நிலா -8
இருள் நிறைந்த வானத்திற்கு.. நிலவு விளக்கு பிடித்து கொண்டு இருந்த.. அந்த இரவு நேரத்தில்.. தன் அறையை நோக்கி சென்று கொண்டிருந்த நிலா எதேச்சையாக ஹரிஷின் அறைக்குள் தன் பார்வையை சுழல விட, அங்கு அவன் தன் துணிமணிகளை ஒரு பெட்டிக்குள் திணித்துக் கொண்டு இருந்தான்.
அதைக் கண்டவுடன் அவளின் கண்கள் தன்னால் இயன்றவரை அகல விரிய பதறியடித்துக்கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தாள்.
"ஹ.. ஹரிஷ்.. ஐ னோவ்.. என்னதான் இருந்தாலும் தாரா அப்படி பேசிருக்க கூடாது.. அதுக்காக நீங்க இந்த வீட்டை விட்டு போறது சரியில்லை.. அவ ஏதோ எனக்கு சப்போர்ட் பண்றனு, அப்படி யோசிக்காம பேசிட்டா.. உங்களுக்கு இந்த வீட்ல எல்லா ரைட்ஸீம் இருக்கு.. ஐ அம் ரியல்லி சாரி நீங்க ஹர்ட் ஆகிருந்தா.. ப்ளீஸ் நீங்க போகாதிங்க.. அப்பாக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்ட படுவாரு.." என அழாத குறையாய் மூச்சு விடாமல் பேசியவளை ஓரிரு வினாடி உற்று நோக்கியவன் பின் சிரிக்கத் தொடங்கிவிட்டான்.
"நீ லூசுனு எனக்கு தெரியும்.. பட் இந்த அளவுக்கு லூசுனு தெரியாது.. தாங்க்ஸ் பார் இன்பார்மிங் மீ"
"வாட்..?!!!" என அவள் புரியாமல் கேட்க,
"என்ன வாட்?.. நான் போறேன்னு உனக்கு யார் சொன்னா?" என கேட்டவனை புரியாமல் பார்த்துவிட்டு,
"நீங்க தான ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருந்திங்க.. அதான் நீங்க வீட்டை விட்டு கிளம்புறிங்களோனு நினைச்சேன்.. அப்போ இல்லையா?"
"போறேன் தான் பட் ஜஸ்ட் பார் த்ரீ டேஸ்.."
"எங்க போறிங்க?"
"என் சொந்த ஊருக்கு"
"என்ன திடீர்னு?"
"இல்லை அம்மா கூப்டுட்டே இருக்காங்க.. அதான்"
"ஓஹ்" என்றவள், சிறிது நேரம் யோசித்து விட்டு "நானும் உங்க கூட வரட்டுமா?"
"என்ன?" என கண்கள் விரிய கேட்டவனிடம்,
"ப்ளீஸ் ப்ளீஸ் ஹரிஷ்.. நோனு மட்டும் சொல்லிடாதிங்க"
"எங்க அப்பா கூட,உன்னையும் அங்கிலையும் கூட்டிட்டு வர சொன்னார்.. அங்கில்கு எந்த ப்ராப்லமும் இல்லைனா.. எனக்கும் இல்லை"
என அவன் கூறி முடிப்பதற்குள் துள்ளிக் கொண்டு ஓடியேவிட்டாள்.
வேலைக் காரணமாக அவர் வர மறுத்தாலும் இவளுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
இதோ 12 மணி நேர பயணத்திற்கு பிறகு அவன் சொந்த ஊருக்கும் வந்தாகிவிட்டது.
அந்த அழகிய கிராமம் வயல்களையும், மரச்செடிக், கொடிகளையும் தன்மேல் கிரீடம் போல் சூடி அவர்களை கம்பீரமாய் வரவேற்றது. கண்கள் எட்டும் தூரம் வரை பச்சை நிறம், விழிகளை குளிர்வித்தது.
மாசு நிறைந்த காற்றுக்கும், இயற்கை நிறைந்த காற்றுக்கும் உள்ள வேறுபாடை அவளால் உணர முடிந்தது.
பெரிதாய் ஆல் நடமாட்டம் இல்லாத அந்த ஒத்தையடி பாதையில் புள்ளி மானாய், துள்ளி ஓடினாள்.
பாவம் ஹரிஷின் நிலைதான் கவலை கிடமாய் மாறி இருந்தது.
இவளை பத்திரமாய் அவள் தந்தையிடம் சேர்க்கவில்லை என்றால் இவன் கதி அதோ கதி தான்.
அவள் மானாய் மாற இவன் 'பாத்துப் போ' எனக்கத்தி நாயாய் மாறி இருந்தான்.
ஏதோ எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பதுப் போல் இருக்கும் அவளது முக பாவனையைக் கண்டு அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
"என்ன ஹரிஷ் இது.. ட்ரைன்ல இருந்து இறங்குனோன அப்படியே மேளத் தாளத்தோட.. ட்ரம்ஸ் லாம் அடிச்சு.. கம கமனு பூவெல்லாம் தூவி உங்களை வரவேற்பாங்கனு பாத்தா.. ஒரு ஈ.. காக்கவ கூட காணோம்" என கையில் இருந்த நெற்கதிரை அங்கும் இங்கும் அசைத்த படி அவள் கூற,
"இதெல்லாம் உனக்கே ஓவர்ரா இல்லை"
"அட, என்னப்பா நீங்க..! படமெல்லாம் பாத்ததே இல்லையா ?, ரொம்ப நாள் களுச்சி ஹீரோ ஊருக்கு போனா.. அவங்கள இப்படி தான் வரவேற்ப்பாங்க"
"நான் வர்றது அவங்களுக்கு தெரியாது"
"நீங்க தானே நேத்து அம்மா கூப்ட்டாங்க அதனால தான் போறேனு சொன்னிங்க!!?"
"அவங்க கூப்டப்போ நான் வரலேனு சொல்லிட்டேன்.. சோ நான் வரலைனு நினைச்சுட்டு இருப்பாங்க"
"ஓஹோ.. சப்ரைஸ்ஸா?!!"
"இல்லை.. பாஸ்மதி ரைஸ்.. கொஞ்சம் அமைதியா வர்றியா?" என்றவுடன் முகத்தை திருப்பியவள் பின் அவன் பக்கமே திரும்பவில்லை.
இருவரும் அவன் வீட்டை அடைந்தனர். அவள் வழியில் பார்த்த வீடுகளை விடவும் இது தான் பெரியது. வெளியில் இருந்து பார்க்கும் போதே, அது பழைய காலத்து வீடு என கண்டுக்கொள்ளலாம்.
ஹரிஷ் முதலில் உள்ளே நுழைய, இவள் வாசலிலே நின்றுக்கொண்டாள்.
உள்ளே சென்றவன், அவரவர் வேலைகளில் மூழ்கியிருக்கும் தன், குடும்பத்தாரின் கவனத்தை தொண்டையை செருமி தன் பக்கம் இழுக்க, அனைவரும் அவனை ஒரே மூச்சில் சூழ்ந்துக் கொண்டனர்.
அவர்களின் பாச மழையில் நிலாவை மறந்தவன் பின் அவள் வாசலிலே நிற்பதை கண்டவுன், "ஏன் அங்கேயே இருக்க உள்ள வா" என அவன் அழைத்ததும் அனைவரின் பார்வையும் அவளை நோக்கி திரும்பியது.
"அடியாத்தி.. பாத்தியா.. இதுக்குதான் நான் அப்பவே சொனேன்.. கேட்டியா டா.. பாரு.. இப்ப போன ஒரே மாசத்துல எவளோ ஒரு பட்டனத்து காரிய இழுத்துட்டு வந்துட்டானே.. ஐயோ கடவுளே.. இப்ப நான் என்ன செய்வேன்.. ஏன் புருஷன் கட்டி காப்பாத்துன மானமெல்லாம் இப்போ மண்ணோட மண்ணாகபோதே.. இதையெல்லாம் பாக்குறதுக்கு பதிலா நான் அவரோடயே போய் சேந்துர்ப்பேனே.." என ஹரிஷின் பாட்டி தேவி, அவனின் தந்தை ராமச்சந்திரனிடம் ஒப்பாரி வைக்க,
அவன் மறுத்து பேசுவதற்குள் அனைவரும் தன் பங்கிற்கு திட்ட ஆரம்பிக்க, பொருமை இழந்தவன், "எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறிங்களா! நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.. இது அப்பாவோட ப்ரெண்ட் அஷோக்கோட ஒரே பொண்ணு" என அவளை கைக்காட்டி கூற, அவள் சங்கடமாய் இளித்துக்கொண்டே அவர்களைப் பார்த்து தட்டு தடுமாறி கையெடுத்து கும்பிட்டாள்.
அனைத்து பிரச்சினைக்கும் காரணம், ஹரிஷ் குடும்பத்தார், அவளை இதுக்கு முன் பார்த்தில்லை என்பதால் தான்.
"அடடா.. உள்ள வா டா.. எங்க அம்மா அப்படி தான்.. நீ ஒன்னும் மனசுல வச்சிக்காத" என ஹரிஷின் தந்தை ராமச்சந்திரன் அவளை உள்ளே அழைத்துக் கொண்டு வந்து அமர வைத்தார்.
பின் ஒருஒருத்தராய் அறிமுகம் செய்து வைத்தார்.
அம்மாவின் பெயர் சுசீலா. ஹரிஷிற்கு இரண்டு தங்கை. மூத்தவள் கயல். இளையவள் மலர். ஒரு அத்தை. அவர் வீடும் அருகில் தான். அத்தைக்கு ஒரே மகள். பெயர் தென்றல்.
அறிமுகத்திற்குப் பின் ஹரிஷை விட அவளுக்கு தான் தடல் புடலாய் உபசரிப்புகள் நடந்தன. தங்கைகள் இரண்டு பேரும் அக்கா அக்கா என நன்றாக ஒட்டிக்கொண்டனர்.
போதும் போதும் என்ற அளவுக்கு ஹரிஷின் அம்மா சுசிலா கவனிப்பால் அவளை திணரடித்து விட்டார்.
கூட்டுக் குடும்பத்தில் வாழ வேண்டும் என்பது அவள் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று.
இன்று இவர்களை பார்க்கும் பொழுது அந்த ஆசை இன்னும் அதிகமாகி விட்டது அவளுக்கு.
அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் நேரம், கையில் ஒரு தூக்குடன் பாவாடை தாவணியில், கிட்டத்தட்ட இவள் வயது பெண் ஒருவள் உள்ளே நுழைந்தாள். அவள் தான் ஹரிஷின் அத்தை மகள் தென்றல்.
"என்னடி இந்தப்பக்கம்?.. கையில என்ன தூக்கோட வந்துற்க?" என சுசிலா கேட்க,
"இல்லத்தே.. அம்மா பாயாசம் காயிச்சிருக்கு.. அதான் உங்க கிட்ட குடுத்துட்டு வர சொல்லிச்சு" என அவள் சொன்னாலும் அவள் கண்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தது.
"சரி கொண்டா" என அதை வாங்கிக் கொண்டவர், அவள் இன்னும் போகாததைப் பார்த்து,
"என்னடி யம்மா?.. அதான் குடுத்துட்டல?.. இன்னும் ஏன் மசமசனு நிக்கிற?"
"அதுவந்து அத்தை.. மாமா வந்துற்குனு கேள்விப் பட்டனே" என அவள் இழுக்க,
"ஆமான்டி காலைல தான் வந்தான்.. பாக்கனுமா?.." என சுசிலா கேட்க,
"பாக்கனும்னு வர்ல.. வந்த கையோட பாத்துட்டு போய்ட்டா ஒரு வேலை முடிஞ்சிடும்ல அதான்.." என அசடு வழிந்தாள்.
"சரி போய் பாரு.. மேல தான் இருக்கான்" என அவர் கூற, நிலாவைப் பார்ததும்,
"யார் இவஹ? என கேட்க,
"அவ ஹரிஷோட வந்திருக்கா.. உங்க மாமா ப்ரெண்ட் இருக்காப்ல அவக மக.. ஹரிஷ் கூட இவங்க வீட்ல தான் தங்கியிருக்கான்.." என அவர் சொன்னவுடன் அவள் முகம் இஞ்சி திண்ண குரங்குப் போல் ஆகிவிட்டது. அது நிலாவிற்கும் புரியாமல் இல்லை.
தென்றல் அவனை பார்த்து விட்டு சென்று விட்டாள். அன்று நாள் அழகாய் கழிய, இரவு வந்தது.
நிலா தனக்காக கொடுக்கப் பட்ட அறையில் தாராவுடன் பேசிக்கொண்டு இருந்தாள். கதவு தட்டப் படும் சத்தத்தை கேட்டு யாரென்று பார்த்தவள் அங்கு ராமச்சந்திரன் நின்றிருப்பதை கண்டவுடன் அவரை உள்ளே அழைத்து அமர வைத்தாள்.
"அஷோக் எப்படி மா இருக்கான்?.. அவனை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு" என்றவர் பதிலுக்காக நிலாவின் முகத்தைப் பார்க்க
"நல்லா இருக்காரு அங்கில்.. நான் கூப்டேன் அவர் தான் வேலை இருக்குனு சொல்லிட்டாரு"
"சின்ன வயசுல இருந்து அவன் இப்படி தான்.. எப்ப பாத்தாலும் எதையாவது பண்ணிக்கிட்டு இருப்பான்.. ஒன்னுல இறங்கிட்டான் அவ்வளவு தான் அவன வெளில கொண்டே வரமுடியாது"
"நீங்க ரெண்டுப்பேரும் எப்படி அங்கில் ப்ரெண்டா ஆனிங்க?"
"எங்கப்பா ஒரு இன்ஸ்பெக்டர்.. அவர் நேர்மையா இருந்த காரணத்துனால, அப்பப்ப ட்ரான்ஸ்பர் வரும்.. அதனால எனக்கு எங்கப்பாத்தாலும் ப்ரெண்ட்ஸா இருப்பாங்க.. நாங்களும் கொஞ்ச காலம் சென்னைல வாழ்ந்தவங்க தான்.. அப்போ தான் உங்க அப்பா எனக்கு பழக்கம்.. என்னமோ தெரியல எனக்கு அவன்னா ரொம்ப பிடிக்கும்.. அவனுக்கும் அப்படி தான்.. அதனால தான், நான் அந்த ஊரவிட்டு வந்தாலும் அப்ப அப்ப அவன போய் பாத்துட்டு வந்தேன்.. நாளடைவுல நாங்க பாத்துக்கறது கொஞ்ச கொஞ்சமா குறைய ஆரம்பிட்ச்சுடுச்சி.. நடுவுல எங்களுக்குள்ள ஒரு சின்ன மனச்த்தாபம்.. அதுக்கு அப்புறம் நாங்க இரண்டு பேரும் சந்திச்சிக்கவே இல்லை.. எங்க அப்பாவும் இங்கேயே உசுரையும் விட்டுட்டார்.. நாங்கலும் இங்கேயே செட்டில் ஆகிட்டோம்.. அப்படி இருக்கும்போது தான் உங்கப்பா, ஒருநாள் போன் பண்ணி நீ பிறந்த விஷயத்தைச் சொன்னான்.."
"அப்படினா எங்கப்பா கல்யாணத்துக்கு நீங்க போகலையா அங்கில்?"
"இல்லையே.. அவன் என்ன கூப்பிடல.. நானும் போகல"
"அப்படினா நீங்க என் அம்மாவ பாத்ததே இல்லையா?" என்றவளின் குரலில் ஏமாற்றம் வெளிப்படையாக தெரிந்தது.
"இல்லடா.. நீ பிறந்த சேதிய சொன்னவன்.. கூடவே அவ இறந்த சேதியையும் சொன்னான்.. அப்போ தான் எனக்கு அவனுக்கு கல்யாணமாகிடுச்சிங்குற விஷயமே தெரியும்.. எனக்கு சந்தோஷ படுறதா இல்லை துக்க படுறதானு அப்போ புரியல.. இருந்தாலும் சண்டையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு அவனை பாக்க போனப்போ.. நீ ஒரு மாசக் குழந்தை"
"ஓஹ்..!" என்றவளின் முகம் வாடி போய் இருந்ததை கவனித்தவர்,
"உனக்கு அம்மா இல்லைனா என்ன..? நாங்க எல்லாரும் இருக்கோம்.. நீ எப்ப வேணாலும் எங்களை வந்து பாரு.. உங்க அப்பா உன்னை எதாவது சொன்னா.. என்கிட்ட சொல்லு.. அந்த படவன நான் பாத்துக்குறேன்.." எனக்கூறி சிரித்தார்.
அவள் தொடர்வாள்..
___________________
விமர்சனங்கள் எதுவாயினும் வரவேற்கப்படுகின்றன..🤗
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro