Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -37

"அவர் சொன்னதுப் புரிஞ்சுது.. ஆனா புரியலை.. சொல்றது தான் சொல்றார்‌ மனுஷன் தெளிவா சொல்ல மாட்டாரா?" என கால் மேல் கால் போட்டப் படி மசூராவின் மடியில் படுத்திருந்தவளின் கேசத்தை அவர் கோதிக்கொண்டிருந்தார்.

"உனக்கிருக்கும் மூலையை வைத்து அதையாவது கொஞ்சம் உருப்படியா கண்டுப்பிடி" என்றான் மாயன்.

"அவங்க தப்பிக்கனும்னா.. அந்தப் பந்துல இருக்குற சக்தியை அவங்களுக்கு மீட்டுத்தரணும்.. ஆனா ஏன் மீட்டுத் தரணும்? சக்தி இல்லாம‌ அவங்கலாள அங்க இருந்து வர முடியாதா?" எனக் கேட்டவளின் பக்கத்தில் படுத்திருந்த மஹீந்தன்,

"அவர்களாய் ஒன்னும் அவர்களின் சக்தியை தானமாய்த்தரவில்லை. அவர்களின் சக்தி அவர்களிடமிருந்து பறிக்கப் பட்டிருக்கிறது. அப்படி பறிக்கப் பட்ட சக்தியை ஓரிடத்தில் அடைத்து வைத்தால் அது அதன் உரிமையாளர்களிடம் செல்ல முயற்சிக்கும். உரிமையாளர்களின் உடல் அந்த சக்தியிடம் செல்ல முயற்சித்து அதையே சுற்றிச் சுற்றி வரும். ஆதலாலே அந்த சக்தியிருக்கும் இடத்தை விட்டு அவர்களால் வர முடியாமல் இருக்கும். அவர்களே விருப்பப்பட்டு அங்கிருந்து செல்ல முயற்சித்தாலும் அவர்களது உடலானது காந்தம் போல் அந்த சக்தியிருக்கும் இடத்திற்கே அவர்களின் ஆன்மாவையும் இழுத்துச் சென்று விடும்." என்றான்.

"இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? சரி ஓக்கே.. இப்போ அவங்களுக்கு அவங்க சக்தி கிடைச்சாதான் அந்த இடத்துல இருந்து வர முடியும். சக்தி எங்க இருக்கு? பந்துல இருக்கு. பந்தை எடுக்கணும்னா மோதிரம் வேணும். சிக்கலே இங்க தானே இருக்கு." என மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றாள் அவள்.

"இதிலென்னம்மா சிக்கல் இருக்கிறது?" என அவளது தலையைக் கோதுவதை நிப்பாட்டி விட்டு கேட்ட மசூராவைப் பார்த்தவாரு எழுந்து சம்மனமிட்டு அமர்ந்தவள்,

"அந்த மோதிரத்தை அவன் கைல இருந்து எப்படிக் கழட்டுறது? ஒன்னு அவனால முடியும். இல்லை அந்த விதியால முடியும். பஸ்ட் ஆப்ஷன் நடக்க சான்ஸே இல்லை."

"ஏன் நடக்காது? முயற்சி செஞ்சிப் பார்ப்போமே." என்ற மாயனிடம்

"எப்படி?" எனக் கேள்வியாய் கேட்டாள் நிலா.

"அவன் கையாலே அந்த மோதிரத்தைக் கழட்ட வைக்கிற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்குவோம்."

"எப்படி உருவாக்குவ? அவன் பாசம் வச்சவங்களுக்கு எதாவது ஆபத்துன்னு நம்ப வர வச்சாலாவது இந்தாப்பா மோதிரம்னு கழட்டித் தந்துடுவான். ஆனா அவனுக்குத் தான் அந்த மாதிரி யாரு மேலயும் பயமும் இல்லை. இதுல எங்க.. பாசம் நேசம் அன்பு இதெல்லாம்.. இன் பேக்ட் அதுக்கெல்லாம் அவனுக்கு ஸ்பெல்லிங் கூடத் தெரியாது."
என்றவளின் விழிகள் எதேர்ச்சையாய் மசூராவை நோக்கின.

"என்னை ஏன் அப்படி பார்க்கிறாய்? ஏதோ கட்டின பாவத்திற்கு இத்தனைக் காலமாய் எனக்கு இந்தக் கோட்டையில் இருக்க இடம் தந்திருக்கிறார். நீ என்னை வைத்து மிரட்டி மோதிரத்தைக் கேட்டால் துளியும் யோசிக்காமல் எனக்கு மோதிரம் தான் முக்கியம் என என்னைத் தானமாய் வேண்டாலும் தந்து விடுவார்."

"அட.. அன்று நீங்கள் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டோன, நான்‌ யார் என்னனுக் கூட கேட்காமல் அப்படியேப் போய்ட்டார். அவருக்கு கண்டிப்பா உங்க மேல கொஞ்சமாவது பாசம் இருக்கணும். அவர் கண்ல நான் அதைப் பார்த்தேனே."

"என்மேலிருக்கும் அந்த துளியளவு பாசம் அந்த மோதிரத்திற்கு இணையாகாதம்மா. நானேப் பார்த்திருக்கிறேன். யாரையும் அதைத் தொடக் கூட விடமாட்டார். அந்தளவு அந்த மோதிரத்தில் என்ன இருக்கிறது என்று தான் தெரியவில்லை."

"அதே சந்தேகம் தான் எனக்கும்." என்றவள்,
"ஏன் இன்னும் கேளவன் இறந்தச் செய்தி வெளியாகல?" என்றாள் கேள்வியாய்.

"மக்களிடம் சொல்ல இன்னும் கதை கிடைத்திருக்காது" என்றான் மஹீந்தன்.

"ஒருவர் இறந்ததை எவ்வளவு நேரத்துக்கு மறைக்க முடியும்?"

"எவ்வளவு நேரத்திற்கு வேணும்னாலும் மறைக்கலாம். இறந்தவங்களை அடுத்தவங்க தேடுற வரைக்கும்." என்றான் மாயன்.

"அவங்களுடைய உடம்பு காட்டிக் குடுத்துடாது?" அதைக் கேட்டு அங்குள்ளவர்கள் சிரிக்க, அவர்களை புரியாமல் பார்த்தாள் நிலா.

"பூமியில் வாழ்ற மனிதர்கள் போல இங்க இறந்தவர்களோட உடல் உயிர்ப் பிரிந்தப் பிறகு அப்படியே இருக்காது."

"அப்போ?"

"ஒருப் பத்து பதினைந்து நிமிடத்துலேயே இருக்குற இடம் தெரியாம மறைஞ்சிடும்"

"என்ன?" என அதிர்ந்தவளிடம்,

"அதனால தான் இந்த கொம்பனுடைய அக்கிரமங்கள் அந்த உடலோடயே மறைஞ்சி போயிடுது." என்றான் மாயன்.

"சரி.. அது என்ன சனித் திருவிழா அது வர இன்னும் எத்தனை நாள் இருக்கு?"

"சனித் திருவிழா என்பது 75 ஆண்டுகளுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே வரும். கதிரவனைச் சுற்றும் சனி கிரகமானது 75 ஆண்டுகளுக்கு ஓர் முறை தான் மதியுலகிற்கும் கதிரவனிற்கும் நேராய் நேர் கோட்டில் நிற்கும். அப்படி நிற்கும் போது அந்த சனி கிரகமே கதிரவனாய் எங்களுக்குத் தோற்றம் தரும். அந்த நாளில் ஹௌரா எனப்படும் ஆறானது கதிரவனின் வெப்பம் பட்டு உருகி ஓடும். அப்பொழுது மக்கள் அவரவருக்கு சொந்தமானப் பொருள் எதைவேண்டாலும் அந்த ஆற்றில் கதிரவனுக்கு படையலாய் விட்டு தங்களது வேண்டுதலை முன்வைப்பார்கள். சனித்திருவிழா இன்னும் ஒரு நாளில் வரவிருக்கிறது."

"என்ன? அதுக்குள்ள நம்ப அங்கயிருக்குற மக்களை காப்பாத்தி ஆகணுமே. அதுக்கு மோதிரம் வேணும்." என்றவள் சிறிது நேர யோசனைக்குப் பிறகு,

"எனக்கென்னமோ சனித்திருவிழாவுக்கும் கொம்பன் அவன் அப்பாவுடைய இறப்பை இன்னும் வெளியில தெரியப்படுத்தாதற்கும் எதோ சம்பந்தம் இருக்குனு தோணுது."

"அது இரண்டுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?" என்றான் மாயன்.

"கண்டுபிடிக்கணும்.."

"சரி இப்போ நீ பணிப்பெண்கள் இருக்கும் அறைக்கு கிளம்பு. விடியும்போது நீ அங்க இல்லைனா எல்லாருக்கும் சந்தேகம் வந்துடும்." என்ற மாயனின் வார்த்தைக்கு சம்மதமாய் தலையசைத்தாள்.

தூங்கா இரவுக்குப் பின் அழகாய் விடிந்தது அந்த விடியல்.

"நோய்வாய்ப்பட்டிருந்த அரசரின் தந்தை சாமத்தில் உயிரிழந்தார். எனவே நாளை நடக்கவிருக்கும் சனித்திருவிழாவை மக்கள் கொண்டாட அனுமதியில்லை" என்னும் செய்தி மக்களனைவரிடமும் காட்டுத்தீப் போல் பரவியது.

நிலாவுக்குப் புரிந்துப் போனது. அவனது தந்தையின் இறப்புச் செய்தியை வெளியிட ஏற்பட்டத் தாமதத்திற்கானக் காரணம் விளங்கிப் போனது.

அவனது நோக்கமெல்லாம், நாளை நடக்கவிருக்கும் திருவிழா நடக்கக் கூடாது. ஒருவேளை அவனது தம்பியை காரணம் காட்டியதெல்லாம் வெறும் பொய் சாக்காகக் கூட இருக்கலாம் என்றுத் தோன்றியது அவளிற்கு. இல்லையென்றால் ஒரு வாரம் முன் அவன் தம்பிப் பேசியதை சம்பந்தமே இல்லாமல் நேற்று ஏன் சென்று அவன் தந்தையிடம் கேட்க வேண்டும்.

ஆனால் நாளை திருவிழா நடைப்பெறக் கூடாது என ஏன் இவன் நினைக்க வேண்டும்? இந்தக் கேள்வி மட்டும் அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
.
.

"அரணர் பதவியில் இருந்த தங்களின் தந்தை இறந்து விட்டார். இப்பொழுது அரணர் பதவியை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள் அரசே?"

"என் ஆருயிர் தமையன் ஏகளவன் இன்றே அரணர் பதவியில் அமரப் போகிறார் என மக்களுக்கும் அவனுக்கும் தெரிவித்து விடு."

"ஆனால்..." என்றவனை பாதியில் கத்தரித்தவன்,

"நீ கேட்க வருவது புரிகிறது. அவனின் கடைசி ஆசையை ஒரு அண்ணனாய் நிறைவேற்றுவது என் கடமை அல்லவா?" என்றான் அர்த்தம் பொதிந்த புன்னகையோடு.

"அப்படியே ஆகட்டும் அரசே." என்றவன் அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்.
.
.

"அரணர் பதவியா? எனக்கா? என்ன திடீரென்று?" எனக் கெக்கலித்தப் படி கேட்ட ஏகளவனிடம்,

"ஆம். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இது அரசரின் முடிவு." என்ற சீரணிடம் சரி நீ போ எனச் சைகையால் சொன்ன ஏகளவனின் எண்ணம் தரிக்கெட்டு ஓடியது.

'அரணர் பதவியை எனக்குத் தருகிறான் என்றால், திருந்தி விட்டானா என்ன?' என நினைத்தவன் பிறகு தன் தலையை சிலுப்பிக் கொண்டு, 'யார் இவனா திருந்தி விடப் போகிறான். விளக்கு அணையும் முன் பிரகாசமாய் எரியட்டும் என நினைத்தானோ என்னவோ..' என்று நினைத்தவனுக்கு அப்பொழுதே ஒன்று உரைத்தது.

'அவன் மீதான என் விரோதம் அவனுக்கு தெரிந்திருக்குமோ.. தெரிந்திருந்தால், கண்டிப்பாய் தந்தையின் இறப்புக்குப் பின்னால் அவன் தான் இறப்பான். அவனுக்கு எனது திட்டம் எதுவும் தெரியும் முன் அவனது கவனத்தைத் திசைத் திருப்ப வேண்டும். எப்படி.. எப்படி.. எப்படி..?' என அங்கும் இங்கும் நடந்தப் படி யோசித்தவனின் விரல்கள் அவனது நெற்றியைத்தடவ, அவனது இதழ்கள் தானாய் உச்சரித்தன நிலாவின் பெயரை.

"நிலா நிலா நிலா...!" எனக் கூறி பேய்ச் சிரிப்பு சிரித்தான் அந்த அறை முழுவதும் எதிரொலிக்கும் படி.
.
.

நேற்றிரவு சென்ற கோட்டையின் கீழிருந்த அதேப் பாதையில், சென்றுக்கொண்டிருந்தாள் நிலா. மாயனின் துணையில்லாமல். இம்முறை அவளின் உருவத்தையும் அவள் மறைக்கவில்லை.

அந்தக் கடைசிக் கதவைத் திறந்தவளுக்கு யாரோத் தன்னை நெருங்கி வரும் காலடிச் சத்தம் கேட்கவே, அந்தப் பாதையிலிருந்து வேகமாய் திரும்பியவள் ஓருருவத்தின் மேல் மோதி நின்றாள்.

"மாயன்.. இங்கேயுமா?"

"நான் ஒன்னும் உன்னைத் தேடி வரலை. நீதான் நானிருக்கும் இடத்திற்கு வந்துருக்க." என்றவனை புரியாமல் பார்த்தவள்,

"என்ன?" எனக் கண்களை உருட்டிக் கேட்க,

"ஏனென்றால் இவ்விடத்தின் சிறைக் காப்பாளர் நான்."

"அட இது எப்போல இருந்து?"

"நேற்றிலிருந்து. அது சரி.. இந்த நள்ளிரவு நேரத்தில் திருட்டுத் தனமாய் இங்கு வந்திருக்கிறாயே. அரசரின் அனுமதியை பெற்றிருக்கிறாயா?"

"இல்லைனு சொன்னா என்னப் பண்ணுவ?!"

தன் வாலை உருவி அவளது கழுத்தில் வைத்தவன், "சிறையில் அடைப்பேன்." என்றவனின் வார்த்தையிலிருந்த அழுத்தம் கண்களில் இல்லை. அந்த வாலைத் தன் ஆள்காட்டி விரலால் பிடித்து தள்ளியவளின் கண்ணசைப்பில் அது சாம்பலாய் மாறி காற்றில் கரைந்து விட, "முடிஞ்சா அடைச்சிப் பாரு. பர்ஸ்ட் நார்மலாப் பேசு, எனக்கு காமெடியா இருக்கு." என வாயைப் பொத்தி சிரிப்பை அடக்குவதுப் போல் அவனை நையாண்டி செய்தவள், அவனது தோலைப் பிடித்து தன் வழியிலிருந்து நகர்த்திவிட்டு அவனது துணையை எதிர்ப்பார்க்காமல்  நடக்க ஆரம்பித்தாள்.

"ஹே.. நிலா.. நிள்ளு.. இப்படி தனியா இந்த நேரத்துல இங்க வந்து இருப்பதற்கான அவசியம் என்ன?"

"ஒருத்தரைப் பார்க்க.." என்றாள் தன் உருவத்தை மறைத்து விட்டு அவனையும் மறையும் படி செய்கை செய்துவிட்டு.

"அந்த முனிவரையா?"

"ஆமா"

"ஆனா எதற்கு?"

"ஒருக் கேள்வி கேட்கணும்."

"அவர் தான் நேத்தே சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டாரே."

"பட் இருந்தாலும் சில டவுட்ஸ்.. அப்புறம் நேத்து அவர் சொன்னாரே உன் ஆள் மனசுல இருக்குற கேள்விக்கு அந்த மோதிரம் தான் பதில்னு.."

"ஆமா.."

"அது என்னனு கண்டுப்பிடிச்சிட்டேன்." என்றவளைப் பிடித்து தன் பக்கம் திருப்பியவன் அவளது கண்களைப் பார்த்து,

"உன் ஆள் மனசுல இருக்குற கேள்வி.. ஹும்ம்.." என்று யோசித்தவன்,

" 'கொம்பனுடைய அகங்காரத்துக்கும் கர்வத்துக்கும் என்ன காரணம்' இதானே..?" என்றான் கேள்வியாய்.

"எப்படி கரக்ட்டா சொன்ன? ஓஓஓ.. உனக்கு தான் மனதைப் படிக்கத் தெரியும்ல.." என்றவள், "சரி என் கேள்விக்கு பதில் அந்த மோதிரமா இருந்தா.. அந்த மோதிரத்தை அவனிடம் இருந்து எடுத்துட்டா அவன் அடங்கிப் போய்டுவான்ல.."

"அது சரி.. ஆனா அந்த மோதிரம் எந்த வகைல அவனுக்கு இவ்வளவு கான்பிடன்ஸ் தருது?" என்றப் படி அந்த முனிவர் இருக்கும் இடத்தை நெருங்கியவன்,

"இவ்வளவு நெருங்கி விட்ட தாங்கள்.. இன்னும் சற்று முயற்சித்தால் அதற்கான விடையையும் கண்டுக்கொள்ளலாமே.." என்றவரின் குரல் கேட்டு அவ்விடத்திலேயே நின்றான்.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro