நிலா -9
முதன்முதலாய் தாவணியில், கிராமத்து குயிலாய் மெல்ல படியிலிருந்து இறங்கி வந்தவளை கண்டு, வாயில் ஈ போகாத குறையாய் அனைவரும் பிரமித்து நின்றனர். பகலிலும் பெயர்கேத்தார்ப் போல் முழு நிலவாய் ஜொலித்த அவளை ஹரிஷ் மட்டும் சட்டையே செய்யவில்லை.
இறங்கி வந்தவள், தென்றலை நோக்கி, "போலாமா?" என்க
"கொஞ்சம் இரு டா.." என்ற சுசிலா, அவளை நெருங்கி தன் கண்ணின் மையை விரலால் உரசி, அவள் கண்ணத்தின் ஓரம் சின்னதாய் பொட்டிட்டவர், பின் "என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க.. சரியா" என தென்றலின் மேல் பார்வையை பதித்து கூறினார்.
"நான் பத்திரமா பாத்து கூட்டிட்டு போறேன் அத்தை.. நோ டென்சன்" எனக் கூற,
"எதுக்கோ ஹரிஷை துணைக்கு கூட்டிட்டு போங்க.." என அவனை கோர்த்தும் விட்டு சம்மதிக்கவும் வைத்து, துணைக்கு அனுப்பி வைத்தார்.
'இந்த பெரிய மகாராணி.. ஒரு சந்தைக்கு போறதுக்கு இந்த அத்தை, மாமாவ துணைக்கு வேற அனுப்புறாங்க', என மனதில் நினைத்த தென்றல், முகத்தில் வராத சிரிப்பை பூசிக் கொண்டால்.
வாரத்தில் ஒருநாள் நடக்கும் சந்தையில் கூட்டத்திற்கு ஒன்றும் பஞ்சமில்லை.
நிலா கொஞ்சம் தடுமாறினாலும், மிட்டாயைய் பார்க்கும் குழந்தைப்
போல் பிரமிப்பாய் தன் கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டுக் கொண்டு இருந்தாள்.
வியாபரிகளின் கூவல்கள், மக்களின் உரையாடல்கள், அது வேண்டும் என்று கைக் காட்டி அழும் குழந்தைகள், வியாபாரிகளிடம் வாடிக்கையாளற்கள் பேசும் பேரம், எதேச்சையாக சந்திக்கும் நண்பர்கள், அரசல் புரசல் பேசும் குடும்ப தலைவிகள்,'அடி ஆத்தி இம்புட்டு விலையா' என கண்ணத்தில் கை வைக்கும் பாட்டிகள், இவர்களுக்கு இடையில் தொலைந்து போன குழந்தைப் போல் திரு திருவென முழித்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்து உதட்டின் ஓரம் சிரித்தான் ஹரிஷ்.
தன் அலைப்பேசியில் ஒருக் கண்ணையும், அவள் மேலொரு கண்ணையும் வைத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தவன், தன்னிச்சையாக அலைப்பேசியில் மூழ்கி விட, திடிரென நிலாவின் அலறல் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன், கூட்டத்தை பிளந்துக்கொண்டு ஒருவன் ஓடுவதையும், அவனை சிலர் துரத்துவதையும் கண்டு ஒரு நிமிடம் திகைக்க, தன் முன், கழுத்தில் லேசான ரெத்த காயத்துடன் கண்களில் தேங்கிய நீரோடு நிற்கும் நிலாவைக் கண்டு நிகழ்ந்தவை புரிய, ஒரே அடியில் அவளிடம் சென்றவனிடம், "ஹ..ஹரிஷ்.. அ.. அம்மா செயின்.." என தன் கழுத்தில் கைவைத்து நிலா கூறி முடிக்கும் முன் காற்றை கிழித்துக் கொண்டு சென்றிருந்தான்.
மணி இரண்டை தாண்டி இருந்தது. இன்னும் ஹரிஷைக் காணவில்லை. வாசலுக்கும் வீட்டுக்கும் ஓயாமல் நடந்துக் கொண்டு இருந்தாள் தென்றல்.
கழுத்தில் காயத்துடன் நிலாவையும், ஹரிஷைக் காணவில்லை என்ற செய்தியுடனும் அவன் வீட்டிற்கு சென்றால், தேவையில்லாத பல குழப்பங்கள் நேரிட கூடும் என்பதால், நிலாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள் தென்றல்.
ஹரிஷின் வீட்டிலிருந்து பல போன்கள் வந்தாகிவிட்டது, 'இதோ வந்துவிடுகிறோம்.' 'அதோ வந்துவிடுகிறோம்', என சமாளித்தே நொந்துப் போனாள்.
"மாமாவையும் காணோம். விசாரிச்சுட்டு வரப் போன எங்கம்மாவையும் காணோம். ஐயோ என்னாச்சினு தெரியலையே." என தென்றலையும் மீறி அவளின் புலம்பல்கள் நிலாவின் செவிக்கு எட்டாமல் இல்லை.
"பயப்படாத தென்றல். அவருக்கு ஒன்னும் ஆகாது." என்க
"நீ கொஞ்சம் அமைதியா இரு. உன்னால தான் எல்லாம். இங்கலாம் திருட்டு நடக்குறதே அரிது. அதுவும் உள்ளூர் காரனா இருக்க வாய்ப்பே இல்லை. கண்டிப்பா வெளியாளா தான் இருக்கனும். அவன் மாமாவ எதாவது பண்ணிட்டானா, வருமா?. ஏற்கனவே செத்து பிழைச்சி வந்தவரு." என அவள் பட்டாசாய் பொரிந்ததில், கடைசி வாக்கியத்தை மட்டும் உள்வாங்கிய நிலாவுக்கு, அதைத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தலை தூக்க, "என்ன?!" என கண்கள் விரிய கேட்டாள்.
"என்ன, என்ன?"
"செத்துப் பிழைச்சி வந்தவரா?"
"ஆமா. மாமா வெளியூர்ல தங்கி ஹாஸ்டல்ல தான் காலேஜ் முடிச்சாரு. அவரு பைனல் எக்ஸாம் முடிச்சுட்டு வீடு திரும்பையில, பஸ் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சி. பாடிக் கூட கிடைக்கலனு சொல்லிட்டாங்க." என உள்ளத்தின் கவலை அகத்தில் தெரிய கூறியவள், நிறுத்தினாள்.
தன்னை சமன்படுத்திக் கொண்டு சிறிய இடைவெளிக்கு பிறகு, மீண்டும் தொடங்கினாள்.
"இரண்டு வருஷம் கழிச்சு தீடிருனு ஒரு நாள், உசுரோட வந்து நின்னாரு."
"எப்படி?"
"விபத்துல இருந்து எப்படியோ தப்பிச்சவருக்கு பழசெல்லாம் மறந்திச்சு. எல்லாம் நினைவுக்கு வரவே இரண்டு வருஷம் ஆகிருக்கு."
"அப்போ அந்த இரண்டு வருஷம் எங்க இருந்தாரு?"
"இறந்துட்டார்னு நினைச்சவரு, உசுரோட வந்து நிக்கும் போது, இதெல்லாம் யாருக்கு விசாரிக்கத் தோணும். ஆனா மாமா அதுக்கு பிறகு ரொம்ப மாறிட்டாரு. யார் கிட்டயும் சிரிச்சுக் கூட பேசரதில்லை. அப்போ தான் திடிர்னு வேலைக்கு போறேன்னாரு. அத்தையும் மாமாவும் உங்க அப்பா கிட்ட பேசி அதே கம்பனியில வேலையும் வாங்கிக் கொடுத்தாங்க" என அவள் கூறி முடிக்கவும் ஹரிஷ் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.
வந்தவன் உள்ளே நுழைந்து தென்றலை முறைத்துவிட்டு, தென்றல் கூப்பிட்டதை காதில் போட்டுக் கொள்ளாமல் நிலாவின் கரம் பற்றி இழுத்துக் கொண்டே சென்றுவிட்டான்.
தன்னிடம் தேவையில்லாத விஷயத்தை சொன்னதிற்காக முறைத்தானா? இல்லை தனக்கு தெரிய தேவையில்லை என நினைத்தானா?
என குழம்பியபடி அவனைத் தொடர்ந்தவள் காற்றால் கலைந்த தன் முடியை சரி செய்ய வேண்டி, அவன் பற்றியிருந்த தன் கையை விடுவித்துக் கொண்டு கேசத்தை நோக்கி உயர்த்தியவள் அதில் படிந்திருந்த இரத்தக் கரையைக் காண, சற்றே அதிர்ந்தவள், ஹரிஷின் உள்ளங்கையில் வெட்டு காயம் இருப்பதை கண்டு பதறி அவன் கரத்தை பற்றியவள், தன் தாவணியின் ஓரத்தை கிழித்து, அதை அவன் கையில் சுற்றினாள்.
அதை சற்றும் எதிர்பாராதவன், ஒரு நொடி திகைத்து பதறிய அவள் முகத்தைக் காண,
அவளோ "அறிவிருக்கா ஹரிஷ். இப்படி அடிப்பட்டு ரெத்தம் போய்ட்டு இருக்கு. நீங்க என்னன்னா இப்படி அசால்ட் ஆஹ் சுத்திட்டு இருக்கிங்க." என்றுக் கத்திக் கொண்டே, சற்றிய தாவணியை இன்னும் இறுக்க,
அதில் "ஆஹ்" என கத்தியவன், "யாரு நான் பைத்தியமா? காய்த்து மேல யாராவது இப்படி கட்டுவாங்ளா?"
"இப்படி கட்டாம, பின்னே எப்படி கட்டுவாங்களாம்?" என்க
"ஹான்.. என் கைல அடிப்பட்டிருக்கனு இவ்ளோ டைட்டா கட்டுறியே.. உன் கழுத்தலயும் தானே அடிப்பட்டிருக்கு. இதே மாதிரி டைட்டா கட்டிட்டு செத்துரு!" என அவன் கூற
"உங்களுக்கு போய் கட்டுனேன் பாரு. என்ன செருப்பாலயே அடிக்கனும்" என்றவள் பிடித்திருந்த அவன் கையை உதற, அதில் மீண்டு அவன் 'ஆ' வெனக் கத்த "சாரி சாரி சாரி.. ரொம்ப வலிக்குதா?!" என அவள் பதற,
'ஆ' என்பதையே ராகம் போல் கத்தி சமாளித்தவன், "ஆஆ..ஆக்ச்சுவளி.... நான் இன்னைக்கு செருப்பு போட்டு வரலை. ஷீ தான் போட்டு வந்தேன்னுஉஉ சொல்ல வந்தேன்.." என இழுத்தவனை ஓரக் கண்ணால் முறைத்தவள்,
"எப்படி அடிப்பட்டிருக்கு பாருங்க. அந்த திருடன துரத்திட்டு போன தால தானே? ஒரு சாதாரண செயின்க் காக.." என அதற்கு மேல் கூற முடியாமல், அவள் கண்கள் கலங்கிக் கொண்டு, தொண்டைக் கமர,
"ஹம்ம் சொல்லு.. ஏன் நிப்பாட்டிட்ட?! சாதாரண செயின் தானே?"
"அ..அது.." என ஆமா இல்லை என்று அவள் மாறி மாறி தலையசைக்க,
தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து ஒரு செயினை எடுத்து அவள் முகத்திற்கு நேராய் பிடித்தவன், "எனக்கு தெரியும் இது உங்க அம்மாவுடைய, முதல் பரிசு.." என்க
"கடைசி பரிசும் கூட" என அவனிடமிருந்து அதைப் பரித்தவள் தன் கழுத்தில் மாற்றிக் கொண்டாள்.
சிரிப்பதா? இல்லை அழுவதா? என்றுத் தெரியாமல் இரண்டும் கலந்த முக பாவனையையோடு "தாங்ஸ்" எனக் கூறியவளைக் கண்டு சிரித்தவன், "அம்மா தாயே.. நீ தாங்கஸ் சொல்லலனாக் கூட பராவாயில்லை.. அதுக்குனு என்னனே கண்டுப் பிடிக்க முடியாத எக்ஸ்ப்ரெஷன்லாம் குடுக்காத.." என சூழ்நிலையை மாற்ற வேண்டி அவளிடம் வம்பிழுத்து நன்றாய் வாங்கி கட்டிக் கொண்டான்.
பாதி தூர மௌன நடைக்கு பிறகும்,
நிலாவின் மனம் தென்றல் கூறியதுலேயே லயித்துக் கிடக்க, கேட்கலாமா என வாயெடுத்தவள் ஏதோ தோன, அமைதியாகிவிட்டாள்.
அவள் ரொம்ப நேரமாகவே இவ்வாறே செய்துக்கொண்டிருப்பதைக் கண்டவன், அவள் எதைக் கேட்கப் போகிறாள் என உணர்ந்து, அவள் யோசனையை திருப்பும் வண்ணம், "உனக்கு ஏன் தாராவைத் தவிர வேற பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸே இல்லை?" என சமந்தமே இல்லாமல் கேட்டவுடன், ஒரு நிமிடம் திகைத்து நின்றவள், பின் தன்னை சமன் செய்துக் கொண்டு, "எனக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லைனு, உங்களுக்கு யார் சொன்னா?" என தோல்களைக் குளுக்கி கூற,
"தாராவை தவிர உனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு யாரும் இல்லைனு ரீடர்ஸ்க்கே தெரியும். ரொம்ப நடிக்காத." எனக் கூறி அவள் முகத்தை பார்க்க,
'எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்கா அந்த குரங்கு!!!' என அப்பாவி ஆதரை மனசில் வசைப் பாடியவள், "ஏன் இல்லை? இன்ஸ்டால இருக்காங்க. Fbல இருக்காங்க. காலேஜ்ல இருக்காங்க.." என விரல் விட்டு எண்ணிய படி அவள் கூற,
"பார் யுவர் கைண்ட் இன்பார்மேஷன், நான் சொன்னது ஃப்ரெண்ட்ஸ் இல்லை. பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!"
"ஹலோ.. நீங்க மட்டும் ஏன் சிங்கிலா இருக்கிங்கனு, கேட்டா உங்க கிட்ட ஆன்சர் இருக்கா? அதே மாதிரி தான்"
"நான் சிங்கில்னு உன்கிட்ட சொன்னேனா?" என்றவனிடம்,
"என்ன!!!!!!?" என அதிர்ச்சியின் உச்சத்தில் கேட்டவளைப் பார்த்து,
"நான் சிங்கில் இல்லை" என்றவன் சற்று இடைவெளி விட்டு "முரட்டு சிங்கில்" என்க, காரி துப்பாத குறையாய் பார்த்தவளின் மனதில், காணும் போதொல்லாம் கண்களில் காதலுடன் ஹரிஷைக் கண்ட தென்றலின் முகம் வந்துப் போனது.
அவள் தொடர்வாள்..
__________________________
Precap:
ரெத்த வெள்ளத்தில் கிடந்த தன் தந்தையை கண்டு அலறியவள் அவர் தலையை தூக்கி தன் மடியில் வைக்கும் போது தான், அவர் பின்னங்கழுத்தில் கத்தி குத்தப் பட்டிருப்பதை கண்டாள்.
குத்தியவர் யார்? என நிமிர்ந்தவளின் கண்கள் தன்னால் இயன்ற வரை பெரிதாய் விரிந்தன.
Aduthu yedho nadakka pogudhunu kandu pudichirpinga.. bt adhu ennanu therinjikka nxt ud varaikkum wait pannungoo makkaley.. tharamaana sambavam kaathukkittu irukku..
Vote buttonai marakkaama
thattungooh..
Thattubavargalukku tharappadum laddungooh..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro