நிலா -13
மூளை விழித்துக் கொண்டாலும் அவளது விழிகள் விழிக்க மறுத்தன.
அதனுடன் போராடிக் கடைசியில் கடினமாய் இமைகளை திறந்தவள், தான் இருக்கும் இடத்தை உணரந்தவுடன் வேகமாய் எழுந்தமர்ந்தாள்.
திறந்த வாசலின் வழியே நுழைந்த குளிர்க் காற்று, கம்பிளியால் போர்த்தப் பட்ட அவளின் தேகத்தை சிளிர்க்க வைத்தது.
காலையில் அவள் கண்ட அதே குடில் தான் என்றாலும் உள்ளே, அவளைத் தவிர வேறு யாருமில்லை. சுற்றி முற்றி பார்த்த அவளது விழிகளின் நோக்கம், 'தப்பித்து விட வேண்டும்' என்பதைத் தவிர வேறாய் இருக்கவும் வாய்ப்பில்லை.
தன் கால்களை மெதுவாய் தரையில் ஊன்றி எழுந்தவள், சுவற்றில் மாற்றி இருந்த குடைப் போல் ஒன்றை பாதுகாப்பிற்காக எடுத்துக் கொண்டு வாசலை நெருங்கினாள். அவளுக்கும் கதவிற்கும் இடையில் இரண்டடி தூரமே இருக்கும் வேலையில் திடிரென, ஒருவன் உள்ளே நுழைய, சற்றும் யோசிக்காமல் கண்களை இருக்க மூடி கையில் வைத்திருந்ததை அடிக்க ஓங்கியவளுக்கு, ஒரு சிறுவனின் அலறல் சத்தம் கேட்க, மூடிய கண்களை திறந்து பார்த்தவள், தன் கண் முன் நிற்பவனைக் கண்டு கையில் வைத்திருந்ததை நழுவ விட்டாள்.
"சின்ச்சான் சார் நீங்களா?!! அப்போ நீங்க வெறும் கார்ட்டூன் இல்லையா?! நான் உங்களோட ரொம்ப பெரிய பேன் சார். உங்களை இங்க பார்ப்பேனு நான் நினைச்சுக் கூட பார்க்கலை. எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலையே. ஹையோ நான் என்ன பண்ணுவேன்! என்கிட்ட செல்பி எடுக்கக் கூட இப்போ போன் இல்லையே." என தான் இருக்கும் நிலையை மறந்து, வாயெல்லாம் பல்லாய் பிதற்றிக்கொண்டு இருந்தவளைக் கண்ட பிஜிலி, 'அடிச்சதுல நட்டு கிட்டு கலன்டுடுச்சா என்ன?.. என்ன என்னமோ உளறுறா' என நினைத்துக் கொண்டே அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தவனிற்கு, பின் தன்னை யாரோ ஒருவன் என நினைத்துக்கொண்டு அவள் பேசியது நினைவிற்கு வர, தான் யார் மாதிரி உள்ளோம் என தொரிந்துக்கொள்ளும் ஆவலில் "யாரது?" எனக் கேட்டான் குழப்பமாய்.
"எது?" என இவளும் பதிலுக்கு குழப்பமாய் கேட்க,
"அதான் இப்ப எதோ பேர் சொன்னியே அதைத் தான் கேக்குறேன்" என பிஜிலிக் கூற,
"சின்ச்சானா?" என அவள் கேட்க, "ஆமாம்" என்றான்.
"நீங்க தான் அது" என்றாள்.
"என் பேரு ஒன்னும் சின்ச்சான் இல்லை. நான் பிஜிலி." என உலகிலேயே அவனிற்கு மட்டும் தான் பெயர் இருப்பது போல, கெத்தாய் கூறியவனை மேலிருந்து கீழ் ஓர் பார்வை பார்த்தவள்,
"அட பொய் சொல்லாதிங்க. உங்க எபிசோட், மூவிஸ் எல்லாமே ஒன்னு விடாம பார்த்திருக்கேன். நீங்க எப்படி இருப்பிங்கனு கூடையா எனக்குத் தெரியாது.."
"எனக்கு அவன் யாருனு கூடத் தெரியாது. ஏன்மா நீ வேற"
"அய்யோ வாய்ல போடு வாய்ல போடு. என் தலைவனை அவன் இவன்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்.."
"அவரு இவருனு சொன்னா நல்ல கோவம் வருமா.."
"ஏதோ என் தலைவன் மாதிரியே இருக்கியேனு அதோட விட்டேன். இதுவே வேற யாராவது என் தலைவனை மரியாதை இல்லாம பேசிருந்தா..." என இழுத்தவளை அவன் கொஞ்சம் டெரராய் பார்க்க, அடுத்த நொடியே "இதே டயலாக்ல 'ஏதோ என் தலைவனை மாதிரியே இருக்கியேனு' சொன்னதை தூக்கிட்டு 'ஏதோ நீங்கறதால அதோட விட்டே'னு மாத்தி சொல்லிட்டு எஸ்கேப் ஆகியிருப்பேன்" எனக் கூறி சிரித்தாள்.
"பூமியில வாழ்ரவங்க எல்லாருமே இப்படி தானா?, இல்லை நீ மட்டுமா?" என அவளின் மொக்கை ஜோக்கிற்கு அவளே சிரிப்பதைக் கண்டவன் அவளிடம் கேட்க,
"ஏன், நீ பூமிக்கு வந்ததே இல்லையா?" எனக் கேட்டாள் அவள்.
"என்னால வர முடியாது. எங்க அண்ணன் கூட்டிட்டு போனா மட்டும் தான் உண்டு."
"ஏன் அப்படி?"
"மந்திரம் வேணும்.."
"என்ன மந்திரம்?"
"எனக்குத் தெரியாது. மாயன் அண்ணாக்கும் பெரிய அண்ணனுக்கும், மட்டும் தான் அதுத் தெரியும்."
"பெரிய அண்ணனா?!"
"ஆமா. அவரு தான் எங்களுக்கு மூத்தவர்"
சட்டென அவள் சிந்தையில் ஏதோ உதிக்க, "அவர் பெயர் இனியனா?" எனக் கண்களைக் குறுக்கிக் கேட்டாள் அவள்.
"ஆமா.. ஆனால் அவர் பெயர் எப்படி உனக்குத் தெரியும்?!" என அவன் குழப்பமாய் கேட்க,
"மாயனுக்கும் கிரீன் அய்ஸ். அப்புறம் அவனுக்கும் கிரீன் அய்ஸ். அதை வச்சி தான் சொல்றேன்."
"கீரீனு அயிசா?!!" என குழப்பம் மாறா முகத்துடன் கடினமாய் அவ்வார்த்தையைக் உச்சரித்தவனைப் பார்த்து இதழின் ஓரம் சிரித்தவள்,
"பச்சை நிறக் கண்கள்." என்க, "ஓஹ்ஹ்ஹோ..!" என்றான்.
"ஆனா உனக்கும் மாசாவுக்கும் மட்டும் ஏன் பச்சை நிறக் கண்கள் இல்லை?!" என அவள் கேட்டதும் அவன் முகம் சட்டென மாற்றம் கொண்டதைக் கவனிக்கத் தவறினாள்.
தான் அளவுக்கு அதிகமாய் அவளிடம் தகவல்களை சொல்வதை உணர்ந்தவன், சிறிது நேர யோசனைக்குப் பின் சொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டு "அதை நீ மாயன் அண்ணன்கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோ" எனக் கூறி நழுவிக் கொண்டான்.
"அவன் பேரைக் கேட்டாளே எனக்கு அறுவருப்பா இருக்கு" என அண்ணனைப் பற்றி தம்பியிடமே குறை கூறிய அவளை முறைத்தவன்,
"என் அண்ணன் எதுச் செய்தாலும் நல்லதுக்குதான் செய்யும். பொருமையா இரு" என்றான். அவன் வயதிற்கும் அவன் பேச்சுக்கும் சம்மதமே இல்லை என்றாலும் அவனை நிலாவிற்கு பிடித்துப் போனது.
இங்கிருந்துப் போனாலும், இந்த உலகை விட்டு போக முடியாது என புரிந்துக்கொண்டாள். இப்போது பிஜிலிக் கூறிய அந்த மந்திரத்தை எப்படியாவது தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே அவள் சிந்தை முழுவதும் நிரைந்திருந்தது.
"நீ மட்டும் தனியா இருக்க?"
"என்னை உன் பாதுகாப்புக்காக விட்டுட்டு எல்லாரும் அரசரோட பிறந்த நாள் விழாக்கு போயிருக்காங்க"
"உன்னை அடிச்சுப் போட்டு நான் தப்பிச்சுப் போயிட்டா?"
"நான் உன்னை தப்பிக்கவிடமாட்டேன் என்ற தைரியத்திலும். நீ என்னை அடிச்சு போடுற அளவுக்கு கல்நெஞ்சக்காரி இல்லைங்கிற நம்பிக்கையிலும் தான் அவங்க என்னை விட்டுட்டு போயிருக்காங்க.."
'என் மேல் அவன் வைத்திருக்கிற நம்பிக்கை போல் தானே, என் அப்பாவும் நானும் வைத்திருந்தோம். அதை உடைத்த உன் அண்ணன் கல்நெஞ்சக்காரன் இல்லையா?' என்ற வார்த்தைகள் அவளின் நா வரை வந்துவிட்டாலும் சிறுவன் அவனிடம் ஏன் தன் கோபத்தை காட்ட வேண்டும் என்று வார்த்தைகளை முழுங்கிக் கொண்டவள்,
இங்கேயே இருந்தால் தன்னால் எதையும் தெரிந்துக்கொள்ள முடியாது என்பதையும் அறிந்துக் கொண்டாள்.
"நானும் அங்க போகனும்" என சற்றே பிடிவாதம் கலந்தக் குரலில் அவள் கூற,
"உன்னை அங்க கூட்டிட்டு போக முடியாது"
"ப்ளீஸ். என்னை கூட்டிட்டுப் போ. என்னை உன் அக்காவா நினைச்சி எனக்கிந்த உதவியை பண்ணு"
"என் அக்காவா நினைக்கிறதாலதான் கூட்டிட்டு போக மாட்டேனு சொல்றேன்."
"இந்த நாலு செவத்த வெரிச்சிக்கிட்டு நான் எவ்வளவு நேரம் தான் இங்கையே இருக்குறது!?"
"அவ்வளவு தானே. அதுக்கு எதுக்கு அங்க போகனும். வா நம்ப பக்கத்துல எங்கையாவது போய்ட்டு வரலாம்" எனக் கூறியவனிடம் தன்னால் முடிந்தவரை அனைத்து திசைகளிலும் தலையை உருட்டி வைத்தாள்.
"நீ குளிர் தாங்குவியா?" என அவன் கேட்க, மீண்டும் தலையாட்டினாள். அவளை மேலும் கீழும் பார்த்தவன் ஒரு ஓரமாய் அடுக்கப் பட்டிருந்த தடிமனான போர்வைகளில் ஒன்றைக் கொடுத்தான்.
அதைத் தன்னை சுற்றி அணிந்தவள் அதன் கடைசி பகுதியை தன் தோல் மேல் போட்டுக்கொண்டாள்.
தன் வாழ்விலே பனியை முதற்முறைக் கண்டாலும் அதை அனுபவிக்க முடியாத வகையில், அவளை குளிர் ஆட்டிப்படைத்தது.
மீண்டும் குடிலுக்கே சென்று விடலாம் என்றுக் கூட தோன்றியது. ஆனால் அவள் மனம் அதற்கு இடம் கொடுக்க வில்லை.
எதை கண்டுப்பிடிக்க வேண்டும் எனக் கூடத் தெரியாமல் தேடலை தொடங்கி விட்டாள்.
அதுவும் பிஜிலியை அருகிலேயே வைத்துக்கொண்டு யாரிடம் என்ன வென்று கேட்பது என சுற்றி முற்றி பார்த்த படி நடந்தாள்.
விடியற்காலையா..? மாலையா..? எனக் கூடத் தெரியாத அளவிற்கு, அடர் மேகக் கூட்டனிகள், சூரிய ஒளியை உள்ளே நுழைய அனுமதி தரமால் போக்கு காட்டிக் கொண்டு இருந்தன.
"இது என்ன பகலா இரவா?" எனக் கேட்டவளிடம் "மாலை" என்றான்.
"இருட்ட போகுதோ?"
"இல்லை இல்லை.. இப்போ தான் மாலையே தொடங்கியிருக்கு. இது உங்த பூமி மாதிரி இல்லை. இங்க எல்லாம் சூரிய ஒளி படுறதே அரிது. பட்ட பகல் கூட இருளா தான் இருக்கும்"
"இந்த உலகத்துக்கு பேர் என்ன?"
"மதியுலகம்.. உனக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா 'நிலா' " என்றான்.
"நிலாவா?" என அதிர்ந்தவளின் சிந்தையில் மீண்டும் குப்பைகள் வந்து குவியத் தொடங்கின. 'ஆராய்ச்சி பண்றேன்ற பெயர்ல எல்லா நாடும் போட்டி போட்டு சாட்டிலைட் விட்டுட்டு இருக்கிறப்போ எப்படி இதை கண்டுப்பிடிக்காம விட்டிற்பாய்ங்க.. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கூட நிலாக்கு வந்துற்காரே.. அப்ப இங்க மனிஷங்க வாழ்றது தெரியாமலையா போய்டும்.. இவங்களை 'மனிஷங்கனா' சொல்றது? ஏலியன் ஆச்சே.. ஆனா பாக்க நம்பலை மாதிரியே இருக்காங்க. என்னவோ போ.. பூமியில இருந்து ஒரு பயக்கூடையா நீல் ஆம்ஸ்ட்ராங் மாதிரி நிலாக்கு வராம போய்டப்போராய்ங்க.. கண்டிப்பா வருவானுங்க.. அப்போ எப்படியாவது கைல கால்ல விழுந்து லிப்ட் கேட்டாவது நம்பலும் கிளம்பிடலாம்.. மந்திரத்தை எல்லாம் எதுக்கு வேஸ்ட்டா தேடிகிட்டு..!!?' என அவள் அறிவாய் யோசித்துக் கொண்டிருப்பதை கெடுத்தான் பிஜிலி.
"நீ நினைக்கிற மாதிரி பூமியை சுத்தி வருதே, அந்த நிலாக் கிடையாது இது. எட்டு கிரகத்தில ஆறாவதா இருக்கிற சனிகிரகத்தை சுத்தி வர்ற ஒரு நிலா. இதுக்கும் உங்க பூமியில நீங்க எதாவது டஸ்ஸு புஸ்ஸுனு பேர் வச்சிர்பிங்க" என அவன் கூறியவுடன் சற்று முன் தவுஸன் வாடஸ் பல்பு போல் இருந்த அவளின் முகம் பியூஸ் போன டியூப்லைட் போல ஆகிவிட்டது.
சிறுதூர அமைதியான நடைக்குப் பிறகு, ஒரு மரத்தின் முன் நின்றான் பிஜிலி. அவள் அவனை கேள்வியாய் பார்க்க, "இது வேண்டுதலை நிறைவேத்துற மரம்.. இதுக்கிட்ட நீ என்ன கேட்டாலும், அது உனக்கு கிடைக்கும்." என்றவனை ஏளனமாய் பார்த்தாள் அவள். அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்தவன்,
"உண்மையா தான் சொல்றேன். ஒருமுறை முயற்சி செய்துப் பார்" என்றான் அவளை சம்மதிக்க வைக்கும் விதத்தில்.
பார்ப்பதற்கு எந்த வித ஆரவாரமும் இன்றி அந்த மரம் சாதரணமாக தான் தோற்றம் அளித்தது. அதில் ஆள் நுழையும் வகையில் பொந்து ஒன்றிருந்தது.
அங்கேயே நின்றுக்கொண்டிருந்தவளை, பிஜிலி அந்த பொந்துக்குள் தள்ளிவிட்டான்.
உள்ளே நுழைந்தவுடன் அவள் சுற்றி முற்றி பார்க்க, அதன் வாசலில் பிஜிலி நின்றுக்கொண்டிருந்தான். ஆனால் அந்த பொந்தின் வாசலை தாண்டிய வெளியுலகும், பொந்துக்குள் இருந்த இடத்திற்கும் பெரிய வித்தியாசம்.
அந்த மரத்தை விட உள்ளே விசாலமாய், பசுமை சூழ்ந்திருக்க, வெளியிலோ பனிக் மழைக் கொட்டிக் கொண்டு இருந்தது.
தன் கண்ணிமைகளை மூடியவள் "என் அப்பா மட்டும் பழைய மாதிரியே எனக்குத் திரும்ப கிடைச்சிடனும்." என மனதிற்குள் நினைத்து முடிக்கும் முன்,
"உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகலை" என மரப்பொந்தின் வாசலில் இருந்து வந்தவனின் குரல் அவள் கவனத்தை ஈர்க்க,
அவன் புறம் திரும்பினாள்.
பொந்தின் வாயிலின் இடப்புறம் சாய்ந்துக்கொண்டும், தன் இடது காலை பின்புறமாய் மடக்கி மரத்தில் வைத்துக்கொண்டும், வலதுக் கையை பின்னந்தலைக்கும் மரத்துக்கும் முட்டுக்கொடுத்து, தலையை தாங்கியப் படி, ஒரு பழத்தினை ருசித்துக்கொண்டே வானத்தை வெறித்த வண்ணம் படு மாஸாக நின்றிருந்தான் மாயன்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro