Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -5

நிலா தாராவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

நிலாவிடம் நிரூபிக்க ஆதாரங்கள் இருக்க போவதில்லை என நினைத்து தான் தாரா ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டாள்.

ஆனால் நிலா அவ்வளவு உறுதியாக சொன்னதும் உண்மையில் அவள் ஆடித் தான் போனாள்.

அவள் உறுதியாக கூறுவதை பார்த்தாள் அவள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று கூட தாராவிற்கு தோன்றியது‌.

தாரா நிலாவிற்கு எதிர்மறையானவள். நிலா யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விடுவாள். அவளுக்கு மனிதர்களை கணிக்க தெரியாது. கிட்டத்தட்ட பளூன் போல, என்னதான் வளுவாய் தன்னை காட்டிக்கொண்டாலும் ஓர் ஊசி பட்டால் உடைந்துவிடுவாள். சுருக்கமாய் சொல்ல போனாள் டம்மி பீஸ்.

ஆனால் தாரா எதையும் ப்ராக்ட்டிகளாக யோசித்து முடிவெடுப்பவள். அதனால் தான் நிலா சொல்வதை  அவளால் நம்ப முடியவில்லை.

வீடு வந்தவள் நேராய் தன் அறைக்கு சென்றாள். மேசை மீது தன் பார்வையை செலுத்தியவள் அதிர்ந்து போனாள். காரணம் அவள் தேடி வந்த பெட்டியும் புத்தகமும் இப்பொழுது அங்கு இல்லை. தான் ஆழ்ந்த துயிலில் இருந்த நேரம் வந்த கள்வனைப் பற்றி பாவம் அவளுக்கு எந்தவித துப்பும் இல்லை.

நேற்று இரவு கூட இங்கே தானே இருந்தது. நான்தானே வைத்தேன். இப்பொழுது எங்கே சென்றிருக்கும்? தாராவிடம் என்னவென்று கூறுவேன்? அந்த சங்கிலியை போலவே பெட்டியும் மறைந்து விட்டது என்றா? ஆதாரம் இல்லை என்று எப்படி சொல்வேன். நான் கண்டதெல்லாம் கற்பனை என்பாளே.
அவள் சொல்வது தான் உண்மையோ?
நான் தான் இல்லாததை இருப்பதாக கற்பனை செய்கிறேனா?

அவள் மனதில் பல எண்ணங்கள் பேரலையாய் எழ, தலையைபிடித்துக் கொண்டு கீழே சரிந்து அமர்ந்தவளுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. தன் தந்தையிடம் அந்த பெட்டியை பற்றிக் கேட்டால் கண்டிப்பாக எதாவது தெரிய வரும். நேற்று இதை பற்றி கேட்க நேரம் கிடைக்கவில்லை. உடனே தன் தந்தையின் எண்ணிற்கு அழைத்தாள்.

கடைசி மணியில் அழைப்பு ஏற்கப்பட்டவுடன், அவரிடம் அந்த பெட்டியை பற்றி கேட்டாள், ஆனால் அவரோ "அப்படி எந்த பெட்டியும் நான் என் ரூம்ல வைக்கலை" என்று சாதித்து விட்டார்.

தாராவோ தெரிஞ்சது தான் என்பதைப் போல் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். கடைசியில் தாராவிடம் சரணடைவதை தவிர வேறு வழியில்லை என உணர்ந்தவள்,

"என்னை நம்புத் தாரா.. என்னால 100 % சுவேர்ரா சொல்ல முடியும் நான் பாத்ததெல்லாம் கற்பனை இல்லைனு" நிலாவின் இயலாமை அழுகையாய் வெடித்தது.

"நீ தான் புரிஞ்சிக்கனும் நிலா.. நீ பாத்ததா சொல்ற செயினும் மறைஞ்சிடுச்சி.. புக்கும் இல்லை.. ஒரு வேலை நீ சொல்றதெல்லாம் உண்மையா இருந்திருந்தா ரெண்டுமே இப்ப உன்கிட்ட இருந்திருக்கனும் தானே" என அவள் தன் தோழியின் நிலையைக் கண்டு மிக பொருமையாக கேட்டாள்.

"அதான் எனக்கும் ஒன்னும் புரியலை தாரு"

"சரி விடு.. ரொம்ப குழம்பிக்காத.. எல்லாம் சரி ஆகிடும்" என்றவள் அவளுக்குத் தனிமை இப்போழுது அவசியம் என புரிந்துக்கொண்டு விடைப்பெற்றாள்.

துன்பமோ இன்பமோ கடற்கரை செல்வது நிலாவின் வழக்கம். இன்றும் அதையே நாடினாள்.

கடற்கரை மணலில் அமர்ந்துக் கொண்டு அலைகளையே வெரித்துக் கொண்டு இருந்தாள்.

ஏதோ தோன்ற தன் கைப்பையில் தான் எப்பொழுதும் வைத்திருக்கும் சிறிய நோட்டை எடுத்தாள்.

அதில் கனவில் அந்த பெண்மணி கூறியதை வரிசையாய் எழுதினாள்.

முதல் கனவு..

  "நிலைமை கை மீறினால்,
இறுக மூடிக்கொள் கண்களை..
உன்னை காக்க வருவான் இவன்."

இரண்டாவது கனவு..

"உயிரை மட்டும் கெட்டியாய்
           பிடித்துக் கொள்.
  என் சேயான உன் உயிரையும்
உனக்குள் இருக்கும் உன் தாயான
           என் உயிரையும்"

இரண்டு கனவிலும் உள்ள கடைசி வரிகள் எதையோ உணர்த்த வருவதுப் போல் அவளுக்கு தோன்றியது. திரும்ப திரும்ப அதையே படித்துப் பார்த்தாள்.

உயிரை மட்டும் கெட்டியாய் பிடித்துக்கொள் என அவர் ஏன் கூற வேண்டும்?

அப்படி என்றால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றல்லவா அர்த்தம்.

முதல் கனவில் 'உனை காக்க வருவான் இவன்' என்றார். இவன் என்பது பச்சை நிற கண்களை உடையவனை குறிக்கின்றது.

இதற்கு, எனக்கு ஆபத்து ஏற்படும் பொழுது இவன் என்னைக் காக்க வருவான் என்று அர்த்தம்.

அவளுக்கு புரிந்து போனது.

மொத்தத்தில் தன் உயிருக்கு ஆபத்து என்றும், தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பொழுது அந்த பச்சை நிறக் கண்களை உடையவன் தன்னை காப்பாற்ற வருவான் எனவும் தன்னிடம் இல்லாத மூலையை வைத்து புரிந்துக் கொண்டாள்.

ஆனால் தன் உயிரைப் பற்றி அவர்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்?

அப்படியே தன் உயிருக்கு ஆபத்து என்றால், அது யாரால்?

தன் கனவில் வந்த பெண்மணியை தான் ஏன் அம்மா என்றழைக்க வேண்டும்?

தன் அன்னையை பற்றி தன் தந்தையேன் மறைக்க வேண்டும்?

தன் தந்தையின் அறையில் தன்னால் கண்டெடுக்கப்பட்ட பெட்டி இப்போது எங்கே? அதைப் பற்றி தன் தந்தைக்கு தெரியவில்லை என்றால் அது யாரால் அங்கு வைக்கப்பட்டிருந்திருக்கும்?

இப்படி பல கேள்விகள் அவளுள் புயலாய் எழ, விடைகளை ஒருவனால் மட்டுமே தர முடியும் என புரிந்துக்கொண்டாள்.

பச்சை நிறக்கண்களை உடையவனை சந்தித்தால் மட்டுமே விடைகள் கிடைக்கும்.

ஆனால் எப்படி?

இவள் உயிருக்கு ஆபத்து வந்தால் கண்டிப்பாக அவனும் வருவான்.

ஒருவேலை இது எதுவும் உண்மை இல்லை. எல்லாம் அவளால் உருவாக்கப்பட்ட கற்பனை என்றால் அவன் வர மாட்டான். ஆனால் உண்மையாக இருந்து இவளின் கணிப்பு சரி என்ற பட்சத்தில் அவன் கண்டிப்பாக இவளை காப்பாற்ற வருவான்.

தன் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டும் தான் அவன் வருவான் என உணர்ந்தவளின் மனதில் ஒரு யோசனைத் தோன்றியது.

அவளின் கணிப்பு சரி தான் என்றாலும தன் யோசனையை செயல் படுத்துவதில் அவள் மனம் லேசாய் கலக்கம் கொண்டது.

ஒருவேள் அவன் வரவில்லை என்றால் இவள் உயிரே போய்விடும்.

உண்மையை கண்டுப்பிடிக்க அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை. பயத்தை புறம் தள்ளினாள்.

மண்ணிலிருந்து எழுந்தவள் நேராய் கடலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஒரு ஒரு அடி எடுத்து வைக்கும் பொழுதும், அவளின் இதய துடிப்பு அதிகரித்தது.

திக் திக் என அவளின் இதய துடிப்பின் சத்தம் அவள் காதிலே கேட்டது. வானம் இருட்டி கொண்டு இருக்க, மழை வேறு விழுந்து விடுவேன் என மிரட்டியது. எப்போழுதும் இதமாய் காலை நனைக்கும் கடல் நீர், இன்று எமனாய் அவளை பார்த்து சிரித்தது. 

பொதுவாகவே தண்ணீர் என்றால் அவளுக்கு பயம். கடற்கரை வந்தால் கூட கொஞ்ச நேரம் கரையில் நின்ற படி காலை மட்டும் நனைத்துவிட்டு வந்துவிடுவாள். அப்படி பட்டவள் இன்று ஆளை முக்கும் ஆழத்திற்கு செல்கிறாள் என்றாள், அவன் வருவான் என்ற ஒரே நம்பிக்கையில் தான்.

வீராப்பாய் கிளம்பி விட்டாளும் அவளின் கைகள் நடுங்கிய நிலையிலும், கண்கள் இருக்கி மூடிய நிலையிலும் தான் இருந்தன.

மழைக் கூட பொழிய ஆரம்பித்து விட்டது. அலைகள் ஆக்ரோஷமாய் கிளம்ப, திக்கு முக்காடி போனாள். முதலில் உப்பு கரித்த தண்ணிர் இப்போழுது அவளுக்கு பழகி இருந்தது.

ஒரு அளவிற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை. அலைகள் அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தனர். மூச்சு முட்டியது. மரணத்தின் வாசல் அவள் கண் முன் நிழலாடியாது. 

கண்கள் இருட்ட தொடங்க, 'எல்லாம் முடிந்தது. இனி அவன் வரப் போவதில்லை. அனைத்தும் என் கற்பனை தானோ?' என அவள் நினைத்து முடிப்பதற்குள், எங்கிருந்தோ ஒரு கரம் வந்து அவளை கரையை நோக்கி இழுத்தது. முழித்துக் கொண்டாள். அவளால் உறுதியாக சொல்ல முடியும் இது அவனே தான். அன்று உணர்ந்த அதே ஸ்பரிசத்தை அவளால் உணர முடிந்தது.
அவளை மீட்க அவன் போராடி கொண்டிருக்க, அவளை கடலின் ஆழத்திற்கு வேறோருவன் இழுத்தான். புதிதாம் வந்தவனின் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, புதியவன் இவளை காக்க வந்தவன் அல்ல அழிக்க வந்தவனென்று.

பச்சை நிற கண்களை உடையவன் அவளை கரையை நோக்கி இழுக்க, புதியவன் அவளை கடலுக்குள் இழுத்தான்.

தண்ணிக்குல் அவள் இவ்வளவு நேரம் தாக்கு பிடித்ததே அரிது.மனம் அலைகளை விட ஆர்பரித்தது. இன்னும் கொஞ்சம் நேரம் தாக்குப்பிடித்தால், புதிர்களுக்கான விடையை கண்டு பிடித்து விடலாம். ஆனால் அவள் உடலோ அதற்கு ஒத்துழைக்கவில்லை. மயங்கிப்போனாள்.

அவள் தொடர்வாள்..

________________________

Spelling mistakes irundha manichidunga friends.

Kadhai epdi irukkunu marakkaama sollitu ponga.

Neenga kadhaila vera ennalaam expect pandringa adhaiyum comment senjuttu ponga🤗

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro