தென்றல் 11
அடுத்த நாள் மித்ரனை காபி சாப் ஒன்றுக்கு அழைத்த ஷாக்சி ,திவ்யாவையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.அங்கு மித்ரன் இவர்களுக்கு முன்பே இருப்பதைக் கண்டவர்கள் அவனருகில் சென்று
"ஹாய் மித்ரன்" என்று கூற அவனும் புன்னகைத்து
" என்ன முடிவு பண்ணிருக்க ஷாக்சி" என்று கேட்க அவளோ
" எனக்கு ஓக்கேதான் ,பட் சில கண்டிசன்ஸ் இருக்கு " என்றாள்..அவனும் பதிலுக்கு
" சரி சொல்லு" என்று கேள்வியாக நோக்கியவனை ஷாக்சி
" மித்ரன் நம்ம என்னதான் அக்ரீமன்ட் போட்டுக்கிட்டாலும் பார்க்குறவங்களுக்கு நம்ம கணவன் மனைவி.அவங்க நம்ம கிட்ட பேசும் போது நம்மல நக்கல் பண்ணி பேசலாம்.நக்கல்னு நான் சொல்ல வர்ரது என்னன்னு புரியும்னு நினைக்கிறேன்.அதை வெச்சி அவங்ககிட்ட நம்மலால சண்ட போட முடியாது.முதல்ல நம்ம அதை எப்படி பேஸ் பண்றதுன்னு முடிவெடுக்கனும்.அடுத்து நான் எப்படியும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.சப்போஸ் உனக்கு ப்யூச்சர்ல கல்யாணம் பண்ணிக்குற ஐடியா வந்தா நம்ம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்.எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்ல.ஆனால் இந்த ரிலேசன்சிப்ல இருக்கும் போது நீ என்கிட்ட நான் என்ன செய்றேன், எங்க போறேன், எப்போ வர்ரேன்னு கேள்விலாம் கேட்க கூடாது " என்றவளை மித்ரன்
" நானே இதை எல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு இருந்தேன் பட் நீயே சொல்லிட்ட.என்வேல ஈசியா போச்சு.இன்னும் கண்டிசன்ஸ்ல ஏதும் ஆட் பண்ணனும்னா பொறுமையா யோசிச்சி பண்ணலாம்.சோ இன்னைல இருந்து வீ ஆர் ஹஸ்பன்ட் அன்ட் வைப் பார் அவ்ன் பெனிபிட்ஸ்(Husband and wife for own benifits) " என்று கூறிய வேலை இருவரையும் திவ்யா முறைத்துக்கொண்டிருப்பதை கண்ட மித்ரன்
" ஆமா நீ ஏன் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்க " என்று கேட்க கோவத்தில் அவள்
"ஆமா நீ முதல்ல இஞ்சி தின்ன கொரங்க பார்த்திருக்கியா? சொல்லு பார்க்கலாம்.அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் மூள கழன்டுடிச்சா ,இப்படி பேசுரீங்க.கல்யாணம் என்ன சாதாரன விசயமா.அது ஆயிரம் காலத்து பயிர் " என்றவளை ஷாக்சி
" திவ்யா என்லைப்ல இனிமே கல்யாணம் என்ட பேச்சிக்கே இடமில்ல.ஏன்னா என்ன கல்யாணம் பண்ணிக்க போறவன்கிட்ட எல்லா உண்மையையும் நான் சொல்லிடுவேன்.அவன் நல்லவனா இருந்தா என்மேல பரிதாபப்பட்டு எனக்கு வாழ்க்கை தருவான்.இல்ல கெட்டவனா இருந்தா வாழ்க்கை பூரா என்ன குத்திக்காட்டியே கொல்வான்.இது ரெண்டுக்குமே எனக்கு உடன்பாடில்ல.சோ என் லைப்ல எனக்கு கல்யாணம் என்பதே இனி இல்ல" என்றவளை மித்ரன்
" சூப்பரா சொன்ன ஷாக்சி.அதேதான் எனக்கும் திவ்யா.எனக்கும் என்லைப்ல ஒரு பொண்ணுக்கு இடமில்ல.சோ இது ஒரு மியூச்சுவல் அன்டர்ஸ்டான்டிங்க்ல பண்ணிக்கிற ஒரு பிஸ்னஸ் டீல்.எனக்கு கம்பனி கிடைக்க ஷாக்சி ஹெல்ப் பண்ணா அவளுக்கு அவவீடு கிடைக்க நான் ஹெல்ப் பண்ணுவேன் அவ்வளவுதான்.இதுக்கு நாங்க கல்யாணத்த ஒரு மீடியேசனா யூஸ் பண்ணிக்க போறோம்" என்றான்.
இதை கேட்ட திவ்யா
' இதுங்க ரெண்டும் நம்ம சொல்ரத கேட்க போறது இல்ல.ஒன்னு இந்த கல்யாணத்த ஸ்டாப் பண்ணனும்.இல்லன்னா இதுங்க ரெண்டுல ஒன்னு வேறயார சரி லவ் பண்ணனும்.ஷாக்சி இருக்குற மனநிலைக்கு அவ இப்போ யாரையும் லவ் பண்ண மாட்டா.வேணும்னா ரவிய எப்படி சரி கான்டாக்ட் பண்ணி விசயத்த நம்ம எடுத்து சொல்லி புரியவைக்கனும்.இது எதுமே சரி வரலன்னா அண்ணாக்கு மாமா வேல பார்க்க வேண்டியதுதான்.இந்த கீர்த்தி பொண்ணுகூட இவன வெறிக்க வெறிக்க பார்க்கா.ஹ்ம்ம் நம்ம ஒரு ட்றை கொடுக்கலாம்' என்று எண்ணியவளை மித்ரன்
" என்ன லீகல் அட்வைசர், இல்லாத மூளய வெச்சி என்ன யோசிக்கிறீங்க" என்று கேட்க அவளோ கோவத்தில்
"போடாங்க்க்.." என்று நிறுத்திக்கொண்டவளை ஷாக்சி
" ஏன்டி உங்க அண்ணா கூட சேர்ந்து நீயும் கெட்டு போய்ட்ட போல.கெட்ட வார்த்தை பேச நீயும் முயற்சி பண்ற மாதிரி இருக்கு.இன்னும் கொஞ்சம் ட்றை பண்ணா ஒரு ப்லோல வந்துடும்பா" என்றவளை திவ்யா
" ரொம்ப ஓட்டாத , இந்த திவ்யாவ க்யூட் ஆஹ் பார்த்த உங்களுக்கு இனிமே என்னோட இன்னொரு ரூபத்த காட்ட போறேன்" என்றாள்.அவள் அப்படி கூறியதும் மித்ரன்
" அந்த மூஞ்சியாவது பார்க்குற மாதிரி இருக்குமா " என்று கேட்க ஷாக்சியும் மித்ரனும் ஹாய் பை அடித்துக்கொண்டனர்.
------
விதி இவர்களின் வாழ்வில் எவ்வாறு விளையாட போகின்றது என்று அறியாமல் மித்ரனும் ஷாக்சியும் தத்தமது அன்றாட வேலைகளில் மூழ்கி இருந்தனர்.கடைசியாக இவர்கள் காபி சாப்பில் சந்தித்துக்கொண்ட பிறகு நாள் தவறாமல் மித்ரனுடைய டேபிளுக்கு தினமும் பூங்கொத்து வர ஆரம்பித்தது .
ஒரு நாள் கோவமாக ரிசப்சனிஸ்ட் கீர்த்தியை இன்டர்காமில் அழைத்தவன்
" டெய்லி எப்படி என் டேபிள்ல ப்ளவர் பொக்கே வருது.யாரு கொண்டு வந்து வைக்குறா?" என்று கேட்க ஒன்றும் புரியாமல் முழித்த கீர்த்தியை
" ஹேய் உன்னத்தான் கேட்குறேன்" என்று சத்தமிட
" யாருன்னு தெரில சார்.ஸ்பெசல் கூரியர் மூலம் வருது சார்.யாரு அனுப்புறாங்கன்னு தெரில" என்று கூற அந்த பொக்கோயில்
'with Love
.....i"
என்றிருந்தது.உடனே கீர்த்தியை போக சொல்லிவிட்டு யாராக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு ஒரு வேலை இந்த கல்யாணத்தில் குழப்பம் ஏற்படுத்த திவ்யா எதுவுன் ப்ளான் பண்ணியிருக்காலோ என்றும் எண்ண தோன்றியது.உடனே திவ்யாவையும் ஷாக்சியையும் உள்ளே அழைத்தவன் இருவரும் உள்ளே வர ,கையில் பொக்கேயுடன் இருந்தவனை இருவரும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு வர திவ்யா
" என்ன அண்ணா, ஷாக்சிய ப்ரபோஸ் பண்ண போறியா.லவ்ஸ் வந்திடிச்சா அவ மேல" என்று கேட்க திவ்யாவை மித்ரனும் ஷாக்சியும் முறைக்க
" இதெல்லாம் உன் வேலயா?" என்று கேட்டவனை திவ்யா எதுவும் தெரியாமல் முழித்தாள்.
" என்னடி முழிக்கிற.தங்கச்சின்னு உன்ன நினைச்சா நீ இவ்வளவு கேவலமா நடந்துப்பேன்னு நான் நினைக்கல.நீயெல்லாம் என்ன பிறவியோ ...." என்று ஏதோ கூற வந்தவனை திவ்யா கண்களில் கண்ணீருடன்
" அண்ணா பார்த்து பேசுங்க.நான் என்ன பண்ணேன்? எதுக்கு இப்படி பேசுரீங்க" என்றவளை அவன்
" நடிக்காத ,உன்னப்போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு.ச்சீ என் புத்திய செருப்பால அடிக்கனும்.இந்த பொண்ணுங்களையே நம்பகூடாதுன்னு இருந்தேன்.கடைசில நீயும் இப்படித்தான்னு காட்டிட்டேல" என்றவனை ஷாக்சி
"மித்ரன் என்ன இப்படி பேசுரீங்க" என்று கேட்க அவளை இடை மறித்து
"அண்ணா வார்த்தைய அளந்து பேசுங்க.அப்படி என்னதான் நடந்திச்சி" என்றவளை
" டெய்லி எனக்கு வித் லவ் னு பொக்கே அனுப்புறது நீ தானே" என்று கேட்க திவ்யாவுக்கு எங்கிருந்து கோவம் வந்ததோ தெரியவில்லை.
" ஓஹ் யாரோ அனுப்பின பொக்கேக்கு என்ன கேவலமா பேசிட்டேல்ல.இவ்வளவு நாளும் நீங்க என்ன கெட்ட வார்த்தையால திட்டும் போது நான் அத பெரிசா நினைக்கல்ல.ஆனா இன்னைக்கு என்ன ரொம்ப சீப்பா நினைச்சிட்டீங்கள்ள.இனிமே என் முகத்துலயே முழிக்க வேணாம்" என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
இங்கு என்ன நடந்தது என்பது புரியவே ஷாக்சிக்கு சில நிமிடங்கள் ஆனது.திவ்யா வெளியில் சென்றதும் ஷாக்சி என்ன நடந்தது என்று கேட்க மித்ரனோ தனக்கு தினமும் வரும் பொக்கே பற்றி கூறினான்.ஷாக்சிக்கு என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை.
" ஆனா ஷாக்சி இவ ஏதோ பெருசா ப்ளான் பண்ணி இருக்கா.ஏன்னா எப்போதுமே நான் எது சொன்னாலும், எப்படி திட்டினாலும் சும்மா அமுக்குனி மாதிரி கேட்டுகிட்டு இருப்பா.ஆனா முதல் முறையா இன்னைக்கு எகிர்ரா.அப்போ ஏதோ ஒன்னு பண்ண டிரை பண்றா.அவ சாதாரணமா பேசினா மாட்டிக்குவான்னுதான் இப்படி டிராமா பண்ணிட்டு போறா" என்றவனை ஷாக்சி
"அவள இவ்வளவு புரிஞ்சி வெச்சிருக்கீங்க மித்ரன்.யு ஆர் சோ க்ரேட் .ஒரு அனாதை...."
" ஷாக்சி ப்ளீஸ் , அவள அநாதைன்னு சொல்ல வேணாம்.அவளுக்கு அப்பா அண்ணன்லாம் இருக்கோம்.இப்போ புதுசா அண்ணி வேற.என்ன அவளுக்கு அண்ணியத்தான் பிடிக்கல போல" என்று சிரித்தவனை ஷாக்சி முறைத்துக்கொண்டு நின்றால்.
ஒரு வாரம் கடந்தும் திவ்யா மித்ரனிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தால்.இதை கண்ட மித்ரனுக்கு தனது அவசர புத்தியால் திவ்யாவை இழந்துவிடுவோமோ என்று மிகவும் அஞ்சினான்.
ஒவ்வொரு வருடமும் மித்ரனின் தந்தையின் கம்பனியால் சுற்றுலா செல்வது வழக்கம்.இந்த தடவை "Adventure Picnin" செல்ல தயாராகினர்.அதற்குரிய முழுப்பொறுப்பையும் வெளி நிறுவனம் ஒன்றிட்கு வழங்க அது சம்பந்தமான இன்சுர்ன்ஸ் பற்றி பேச அந்த ஆர்கனைசிங் கம்பனியின் மெனேஜரை திவ்யா சந்தித்தால்.அறைக்குள் இருந்த மேனேஜரை கண்டதும் திவ்யாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
---------+
narznar இன் "என் வாழ்க்கை" மற்றும் " மனசெல்லாம்" இரண்டுமே கடந்த வாரம் முதலிடத்தை பிடித்தமைக்கு பாராட்டுக்கள்.
மென்மேலும் நீங்கள் சிறந்த கதைகளை எழுத வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
புதிய கதை அறிமுகம்..
Mushanu0221 வின்
"என் இதயம் தொட்ட பூவே நீ எங்கே".
சூப்பரா ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.ஒரு கதை வாசிப்பாளராக இருந்து எழுத்தாளராக தன்னை மாற்றி இருக்கின்றார்கள்.நாம் எல்லோரும் முழு ஆதரவும் வழங்குவோன்.
SaranyaS067 வின் "காதலால் கைது செய்"வழமை.போலவே சூப்பரா இருக்கு.எல்லொருக் படிச்சிருங்க.
Umaviswa வின் " என் வசந்தம் நீதானே" படிச்சேன்.சான்ஸே இல்ல.செம்மயா இருக்கு.கதை முழுக்க 4 கதாபாத்திரங்கள்தான்.கண்டிப்பா படிங்க
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro