Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -22

பூமியில் தனக்கென நிலையான ஓரிடத்தையும், உருவத்தையும் உருவாக்க வேண்டும் என நினைத்தவன் நிலாவின் தந்தையான அஷோக்கைப் பற்றி ஆராய, அவரின் நெருங்கிய நண்பரான ராமச்சந்திரன் மற்றும் இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்துப்போன அவரின் புதல்வனான ஹரிஷையும் பற்றி அவனிற்கு தெரிய வந்தது.

நிலாவின் வீட்டிற்குள் நுழையவும் அவளிருக்கும் இடத்தில் இருந்தே, அவளைக் கண்காணிக்கவும் ஹரிஷின் இடம் அவனிற்கு தேவைப்பட்டது.

ஹரிஷின் வீட்டிற்குள் ஹரிஷாய் மாறி அவன் வீட்டிற்குள் நுழைந்தான். ராமச்சந்திரனிற்கும் அஷோக்கிற்கும் இடையில் இருக்கும் நட்பை பயன்படுத்தி அஷோக்கின் வீட்டிற்குள்ளும் நுழைந்து, அஷோக் வேலை செய்யும் கம்பெனியிலேயே ஒரு வேலையில் அமர்ந்தான்.

அச்சு அசலாய் மிளிராவின் சாயலிலேயே இருக்கும் நிலாவின் மேல் அவனை அறியாமல் அவனிற்கு ஈர்ப்பு ஏற்படவே அவளிடம் இருந்து மட்டும் சற்றுத் தள்ளியே இருந்தான். முதலில் அவளின் அழகில் விழுந்தவன், அவள் குணத்திலும் விழ ஆரம்பித்தான். இதோ இன்று காதலிலும் விழுந்து விட்டான்.

நிலாவிற்கு ஏற்படவிருந்த விபத்து முதல், அனைத்திலும் நிலாவைக் காப்பாற்றியது அவனே. அனைத்தும் சரியாகத்தான் நடந்துக்கொண்டிருந்தது. அந்த இரவு வரும் வரை.

அன்று அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கவே, தன் இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டு, அதை ருத்ரா அம்மாவிற்கு தெரியப் படுத்தவதற்காக வீட்டிற்குப் போன் செய்தான் ஹரிஷின் உருவில் இருந்த மாயன்.

சரியாய் அவரே போனை எடுக்க, மாயன் சொன்னச் செய்தியைக் கேட்டு, "சாப்பிட்டிங்களா தம்பி.. அப்போ சரி.. நானும் இன்னைக்கு இராத்திரிக்கு சமைக்கலை. ஏன்னு தெரியல அஷோக் ஐயா, நான் பார்த்துக்குறேன் நீங்க போங்கனு சொல்லிட்டாங்க. நீங்க சாப்பிட்டிங்கனு நானே அவர் கிட்டச் சொல்லிடுறேன். நான் போனை வைக்கட்டுமா?!" என அவர் கூறியதற்கு வெறும் "ம்ம்" கொட்டியவனுக்கு, அரை மணி நேரத்திற்கு முன்பு, 9:30 மணி பிளைட்டில் அஷோக் பெங்களூர் கிளம்பிய விஷயம் நினைவில் தட்டியது.

அவர் கிளம்பும் போது இவனிற்கு போன் செய்து நிலா போன் நாட் ரீச்சபலாய் இருப்பதாகவும் தான் நாளை தான் வருவேன் என்ற விஷயத்தை அவளிற்கு தெரியப்படுத்திவிடுமாறும் கூறியவர், அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு செல்ல வாய்ப்பே இல்லை. அதுவும் காரணமே இல்லாமல் ருத்ராம்மாவைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமென்ன? எனக் குழம்பியவன் அவர் நம்பருக்கு கால் செய்ய, அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

முகத்தில் கலவரம் படர, ஏதோ தவறாய் இருக்கிறது என அவன் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.

அவன் நினைத்தது சரியாய் இருந்தது. அவன் அவர்களைத் தேடி கிச்சனிற்குள்  நுழையப் போக கையில் கத்தியோடு நிலாவின் பின் நின்றிருந்தவரின் பின்னங்கழுத்தில், ஒரு சின்னம் இருந்தது. மதியுலகில் இருந்து வேறு கிரகத்திற்கு பயணிப்பவர்களின் கழுத்தில் அது இருக்கும். மாயன் கழுத்திலும் தான். அச்சின்னமே அது அஷோக்கின் உருவில் இருக்கும் இனியனின் ஆள் தான் என உணர்ந்தவன், தன் கையை அங்கிருந்த கத்திகள் வைக்கும் ஸ்டாண்ட் நோக்கி உயர்த்த, அதிலிருந்து ஒரு கத்தி அவன் கையில் வந்து காந்தம் போல் ஒட்டிக் கொண்டது.

அடுத்த நொடி அவரை நோக்கி அதை வீசினான்.

அதன் பிறகு நடந்த அனைத்தையும் நாம் அறிவோம்.

பொருங்கள்.. அனைத்தையுமா?

இனியன்..? அவனிற்கு என்ன ஆனது..?

"போதும் போதும் நிறுத்து.. இன்னும் எவ்ளோ நேரம்..!?" என்று திடீரென குறுக்கிட்டது நிலாவின் குரல், (இவ வேற😒)

"என்னப் போதும்..?!" என்றான் மாயன் பல நினைவுகளில் இருந்து மீண்டு திடுக்கிட்டப் படி,

"நடக்குறதுப் போதும்.. இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்படியே நடக்குறது.. நம்ப எங்கத் தான் போறோம்..?!" என்றாள் சிணுங்கியப் படி,

"கொஞ்சம் அமைதியா வா. கிட்ட வந்துட்டோம்.."

"நீ என்னை எதுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு, எனக்குத் தெரியும்..!" என்றவளை அவன் அதிர்ச்சியாய் பார்க்க,

"எங்க?" என்றான்.

"எனக்கு நாளைக்கு பர்த்டேல, அதனால சர்ப்ரைஸ் தானே தறப் போற. கரக்ட்டா..!?" என சிறுப்பிள்ளைப் போல் எதிர்ப்பார்ப் போடு அவள் கேட்க, தன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையோடு தான் விளையாடப் போவதை எண்ணி அவன் கண்கள் சட்டென கலங்கி விட்டது.

கல்லென இருகிப் போன இதயத்தையும் இலக வைத்தது ஏனடி?
காலத்தின் விளையாட்டை தடுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல்,
தடுமாறி நிற்கிறேன் நானடி..

தன்னால் எதுவும் செய்ய முடியாதா என்ற கோபம் நரம்புகள் புடைக்க, அவன் தன் கை விரல்களை மடக்குவதில் தெரிந்தது.

"அவளைக் காப்பாற்ற உன் தமையனையேக் கொன்று விட்டாய். இப்பொழுது உன் தகப்பனையும் கொல்லப் போகிறாயா..?!" என நேற்றிரவுப் பேசிய கொம்பனின் குரல் அவன் காதுகளில் ரீங்காரமிட்டது.

அதற்கு "என்ன உளறுகிறீர்கள்..?" என வந்த மாயனின் குரலில் உறுதி இல்லை.

"போதும் உன் நாடகம். அவளிருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து இனியனை அனுப்பியதே நான் தான். அவன் இறந்து விட்டதையும் எப்படி இறந்துப் போனான் என்பதையும் அறியாமல் இருப்பேனா..?!
ஏன் அவனைக் கொன்றதும் நீ தான் என்பதையும் நன்கறிவேனடா நான்." என அதிரும் படிக் கூறினான்.
.
.
அன்றிரவு தன் கையால் நிலாவின் நெஞ்சில் தான் குத்தியது அவன் மனக் கண்ணில் வந்து நின்றது.

அதன் பிறகு அவளுக்குள் மறைந்திருந்த திரவத்தைக் கொண்டச் சங்கிலி ஒளியெழுப்பவே இனியனிற்கு, மாயன் மேல் எழுந்த சந்தேகம் நூறு சதவீதம் ஊர்ஜீதமாக,
"துரோகி.. என்னை முட்டாள் ஆக்க நினைக்கிறாயா? இத்தனை நாள் அவளைக் காப்பாற்றியது நீ தான். அதற்கு காரணம், அவள் உயிர் உன் கையால் போக வேண்டும் என்பதல்ல. நம் தந்தைக்கு குடுத்த வாக்கை நீ இன்னும் மறக்கவில்லை. நம் தந்தையின் இறப்பிற்கு‌ காரணமானவளை விட, அவருக்கு நீ குடுத்த வாக்கே முக்கியமாய் உனக்குப் படுகிறதா..?!!" எனக் கூறியவன் நிலாவை நோக்கி, தன் முழு பலத்தை கதிராய் மாற்றி செலுத்தப் போக, அதற்குள் வந்த மாயனின் தாக்குதலில் இரண்டடி பின்னே பறந்து விழுந்தான்.

"முட்டாள் நானல்ல.. நீ தான். அவர் உயிர் போனாலும், இவளிற்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதென்று அவர் நினைத்தார் என்றால், இவளின் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை யோசிக்க மறந்து விட்டாயா நீ?"

"யோசிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..!" என்றான், அடிக் குரலில்.

"நீ செல்லும் வழியும், நீ நம்பும் ஆளும் சரியானதல்ல. கொம்பன் தன் காரியம் ஆக உன்னை பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். உன் கோபத்தில் நியாயமில்லை. கொஞ்சம் யோசி.." என அவனருகில் மண்டியிட்டு அழுத்தமாய்க் கூறினான் மாயன்.

"நீ எனக்கடுத்து பிறந்தவன். என் செயலைக் குறைக் கூறாதே.. நம் தந்தை இவளைக் காப்பாற்றியதால் தான் தன் உயிரை விட்டார். நீயும் இன்று அதே தவறைத் தான் செய்துக்கொண்டிருக்கிறாய். நான் சொல்வதைக் கேள் அவள் கதையை இன்றோடு முடித்துவிடு.." என்றான்.

"நான் சொல்வதைப் புரிந்துக் கொள்ளும் பக்குவத்தை நீ தாண்டி விட்டாய். எக்காரணத்திற்க்கொண்டும் நம் தந்தையின் கடைசி ஆசையையும், நான் அவருக்கு கொடுத்த வாக்கையும் நிறைவேற்றாமல் விட மாட்டேன்..!"

"அப்பொழுது என் முடிவையும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். அதற்கு குறுக்கே தடையாய் எவர் வந்தாலும் அவர் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேன்.. அது நீயாக இருந்தாலும் சரி.." எனக் கூறி மாயனின் தோலில் அழுத்தம் குடுத்து எழுந்து நின்றவன், மாயன் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவன் மார்பில் எகிறி மிதித்து விட்டு, மீண்டும் தன் முழு பலத்தைக் கொண்டு தன் உள்ளங்கைகளுக்குள் காற்றாலான பந்தொன்றை செய்தவனின், வலப்புறக்கழுத்தில் ஈட்டியொன்று சொருகியது.

அதை சொருகச் செய்ததும் மாயன் தான். அன்று சூழ்நிலை தன் கையை மீறிப் போனதே, அவனின் அச்செயலுக்கான காரணம். அதற்காக நித்தம் நித்தம் உள்ளுக்குள் குற்ற உணர்ச்சியால் தவித்துக்கொண்டிருந்தான்.

யோசனையில் இருந்த மாயனை நிலாவின் குரல் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
பாதைகள் குறுகுவதையும் கரடு முரடாய் மாறுவதையும் உணர்ந்து, "எங்கே தான் போறோம்..?" என்று வினவினாள் அவள்.

"கோட்டைக்கு" என்றான்.

"என்ன..?" என அதிர்ந்தவள்,

"கோட்டைக்கா அங்க எதுக்கு போறோம்?, போனதடவை இந்த வழியா நம்பப் போகலையே.." என்றாள்.

"இதுக் குறுக்கு வழி" என்றான்.

அவள் தொடர்வாள்..
_______________________

மாயன் அவன் அண்ணனைக் கொன்னது சரியா? தவறா?

அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அவன்‌ இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பிர்கள்?

மாயன் நிலாவை எதுற்கு கோட்டைக்கு அழைத்துக்கொண்டு போகிறான்?

விமர்சனங்கள் எதுவாயினும் வரவேற்கப்படுகின்றன மக்களே. உங்களின்‌ கருத்துகளை பதிவு செய்யுங்கள்.😊

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro