சிந்தனை சிதறாதே 2
ஹை ப்ரெண்ட்ஸ்,
மீண்டும் ஒரு சிந்தனை சிதறாதே...
இப்போதெல்லாம் வாட்பெட்டை பார்க்கும் போது பேஸ்புக்கை விட மோசமாகி விட்டதோ என்று தோனும் அளவுக்கு முன்னேறி (கெட்டு) உள்ளது.இதில் யார் தவறு, யார் சரி என்று விவாதிப்பதில் அர்த்தமில்லை.சேலை மேல் முள் விழுந்தாலும் முள்ளின் மேல் சேலை விழுந்தாலும் சேதாரம் என்னவோ சேலைக்கு மட்டும்தான்.இங்கு சேலை போன்று மென்மையாக இருப்பவர்கள் பெண்கள்.
எதற்காக உங்களின் சுய விபரத்தில் (About/Bio) பக்கம் பக்கமாக எழுதுகின்றீர்கள்.இதை பார்த்து மனதில் கெட்ட எண்ணம் உள்ள யார் வேண்டுமானாலும் உங்களிடம் இலகுவாக நட்பு கொள்ள முடியும்.கெட்ட எண்ணம் உள்ளவர்களுடன் நட்பு கொண்டால் என்ன நடக்கும் என்பதை நான் இங்கு விபரிக்க தேவையில்லை.உங்களை காதலிக்கின்றேன் ,நீங்கள் என்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போகின்றேன் என்று கூறும் யாரையும் நம்பாதீர்கள்.இவர்கள் நம்பர் 1 டுபாக்கூர்.ஹிஹி.
முடியுமானவரை உங்கள் விருப்பு வெறுப்பு பற்றிய தகவல்களை பொதுவானதாக வைக்கவும்.இல்லை என்றால் திருமணம் முடித்து 2 அல்லது 3 குழந்தைகளின் தாய் என்று வைத்தாலும் பரவாயில்லை.இல்லை என்றால் முழுமையாக பொய்யான ஒரு பெயரில் உங்கள் ஐடி யை மாற்றிக்கொள்ளுங்கள்.யாரும் கேட்டால் அதுவே உண்மை என்றும் கூறி விடுங்கள்.
அடுத்து உங்கள் குடும்ப கஷ்டங்கள்,உங்கள் வீட்டாருடனான கருத்து மோதல்கள் போன்றவற்றை தயவு செய்து மெசேஜ்களில் பகிர்ந்து கொள்வதை முழுவதும் தவிர்த்து கொள்ளுங்கள்.மனதில் வஞ்சகம் ,கெட்ட எண்ணம் உள்ளவர்களுக்கு அது ஒரு பெரிய சந்தர்ப்பமாக அமைந்துவிடும்.
உங்கள் ப்ரொபைல் பிக்சர் இல் உங்களின் மனநிலையை வெளிப்படுத்துவது போல கோபம்,தனிமை,சந்தோசம் என்று வைத்துக்கொள்வதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.நீங்கள் இப்படி பிக்சர் வைக்கும் போது இலகுவாக உங்களை நெருங்கி உங்களுடன் நட்பு கொள்ள முடியுன்.
ஏதோ சொல்லனும்னு நினைச்சேன் சொல்லிட்டேன்.சிந்தனை சிதறாதே1 இற்கு நான் யாருடைய பின்னூட்டத்திற்கும் பதில் கூறவில்லை.எனது கருத்தில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் இன்றைக்கு பின்னூட்டமிட்டால் நாம் பேசலாம்.பொது வெளியில்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro