நிலா- 35
"மா.. மாயன்.." என அவனது நெஞ்சில் புதைந்தவளின் கண்ணீர் அவனது உடையை நனைக்க, அவளின் தலை முடியைக் கோதியவன், "ஷ்ஷ்ஷ்.. நான் இங்க தான் இருக்கேன். இங்க தான் இருக்கேன். எதுவும் ஆகலை. எதுவுமே ஆகலை.. நான் வந்துட்டேன்ல. ஒன்னும் ஆக விட மாட்டேன்.." என்றவனது வார்த்தைகள் அவளது கேவளை இன்னும் அதிகரிக்க, அவளை அவனிடமிருந்து பிரிக்க முயற்சித்து தோற்றுப்போனவன், "என்னைப் பாரு.." என்று மெல்லியக் குரலில் கூறியவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் இதழ்களில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தன.
"என்னாச்சி?" எனக் கேட்டவனிடம்,
"கொ.. கொம்பன்.. அவ.. அவன்.. அப்பாவையே.. கொ.. கொன்னுட்டான்ன் மாயன்..." என்றவள் கேவளை அடக்க வாய் பொத்தி விம்மினாள். கொம்பன் அவன் தந்தையைக் கொல்லவே கவலைப்படவில்லை. பேதையவள் அவனின் தந்தையின் இறப்பையே தாங்க முடியாமல் கதறுகிறாள். இவள் எப்படி கொம்பனைக் கொல்லப் போகிறாள் என அவளை சமாதானம் செய்ய வழியின்றி நின்றான் மாயன்.
"நீ பார்த்தியா?" என்றவனிடம் தலையசைத்தவள், "நா.. நா பார்த்தேன்.. நான் பார்த்தேன்.. க.. கத்தியால அ.. அவர் தலைத் தனியா.." என்றுக் கூற முடியாமல் சிறுக் குழந்தைப் போல் அழுதவள், "அ.. அவன் முகமெல்லாம் இரத்தம் மாயன். ஒரே இரத்தம்.. அ...அவன் கொஞ்சம் கூட பாவமே பார்க்கலைத் தெரியுமா.. அவர்.. அவர் தலை மட்டும் என்னைப் பா..பார்த்து 'உன் கண் முன்னாடி தானே என்னைக் கொன்னான் நீ என்னை கா.. காப்பாத்தவே இல்லையே.. நீ..யெல்லாம் ஒ.. ஒரு ராஜ வாரிசானு' கேட்குற மாதிரி இருந்தது மாயன்.." என்று குழுங்கிக் குழுங்கி அழுதவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், "அவன் அரக்கன் நிலா.. உறவுகள்னா அவனுக்கு என்னன்னேத் தெரியாது. அவனுக்கு வேண்டியதெல்லாம் வெறும் பதவி, பந்தா.. இதோ இப்போ உன் கண்ல தெரியுது பாரு ஒரு பயம்.. அது.. அதுதான் அவனுக்கு வேண்டும். அவனை யாரும் ஒன்னும் பண்ண முடியாதுனு அவனுக்குள்ள ஒரு இது. அதை முதல்ல அழிக்கணும். எப்போ என்ன நடக்கும்னு அவன் பயந்து சாகணும்" என பற்களை நறநற வென்று கடித்தவனின் அழுத்தம் அவளின் உடலை கூசச்செய்தது. அந்த நொடி.. அவனது வார்த்தைகள் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்த அந்த நொடி முழுவதுமாய் முடியும் முன்,
"யார் நீ? இங்கு என்னச்செய்கிறாய்?"
என்றச் சத்தம் அவளை நிகழ்வுக்கு இழுத்துக்கொண்டு வர, சுற்றி முற்றி பார்த்தவளுக்கு மாயன் மாயமாய் காணாமல் போயிருந்தான்.
நெஞ்சை நிமிர்த்தி அகங்காரத்திற்கும் திமிரிர்கும் மறுப்பெயரான கொம்பன் நின்றிருந்தான். அவனதுப் பார்வையே,
'இங்க நான் மட்டும் தான்' என கர்வமாய் கூறுவதுப் போல் இருக்கு, சற்றும்முன் இரத்தத்தை மாரில் மூசியவனின் இரத்தம் படிந்த முகம் அவள் நினைவில் வர, அவள் உச்சி முதல் பாதம் வரை ஒரு நடுக்கம் ஏற்பட்டது. எப்படி இவனால் ஒருத் துளியும் பயமில்லாமல் தன்னை யாராலும் எதாலும் எதுவும் செய்ய முடியாது என்று கர்வம் பிடித்து அழியும் இவனுக்கு எதனால் இவ்வளவு நம்பிக்கை? என்ற கேள்வியும் அவளின் ஆழ்மனதில் எழுந்தது.
"இதோ இப்போ உன் கண்ல தெரியுது பாரு ஒரு பயம்.. அது.. அதுதான் அவனுக்கு வேண்டும்." என்ற மாயனின் வார்த்தைகள் அவளுள் ரிங்காரமிட, குனிந்தத் தன் தலையை நிமிர்த்தி அவனுக்கு சரிசமமாய் நின்றவளது பார்வை அவன் கண்களை ஊடுறுவ, அதில் துளி பயத்திற்குக் கூட இடமில்லாமல் இருந்தது. அதை அவன் உணர்ந்தானோ என்னவோ ஒரு சாதாரண பணிப்பெண் தனக்கு சரிசமமாய் நிற்பதைக் கண்டு ஒரு நொடி ஆடித்தான் போய்விட்டான் கொம்பன்.
"ஏய்.. எவ்வளவு அழுத்தம் இருந்தால் எனக்கு நேருக்கு நேராய் நிற்பாய்?!" எனக் கர்ஜித்தவனின் கரங்கள் நேராய் அவளது கழுத்தைப் பிடிக்க, அப்பொழுதும் அவளது விழிகள் தாளாமல் இருப்பதைக் கண்டு, அவனது கை இறுக்கத்தை அதிகரித்து அவளை சுவரோடு சுவராய் தள்ளியது.
"அரசே என்னக் காரியம் செய்கிறீர்கள்? அவளை விடுவியுங்கள் வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள் பாருங்கள்." என வந்த மசூராவின் குரல் பக்கம் தன் பார்வையைத் திருப்பியவன், அவளின் வார்த்தைகளைக் கேட்டு கெக்கலித்து, "யார் இவளா வலியில் துடிக்கிறாள்?" எனக் கூறியப்படி நிலாவின் மேல் தன் பார்வையை பதிக்க, அவளோ அவனது கைப்பிடிக்குள் மயங்கி விழுந்து விடாதக் குறையாய் பாவித்துக்கொண்டிருந்தாள். அதைக் கண்டு அவனது கரங்கள் தானாய் அவளை விடுவித்தன.
"ஒரு பணிப்பெண்ணிடம் தாங்கள் இத்தனைக் கடுமையாய் நடந்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது?" என சீரிய மசூராவிடம்,
"நான் கேட்ட கேள்விக்கு பதிலுறைக்காமல் எனக்கு நேருக்கு நேராய் அழுத்தமாய் நின்றிருந்த இவளை இதோடு விட்டதே பெரிய விஷயம்" என அவர் கூறி முடிக்கும் முன், "அய்யோ இல்லை அரசியே. நான் அரசர் கேட்ட கேள்விக்கு பதிலுரைத்தேன். நான் தங்களின் ஒப்பனையாளர் என்றும் தாங்கள் தான் உளர்ந்த துணிகளை என்னை எடுத்து வரச் சொன்னதாகவும் சொன்னேன். இருந்தும் அரசர் தான் எதுவும் அவர் காதில் விழாததுப் போல் நடந்துக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் நான் உண்மையாக அவர் முன் என் தலையைக் கூட நிமிர்த்தவில்லை. இதில் எங்கிருந்து நான் அவரை நேருக்கு நேராய் பார்ப்பது?" எனக் கூறி பழைய காலத்து நடிகைப் போல் விம்மி விம்மி அழுதவளை நம்ப முடியாத விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தான் கொம்பன்.
"அவளே பயந்த சுபாவம் கொண்டவள் இதுவரை என் முன் குரலை உயர்த்திக் கூட, பேசியதில்லை. அவள் மேல் ஏன் இப்படி பொய் பழி சுமத்துகிறீர்கள்? ஓஹோ.. எனக்கு புரிந்து விட்டது. அவளை நான் பணிக்கு அமர்த்தினேன் அல்லவா? அது தானே தங்களது இந்த செயலிற்கு காரணம். நான் சந்தோஷமாய் இருந்தாளே தங்களுக்கு ஆகாதல்லவா?" என அவள் ஒருப்புறம் அழத் தொடங்கிவிட, யாருக்கும் அடங்காத கொம்பன் தன் மனைவியின் அழுகைக்கு மட்டும் அடங்கிப் போய்விடுவான். அவன் ஒரு துளியாவது உண்மையாய் நேசம் வைத்தது அவன் மனைவி மேல் மட்டும் தான். காரணம் மசூராவை மணம் முடித்ததன் பின்னால் மட்டுமே அவனின் எந்த சதித்திட்டுமும் இல்லை. அவளை மனதால் விரும்பியே மணம் முடித்திருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த அன்பும் அக்கறையும் இன்றளவும் மசூராவிடமிருந்து அவனிற்கு கிடைத்ததில்லை என்றாலும் அவர் மேல் எப்பொழுதும் ஒரு சாப்ட் கார்னர் உண்டு அவனிற்கு.
பதில் எதுவும் பேசாமல் நிலாவை ஓர்ப் பார்வை பார்த்து விட்டு விருட்டென அவ்விடத்தை விட்டு சென்றான் அவன். அதில் ஆயிரம் வன்மம் இருந்து. அவன் சென்றதை உறுதிப்படுத்தியவுடன், மசூராவை இறுக்க அணைத்தவள், "வாரே வா.. வாட் எ நடிப்பு சித்தி.." எனக்கூற, "உன்னை விடவுமா? நீ பேசிய வசனத்தில் அவரே குழம்பியிருப்பார்" என்றவுடன், "நல்ல மகள் நல்ல சித்தி.. நடித்ததற்கு மாறி மாறி புகழ்ந்துக் கொள்ளுங்கள்." என அங்கு வந்து சேர்ந்தான் மஹீந்தன்.
"உன்னை புகழலைனு உனக்குப் பொறாமை. வேண்டுமென்றால் கேட்டு வாங்கிக்கோ." என்றாள் நிலா.
"நியாயப்படி நீ எனக்கு நன்றி தான் கூற வேண்டும். ஏனென்றால் நானல்லவா உன் சித்தியிற்கு தகவலனுப்பி உன்னைக் காப்பாற்றியது?"
"அப்போ அதைப் பார்த்தும் நீ வந்து என்னை காப்பத்தலை.. காப்பாத்த வேற ஆளை கூப்டிருக்க.. இதில் உனக்கு நன்றி வேற வேண்டுமா?"
"தவறு செய்வதை விட தவறுக்கு துணைப் போவது தான் மிகப் பெரிய தவறு. அதுப் போல பிறருக்கு தானாய் உதவுவதை விட பிறரை உதவத் தூண்டி அவருக்கு நன்மையை கொடையாய் அளிப்பது எவ்வளவுப் பெரிய நன்மை என்று உனக்குத் தெரியுமா?" எனத் தனது செயலுக்கு நியாயம் பேசியவனின் முதல் வாக்கியம் நிலாவிற்கு தனக்காகக் கூறியதுப் போலவே இருக்க, அவளது மனம் அப்பொழுதே மாயனை நினைவுப் படுத்தியது. அவளது விழிகள் மாயனைத் தேடின. அவன் எப்படி வந்தானென்றும் தெரியவில்லை. எப்படி மறைந்தான் என்றும் தெரியவில்லை அவளிற்கு. அவன் உண்மையாகவே வந்தானா இல்லை அவளது கற்பனையா? என அவளால் பிரித்துணர முடியவில்லை என்றாலும், அவனது ஸ்பரிசத்தை வைத்து அவன் வந்ததற்கான சாட்சியைக் கூறியது அவள் மனம்.
இரவு படுக்கையிலும் அதையே யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவளின் மூக்கை யாரோ பிடித்து ஆட்டுவதுப் போல் இருக்க, லேசாய் கண்களை திறந்துப் பார்த்தவளின் முன்பு யாரும் இல்லாமல் இருக்க, கண்களை மூடிப்போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.
இப்பொழுது அவளது போர்வையை யாரோ இழுப்பதுப் போல் இருக்க, தூக்கக் கலக்கத்தில் அதை இழுத்து பிடித்துக்கொண்டவளுக்கு மீண்டும் மீண்டும் அதேத் தொடர, அப்பொழுதே நிகழ்பவை அவளுக்கு நிஜமெனப் புரிந்து சடாரென்று எழுந்தமர்ந்தவளின் முன்பு யாருமில்லாமல் வெறுமையாய் இருந்தது.
அவள் பார்த்தப் பேய்ப் படங்கள் எல்லாம் அவள் நினைவலைகளை எட்டிப்பார்த்து விட்டுப் போகவே, அவளின் பக்கத்தில் படுத்திருந்த ஐராவை அவள் எழுப்பப்போகும் வேலையில் "பூம்ம்" என்ற சத்தம் அவள் காதைக் கிழிக்க, பயத்தில் ஆஆ வென கத்தியவளின் வாயை மூடியது ஒருக் கரம்.
"ஷ்ஷ்ஷ்ஷ் நான் தான்.. நான் தான்.." என்றவனின் கரத்தை எடுத்தவள்,
"மாயன்.. நீ.. நீ இங்க என்ன பண்ற?" என்று மெல்லியக் குரலில் அவனை முறைத்தப் படி வினவியவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,
"தெரியலியா? நான் என்ன பண்றென்னு?" என்றவனது கரத்தை தட்டிவிட்டாள்.
"அது தெரியுது. உன்னை இங்க யாராவது பார்த்துட்டா.. பெரிய பிரச்சினை ஆகிடும்."
"ஆகட்டும்.. எனக்கொன்னும் பயமில்லை.."
"ஓஓ அவ்ளோ தைரியம் ஆகிடுச்சா?" என்றவள், "ஆமா.." என்றவனிடம் ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டப்படி, "ப்ளீஸ் கிளம்பு.. எனக்காக.." என்றவளின் கரங்கள் மட்டும் அவனை விடவில்லை.
"சரி கிளம்புறேன்.. டாட்டா.." என்றவனது இந்தப் பதிலை எதிர்ப்பார்க்காதவள் பதில் மொழி பேசும் முன்பாக காற்றோடு காற்றாய் கரைந்திருந்தான் அவன்.
"மாயன் மாயன்.." எனச் சுற்றும்முற்றும் பார்த்தப்படி அரற்றியவளை யாரோ பெயர் சொல்லி உழுக்குவதுப் போல் இருக்க, பயந்து எழுந்தவளுக்கு அப்பொழுதே அனைத்தும் தன் கனவென உரைத்தது.
"நிலா.. நிலா எழுந்திரி.." என்றக் குரலுக்கு விழிகளைத் திறந்தவள், அவளின் முன் மாயனைக் கண்டதும் இதுவும் கனவென நினைத்து போர்வைக்குள் சுருண்டுக் கொண்டாள்.
"நிலா சீக்கிரம் எழுந்திரி.." என அவளை இழுத்து அமர வைத்தான் மாயன்.
"இப்படி தான் வருவ.. பேசுவ.. மறைஞ்சுடுவ.. நீ தான் என்னை எப்போ பார்த்தாலும் ஏமாத்திரனு பார்த்தா.. உன் கனவுக் கூட என்னை ஏமாத்துது.." என்று விட்டுப் படுக்கப் போனவளைத் தடுத்தவன் அவளின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரித்தப்படி,
"நான் ஒன்னும் கனவில்லை. நிஜமாத்தான் வந்துருக்கேன். நீ இப்போ எழுந்துக்கலைனா நான் போய்டுவேன்." என மிரட்டும் தோணியில் கூறியவனை கண்கள் விரியப் பார்த்தவள், அவனை கிள்ளிப் பார்க்க, அவன் வலியில் கத்தியவுடன், "ஹாஆஆன் நிஜமாத்தான் வந்துருக்க.." என்க,
"அதுக்கு நீ உன்னை கிள்ளிப் பார்த்து தானே செக் பண்ணணும். என்னை ஏன்டி கிள்ளிப் பாக்குற."
"அதெல்லாம் அப்படி தான். நீ இப்போ எதுக்கு இங்க வந்த?"
"சொல்றேன் ஆனா இப்போ இல்லை. முதல்ல என்கூட வா."
"என்னது இப்போவா நோ சான்ஸ். ஆளை விடு எனக்குத் தூக்கம் வருது."
"நிலா விளையாடாத.. ரொம்ப முக்கியமான விஷயம்." என்றவனது வார்த்தைக்கு அவள் செவி சாய்க்காமல் இருக்கவே,
"விஷயத்தை சொன்னா வருவியா?"
"ம்ம்"
"கொம்பன் பத்தின விஷயம்.. பலப் பேர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்." என்றவனது முகத்திலிருந்த இறுக்கத்தைக் கண்டு நிலைமையை உணர்ந்தவள்,
"என்ன?" என அதிர்ந்தப் படி பெரிதாய் அவளது விழிகளை விரித்தாள்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro