Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தென்றல் 1

"ஏய் ஷாக்சி இன்னைக்கு என்னடி ஸ்பெசல் "என்று கேட்ட தன் தோழி திவ்யாவை முறைத்தவள்

"ஏண்டி டெய்லி நான் வீட்ல செஞ்சி கொண்டு வர்ர சாப்பாட்டுல ஆட்டய போடுறியே.உனக்கு கொஞ்சமாச்சும் மனச்சாட்சி வேணாம்?" என்றவளை

"அடி போடி நமக்கு சாப்பாடு என்று வந்தா நியாய அநியாயமே பார்க்க மாட்டோம்.இதுல மனச்சாட்சி வேறயா?ஆமா இன்னைக்கு என்ன மீன் குழம்பா? வாசன ஆளத்தூக்குது.என்னதான் இருந்தாலும் உங்கப்பா வைக்கிற மீன்குழம்பே தனி டேஸ்ட்டி" என்ற தன் தோழியை முறைத்தவள்

"சரி போது போதும் எங்கப்பாக்கு ஐஸ் வெச்சது.பாவம் மனிசன் ஜன்னி வந்தி படுத்திடப்போறாரு"என்ற ஷாக்சியை திவ்யா

"ஹேய் ஷாக்ஸ், உங்கம்மா இப்போ இறந்து ஒரு இரண்டு வருசம் இருக்கும்ல.அப்பாக்கு வேற கல்யாணாம் ஏதும் பார்க்குற ஐடியா இல்லயா?"என்றவளை

"இல்லடி அவரு வேணாம்னு சொல்லிட்டாரு.ஆமா நீ ஏன் இத கேட்குற"என்று சந்தேகமாக கேட்டாள்.

"இல்லடி உங்கப்பா ஓக்கே சொன்னாருன்னா நானே உனக்கு சித்தியா வந்துடலாம்னு யோசிச்சேன்.ஏன்னா உங்க அப்பாவ கட்டிக்கிட்டா சமையல் கட்டு பக்கம் போகவே தேவல்ல பாரு.அப்புறம் உனக்கும் சித்தி கொடுமை எல்லாம் இருக்காது"என்று கூறி இளித்த தன் தோழியின் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் ஷாக்சி.

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கண்ட ரவி இவர்களின் அருகில் வர திவ்யா

"ஓய் ஷாக்ஸ் ,உன் ரோமியோ வர்றாரு,நான் கிளம்பவா? "என்றவளை ஷாக்சி

"சரிடி நீ போ.அவனுக்கு இப்போதான் லீவ் கிடைச்சது போல.இன்னைக்கு டீம் லீட் கூட ஏதோ மீட்டிங்க்னு சொல்லி இருந்தான்.என்னாச்சோ தெரியல.நல்லபடியா முடிஞ்சிருந்தா பையன் ரொமான்ஸ் மூட்ல வருவான்.இல்லன்னா சிடுமூஞ்சியாத்தான் வருவான்.இப்போ என்ன மூட்ல இருக்கான்னே தெரியல.சரி திவ்யா நீ கிளம்பு நான் அப்புறமா கால் பண்றேன்"என்று ஷாக்சி கூற திவ்யா அவ்விடத்தை விட்டு மறைந்தாள்.

திய்வா அவ்விடம் விட்டு சென்றதும் ஷாக்சியின் அருகில் வந்த ரவி

"என்ன டார்லிங்க் ,என்ன பண்றீங்க.இன்னைக்கெல்லாம் வேலயே இல்ல போல.காண்டீன்லயே ரொம்ப நேரமா உட்கார்ந்து இருக்கீங்க"என்றவனை பார்த்த ஷாக்சி

'பய இன்னைக்கு நல்ல மூட்லதான் இருக்கான்.சோ கொஞ்ச நேரம் ஹாப்பியா பேசிட்டு போகலாம்'என்று நினைத்து தன் மனதை கொள்ளை கொண்ட காதலன் ரவியுடன் அரட்டைக்கு தயாரானாள்.

"இல்ல ரவி,இன்னைக்கு கொஞ்சம் வெர்க் கம்மிதான்.ஏன்னா ஆல்ரெடி கோடிங்க்லாம் பண்ணி முடிச்சாச்சு.டெஸ்ட்டிங்க் நம்ம ஏரியா கிடையாது. சோ கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா இருக்கேன்"என்று தோள்களை குலுக்கிக்கொண்டு கூறியவளை ரவி இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

"டேய் என்னடா பத்து நாள் பசியில இருந்தவன் பிரியானிய பார்க்குற மாதிரி பார்க்குற"என்று கேட்க

"என்ன சொன்னே, பட்டினி கிடந்தவன் பிரியானிய பார்க்குற மாதிரியா?நிஜம்தான் ஏன் சொல்ல மாட்டே.காதலிக்க ஆரம்பிச்சு ஆறு மாசமாச்சு.இன்னும் ஒரு கிஸ் கூட கிடைக்கல.எப்போ கிடைக்கும்னு ஏங்கி கிட்டு இருக்கேன்.சரி இன்னைக்காச்சும் கிடைக்குமா?" என்று ஏக்கமாக கேட்டவனை

"சும்மா இரு ரவி.உனக்கு இதே வேலயாப்போச்சு.நான் எப்படி அப்பாகிட்ட இந்த மேட்டர சொல்ரதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.இது வரைக்கும் அவர்கிட்ட நான் எதயுமே மறைச்சது இல்ல.ஆனா ஆறு மாசமா இந்த விசயத்த அவருகிட்ட சொல்லவும் முடியாம மறைக்கவும் முடியாம நான் படுற அவஸ்த்தை இருக்கே.அது எனக்குத்தான் தெரியும்"என்று நிஜ கவலையுடன் சொன்னவளை

"ஹேய் கூல் யா.சரி உனக்கு எவ்வளவு சீக்கிரம் அப்பாகிட்ட சொல்ல முடியுமோ சொல்லிடு சரியா.நான் வந்து பேசுறேன்னு சொன்னாலும் வேணாம்னு சொல்ர"என்றான்.

"இல்லடா எங்கப்பா எனக்கு எல்லாமே பார்த்து பார்த்து செய்வாங்க.உன்ன காதலிக்கிற விசயத்த நானே அவருகிட்ட சொல்ரதுதான் முறை.இல்லன்னா அவர அவமானப்படுத்தின மாதிரி இருக்கும்டா.கண்டிப்பா கொஞ்ச நாள்ள சொல்லிடுறேன்.ஆமா நீ எப்போ ஆன்சைட் போற"என்று ஷாக்சி கேட்க

"நெக்ஸ்ட் வீக்டா.இரண்டு மாசம்தான்.பட் நான் வர்ரதுக்குள்ள அப்பாகிட்ட பேசிடு.ஏன்னா எங்க வீட்லயும் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறாங்க.நீ உங்க அப்பாகிட்ட சொன்னதும் அடுத்த நொடி நான் எங்க வீட்டுல சொல்லி பெர்மிசன் வாங்கிடுவேன்.சரியா.அண்ட் மோர் ஓவர் இன்னைக்கு நைட் நம்ம ஹெட் ஓட வீட்ல ஒரு பார்ட்டி இருக்கு.உன்னையும் கண்டிப்பா வர சொன்னாரு"என்றவனை அவள் சந்தேகமாக

"டேய், என்ன தண்ணி பார்ட்டியா.நான் வரலப்பா"என்றவளை

"லூசு சும்மா டென்சன் ஆகாத.நான் அங்க இருப்பேன்.சோ டோன் வொர்ரி.அப்புறமா நம்ம கம்பனில உள்ள நிறைய பொண்ணுங்களும் வருவாளுங்க.சோ நீ பயப்பட தேவையில்ல சரியா"என்றவனை

"சரிடா" என்றாள்.

இவர்களை விட்டு தனியாக சென்ற திவ்யா தனது மொபைலை எடுத்து

"ஹலோ அண்ணா,என்ன பண்றே?"

மறுமுனையில் "என்னடி குட்டிச்சாத்தான் ,ஒரு கால் பண்ண மாட்டியா.எவ்வளவு நாளாச்சு"என்றவனை

"சரி சரி திட்டாதடா பக்கி, இல்ல ப்ராஜக்ட்லாம் கொஞ்சம் பிசியா போகுதா அதான் கோடிங்க் டீமுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.அதான் கால் பண்ண முடியல"

"ஹேய் லூசு ,நீ கம்பனி லீகல் அட்வைசர் தானே? நீ எதுக்கு கோடிங்க்லாம் பண்றே" என்றவனை

"அடேய் பக்கி, லீகல் அட்வைசர் இஸ் மை ப்ரொபெசன். கோடிங்க் பண்றது என்னோட ஆத்ம திருப்திக்கு.இதுல வேடிக்கை என்னன்னா இங்க இருக்குற மங்கிஸ் பண்ற கோடிங்க விட நான் கரக்டா பண்றேண்டா. இதுங்களுக்கு எதுக்குதான் இங்க சம்பளம் கொடுக்காங்களோ தெரியல" என்றவளை

"சரி போதும் உன் சொந்த புகழ்ச்சி புராணம். ஆமா நீ சும்மா கால் பண்ண மாட்டியே.இப்போ எதுக்கு பண்ணே"என்றவனை

"இல்லடா இன்னைக்கு நைட் எங்க ஆபீஸ் ஹெட் ஓட வீட்ல பார்ட்டியாம்.பொண்ணுங்க எல்லோரும் போறாங்க.இப்போதான் எனக்கு க்ரூப்ல மெசேஜ் வந்தது.நான் போகட்டுமா"என்றவளை

"ஏண்டி அறிவில்ல.உனக்கு எத்தனை வாட்டி சொல்ரது.உங்க ஆபீஸ் பார்ட்டி எதுக்கும் போகாதன்னு.அங்க இருக்குற எவனுமே சரியில்லை.அந்த நாசமா போன கம்பனிய விட்டுட்டு நம்ம கம்பனில ஜாயின் பண்ணுன்னு சொன்னா ஏதோ சொந்த கால்ல நிக்கனும் அது இதுன்னு என்னோட வாய அடைச்சிட்ட.அங்க உன்ன வேலைக்கு போக விட்டதே பெரிய விசயம்.இதுல பார்ட்டி கேட்குதா உனக்கு.என்கிட்ட செருப்படி வாங்காம போக மாட்ட போல"என்றவனை

"இல்லடா.சரி உனக்கு பிடிக்கலன்னா போகல சரியா"என்று வருத்தம் தேய்ந்த குரலில் கூறியவளை அவன்

"சரி சரி பொண்ணுங்கள்ள யாரு யாரெல்லாம் வர்ராங்க"என்று கேட்டான்.

"எல்லோரும் வர்ராங்கண்ணா"என்று கூறிய திவ்யா

"அவ ஜான்சி ராணி வர்ராளா,அதான் அந்த வாயாடி ஷாக்சி"என்றவனை

"ஆமான்னா அவ வர்ரா.அதனாலதான் நான் உன்கிட்ட பர்மிசன் கேட்டேன்"என்று கூறினால்.மறுமுனையில் இருந்தவன்

"சரி பார்ட்டிக்கு போ.ஆனா அங்க பச்சை தண்ணி கூட குடிக்க கூடாது.ஓக்கேன்ன போ"என்றவனை

"வாயில பச்சைத்தண்ணி கூட படாது.சரியா.தாங்க்ஸ்னா தாங்க்யூ சோ மச்"என்று கூறி காலை கட்செய்தவள்

'அவன்கிட்ட ஷாக்சி வர்ரான்னு சும்மா அடிச்சு விட்டோம்.இவ நிஜமாலுமே வர்ராளான்னு தெரியலயே என்று ஷாக்சிக்கு வாட்சப்பில்

"shaks, tonite party??" என்று செண்ட் பண்ண அவள் உடனே

"yes" என்று ரிப்ளை வரவும்

"i will pik u" என்று பதில் அனுப்பினால்.(என்னடா இங்க்லீஸ்ல வார்த்தை எல்லாமே தப்பு தப்பா இருக்குன்னு பார்க்குறீங்களா? நான் வாட்சப் யூஸ் பண்ணும் போது இப்படித்தான்பா யூஸ் பண்ணுவேன்)

இன்றைய இரவில் எல்லோருடைய வாழ்க்கையும் எப்படி மாற போகின்றது என்று அறியாமல் பார்ட்டிக்கு செல்ல திவ்யாயும் ஷாக்சியும் தயாராகினர்.

-----------------------------------------------

ஹாய் ப்ரெண்ட்ஸ் என்னோட 3வது கதையோட வந்திருக்கேன்.Spy thriller தான் எழுதலாம்னு இருந்தேன்.ஆனால் இன்னைக்கு என்னோட கதை படிச்சி ஒருத்தங்க அவங்க மன அழுத்தத்துல இருந்து வெளில வர என்னோட எழுத்துக்கள் உதவியா இருந்ததா மெசேஜ் பண்ணாங்க.அத பார்த்ததும் நம்ம ஏன் திரில்லர்லாம் போகனும்.பேசாம நமக்கு தெரிஞ்ச லவ் சப்ஜக்ட்டே பண்ணலாம்னு இந்த கதைய எழுத ஆரம்பிச்சிட்டேன்.

நான் எப்பவும் வோட்ஸ் கேட்க மாட்டேன்.எனக்கு வேண்டியது எல்லாமே நெகடிவ் கொமண்ட்ஸ்.

உங்கள் திட்டுக்களை எதிர்பார்த்தவனாக

---மர்யமின் அன்பு தந்தை---

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro