமாதானம் செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றால்.எதுவாக இருந்தாலும் பரவாயில்லை இந்த நேரத்துக்கு மித்ரனின் மனது சமாதானம் ஆகின்ற மாதிரி எதுவும் கூற வேண்டும் என எண்ணியவள்
"உங்களுக்கு ஒன்னு தெரியுமா மித்ரன்.முஸ்லிம்ஸ் இருக்காங்கல்ல,அவங்க எப்போமே தங்களுக்கு கஷ்டம் வரணும்னு நினைப்பாங்களாம்.ஏன்னா கடவுள் தனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு மட்டும்தான் கஷ்டத்த கொடுப்பாராம்.அதுக்கு மூனு ரீசன் இருக்காம்.
ஒன்னு கஷ்டம் வரும் போதுதான் நம்ம கடவுளை நினைப்போம்.சோ நாம செஞ்ச பாவங்களுக்கு அவருகிட்ட பாவ மண்ணிப்பு கேட்டு திருந்த டிரை பண்ணுவோம்.
இரண்டு நம்ம கடவுள் மேல பக்தியா இருந்தாலும் நம்ம இன்னும் கடவுள் கிட்ட நெருங்கனும்னு நமக்கு கஷ்டத்த தருவாராம்.
மூனு அவங்க நம்பிக்கை பிரகாரம் பூமியில் கஷ்டப்பட்டாலும் அதுக்கு கூலியா கடவுள் சுவர்க்கத்தை அவங்களுக்கு கொடுப்பாரு என்பது அவங்களோட நம்பிக்கை.சும்மா யோசிச்சி பாரு மித்ரா.இந்த படிப்பினைகளை ஒருத்தன் தன் வாழ்க்கையில எடுத்துக்கிட்டா அவனுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அத ஈசியா கடந்து போயிடுவான்.துவண்டு போய் அழுதுகிட்டு இருக்க மாட்டான்" என்று கூற ஷாக்சி கூறிய வார்த்தைகள் அவனுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்க அவனை அறியாமலேயே அவளின் இடையை கட்டிக்கொண்டு அப்படியே இருந்து விட்டான்.
குளித்து விட்டு மித்ரனின் அறைக்குள் வந்த திவ்யா ,மித்ரன் கீழே ஷாக்சியின் மடியில் இருப்பதை பார்த்தவள் ஓடி வந்து என்ன நடந்து என்று கேட்க ஷாக்சியும் நடந்தவற்றை கூற மித்ரனை இருவரும் சேர்ந்து தூக்கி கட்டிலில் கிடத்தினார்கள்.
மித்ரனுக்கு அடிபட்டதன் பின்னர் திவ்யா அவர்களின் வீட்டுக்கே வந்துவிட்டாள்.ஆனால் ஷாக்சியோ தன்னால் அங்கு வரமுடியாது என்று முரண்டு பிடித்த வேலை
"சரி ஷாக்சி, நம்ம இப்போ இங்க இருக்குற மாதிரியே இருக்கலாம்.நான் டெய்லி அண்ணாவ போய் பார்த்துட்டு வரேன்.என்னால உன்னையும் தனியா விட்டுட்டு போக முடியலடி" என்று கூற ஷாக்சியோ
"லூசு மாதிரி பேசாத திவ்யா .நீ அவங்க வீட்ல தங்குறது நியாயம்.ஏன்னா நீ இப்போ விஷ்வனாதன் சாரோட தத்துப் பொண்ணு. நான் எந்த உரிமைலடி இப்போ வந்து தங்குறது" என்று கேட்க திய்வாவோ ஒற்றை வார்த்தையில்
"என் அண்ணி என்ற முறைல வந்து தங்கு"என்றாள்.ஏதோ யோசித்த ஷாக்சியை
"ஏன் ஷாக்சி அண்ணாக்கு இப்படி அடிபட்டுடிச்சே.காலத்துக்கும் இவனுக்கு நம்ம ஆயா வேல பார்க்கனுமானு யோசிக்கிறியா.அந்த கவலையே உனக்கு வேண்டாம்.என் அண்ணன காலம் பூரா நான் பார்த்துக்குவேன்.உனக்கு அந்த கவலையே வேண்டாம்.இல்ல நடக்க முடியாதவன கட்டிக்கிட்டு என்ன பண்ண போறோம்னு யோசிக்கிறியா" என்று கேட்க திவ்யாவை முறைத்தவள்
"என்னடி விட்டா ஓவரா பேசுர .உனக்கு அவன் அண்ணன்னா எனக்கு ப்ரெண்டி.நானும் வருவேன் உன்கூட.இன்னைக்கே பெட்டி படுக்கை எல்லாத்தையும் கட்டு" என்றாள்.
"பெட்டி ஒக்கே ஆனா படுக்கை தேவையில்லடி.ஏன்னா அவங்க வீட்டில நிறைய கட்டில் இருக்குப்பா" என்றவளை ஷாக்சி அடிக்க துரத்தினால்.ஷாக்சிக்கு பழிப்புக்காட்டி திவ்யா ஓட யார் மீதோ மோதுண்டு அவன் கீழே விழுந்த வேளை அவன் மேலேயே திவ்யாவும் விழுந்தாள்.அவள் தலை உயர்த்தி யார் என்று பார்க்க அங்கு அர்ஜுனின் மீது அவள் விழுந்து இருந்தால்.அவன் மீது அப்படி விழுந்து கிடந்ததில் அவள் இடை பற்றி அவளை அர்ஜுன் எழுப்பிவிட முயல அவள் அதற்கு எல்லாம் நான் அசர மாட்டேன் என்பது போல ஒரு மோன நிலையில் அவன் மீது கிடந்தால்.அவளின் நிலையை கலைக்க எண்ணிய அர்ஜுன்
"திவ்யா கொஞ்சம் எந்திரிக்கிறீங்களா?" என்று கேட்க அவளுக்கு அப்போதுதான் தான் இருந்த நிலை புரிய
"ஓஹ் சாரி அர்ஜுன்" என்று எழுந்தாள்.திவ்யா எழுந்ததும் ஷாக்சியிடம் சென்ற அர்ஜுன்
"ஷாக்சி நம்ம இந்த டிரிப்ப இன்சூர் பண்ணி இருக்குறதால நமக்கு ஒரு 50% மெடிக்கல் செலவு மட்டும் கிடைக்கும்.மெடிக்கல செலவுக்குன்னு ஒரு 1.2 கோடி தேவைப்படும்னு சொல்ராங்க .சோ நமக்கு ஒரு 60 லட்சம் கிடைக்கும்னு நினைச்சேன்.ஆனா இப்போ அதுல ஒரு சிக்கல்" என்று கூற ஷாக்சியும் திவ்யாவும்
"என்ன சிக்கல் அர்ஜுன்"என்று கேட்க
"அது என்னன்னா நாங்க பண்ணியிருந்த இன்சூரன்ஸ் இயற்கையா நடக்குற ஆக்சிடண்ட்ஸ்கு மட்டும்தான்.ஆனா மித்ரன் கேஸ்ல ...."என்று இழுக்க திவ்யாவோ
"என்னான்னு சொல்லுங்க அர்ஜுன்"என்று கூற அவளின் முகத்தை பாராமல் ஷாக்சியிடமே
"அர்ஜுன் கேஸ்ல இது இயற்கையா நடந்த விபத்து இல்லைன்னு சொல்ராங்க.ஏன்னா அவங்க சேப்டி டூல்ஸ் கம்பனில செக் பண்ணதுல எல்லாமே கரக்டா செக் பண்ணி கொடுத்ததா சொல்லிருக்காங்க.ஆனா ஆக்சிடண்ட் நடந்தது சேப்டி க்ளிப்ல இருந்த ஒரு நட்டு காணாம போய் இருக்கு.அதுதான் இப்ப பிரச்சினையே.இப்போ நம்ம ஏதும் further ஆஹ் இன்வஸ்ட்டிகேட் பண்ணா இது போலீஸ் கேஸ் ஆகும்னு சொல்ராங்க.because its an attempt to murder" என்று கூறி முடிக்க திவ்யாவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.அவள் உடனே
"மித்ரன் அண்ணா போட்டுகிட்ட க்ளிப் என்னோடது.சோ நாந்தான் அன்னைக்கு விழுந்திருக்கனும்.ஆனா துரதிஷ்டவசமா அண்ணா விழுந்துட்டாங்க.எனக்கு யாரு இங்க எதிரி இருக்க போறா, என்ன கொல்ற அளவுக்கு" என்று கூற இருவரும் அதை ஆமோதித்தனர்.உடனே ஷாக்சி
"நம்ம இத விஷ்வனாதன் சார்கிட்ட சொல்லலாம்"என்றாள்.
விஷ்வனாதனிடம் இந்த விடயத்தை கூற அவரோ
"தேவை இல்லாம இதுல போலீஸ இழுக்க வேனாம்.நம்மலாள எவ்வளவு முடியுமோ அத பண்ணலாம்"என்றார்.
விஷ்வனாதும் தன்னால் முடிந்தவரை பணத்துக்கு ஏற்பாடு செய்ய முயன்ற போதும் அவரால அவ்வளவு பணத்தை புரடட்ட முடியவில்லை.மித்ரனின் வைத்திய செலவுக்கும் இதர பயணம் மற்றும் தங்குமிடத்திற்கும் சேர்த்து அன்றைய தினம் டாக்டர் கூறிய தொகை 2 கோடி.கடைசியில் தன் கம்பனியின் 20 வீத மான பங்குகளை விற்க முடிவு செய்த பொழுது ஜானவியே முன் வந்து அந்த பணத்தை தருவதாக கூறினால்.ஆனால் விஷ்வனாதனுக்கோ அவளிடம் கடனாக பணத்தை பெறுவதை விட்டு தன் கம்பனி செயார்களை அவள் வாங்கி கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
இப்படி இருக்க ஒரு நாள் விஷ்வனாதன் வீட்டிற்கு வந்த ஜானவியிடம் அவர்
"அம்மாடி ஜானவி நீ இப்போ உங்க அப்பாவோட 4 கம்பனியையும் பொறுப்பேத்துக்கிட்டதா சொன்னாங்க.அதோட சேர்த்து நம்ம கம்பனியையும் கொஞ்ச நாளைக்கு பார்த்துக்க முடியுமா.ஏன்னா இப்போ நீயும் அதோட ஒரு பார்ட்னர்.நான் ,ஷாக்சி,திவ்யா மூனு பேரும் ஜேர்மன் போறோம்.எப்படியும் வர ஒரு 3 மாசம் சரி ஆகும்.அதனால நாங்க மூனு பேரும் யோசிச்சி இந்த முடிவ எடுத்திருக்கோம்.அது வரைக்கும் உன்னால இந்த உதவிய பண்ணமுடியுமா?"என்று கேட்க அவளோ புன்னகை மாறாமல்
"சரி அங்கிள் அதுல எந்த ப்ராப்ளமும் இல்ல.ஆனா நான் கேட்குற ஒன்ன நீங்க செய்யனும்" என்றாள்.இப்போது இவர்கள் மூவரும் என்ன என்பது போல பார்க்க
"நீங்க ஜேர்மன் போக முன்னாடி மித்ரன் கூட எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க" என்று கூறினால்.இதை கேட்டு மூவரும் உச்சபட்ச அதிர்ச்சியில் இருக்க வாய் மூடி அமைதியாக இருந்தனர்.
_________
hashasri இன் "மனதை மாற்றிவிட்டாய்" செம்ம இண்ட்றஸ்டிங்கா இருக்கு..ஒரு வரி கூட ஸ்கிப் பண்ணாம படிச்சேன்.ஆனா 8 எபிசோட்தான் படிச்சேன்.மீதி படிக்க நேரம் கிடைக்கல.
Vaishu1986 இன் " நேசம் மறைத்த என் நெஞ்சம்" சூப்பரா இருக்குன்னு im_dhanuu சொன்னாங்க.கண்டிப்பா நம்ம எல்லோரும் அவங்களுக்கு ஆதரவு கொடுப்போம்.
Aditi_noa வின் "நீயே என் இதயமடி"செம்ம த்றில் ஆ இருக்கு.சூப்பரா கொண்டு போறாங்க .
கவிதை பிரியரகள் sago266ms வின் "சிந்தனை சிதறல்கள்" படிங்க.நிச்சயாமக கவிதை பிரியர்களுக்கு பிடிக்கும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro