நீ வருவாய் என....
வசந்த கால பூ மகளே...
வண்ணப் பூக்கள் சேர்க்கிறேன்..
உன் நல்வரவு நிலைக்கும் நாளுக்காக..
சின்னத்திரை பதிவுகள் எதுவும்
சிந்தையில் ஏறவில்லை..
உன் கண் கொண்ட காதல் அன்பினால்...
வண்ணத்திரை பாடல்கள் யாவும்..
என் எண்ணத்திரையில்
உன்னோடுதான்..ஓர் மெல்லிய நடனம்
காதல் கனவுகளாய்...
இரவெல்லாம் பகலாக,
பனிக் காற்றும் சூடாக, என்
எதிர்ப் பார்வையும் இதமாக மாற்றும்
மந்திரம் சொல்லடி..
என் காதல் மாயக்காரி!
வான் நிலவுக்கு வழிவிடும்
நட்சத்திரங்கள் மத்தியில்..
மேகமாய் சூழ்கிறேன் நான்
நீ வரும் பாதையில்..
கண்ணீரையும்
கானல் நீராக்கும் தந்திரம்..
உன்னோடு மட்டும் ஏனடி!
என் நிழற் பிம்பத்தின் உயிரோசையும்
உன் இதயத்தில் தானடி!
நடையழகு சொல்லுதடி உன்
மனப்பாதைக் காட்சிகளை...
உன் சிறு கோபமும் சிந்துதடி..
சிரிப் பூக்களாய் இதழ்களில்..
எங்கும் விரிந்த கடலுக்கும்..
எல்லை தாண்டா அலைபோல
காதல் சொல் ஒன்று சுறுக்கமாய்
கூறடி பெண்ணே....
வள்ளுவனுக்கு சொல்லூட்டும்
காதல் வாசுகியாய்
மாறடி பெண்ணே..
என் மீது கொண்ட எல்லைக்காதலை
உன் எழில் குரலால் பாடடி கண்ணே..
முள் போன்ற முரண் காதல்
என் காதல் என்றாலும்..
சொல்லாமல் செல்லாது
ஒருநாளும் என் ரதியே..
உன் கல் நெஞ்சு துளைத்த
காதல் அம்புடைத்து..
பொல்லாத புதுகதை ஒன்று
தேடாதே என் தேவதையே..
சின்னதொரு பேராசை
தொடருதடி நெஞ்சில்..
உன் ஒற்றைக் கண்சிமிட்டி
முற்றுப்புள்ளி வையடி.
என் ஒரு தலைக் காதலுக்கு!
நன்றி...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro