Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -15

ஐராவுடன் நடந்த உரையாடலிலேயே அவள் மனம் லயித்துக் கிடந்தது. அவள் உடல் மட்டுமே அங்கு இருக்க, அவள் மனமோ யோசனையின் பிடியில் சிக்குண்டிருந்தது.
அச்சமயம் ஒரு பெரிய மணிச் சத்தம். கனவிலிருந்து விழிப்பதுப் போல் ஒரு நொடி அரண்டு விழித்தாள். எதார்த்தம் உரைத்தது.
யாரோ அவள் தலையில் தட்டி தான் எங்கு இருக்கிறோம் என உணர்த்தியது போல் இருந்தது அவளிற்கு.

ஐரா அவளது கையைப் பிடித்துக்கொண்டு ஒரு பெரிய மேஜையின் அருகில் இழுத்துச் சென்றாள். அதின் மேல் பெரிய பெரிய சட்டிகள் நான்கும், சட்டிகளுக்கு பக்கத்தில் இலைகளாலான தட்டுகளும் அடுக்கப்பட்டிருந்தது.

நிலாவும் ஐராவும் ஒரு சட்டியின் அருகில் நின்றுக்கொள்ள, இன்னும் சில பணிப்பெண்கள், மீதி மூன்று சட்டியின் அருகில் நின்றுக்கொண்டனர்.

கூட்டமாய் கைகளில் சங்கிலியோடு, நாலாய்ப் பிரிந்து வரிசையாய் உணவிற்காக வர ஆரம்பித்த மக்களை நிலா அப்போதே கவனித்தாள். அவர்களின் மெலிந்தத் தேகமும், பொலிவிழந்த முகமும் அணிந்திருந்த ஆடையை வைத்தும் சிறைவாசிகள் என புரிந்துக்கொண்டாள்.
கண்களில் குறும்போடு இருக்க வேண்டிய குழந்தைகள் கண்களில் பசியோடும், காயங்களோடும் காணப்பட்டனர்.
ஏனோ அவர்களை கண்டவுடன் அவளின் மனம் பாரமாய் மாற, அவர்களின் மேல் அவளை அறியாமல் இறக்கம் ஏற்பட்டது.
இந்த வயதில் அப்படி என்ன தவறு செய்திறுப்பார்கள் என அவளின் இதயம் குமுறியது.

மீதி பணிப்பெண்கள் அளந்து உணவைக் கொடுக்க, நிலா மட்டும் வாறி வழங்கிக் கொண்டு இருந்தாள். அதனால் நிலாவிடமே அதிகப் பேர் வரிசையில் நின்றனர்.

நேரம் ஆக ஆக வரிசைக் குறைந்துக் கொண்டே வந்தது. கடைசியில் இருந்த ஒரு சிலரும் உணவைப் பெற்றுக் கொண்டு சென்ற வேலையில், ஐரா நிலாவை அழைத்தாள்.

"இப்ப எங்க?!" என நிலாக் கேட்க,

"உன்னைக் கொண்டுப் போய் பத்திரமா நான் சேர்க்கணும் இல்லையா?" எனக் கூறிவிட்டு யாரும் பார்க்காத வண்ணம் அவளை அழைத்துச் சென்றாள்.

மீண்டும் அதே மரத்தடியை அவர்கள் அடைய, அந்த துண்டைக் கையில் கட்டிக்
கொண்டவளிடம் ஐரா விடைப்பெற்றுக்
கொண்டாள்.

சிறிது நேரம் கழித்தும் மாயனையும் பிஜிலியையும் காணவில்லை.

பொருத்து பொருத்துப் பார்த்தவள் இதுவரை நடந்தவற்றையும் தான் பார்த்தவற்றையும் அசைப் போட்டுக்கொண்டே அந்த மரத்தை சுற்றிச் சுற்றி வந்தாள். இங்கு வாழும் மக்களின் முகத்தில் பெரிதாய் சந்தோஷமில்லை. விழாவில் இருந்தவர்கள் கூட ஏதோ கட்டாயத்தில் இருந்ததுப் போல் தான் இருந்தது. அவர்கன் கண்களில் பயமே அதிகமாய் அவளிற்கு தென்பட்டது. பிறகு அந்த சிறை வாசிகள்.. அனைத்தையும் விடக் கொடுமை.

'அவர்கள் அப்படி என்ன தவறு செய்திருப்பார்கள்?' மீண்டும் மீண்டும் அவள் மனம் அதேக் கேள்வியில் வந்து நின்றது.

அப்போது, எதேச்சையாக பக்கத்தில் போடப்பட்டிருந்த கடை ஒன்றில், ஒரு பெண்மணி பேசுவது அவள் செவிகளில் விழ,
காதை இன்னும் தீட்டிக்கொண்டு, கேட்பதிற்கு வசதியாய் நெருங்கி நின்றாள்.

"இத மட்டும் உன் பொன்ஜாதிக்கு குடுத்தினா, எல்லா உண்மையையும் கறந்துறலாம். எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் அவங்க வாயாலயே சொல்ல வைக்கிற சக்தி இதுக்கு உண்டு. எதுலையாவது கலந்து மட்டும் கொடுத்துடு. கொஞ்ச நேரம் கழிச்சுப் பாரு என்ன நடக்குதுனு. அப்போ புரியும் நான் சொல்றது பொய்யா நிஜமானு.." என வந்த அப்பெண்மணியின் குரலின் திசையை நோக்கினாள். அங்கே ஏதோ திரவம் அடைக்கப்பட்ட கண்ணாடி புட்டிக்கள் வருசையாக அடுக்கப்பட்டிருக்க, அந்த பெண்மணியிடம் இருந்து ஒரு புட்டியை வாங்கிப்போனார் ஒரு நபர்.

இவளின் இல்லாத மூலையில், ஒரு யோசனைத் தோன்ற, மெல்ல அந்தக் கடையை நோக்கி நடையைக் கட்டினாள்.
அந்த பெண்மணியோ, அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் தீவிரமாக கதைத்துக் கொண்டிருந்தார். தான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம் என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக்கொண்டவள் கைக்குள் அடங்கி கொள்ளும் வகையில் இருந்த அந்த சிறிய புட்டியை தன் உள்ளங்கைக்குள் திணித்துக் கொண்டாள். மீண்டும் தன்னைச் சுற்றி நோட்டமிட்டவள், மரத்தடிக்குச் செல்லவும், மாயனும் பிஜலியும் வரவும் சரியாய் இருந்தது.

"நிலா" என மாயன் மெல்லியக் குரலில் அழைக்கவும், பிஜிலியின் தலையில் ஒரு கொட்டு கொட்டினாள்.

"இங்க தான் இருக்கா" என தலையைத் தேய்த்துக் கொண்டே கூறிய பிஜிலியை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் மாயன்.

"அவ கையை பிடிச்சிக்கோ" என மாயன் கூற,

"நான் ஒன்னும் குழந்தை இல்லை. தொலைந்து போய்ட மாட்டேன்" வெடுக்கென நிலாவின் குரல் மட்டும் வந்தது.

"ஆனா பிஜிலி குழந்தைல, அவன் தொலைந்திடுவான்."

"ஆமால.. அதுவும் சரி தான்" என பிஜிலியின் கையைப் பிடித்தவள், அவனை வேண்டுமென்றே தன் இழுப்பிற்கு இழுத்துக் கொண்டுச் செல்ல, பாவமாக பார்த்த பிஜிலியிடம், உதட்டை பிதுக்கினான் மாயன்.

ஒரு ஆர்வத்தில் வந்ததால், வந்த தூரத்தை விட, போகும் பாதை நீண்டுக் கொண்டே செல்வதைப் போல் உணர்ந்தாள். கால்கள் தளர்ந்து ஓய்வுக்காக மன்றாடியது.

களைப்பை மறக்க பிஜிலியுடன் தொண தொண வென்றுக் கதை அளந்துக்
கொண்டும், அவனைச் சீண்டிக் கொண்டும் நடந்தவளைக் கண்ட மாயனிற்கு ஏனோ அவனை அறியாமல் மனதில் ஒரு வித நிறைவு ஏற்பட்டது.

வரும்போது மாயன் நுழைந்த அதே குடில் வரவும், நடையை நிறுத்தியவன் அவள் கையிலிருந்த கட்டை கழட்டுமாறு ஆணையிட, மறுப்பேதும் பேசாமல் அதைத் கழட்டி அவன் கையில் வைத்தாள். இப்போது அந்த கல் முன்பிருந்ததை விட கொஞ்சம் கரைந்து சிறியதாய் காட்சியளித்தது.

அவன் சொல்லும் முன்னே அந்த குடிலுக்குள் சென்று பழைய உடையோடு வந்தவள் மறக்காமல் அந்த புட்டியை பத்திரமாக வைத்துக்கொண்டு,

"கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாமே.. ப்ளீஸ்" என்று குழந்தைப் போல் கெஞ்ச, அவனோ கண்டுக்கொள்ளாமல் முன்னேறி நடந்தான்.

"ஹரி.." என நிறுத்தியவள், தன்னை மானகீசமாக தலையில் அடித்துக்கொண்டு "மாயன் ப்ளீஸ். கால் ரொம்ப வலிக்குது." என அவன் வேகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் இரண்டடி பின்னே நடந்தபடி கூற,

மாயனோ "பார்த்தியா?" என தீடிரெனக் கேட்கவும், எதைப் பற்றி பேசுகிறான் என அவளுக்கு புரிந்துக்கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டன.

"யா.. யார?" என அவள் மெளிதான குரலில் கேட்க,

"அந்த" எனக் கூற வந்தவனை "சிறைவாசிகளையா" எனக்கேட்டு நிறுத்தினாள்.

"ஹம்ம்" கொட்டினான்

"எனக்கு புரியலை" என்று தன் கண்களை இரு கையால் அழுந்த தேய்த்து எடுத்தாள்.

"என்ன புரியலை?", என தன் பார்வையைப் பாதையின் மேலிருந்து அகற்றி அவள் மேல் பதித்தான் அவன்.

"அவங்க எதுக்கு கைது செய்யப் பட்டாங்க? என்னத் தப்பு பண்ணாங்க? இது எதுவும் எனக்குத் தெரியாது. அன்ட் அப்கோர்ஸ் அவங்களுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் அவங்க எந்த தப்பும் பண்ணியிருக்கமாட்டாங்கனு ஏன் எனக்கு உறுதியா தோணுது? என்னால முடியாதுனு தெரிஞ்சும் ஏன் அவங்களை அங்க இருந்து எப்படியாவது மீட்கனும்னு தோனுது?" எனத் தட்டுத் தடுமாறி கூறினாள்.

"ஏன் உன்னால முடியாது?"

"வாட் யூ மீன்?"

"நீ இங்க எதுக்கு வந்துற்கனு உனக்குத் தெரியுமா?"

அவனை முறைத்தவள், "தெரியாது" என்றாள்.

"நீ நினைக்கிறது எல்லாமே தப்பு. அவங்களை மீட்க உன்னால மட்டும் தான் முடியும். இன் பேக்ட் இங்க நடக்குற அநியாயத்தைச் சரி செய்யுறதற்காக தான் நீ இங்க இருக்க. இது தான் உன் கடமையும் கூட. அன்ட் அவங்களுக்கும் உனக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு" என்றவனை பார்த்து அவள் புரியாமல் விழித்தபடி

"என்னை பைத்தியம் ஆக்கிடலாம்னு முடிவு பண்ணிட்டியா?" என தன் கைகளை ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டுத் தன் விழிகளை விரித்து அவள் கேட்டவுடன், எரிச்சலடைந்தவன்,

"பதில் சொன்னாலும் திட்டுறே. பதில் சொல்லலனாலும் திட்டுறே. நான் என்ன தான் செய்ய?"

"எனக்கு புரியுற மாதிரி சொல்லு"

"அதனால தான் நான் எதையும் சொல்றதே இல்லை" என கூறிவிட்டு முன்னேறி நடக்கத்தொடங்கினான்.

"மாயன்.. நான் முட்டாள்னு நீ நினைக்கிறியா?" என அவள் சிடுசிடுக்க,

"இது உனக்கே தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயம் நிலா. நீ கேட்ட கேள்விக்கு இப்போ நானும் பதில் சொன்னேன். ஆனா உன்னால அதை புரிஞ்சிக்க முடிஞ்சிதா? இல்லை புரிஞ்சிக்க முயற்சி பண்ணியா?.. பர்ஸ்ட் லிஸன். உன் எல்லா கேள்விக்கான பதிலும் உன் கண்ணு முன்னாடி தான் இருக்கு. ஆனா நீ.. அதைப் பார்க்காம கேள்வியை மட்டுமே பிடிச்சிட்டு இருக்க. இதுல தப்பு, உன் மேல இல்லை. உன்னை சுத்தி நடக்குற விஷயம் மேல தான். அது தான் உன்னை யோசிக்க விடாம தடுக்குது. முதல்ல ஒரு விஷயத்துல இருந்து இன்னொரு விஷயத்துக்கு தாவுறத நிறுத்து. அதுதான் நீ செய்ற மிகப் பெரிய முட்டாள்தனம்." என மிகப் பெரிய சொற்பொழிவையே ஆற்றி விட்டு, சாதாரணமாகத் தன்னைக் கடந்து சென்றவனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் நிலா.

எத்தனை உண்மை அவன் பேசியதில்? நீ இதுதான் என யாரோ தன்னை கண்ணாடி முன் வைத்து சுட்டிக்காட்டியதுப் போல் இருந்தது. உள்ளுக்குள் தெளிவு பிறந்தாலும், தன் கடைசி முட்டாள்தனமான செயலாக அந்த புட்டி விஷயத்தை மட்டும் கைவிட அவளிற்கு மனமில்லை.

நடக்க ஆரம்பித்தாள்.

குடிலை அடைந்ததும் அனைவரும் வெளியே தீயேற்றி, குளிர் காய, உள்ளே சமைத்துக்கொண்டிருந்த ஈலாவிற்கு உதவுகிறேன் என்றப் பெயரில் தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருந்தாள் நிலா.

அதிகப்படியான குளிரால், காய்ச்சல் வந்ததுப் போல் உணர்ந்தாள். அவள் அடுத்தடுத்து தும்பிய அடுக்கு தும்பலில், ஈலா கேட்டே விட்டாள்.

"ஒன்னும் இல்லை.. லைட்டா கோல்ட்" என கூறியவள் மீண்டும் தும்பினாள்.

"அட நீ ஒன்னும் செய்ய வேணாம். போய் ஓய்வெடு. நான் பார்த்துக்குறேன்."

"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. ப்ளீஸ் ஹெல்ப் பண்றேனே?" என குழந்தைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறிய நிலாவை, ஈலாவால் மறுக்க முடியவில்லை.

களிப்போல் இருக்கும் உணவை இலையில் வைத்துக்கொண்டு எழுந்த ஈலாவிடம், "நான் கொண்டுப் போறேன்" என வாங்கியவள், வாசலை அடைந்ததும் ஒரு ஓரமாய் யாரும் பார்க்காத வண்ணம் ஒதுங்கி, அதில் அந்த புட்டியில் உள்ள திரவத்தை ஊற்றினாள்.

'எவ்வளவு ஊத்தனும்னு வேற தெரியலையே. இப்படி முழுசா ஊத்திட்டோம்..' என எண்ணியவளின் முகத்தில் சிறு கலவரம் குடிக்கொள்ள, 'ஒரு வேலை செத்து கித்து போய்ட்டானா, என்ன பண்றது?!.. அதுவும் நல்லது தான் நமக்குத் தொல்லை ஒளிஞ்சது..' என ஒரு புறம் மனம் நினைத்தாளும் 'ஐய்யோ அவன் செத்துட்டா அப்புறம் உண்மைய யார் கிட்ட இருந்து டி வாங்குவ' என தன்னையே திட்டியும்கொண்டது.

பல முக பாவனைகளோடு யோசித்துக் கொண்டே அவர்களை நெருங்கியவளை, அனைவரும் சிரிப்பை அடக்கியபடி பார்க்க,

"யோசனை எல்லாம் பலம்மா இருக்கு. யார போட்டுத் தள்ள திட்டம் தீட்டுற?" என பிஜிலிக் கூறியவுடன் தன் சுயம் திரும்பியவளின் தொண்டைக் குழி ஒரு முறை ஏறி இறங்க 'உண்மையாவே அவன் செத்துட்டா?!!' என அவள் நெஞ்சம் கேள்வி எழுப்ப, அதற்குள் மாயன் அவள் கையிலிருந்த இலையை பறித்து சாப்பிடவே ஆரம்பித்துருந்தான். திறுதிறுவென்று முழித்துக் கொண்டு நின்றவளை சுசியா தன் அருகில் அமர வைத்துக்கொண்டாள்.

மாயனிடம் எதாவது மாற்றம் ஏற்படுகிறதா, என அவளின் கண்கள் அவனையே சுற்றி வந்தன. சுசியாவிடம் பேச்சுக்குடுத்தாலும், அவள் எண்ணமெல்லாம் மாயன் மேலே.

அனைவரும் சாப்பிட்டு முடித்து அவர் அவர் குடிலுக்கு செல்ல, ஈலா, மாசா, நிலா.. மூவரும் ஓர் குடிலில். மாயன் நன்றாக இருப்பது நிலாவிற்கு திருப்தி அளித்தாலும், அவளால் தூங்க முடியவில்லை. அந்த திரவம் எப்போது வேலை செய்யும் எனக் காத்துக் கொண்டிருந்தாள்.

நேரம் நல்லிரவை தொட்டதும் மெல்ல எழுந்தவள், அனைவரும் உறங்குவதை உறுதி செய்துக்கொண்டு, ஓரமாய் இருந்த சிம்னி விளக்கை எடுத்துக்கொண்டு, மாயனின் குடிலை நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

குளிர் அவளை ஆட்டிப்படைக்க ஒவ்வொரு அடியையும் மிக சிரமமாய் எடுத்து வைத்தாள்.
நிமிடத்திற்கு ஆறுத் தும்பல் போட்டுக் கொண்டும், இரும்பிக்கொண்டும் நடந்தாள்.

'அந்த திரவம் எப்படியாவது வேலை செய்யணும்' என வேண்டிய படித் தன் நடையின் வேகத்தைக் கூட்டினாள். இரவு நேரத்தில் தனியாய் தெரு முனைக்குச் செல்லக் கூட துணைத் தேடுபவள், இன்று இந்தக் கொட்டும் பணியில் வெறும் விளக்கு வெளிச்சத்தின் துணையோடு செல்வது எட்டாவது உலக அதிசயமே.

ஒருவழியாய் அவனது குடிலை அடைந்தவள், அவன் போற்றி இருந்த போர்வையை அகற்றி அவனை உழுக்கினாள்.

தூக்க களக்கத்தில் எழுந்து, தன்னைக் கண்டு சிலையென மாறியவனின் கண் முன் அவள் சொடக்கிட்டவுடன், சற்று பதறியவன் "இ.. இந்த நேரத்துல.. இங்க என்ன பண்ற?" என்று வினவ,

"மந்திரம்?"

"என்ன மந்திரம்?.. என்ன உளறுற?"

"பூமிக்கு போற மந்திரம்(ஹச்).. உ.. (ஹச்) உனக்கு ம.. மட்டும் தானே தெரியும்? (ஹச்)" என தும்பளுக்கு நடுவில் வந்த அவளின் குரலும் குளிரில் நடுங்க,

"அதுக்கு என்ன?!"

"எனக்குச் சொல்ல மாட்டியா?"

"கண்டிப்பா மாட்டேன்"

'வேலை செய்யல' என அவள் முனுமுனுத்தது அவன் காதிற்கு எட்டும் முன்னே, காற்றில் கரைந்து விட,

"என்னாச்சி உனக்கு?!. உனக்கென பைத்தியமா?. இந்த நேரத்துல இங்க வந்துற்க?"

அந்த பெண்மணியின் வார்த்தைகளில் தான் ஏமாந்து விட்ட விரக்தியும் இவனின் இந்தக் கூற்றும் அவளை ஆழமாய் பாதிக்கவே, "ஆமாஆ.. பைத்தியம் தான். என் அப்பாவை கொன்ன உன்னோட வந்தேன் பாரு, எனக்கு பைத்தியம் தான்.. இப்பவும் நீ எனக்கு நல்லது தான் செய்றனு நம்பிட்டு இருக்கேன் பாரு, எனக்கு பைத்தியம் தான்.. என் அப்பா உயிரோட இருக்குறதா நீ சொன்னதை நம்பி எல்லாத்துக்கும் தலையாடிட்டு இருக்கேன் பாரு, நான் பைத்தியம் தான்.." என கோபத்தில் ஆரம்பித்து, விசும்பலில் முடித்தவளை, இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் அவன்.

"ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் நிலா.." என அவன் சொன்னதும், கண்களை அழுந்த மூடித் திரந்து அவனை ஒர் முரை முரைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"சரி ஓகே பைன்.. தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சுடு" என அவன் கூறியதும் பெருமூச்சொணன்றை வெளியிட்டவள்,

"உனக்கு எப்படி இங்கிலிஷ் தெரியுது?" எனக் கேட்க, அவனோ அவளை நம்ப முடியாமல் பார்த்தான்.

"சீரியஸ்லி?!.. இப்போ தான் கோபமா கத்துன. இப்போ சம்பந்தமே இல்லாம ஏதோ கேக்குற. இதெல்லாம் உன்னால தான் முடியும்."

"ஆன்சர் ப்ளீஸ்!"

"பூமியில சங்கத் தமிழா பேச முடியும்?.. அதுவும் உன் அப்பா வேலை செய்ற கம்பெனில வேலை செஞ்சிகிட்டு இங்கிலிஷ் தெரியாம எப்படி?"

"இருந்தும் அப்படி பட்டவரைப் போய் எப்படி உன்னால.." என அவள் முடிக்கும் முன்னே, அவள் சொல்ல வருவதை ஊகித்தவன்,

"இங்க பாரு. அவர் ஒன்னும் இறக்கலை."

"ப்ளீஸ் மாயன். என்னை கன்ட்ரோல் பண்ணனும்னு இந்த மாதிரி false ஹோப் குடுக்காத." என இருமல்களுக்கு நடுவில் கடினமாய் கூறியவளை, செய்வதரியாது பார்த்தவன் "ஏன் இப்படி இரும்புற?" எனக் கேட்க,

"அக்கறை இருக்குற மாதிரி நடிக்கணும்னு அவசியமில்லை" எனக் கூறி மீண்டும் இரும்ப, 'லூசு' என முணுமுணுத்தவாறே அவளது நெற்றியில் கை வைத்தவன் பதறி கையை எடுத்தான்.

"உனக்கென்ன பைத்.." என்றவனுக்கு சிறிது நேரத்திற்கு முன், அவள் ஆடிய ருத்ர தாண்டவம் நினைவில் வர பாதியில் நிறுத்தியவன் தன்னை சமன் படுத்திக்கொண்டு, "லேசா பீவர் இருக்கு. இந்த நேரத்துல யாராவது இங்க வருவாங்களா?" என அவன் கூற, எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"இந்த கொட்டுற பணில இங்க வந்தா பீவர் வராம என்ன பண்ணும்" என சலித்தும்கொண்டான்.

"அதான் அன்னிக்கு ஏதெதோ மேஜிக் பண்ணியே.. அந்த மாதிரி என் பீவர சரி பண்ணு" என்க

"மேஜிக் பண்ணி பீவர் எல்லாம் சரி பண்ண முடியாது. அன்டு இது ஒன்னும் பூமி இல்லை இங்க மருந்து மாத்திரை எல்லாம் கிடையாது."

"அப்போ நான் பீவர் ஓட சாகணுமா?! இன்னும் அஞ்சு நாள்ல என் பர்த்டே தெரியுமா! அதுவரைக்குமாவது நான் உயிரோட இருக்கணும். கடவுளே என்னை சாகவிட்டுடாத. நான் வாழ வேண்டிய பொண்ணு." என பிதற்றியவளை, ஆழ்ந்த பார்வை பார்த்தவன்,

"என் உயிர் இருக்குற வரைக்கும், உன் மேல சின்ன கீறல் கூட விழ விடமாட்டேன்." என்க, இருவரின் கண்களும் சிலமணித் துளிகளுக்கு உரைந்தது.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro