Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிழல் 1

மாணவர்கள் அலைமோதும் அந்த கல்லூரி கேண்டீனில் மூன்று பெண்கள் அமர்ந்து இருந்தன. அதில் இருவர் சிரித்து பேசிக் விளையாடி கொண்டிருக்க ஒருத்தி மட்டும் ஏதோ சோகத்தில் ஆழ்ந்து இருந்தாள். மற்றொரு பெண் அவர்களின் இருக்கையை அடைந்து மிச்சம் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவர்கள் முன் இருந்த உணவு வகைகள் காலியாக இருக்க "அடப்பாவிங்களா அதுக்குள்ள எல்லாத்தையும் காலி பண்ணீடிங்க" என்று விழி விரித்து வாய் பிளந்து சொல்ல "டைம் ஆச்சினா டான்னு கேன்டீன் வரனும், அத விட்டுட்டு நீ எங்க போய் சுத்தீட்டு வர" என்று பதிலடி கொடுத்தாள் ஒருத்தி. ஒரு அசட்டு சிரிப்புடன் "அது வந்து ஒரு சின்ன வேலை அதுக்காக நான் வரத்துகுள்ள எல்லாத்தையும் காலி பண்ணீடிங்கலே துரோகிங்களா" என்றாள் அந்த பெண்.

"சோற விட அப்டி என்ன வெட்டி முறிக்கிற வேலை மேடம் க்கு " இன்னொருத்தி நக்கலாக கேட்டாள். "அதுவா டி.... "என்று ஆரம்பித்தவள் அதில் எதிலுமே ஆர்வம் இல்லாமல் இருந்தவளை பார்த்துவிட்டு " வெய்ட் வெய்ட் இவளுக்கு என்னடி ஆச்சு. வடைய பறிகொடுத்த காக்கா மாதிரி மூஞ்ச வச்சிருக்கா"என்றாள்.அதற்கு வேறு ஒருத்தி " ஆமா மச்சி வட தான் போச்சு. அவ ஆளு கூட ப்ரேக் அப் ஆகிடுச்சு அதான் புள்ள ஃபியூஸ் போன பல்ப் மாதிரி ஆகிட்டா"என்று உதடை பிதுக்கி சொல்ல எஞ்சிய இருவரும் உச்சுகொட்டினர்.

அவள் அவர்களை முறைத்து விட்டு திரும்பி கொண்டாள். "அடேங்கப்பா இவங்க கண்ணகிக்கு கசினு கண்ணாலையே எரிச்சுடுவாங்க.இதான் நடக்க போகுதுன்னு தெரிஞ்சது தான" என்று விட்டு ஜுஸை உறிஞ்சினாள்.அவள் அதற்கும் முறைக்க "பாரா மறுபடியும் முறைக்கிறா. பாத்து டி கண்ணு சுழுக்கிக்க போது" என்று ஆளாளுக்கு அவளை ஒரு வழி செய்தனர்.

பொருமையை இழந்தவள் "கொஞ்சம் எல்லாரும் நிறுத்துறிங்களா. என்ன பார்த்தா உங்க எல்லாருக்கும் நக்கலா இருக்கா. இதான் நடக்கும் ன்னு இப்போ வந்து சொல்றிங்க. ஏன் நான் லவ் பண்றேன்னு சொல்லும் போது எல்லாரும் கோமால இருந்திங்களா என்ன? " என்றாள் சற்று காட்டமாக.

"இஸ்ஸிட் நாங்க உன்கிட்ட முன்னாடியே சொல்லலியா. ஏன் டி பேச மாட்ட. இந்த கருமம் எல்லாம் வேண்டாம் ன்னு எத்தனையோ தடவ சொன்னோம் நீ தான் கேக்கல இப்போ எங்களயே சொல்லு"என்று ஒருத்தி எகுற அவளைஅடங்கிய மற்றவள் " லிசின் அவனுக்கு இது எத்தனையாவது ப்ரேக் அப் ன்னு அவனுக்கே தெரியாது. நீ தேவையே இல்லாம கண்ணீர வேஸ்ட் பண்ற"என்றாள்.

அவளோ அழ ஆரம்பிக்க "கடவுளே மறுபடியும் மொதல்ல இருந்தா. அவளோட கண்ணீர அணை கட்ட கல்லணை ஒன்னு தான் புதுசா டிசைன் பண்ணனும் போல" என்று கூற அவளோ "போடி" என்றாள். இதற்கிடையில் ஒருத்தி ஃபோன் அலற அதை காதுக்கு கொடுத்து எழுந்த சென்றாள்.

"சொல்லு சந்துரு. என்ன இப்போ கால் பண்ணீருக்க" என்றாள். அதற்கு எதிர்முனையில் "பேபி நீ கேட்ட லவ் ப்லஷ் கான்செட் க்கு பார்சல்ஸ் கெடச்சுடுச்சு. டுடே ஈவினிங் 5.30 க்கு ஸ்டார்ட் ஆகுது. நீ ரெடியா இரு நான் வந்து உன்ன பிக் அப் பண்ணிக்கிறேன்" என்றான். அதை கேட்ட மறு நிமிடம் அவள் கால் தரையில் இல்லை " நீ என்ன சொன்ன ரிக்கோட கான்செட் பார்சல்ஸ் உன்கிட்ட இருக்கு. அந்த கான்செட் க்கு நாம ரெண்டு பேரும் ஈவினிங் போறோம் ரைட்"என்றாள்.

அவன் ஆம் என்று கூற அதற்கு மேல் பேசாமல் ஃபோனை வைத்தவள் தன் தோழிகளிடம் வந்து. "காய்ஸ் ஹீ செட் தட் வீ போத் ஆர் கோன்னா அட்டென்ட் லவ் ப்லஷ் திஸ் ஈவினிங்" என்று பொருமையாக கூற "வாட். ஆர் யூ சீரியஸ்" என்றனர் கோரசாக. "ஐ திங்க் அம் நாட் இன் ட்ரீம். ஓஹ் மை காட் இட்ஸ் ரியல் மேன் ஐம் சோ எக்சைடட்" என்று வாயை பொத்தி தன் சந்தோஷத்தை வெளி படுத்தினாள்.

பின் அதற்காக தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள். அவளுடன் இருந்த மற்றவர்களோ "இவளது அந்த சந்துரு கூட பழகுன பழக்கத்துக்கு லவ் ப்லஷ் போறா, ஹம்...... நம்ம எப்போடி இதெல்லாம் பாக்க போறோம்" என்று பெருமூச்சு விட இன்னொருத்தி "ஏன் போக முடியாது, நாம இன்னிக்கு போறோம்" என்று மொபைலில் எதையோ காட்ட மற்றவர்கள் முகம் உற்சாகத்தில் ஜொலித்தது.

"எப்டி சுமி"என்று கேட்க அந்த பேருக்கு சொந்தக்காரி " அதுவா என் அக்கா வோட ப்ரெண்ட் மூலமா கெடச்சது, இப்போ அதுவா முக்கியம் லெட்ஸ் என்ஜாய் காய்ஸ் "என்றவளின் மகிழ்ச்சி பிறரையும் தொற்றி கொண்டது.

இவர்களை போன்ற பலர் ஆவலாக காத்திருக்க இதற்கு காரணமானவனோ தண்ணீரில் மூழ்கி உடல் சூட்டை தணித்து கொண்டிருந்தான். வெகு நேரமாக தண்ணீரில் இருந்ததற்கு அடையாளமாக கண்கள் சிவப்பை ஏற்றிருந்தது. பார்ப்போர் யாவரையும் கவரும் முகம்.ஜிம் மெஷினால் மேலும் மெருகேற்ற பட்ட உடல். கூர்மையான கண்கள். கரையை மோதும் அலையென தலை முடி நெற்றியை வருட. அவன் ஒரு ஆணழகன் தான்.

அவனை நெருங்கி வருபவன் மங்கலான உருவமாக தெரிய அவனை அடையாளம் அறிந்து கொண்டான். பிறகு மீண்டும் தண்ணீருக்குள் சென்றான். அந்த உருவம் ஷூ கால்கள் தரையில் தாறுமாறாக சப்தம் எழுப்ப நடந்தது வந்தது. பூல் சைடை அடைந்த அந்த உருவத்தின் உரிமையாளன் தண்ணீரில் புதைந்து கிடப்பவனை கூர்மையாக பார்த்தான். இரண்டு முறை அந்த நீச்சல் குளத்தின் இருபுறமும் நீந்தி சென்றவன் தண்ணீரை நீக்கி தலையை வெளியே காட்டினான்.

அந்த உருவத்தை பார்த்து என்ன என்று வினவ " அரேன்ச்மென்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு ரிஷி. நீ ஒரு தடவ செக் பண்ணீட்டா ப்ரொசீட் பண்ணீடலாம். பட் இன்னிக்கு ஈவினிங் கான்சட் தான் ப்ராப்ளம். அவங்க கண்டுப்பா நடத்தி தர சொல்லி ப்ரெசர் பண்றாங்க."என்றான் அவன்.

"அதுனால என்ன வினித் செஞ்சுட்டா போச்சு" என்று கூலாக சொன்னவன் ஒரே தாவலில் குளத்தை விட்டு வெளியே வந்தான். அந்த வினித்தோ ஆச்சரியத்தில் விழி விரிய "ரிஷி உனக்கு என்னடா ஆச்சு அது விளையாட்டு இல்ல. நீ சரியான பிராக்டீஸ் கூட இல்லாம எப்டி ப்பெர்ஃபார்ம் பண்ணுவ." ஒரு நல்ல மேனஜராக கோவம் கலந்த டோனில் சொன்னான் வினித்.

"ரிலாக்ஸ் மச்சி வொய் டென்ஷன். நான் பிராக்டீஸ் பண்ணல ன்னு உனக்கு யாரு சொன்னா."அவனுக்கே உரிய அழகான காந்த சிரிப்பை உதிர்த்து விட்டு காது மடலை டவல் கொண்டு துடைத்து கொண்டே முன்னே சென்றான் ரிஷி.

வினித் ரிஷி கூறிச் சென்றதை யோசிக்க கூட அவகாசம் தராமல் ரிங்க்டோன் ஒலிக்க டிஸ்ப்ளே வில் வந்த பெயரை பார்த்தவனுக்கு ஐயோ என்றானது. மைண்ட் வாய்ஸில் " ஐயோ தெனம் ஒரு பைத்தியத்துக்கிட்ட மாட்டிகிறேனே நான் என் பண்ணுவேன் சாமி"என்ற தலைவரின் டையலாக் ஓடியது. இருப்பினும் அட்டன் செய்து காதுக்கு கொடுத்தான்.

ரிஷி அறையை அடைந்தவன் டவலை பெட்டில் வீசினான். "எத்தன தடவ சொல்றது ஈர டவல பெட்ல போடாத ன்னு." என்ற அம்மாவின் கண்டிப்பு குரல் நினைவில் வர புன்னகையுடன் அதை அப்புறப்படுத்தினான்.

வழக்கம் போல பாடி ஸ்ப்ரே வை கையில் எடுத்தவனாக அவன் உலகத்திற்கு ஏற்ப தன் மாற்ற துவங்கினான்.

வெளியே வினித்தோ "லிசின் நீங்க ரிஷிய செலக்ட் பண்ணல அவன்தான் உங்கள செலக்ட் பண்ணான். அத நீங்க மறந்திருக்க மாட்டிங் கன்னு நம்புறேன். அன்ட் தேவையே இல்லாத ஆர்கியூமெண்ட்ஸ் அவனுக்கு சுத்தமா பிடிக்காது. ஐ திங்க் யூ கேன் அன்டர்ஸ்டான்ட்? " என்று முடித்து வைத்தான்.

மீட்டிங்கிற்கு கிளம்பி வந்த ரிஷி "வினி இந்த ஜர்கின் கொஞ்சம் அன்ஃபிட்டா இருக்குடா. டிசைனர் சரி இல்ல மொதல்ல மாத்தனும்."என்று குறைபட. ஜர்கினை அளவிடும் பார்வை பார்த்தான் வினித். அவனுக்கு தன் நண்பன் எங்கு வருகிறான் என்பது புரியாமல் இல்லை.

" ஓஹ் மாத்திடலாமே. எனக்கும் கூட அதான் தோனிச்சு. டிசைனும் சரி இல்ல டிசைனரும் சரி இல்ல. டூ பேட்? "என்று உதடு சுழித்து சொன்னவனை துளைத்தது ரிஷியின் பார்வை. வினித் அதனை பொருட்டாகவே மதிக்காமல் " யாரோ சொன்னாங்க அவளுக்கு மட்டும் தான் என்ன முழுசா தெரியும் ன்னு அந்த மானஸ்தன் எங்கப்பா "நக்கலடிக்க அவன் கழுத்தை இருகைகளால் பின்னிருந்து இறுகக் கட்டி கொண்டான் ரிஷி.

" நானே அவள பார்த்து மூனு நாள் ஆகுதுன்னு ஃபீலிங்ல இருக்கேன் நீ இன்னும் கொஞ்சம் எரியுற கொள்ளில எண்ணெய ஊத்தி குளிர காயுறிய.மனவே செத்தடா நீ"பிடியை தளர்த்தாமல் சொன்னான்.

அவனும் விடாமல் " டேய் நல்லவனே இன்னும் கொஞ்சம் டைட்டா பிடி டா மொத்தமா மேல போய்டுறேன். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு முழி பிதுங்கி நிக்கிறதுக்கு அதுவே பெட்டர். அட ச்சீ கைய எடு "என்றான் வினித்.

கையை எடுத்தவன் வினித்தை கொலை வெறியுடன் பார்க்க "ஐயோ பயமா இருக்குடா. மூஞ்ச பாரு. நீ எங்க சுத்தி எங்க வருவேன்னு எனக்கு தெரியாது. அவ உன் மேல கொலைவெறில்ல இருக்கா. நேர்ல மாட்டுன மவனே கைமா தான். மூடிட்டு வா மீட்டிங்க்கு டைம் ஆச்சு" என்க பாவமாக முகத்தை வைத்து கொண்டான் ரிஷி.

"ஏன்டா மூஞ்ச இஞ்சி திண்ண ஏதோ மாதிரி வச்சிகிற. கருமமா இருக்கு பாக்க சகிக்கல உவாக்.. " என்றான் வினித். "டேய்... " என்று ரிஷி கோவமாக விளிக்க. நக்கல் சிரிப்புடன் "நீயெல்லாம் ஒரு ஸ்டாரு. உனக்கு இத்தன கேர்ள் ஃபேன்ஸ் வேற. கால கொடும டா" என்றவனை கால்களால் எத்த விட்டால் போதுமென்று ஓடி விட்டான் வினித்.

இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ரிஷியின் தேவைகளை அவன் வதனம் அறிந்தே செய்து முடிப்பான் வினித். பெற்றோரை இழந்து அக்காவின் அரவணைப்பில் வளர்ந்தவனுக்கு ரிஷியின் குடும்பம் சொந்த குடும்பம் ஆகிப்போனது. ரிஷியின் உடனான நட்பு நாளடைவில் அவனுடனான பிணைப்பை அதிகப்படுத்த இருவரும் பிரிய மனமின்றி ஒன்றாக இருக்க முடிவுசெய்து விட ரிஷியின் திறமையால் அவன் புகழ் பரவ அவனை உடனிருந்து வழிநடத்தும் பொறுப்பை வினித் ஏற்றான்.

ஓடியவனை துரத்தி கொண்டே மீட்டிங் நடக்கும் இடத்தை அடைந்தனர். நமட்டு சிரிப்புடன் உள்ளே வந்த வினித் ரிஷியின் லேசர் பார்வையை பரிசாக பெற்றான். அங்கே அறையில் அமர்ந்திருக்கும் நால்வரில் ஒருவர் "ஹலோ மிஸ்டர் ரிஷ்வந்த். ஐயம் ரிச்சர்ட்" என்று கைநீட்ட ரிஷியும் "ஹலோ" என்று கைகுலுக்கி விட்டு "ப்ளீஸ் ஸிட் டௌன்" என்று இருக்கையை கைகாட்டி விட்டு அமர்ந்தான். மறக்காமல் வினித் தையும் கையோடு அமர வைத்தான்.

அவர்கள் ரிஷியுடன் கொலாப்ரேஷன் வைத்து கொள்வதற்காக அக்ரிமெண்ட் போட வந்திரிந்தனர். சமீப காலமாக புகழின் உச்சியில் இருக்கும் ரிஷியின் லவ் ப்லஷ் கான்சர்ட் அதனுடன் கோலப் செய்து கொள்ள பலரும் போட்டி போட நிதானமாக யோசித்து ஒரு மியூசிக் கம்பேனியை இருவரும் தேர்வு செய்தனர்.

அந்த கம்பெனியின் டார்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் அனைத்தையும் சரி பார்த்து அதில் பல திருப்பங்களை செய்ய வைத்து அது இரண்டு குழுவினருக்கு ஏதுவாக அமைய அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு விட்டு கைகுலுக்கி சென்று விட்டனர்.

பெருமூச்சு விட்டவன் வினித் இடம் "நெக்ஸ்ட் எங்க டா" என்றான் ஒரு வித களைத்த குரலில். அவன் முன் தண்ணீர் பாட்டிலை வினித் நீட்ட அதை பெற்று கொண்ட ரிஷி ஒரு மிடரு அருந்தி முடிக்க "இப்போவே குடிச்சு முடிச்சுடு. நெக்ஸ்ட் கான்சர்ட் இருக்கு. நீ என்ன பண்ணுவியோ தெரியாது. அழுகின முட்டையால அடிவாங்காம தப்பிச்சா சரி. " என்றான் வினித்

மீண்டும் அவனது மேக்னடிக் ஸ்மைலை வீசியவன் பேசாமல் தண்ணீரை அருந்தினான்.வினித் குழம்பி தான் போனான் "என்ன செய்ய காத்திருக்கானோ " என்று எண்ணி விட்டு அவனுடன் நடந்தான்.

********************************

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro