Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தென்றல் 10

ஒரு வாரத்தில் திவ்யாவால் வர முடியாமல் இருக்க 10 நாட்களின் பின் சென்னை வந்து மித்ரனிடம் அமுத மொழிகளால் வாங்கி கட்டிக்கொண்டால்.என்னதான் மித்ரனை அவள் அண்ணா என்று அழைத்தாலும் அவளை அவனது வீட்டிற்கு வந்து தங்க சொன்ன போது அவள் அதை நாசூக்காக தட்டிக்கழித்தவளை மித்ரன்

"இங்க பாரு திவ்யா, நீ ஷாக்சிக்கூட அவளோட ஹாஸ்டல்ல தங்கிக்கோ.ஆனா ஒரு மாசம்தான் டைம்.அதுக்கு அப்புறமா ரெண்டு பேரும் தனியா ஒரு வீடு பார்த்து ஷிப்ட் ஆகுறீங்க.அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் நாளைல இருந்து நம்ம கம்பனில ஜாயின் பண்ற ஓக்கே.டாட்.நோ மோர் ஆர்க்யூமன்ட் ஒன் திஸ்" என்றவனை அவளால் எதிர்த்து பேச முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் ஆபீஸ் வந்த திவ்யாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

"Welvcom MY Dear Daughter Miss.Dhivya Vishvanath"

என்று பெரிய ஒரு பேனர் ஆபீசுக்குள் ஒட்டியிருக்க அவள் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நின்றவளை மித்ரனின் தந்தை

"அம்மாடி என் பையன நீ அண்ணனா ஏத்துக்கிட்ட.என்ன உன்னோட அப்பாவா ஏத்துக்குவியா?"என்றவரை அவள்

"அப்பா" என்று அணைத்துக்கொண்டால்.அவளின் முதுகை வருடிக்கொடுத்தவர் அவளை அவரது அறைக்குள் அழைத்து செல்ல கதவை திறந்ததும் உள்ளே மேலிருந்து ஜரிகைகளால்  மழை பொழிய அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.அவள் அழுகையை நிறுத்தாமல் இருக்க

சில நிமிடங்களின் பின் தன் நிலைக்கு வந்த திவ்யா அங்கு நின்ற அப்பா,மித்ரன்  ,ஷாக்சியை பார்த்து

"உங்களுக்கு தெரியுமா, என்னோட வாழ்க்கைல என்னோட ஒரு பேர்த்டே கூட நான் கொண்டாடினது இல்ல.ஏன் என்னோட சர்ட்டிபிகேட்ல இருக்குறதுதானா என்னோட உண்மையான பேர்த்டேவான்னு கூட தெரியல,இப்படி இருக்கும் போது இன்னைக்கு உங்க மகளா நினைச்சி வெல்கம் பண்ணத என்னால தாங்கிக்க முடியல.நான் கவலையா சொல்லல அந்த சந்தோசத்த தாங்கிக்க முடியல"என்றவளை மித்ரனின் தந்தை

"அடி லூசு மகளே, உன்ன எப்பவோ என் மகளா நான் தத்து எடுத்திருக்கனும்.நீதான் ஏதோ சொந்த கால்ல நிக்கனும்னு ஒத்தகால்ல நின்ன.சரி இவ்வளாவு நாளா நீ யாரோட உதவியும் இல்லாம உன்னோட சொந்த முயற்சியிலையே இவ்வளவு தூரம் வளர்ந்துட்ட.அதான் நானும் நீ ஒரு நிலமைக்கு வரும் வரைக்கும் உன்ன எதுவுமே சொல்லல.இப்போதான் மேடம் பெரிய லீகல் அட்வைசராச்சே.அதான் இந்த சர்ப்ரைஸ்"என்று கூற அவளோ பொய்க்கோபத்துடன் எல்லோரையும் முறைத்துக்கொண்டு நின்றால்.

இது இவ்வளவு நடந்தும் அவள் அவர்களின் வீட்டில் தங்க சம்மதம் தெரிவிக்கவில்லை,அதற்கு காரணம் ஷாச்கியை தனியாக தங்க வைக்க திவ்யாவுக்கு விருப்பமில்லை.வாழ்க்கையில் கஷ்டம் என்பதையே அனுபவிக்கதாவள் ஷாக்சி கடந்த சில வாரங்களாக கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வருகிறால்.ஆனால் தான் வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தவள்.கஷ்டங்களை காணாதவர்களுக்கி சிறிய ஒரு கஷ்டம் வந்தாலும் அது பெரிய ஒரு மலை போல தோன்றும்.ஆனால் ஷாக்சிக்கு வந்ததோ மலையளவையும் விட பெரிய இடி. இப்படி இருக்கின்றவளை தனியாக விட்டால் ஏதும் மனவழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவாலோ என்று பயந்து அவளை தனியாக தங்க விடாமல் திவ்யாவும் அவளுடனே தங்கி கொண்டால்.எப்போதும் மன அழுத்தத்தில் உள்ளவர்கள்‌ நம்மை‌ விட்டு விலகி‌ இருக்க நினைத்தாலும் நாம் அவர்களை விடாது டார்ச்சர் பண்ணி அவர்களுடன் கூட இருந்து அவர்களின் மனக்கஷ்டத்தை போக்க வேண்டும் என்பது திவ்யாவின் எண்ணம்( புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி).

ஒரே மாதத்தின் பின் மித்ரனின் தந்தையின் கம்பனியை விரிவாக்கம் செய்ய அவர்களிடம் போதிய பணம் இல்லாத்தால் ஏற்கனவே வெளியாட்களுக்கு விற்றிருந்த 20℅ செயார்களுக்கும் அதிகமாக மேலும் 25℅ செயார்களை விற்க முடிவு செய்தார்.ஆனால் அதை எல்லாம் ஒரே நபருக்கு விற்காமல் வெவ்வேறு நபர்களுக்கு விற்க முடிவு செய்து விற்றும் முடித்தனர்.தற்போது அவரின் கை வசம் 55℅ பங்குகள் இருக்க கம்பனி நிருவாகத்தை எந்த வித பிரச்சினையும் இன்றி கொண்டு செல்ல முடிந்தது.

-------
ஆபீஸ் கான்டீனில் திவ்யாவும் ஷாக்சியும் பேசிக்கொண்டு இருக்க

"திவ்யா இன்னும் 4 மாசம்தான்டி இருக்கு.இப்போ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல" என்று கவலையாக கூறிக்கொண்டிருக்க அவ்விடத்துக்கு மித்ரன் வந்தவன்

" என்ன ரெண்டு ஜீனியசும் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க" என்று கேட்டபோதுதான் ஷாக்சியின் கண் கலங்கியிருப்பதை கவனித்தவன்

" ஹேய் , என்ன உன் ப்ரெண்ட் கண்ணுலாம் கலங்கி இருக்கு" என்று கேட்க கோவம் வந்த ஷாக்சி

" மித்ரன் ப்ளீஸ்.எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரடியாவே பேசுங்க.இப்படி திவ்யாகிட்ட பேசுர மாதிரி என்கிட்ட பேசுரது எனக்கு ஒரு மாதிரி இருக்கு.இனிமே என்கிட்ட நேரடியா பேசுரதுன்னா பேசுங்க .இல்லன்னா பேசவே வேண்டாம்" என்றவளை திவ்யா கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்தால்.

" ஹேய் அப்படி இல்ல ஷாக்சி, காலேஜ்ல படிக்கிறப்போ நான் ரொம்ப ரூட் ஆஹ் உன்கிட்ட நடந்திருக்கேன்.மத்த பொண்ணுங்க கிட்ட நான் மோசமா பேசினத கூட பார்த்திருக்க.ஏன் இந்த குட்டிச்சாத்தான் எனக்கு இன்ட்ரோ ஆனது கூட அப்படி ஒரு இன்சிடன்ட்னாலதான்.இவ கூட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பொண்ணுங்கள்ள நல்லவங்களும் இருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்.ஆனா இதுக்கு அப்புறம் என்கிட்ட திட்டு வாங்கின பொண்ணுங்க கிட்ட போய் நான் திருந்திட்டேன் என்கிட்ட பேசுங்க என்டு சொல்ல என்னோட ஈகோ இடம் கொடுக்காது.இப்போ நீயே என்கிட்ட பேசினதால கேட்கிறேன் என்னாச்சு ஷாக்சி?ஏன் ஒரு மாதிரி இருக்குற? ஒரு ப்ரெண்டா நினைச்சா சொல்லு.இல்லன்னாகூட உன் ப்ரெண்டோட அண்ணன்கிட்ட சொல்ரதா நினைச்சி சொல்லு" என்று கூறவும் அவள் கடைப்பிரச்சினை பற்றி அவனிடம் கூற அவனோ

" சரி இப்போ உனக்கு எவ்வளவு வேணும்" என்று கேட்டவனை

" ஒரு கணக்கு போட்டு பார்த்ததுல 23லட்சம் தேவைன்னு வந்தது.மொத்தமா ஒரு 25 லட்சம் இருந்தா எல்லாமே க்ளியர் பண்ணிடலாம்" என்ற ஷாக்சியை

" ஒக்கே ஷாக்சி, கிவ் மீ 2 வீக்ஸ்.உனக்கு பணத்த நான் ஏற்பாடு பண்றேன்" என்றவனை உடனே ஷாக்சி

" என்ன பேசுரீங்க மித்ரன்,உங்க கிட்ட என்ன உரிமைல நான் பணத்த வாங்குறது.அதெல்லாம் வேணாம் " என்றவளை கொஞ்சம் யோசித்தவன்

" திவ்யா நீ ஷாக்சிய அண்ணியா ஏத்துக்கிறியா"என்று கேட்க திவ்யா

" எண்ணன்னா சொல்ர.லூசு மாதிரி உலராத" என்று கூற மித்ரனோ

" ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க.ஐம் நாட் ஜோக்கிங்க்.அன்ட் ஐஅம் வெரி சீரியஸ் அபவ்ட் திஸ்" என்றதும் ஷாக்சி

" இப்போ ஒரு 10 நிமிசம் முன்னாடிதான் நீ திருந்திட்டேன்னு நினைச்சேன் மித்ரன்.அதுக்குள்ள உன் புத்திய காட்டிட்டேல்ல.ஏதோ கடைல வாங்குற பொருள் மாதிரி 25 லட்சத்துக்கு விலை பேசுர.என்ன பார்த்தா எப்படி கால் கேர்ல் மாதிரியா தெரியுது" என்று கடைசி வாக்கியத்தை கொஞ்சம் அடிக்குரலில் கேட்க திவ்யா செய்வது அறியாமல் நின்றாள்.ஆனால் மித்ரனோ சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

மித்ரன் சிரிப்பதை கண்ட திவ்யா மனதுக்குள்

' என்னட ஷாக்சிகிட்ட நல்லா டோஸ் வாங்கினதும் அண்ணனுக்கு மெண்டல் ஆகிடிச்சோ' என்று நினைத்தவளின் தலையில் ஒரு கொட்டிவைத்து

" ஏய் குட்டிச்சாத்தான் நீ என்ன நினைச்சேன்னு உன் முகத்த பார்த்தாலே தெரியுது.முதல்ல ஷாக்சி நல்லா கேட்டுக்கோ,உனக்கே தெரியும் திவ்யான்னா எனக்கு எவ்வளவு முக்கியம்னு. நீ பெங்களூர்ல இருந்த்தாலதான் நான் இவள நீ வேல செஞ்ச அதே  கம்பனில வேல செய்ய பர்மிசன் கொடுத்தேன்.நீ அங்க இருந்து வந்ததும் இவளையும் வர வெச்சிட்டேன்.ஏன்னா உன்கூட நான் எப்போமே சண்டை போட்டுக்கிட்டு இருந்தாலும் உன் மேல எனக்கு ஒரு மரியாத இருக்கு.அடுத்தது உன்னோட பாஸ்ட் லைப் அதுல நடந்த எல்லா பிரச்சினைகளும் எனக்கு தெரியும்" என்று கூற திவ்யாவை முறைத்த ஷாக்சியை மித்ரன்

" சும்மா சும்மா அவள முறைக்காத.எனக்கு எங்கப்பா 6 மாசம் டைம்கொடுத்தாருன் நான் கல்யாணம் பண்ணிக்க.அதுல 2 மாசம் ஓடிடிச்சி.உனக்கும் அதே போலதான்.நான் கல்யாணம் பணணலன்னா என்னோட ட்றீம் கம்பனி என் கைய விட்டு போயிடும்.உனக்கு 25 லட்சம் இல்லைன்ன உன்னோட ட்றீம் ஹவுஸ் உன்ன விட்டு போயிடும்.இது மியூச்சுவல் அன்டர்ஸ்டான்டிங்க்ல நம்ம பேச வேண்டிய விசயம்.சும்மா தைய தக்கான்னு குதிக்கிறதுல எந்த பிரயோசனமும் இல்ல" என்றவனை இப்போதும் இருவரும் யோசனையுடன் நோக்க ஷாக்சியோ

" எனக்கு டைம் வேணும் மித்ரன் இத பத்தி யோசிக்க.அப்படியே கல்யாணம் ஆனாலும்.,.." என்று இழுக்க மித்ரன்

"முதல்ல உனக்கு சம்மதமா இல்லயான்னு யோசிச்சி சொல்லு மீதிய அப்புறமா பேசிக்கலாம் என்றான்.

இவர்கள் இருவரையும் ஒரு கோபப்பார்வை பார்த்த திவ்யா மனதுக்குள்
' ஒரு வேல ஷாக்சி இதுக்கு ஒத்துக்கிட்டாலும் இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்குறேன்' என நினைத்துக்கொண்டளின் உள் மனதில் ஒளிந்து கொண்டிருந்த வில்லி வெளியே எட்டிப்பார்க்க தொடங்கினால்.
------------
ஹாய் ப்ரெண்ட்ஸ்...அப்டேட் நேத்தைக்கே ரெடி..ஆனா நான்தான் ரெடி இல்ல(Not well mentally and physically).

இந்த கதை இன்னும் சில எபிசோட்ஸ்ல முடிக்க போறேன்..ஏன்னா எனக்கு இந்த கதை போற போக்குல திருப்தி இல்ல.
ஆனா அடுத்த கதை வருவதற்கு சில நாட்கள் ஆகலாம்.

இனி புதுக்கதை அறிமுகம் கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைக்க போறேன்.காரணம் கேட்க வேணாம்.என்னோட DPல இனி எனக்கு பிடிச்ச மத்த ரைட்டர்ஸோட ஸ்டோரிஸ் படம் வைக்க போறேன்.

உங்க எல்லோரோட ஆதரவுக்கும் நன்றி..

TC all..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro