நிலா -3
மருத்துவமனையில் இருந்து வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது. சிரிய பிராக்ச்சர் தான் என்றாலும் சரியாக இரண்டு வாரங்களாவது தேவை. அதுவரை, தாரா தான் நிலாவை கவனித்துக் கொள்ள வேண்டும். இருவருக்கும் பிகாம் பைனல் இயர் பரிட்சை கடந்த வாரம் தான் முடிவடைந்துள்ளது என்பதால் வசதியாகி போனது. தாராவின் வீட்டில் கட்டுபாடுகள் அதிகம் என்பதால் நிலாவின் வீட்டில் இரவு தங்குவதற்கு அனுமதி இல்லை. மணி ஏழை தொட்டதும் கிளம்பி விடுவாள்.
இன்றும் அதுப் போலவே மணி ஏழை தொட்டதும் பறந்து விட்டாள்.
தன் அறையில் படுத்தபடி, விட்டத்தை வெரித்து கொண்டிருந்தவளுக்கு, டீ.வி ஓடும் சத்தம் கேட்க, எழுந்துப் போய் பார்த்தாள். என்றும் இல்லாத அதிசயமாய் ஹரிஷ் தான் டீ.வி பார்த்துக் கொண்டு இருந்தான். கிட்டே சென்று பார்த்து அவன் தானா என்று உறுதிச் செய்து கொண்டவள், மெல்ல போய் சோபாவில் அமர்ந்தாள். அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
"ஹும்ஹூம்" தொண்டையை செருமி பார்த்தாள். அவன் அசையவில்லை.
"உஹ்ஹு..உஹ்ஹு..." மெளிதாய் இரும்பி பார்த்தாள். பயனில்லை.
மீண்டும் நான்கு முறை இரும்பினாள். இம்முறை எழுந்தவன்,நேராக கிச்சணுக்குள் சென்றான். இவளோ 'என்னையா கண்டுக்க மாட்டிங்குற' என கருவியவள், ரிமோட்டை எடுத்து தலையனை கீழ் ஒழித்து வைத்து கொண்டு அமர்ந்தபடியே 'அவன் வருகிறானா?!' என எட்டி பார்க்க, அவன் கையில் வாட்டர் கியானுடன் வருவதை கண்டதும் மீண்டும் பழையபடி அமர்ந்துக் கொண்டாள்.
வந்தவன் அவள் முன் இருக்கும் மேசையில் அந்த தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு அமர்ந்துக் கொண்டான். அவள் அதை கவனித்தாளும் கவனிக்காதது போல் டீ.வி யில் ஓடிய விளம்பரத்தை சீரியசாக பார்க்க, சேனலை மாற்ற ரிமோட்டை தேடியவனை அவள் ஓரக்கண்ணால் பார்த்து மர்ம சிரிப்பு சிரித்தாள். சட்டென திரும்பி அவள் அருகில் சென்று அவளை மிக கூர்மையாக நோக்கியவன் சடாரென்று அவள் தலையனை கீழ் ஒழித்து வைத்திருந்த ரிமோட்டை எடுத்தான்.
"உங்களுக்கு எப்படி தெரியும்?" என அவனை
ஆச்சரியமாக பார்த்தவளிடம், ஒரு கேளி சிரிப்பை வீசிவிட்டு,
"அதுக் கெள்ளாம் இது இருக்கனும்" என மூலையை சுட்டி காட்டினான்.
"வாட் யூ மீன்?!, அப்ப எனக்கு மூலை இல்லைனு இன் டேரக்ட் ஆஹ் சொல்ல வர்ரிங்களா?"
"இன் டேரக்ட்டா இல்லை. டேரக்ட் ஆஹ் தான் சொல்றேன்."
அவன் சொன்னவுடன் நிலாவிற்கு சுருக்கென்று கோபம் ஏற வேகமாக எழுந்து தன் அறைக் கதைவை சாத்தும் சத்தம் ஹரிஷிற்கே கேட்டது.
அவளது குழந்தை தனமான கோபம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.
அறையில் நுழைந்தவள் பொரிய ஆரம்பித்தாள் 'எவ்வளவு தைரியம்... எனக்கு மூலை இல்லையா?' என புலம்பி கொண்டே நித்திரையில் ஆழ்ந்தாள்.
★★★★
காலை பொழுது அழகாய் விடிய சூரியன் தன் கதிரால் அவளை அரவனைத்து விடியலை உணர்த்தியது.
எழுந்தவள் சோம்பல் முறித்து, பல் விளக்கி, முகம் கழுவி காபியுடன் பால்கனி சென்றாள். வாசலில் தன் தந்தையின் கார் நிற்பதை கண்டவுடன், கண்களை கசக்கி உறுதி படுத்தி கொண்டவளின் தொண்டையில் காபி இறங்க மறுத்தது.
அதிர்ச்சி இருக்காதா பின்னே?, அடுத்த வாரம் தான் வருவதாக சொன்னவர், இப்பொழுது வந்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக தனக்கு நேர்ந்த விபத்தை பற்றி யாராலோ தெரிந்திருக்க வேண்டும். இவள் மட்டும் அவர் கண்ணில் பட்டு விட்டாள் அவ்வளவு தான்.
'எப்படியும் பேஸ் பண்ணி தானே ஆகனும் அவரா வர்றதுக்குள்ள நீயா போய் பாத்துடு. அதான் உனக்கு சேப்' என மனசாட்சி அவளை எச்சரித்தது.
'போகாத... போனா மாட்டிக்குவ' என்று மூளை வேறு அவளை குழப்பியது.
'போலாமா? வேணாமா?' என ஓர் பட்டிமன்றத்தையே நடத்தி பின் போலாம் என்ற முடிவோடு மெல்ல அவரது அறைக்கு நடையை கட்டினாள்.
உள்ளே நுழைந்தவள் உரக்கத்தில்
இருக்கும் தன் தந்தையை கண்டதும் பெருமூச்சொன்றை விட்டு விட்டு
அருகில் சென்று தன் தந்தையின்
கேசத்தை வருடியவள், பின் எழுந்து
செல்ல முற்பட, விடியல் நுழைய வழி இல்லாத அந்த இருட்டறையில் மினு மினுப்பாக ஒரு பெட்டி அவளது கண்ணில் பட்டது.
தானாக அவளது கால்கள் அதை நோக்கி நடக்கத் தொடங்கின. அவளது கைகள் அதை ஏந்த, அதன் உள்ளே இருக்கும் பொருளின் பொழிவு அவளது கண்ணில் பிரதிபலித்தது. உள்ளே இருப்பதை பார்க்க அவளையும் அறியாமல் ஆர்வம் பிறந்தது. தான் என்ன செய்கிறோம் என்று கூட அறியாமல் மெல்ல அதை தன் ஒற்றை கையால் திரக்க தொடங்கினால்.
உள்ளே ஒரு புத்தகம். அதன் வெளி புறம் மிக மிக நுணுக்கமான வேலை பாடுகளால் அமைக்கப்பட்டிருந்தது. அதை விட புத்தகத்தின் மேல் பிரகாசமாய் ஒரு சங்கிலி அவளது கவனத்தை ஈர்த்தது. அதை கையில் எடுத்தவளின் கண்கள் அதன் ஒளியால் கூசிப்போனது. அந்த சங்கிலியில் கண்ணாடியாலான முக்கோண பெட்டகம் ஒன்று தொங்கி கொண்டு இருந்தது. அதன் உள்ளே நீல நிறத்தில் திரவம் போல் ஒன்று மிளிர்ந்தது. அதையே இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தால் கண்ணை பறித்துவிடுவது போல் பிராகாசமாய் இருந்தது. அதன் பொழிவு அவளது மூலையை மங்க செய்தது.
தன்னை சுற்றி இருப்பது எதையும் அவள் உணரவில்லை. பித்து பிடித்தவள் போல் அதையே பார்த்து கொண்டு இருந்தாள்.
தன் தந்தை தூக்கத்தில் உசும்பும் சத்தம் அவளை சுய நினைவிற்கு கொண்டு வர, தான் என்ன செய்கிறோம் என உணர்ந்தவள் அந்த சங்கிலியை தன் கழுத்தில் வேகமாய் மாட்டிக்கொண்டு அந்த பெட்டியை எடுத்த படி வெளியேறினாள்.
தனதறைக்குள் நுழைந்தவள் தன் கழுத்தில் மாட்டிய சங்கிலியை எடுக்க முற்பட அது கழுத்தில் இல்லை. பெட்டிக்குள் ஆராய்ந்தால். இல்லை. விழுந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் தான் வந்த வழியில் தேடி பார்த்தாள். அங்கேயும் இல்லை. அறையையே தலை கீழாக்கி தேடி பார்த்தாள், எங்கும் காணவில்லை.
இரண்டு நிமிடத்திற்கு முன்னால் தன்னால் மாட்டப் பட்ட சங்கிலி இப்போழுது இல்லையென்றால் எங்கே சென்றிருக்க கூடும்? ஒரு வேளை மறைந்திருக்குமோ?
இதென்ன மாயமா மந்திரமா மறைந்து போக?
கடந்த ஒரு வாரமாய் தன்னை சுற்றி நடப்பதெல்லாம் அப்படி தானே இருக்கின்றது? அப்படி என்றால் கண்டிப்பாக மறைந்து தான் போயிருக்க வேண்டும்.
இது சாத்தியமா என்ன? இதை யாரிடம் சொல்வேன் நான்? பைத்தியக்காரி என்பார்களே.
யோசனையில் புறன்டவளுக்கு சட்டென நியாபகத்தில் வந்தது இனியனின் முகம் தான். சமீபத்தில் கிடைத்த இணையத்தல நண்பன். அறிவுரையில் அவனை வெல்ல யாரும் இல்லை.
நடந்ததை பற்றி கூற அவன் தான் சரியான ஆள்.
நான் சொல்வதை நம்புவானா? இல்லை தாராவை போல் கதை விடுகிறேன் என்பானா? இல்லை கற்பனை,கனவு.. என்று ஒரே வார்த்தையில் பெயர் சூட்டிவிடுவானா? இல்லை இல்லை அவனிடம் பேசினால், கண்டிப்பாக எதாவது தெளிவு கிடைக்கும்.
தன் அலைபேசியை வேகமாய் தேடிக்கொண்டு பால்கனி சென்றாள்.
அவனது எண்ணிற்கு அழைத்தாள். இரண்டு மணி தான் அடித்தது. அதற்குள் அழைப்பை ஏற்றுவிட்டான்.
"ஹலோ" என இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல, அதில் இரண்டே வித்தியாசம் தான். அவன் குறளில் நிதானம் இருந்தது. இவளிடம் அது இல்லை.
"ஹலோ மேடம், ஏன் இவ்வளவு அர்ஜன்ட்? என்ன ப்ராப்ளம் சொல்லு"
"நான் ப்ராப்ளத்தோட தான் கால் பண்ணேனு உனக்கு எப்படி தெரியும்?"
"ஐ னோவ் எவ்ரித்திங்.. இத கண்டுபிடிக்கிறதுலாம் எனக்கு ஜுஜுபீ பா"
"இந்த கருமத்தை எல்லாம் கேக்க வேண்டி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா... நான் உனக்கு காலே பண்ணிருக்க மாட்டேன்."
"ஈஈஈஈ.. சரி சரி என்ன சங்கதி மொதல்ல அதைச் சொல்லு"
"நேர்ல தான் சொல்லணும். மீட் பண்ணலாமா?"
"எங்க மீட் பண்ணலாம்?"
"உங்க வீட்ல?"
"என் வீட்லயா!!?.." என சற்றே அலறினான்.
"உன் வீட்லதான். ஏன் இப்படி பயப்படுர?"
"பயமா அப்படி எல்லாம் இல்லையே.. வீட்ல எதுக்கு?, நம்ப வேணும்னா லாஸ்ட் டைம் மீட் பண்ண கேப்பேல மீட் பண்ணலாம்" குரலில் இருந்த தடுமாற்றத்தை அவள் உணர்ந்தாலும், ஏன் எதற்கு என்று ஆராய்ச்சி செய்யும் மனநிலையில் அவள் இல்லை.
★●★●★●★
கேபேயில்..
அவளுக்கு முன்பாகவே கேபேயை அடைந்திருந்தவன், அவளுக்காக காத்திருந்தான். அவன் வந்து சேர்ந்த நேரத்திற்கு சரியாய் ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் வந்தாள்.
"எப்படி இருக்க?" என அவள் விசாரணையில் ஆரம்பிக்க, அவன் மனமோ அவள் சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையிலேயே லயித்திருந்தது.
"என்ன பத்தி ஏன் கேக்குற? சொல்ல வந்தத முதல்ல சொல்லு" என்றான்.
"உன்ன பத்தி கேட்டா மட்டும் சொல்லவா போற? எப்படி என்ன சமாளிக்கலாம்க்னு முன்னாடியே யோசிச்சு வச்சிற்ப" என அவள் கூறியதற்கு முறைப்பை பரிசாகத் தந்தான்.
"நான் ஒன்னும் விளையாடல இனியன். நீ யாரு என்னனு எல்லா உண்மைகளையும் தெரிஞ்சிகிட்டு தான் இங்க வந்திருக்கேன்." என அவள் கூறி முடித்து, அவன் முகத்தில் இருந்த கலவரத்தை கண்டவள்,
"ஹே.. கூல் யா.. ஐ அம் ஜஸ்ட் கிட்டிங்"
"இந்த கலவரத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது?" என தன் பின்னங்கழுத்தை தேய்த்த படி சமாளித்தான்.
"சரி.. எதுக்கு வந்தேனோ அதை முதல்ல சொல்றேன். எங்க அப்பா ரூம்ல ஒரு பெட்டிய பார்த்தேனா" என்பதிலிருந்து ஆரம்பித்து, "அந்த செயின காணோம் பா.. இல்லை இல்லை மறைஞ்சு போச்சு.." என முடித்தாள்.
"அந்த செயின் பார்க்க எப்படி இருந்தது?" அவன் சற்றே ஆர்வமாய் கேட்டான்.
"அதுல ஒரு ட்ரையாங்கல் ஷேப்ல கண்ணாடி டாலர் ஒன்னு இருந்துச்சு. பாக்க ரொம்ப ரொம்ப ப்ரைட்டா இருந்துச்சு. ரூம்ல இருந்து வரும்போது நான் தான் கழுத்துல மாட்டுனேன். என் ரூம்க்கு வந்து பார்த்தா செயின் இல்லை. எல்லா இடத்துலையும் தேடிப் பார்த்துட்டேன். கிடைக்கலை. கண்டிப்பா தொலைய சான்சில்ல."
"அப்படினா மறைஞ்சுடுச்சுனு சொல்ல வர்றியா?"
"கண்டிப்பா. எனக்கு அப்படி தான் தோனுது"
"அந்த பாக்ஸ்ல வேற என்ன இருந்துச்சு?"
"ஒரு புக். பாக்க பழைய காலத்து புக் மாதிரி இருந்துச்சு."
"அதை எடுத்துட்டு வந்துற்கியா?"
"இல்லையே"
அவனிடம் எந்த பதிலும் இல்லை. சிறிது நேரம் கழித்து, "நான் சொல்றத நீ நம்புறியா?" என அவள் கேட்க
"தெரியல.. பட் அந்த பாக்ஸ் உனக்கு எங்க இருந்து கிடைச்சது?"
"எங்க அப்பா ரூமல"
"அப்போ நீ உங்க அப்பா கிட்ட இதைப் பத்தி கேளு. கண்டிப்பா எதாவது தெரிய வரும்"
"சரி நான் கேட்டு பாக்குறேன்."
"எதாவது தெரிய வந்தா உடனே என்கிட்ட சொல்லு"
"சரி" என்றவள் அவனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டாள்.
★●★●★●★
வீடு வந்து சேர்ந்தவள் தன் அறையின்
மேசையில் அந்த பெட்டியை கண்டாள். இப்பொழுது அது ஒளிரவில்லை. காரணம், அது ஒளிர்வதற்கு காரணமாய் இருந்த பொருள் இப்போது அதனுள் இல்லையே.
அதை திறந்து உள்ளே இருந்த புத்தகத்தை எடுத்தவள், அதை திறந்து பார்த்தாள். அதன் காகிதங்கள் மங்கி போய் இருந்தன. அதன் பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் இருந்தன. புத்தகத்தின் பக்கங்களை புரட்டி பார்த்தவளுக்கு ஏமாற்றமாய் ஒன்றும் கிடைக்கவில்லை.
அவளுக்கு தலையே சுற்றி விடுவது போல் இருந்தது. தன் கையால் மாட்டிய சங்கிலி மறைந்து போனது. கிடைத்த புத்தகத்தில் ஒன்றுமே கிடைக்கவில்லை. இது என்ன புரியாத புதிர்?
தன் தந்தையிடம் இதை பற்றி பேசியே
ஆக வேண்டும் என்ற முடிவோடு தன் தந்தையின் அறைக்குச் சென்றாள்.
அறையில் அவரைக் காணவில்லை. குழப்பத்துடன் வெளியே வந்தவளை
வீட்டில் வேலை செய்யும் ருத்ரா கடந்து
செல்ல அவரிடம் தன் தந்தையை பற்றி விசாரித்தாள்.
ஒரு அவசர வேலையாக சென்றிருக்கிறார் உங்களிடம் சொல்ல சொன்னார், என்று பதில் வர, தன்னை பார்க்காமல் அவர் சென்றது இன்னும் அவளிற்கு குழப்பத்தை தந்தது.
"உனக்கு அடிப்பட்டது அவருக்கு தெரியாது" என பின்னே இருந்து வந்த ஹரிஷின் குரல் அவளை யோசனையில் இருந்து மீட்டது.
"அப்போ நெஸ்ட் வீக் வர்றதா சொன்னவரு ஏன் இப்போவே வந்தாரு?" என இவள் கேள்வியாய் நோக்க,
"வேலை முடிஞ்சது வந்துட்டாரு" என தோல்களை குலுக்கி சொன்னவன் பதிலை
எதிர்பார்க்காமல் இவளை கடந்து சென்றான்.
★●★●★●★
நேரம் இரவை தொட்டது. அவர் வந்த பாடில்லை. கால் செய்தால் எடுக்கவில்லை. காத்திருக்க வேண்டாம் என ஹரிஷ் மூலம் தகவல் தந்தார்.
டி.வி பார்த்துக் கொண்டு இருந்தவள், தன்னை மீறி தூங்கி தூங்கி விழுந்தாள்.
இனி காத்திருந்து பயனில்லை என உணர்ந்தவள், டீ.வியை அனைத்து விட்டு தன் படுக்கையில் விழுந்தாள். விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்ததால் அறையே இருளை தத்தெடுத்திருந்தது.
மேசை மேல் ஏதோ ஒளி படர்வதைப் போல் உணர்ந்தவள், என்ன வென்றுப் பார்க்க காற்றில் அந்த புத்தகம் தானாக திறக்க பட்டு இருந்தது. அதன் தாளில் புள்ளி புள்ளியாய் மின் மினி பூச்சி ஒளிர்வதை போல் ஒளிர்ந்தது. மெல்ல மெல்ல அந்த புள்ளிகள் சேர தொடங்கி எழுத்துக்களாய் மாறின.
இருட்டிலும் படிக்க கூடிய அளவில் அந்த எழுத்துக்கள் மிளிர்ந்தன. அதை படித்தவுடன் தூங்கிப் போனாள். அதிலென்ன இருந்தது?
புரியாத புதிர்கள் புரிய உடனே துயில் கொள்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro