நிலா -11
கடினமாய் எட்டி பார்த்த சூரிய ஒளியும்,அந்த அடர் மேக கூட்டனிகளால் தடைப்பட்டு மங்களான இளம்மஞ்சளாக, மந்தமாக காட்சி அளித்தது.
பூமியை விட சற்றே வித்தியாசமாய் தோற்றம் தந்தது அது. சுற்றி மலைகளும் சின்ன சின்ன குடில்களும் பனியால் அழங்கரிக்கப் பட்டிருந்தன. எங்கிருக்கிறோம் நாம்? கடல் தாண்டி மலை தாண்டி என்பதை விட பல கிரகங்களை கடந்து மதியுலகத்தில் இருக்கின்றோம் நாம். இது எங்கிருக்கிறது? இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
மலைகளுக்கு நடுவே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு பெரிய மலையை குடைந்து மிக பிரமாண்டமாய் ஒரு அரண்மனையாய் படைத்து இருந்தனர். அந்த நாட்டின் எந்த முனையில் இருந்து பார்த்தாலும் அதன் கோபுரம் தெரியும் அளவிற்கு அதன் உயரம் வானைத் தொட்டது. அந்த கோட்டையை சுற்றிய ஊரில் மக்களின் நடமாட்டம் கிட்டத்தட்ட ஒரு திருவிழாப் போல் காட்சி அளித்தது.
அதற்கு எதிர்மறையாக அந்தக் கோட்டையின் எதிர் திசையில் மிகத் தொலைவில், ஆள் அறவமே இல்லாமல் சில குடில்கள் இருந்தன.
அந்த நாட்டிற்கும் அதற்கும் நடுவே ஒரு நதி இருந்தது. அதுவும் பனியின் வீரியத்தால் உறைந்திருந்தது.
ஒரு ஒரு குடில்களுக்கும் இடையில் 10 அடி தொலைவளவு தூரம். உள்ளே மக்கள் இருக்கிறார்களா என்றுக் கூட தெரியாத அளவிற்கு ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறுமையாய் காட்சியளித்தது.
ஒரு குடிலில் மட்டும் ஜன்னலிலிருந்து வந்த புகை மூட்டங்கள் உள்ளே ஆள் இருப்பதற்கான சாட்சி கூறியது.
உள்ளே இருந்து வரும் சத்தங்களைப் பார்த்தால், ஆள் என ஒறுமையாய் கூறுவதை விட ஆள்கள் என்றால் சரியாய் இருக்கும்.
கொஞ்ச நேரத்திற்கொறுமுறை, அதன் குறுகிய வாசலின் வழியே குனிந்து குனிந்து வந்து, கண்ணுக்கு தென்பட்ட மலைகளிலேயே பெரிதாய் இருக்கும் மலையை பார்த்து விட்டு, பார்த்து விட்டு போனாள் ஒருவள்.
அவளின் பெயர் ஈழா. எதற்கும் அஞ்சாத அவள், அடங்கிப் போவது அன்பு என்னும் மூன்றெழுத்து ஜாலத்திற்கு. எந்த அளவு திடமானவளோ அதே அளவு தனக்கு பிடித்தவர்களுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என நினைக்கும், மனதளவில் பலகீனமானவள்.
அவளின் உயரம் மனிதர்களை விட சற்றே கூடியிருந்தது. விலங்குகளின் தோல்களால் செய்யப் பட்ட அவளது கனத்த உடைகள், அவளை குளிரின் பிடியிலிருந்து கதகதப்பாய் வைத்திருந்தது. அதே சமயத்தில் அவளின் முகம் லேசான பதற்றத்தை தத்தெடுத்திருந்தது.
உள்ளே நுழைந்தவள் "எனக்கென்னமோ பயமா இருக்கு.. இருள் சூழ்றதுக்குள்ள மாயா இங்க வந்தாகனும்.. இல்லைனா அவன் உயிருக்கும் ஆபத்து.. இவளையும் நம்பலால காப்பாத்த முடியாது" என்றவாரே அங்கு அமர்ந்திருந்த நால்வரையும் பார்த்துக் கூறினாள். அந்த நான்கு பேரின் பார்வையும் இலைதளைகளால் ஆன படுக்கையின் மேல், நெற்றியில் உறைந்த இரத்தமும், மூடிய இமைகளுடன் படுத்திருந்த நிலாவின் மேல் ஐக்கிய மானது.
நாசியில் வரும் லேசான மூச்சுக்காற்றும், நெஞ்சுக் கூட்டில் தடக் தடக் என்னும் இதய துடிப்பையும் தவிர, உயிரிருப்பதற்கான வேறு எந்த வித தடயங்களும் இல்லாமல் கிடத்த பட்டிருந்தவளின் உள்ளங்கையை ஒருவளும் பாதத்தை ஒருவளும் தேய்த்துக் கொண்டிருந்தனர்.
"அகிலப் பூவை அவன் கண்டிப்பா எடுத்துட்டு வந்துடுவான்.. இருட்டுறதுக்கு இன்னும் நேரம் இருக்கு.." என உள்ளங்கையை தேய்த்துக் கொண்டிருந்தவள் கூறினாள்.
இவளின் பெயர் தான் சுசியா. சிறு வயதிலிருந்தே மாயனின் தோழி. திருமணமான பெண்மணி.
"காவலாலர்கள் இங்க வந்துட்டா என்ன பண்றது.. இவங்கள இங்க பாத்துட்டா, கண்டிப்பா பிரச்சினையாகிடும்.. எப்படி சமாளிக்கிறது?!" என சுசியாவின் அருகில் அமர்ந்திருந்தவன் கேட்டான்.
இவன் பெயர் சுமோ. சுகைனாவின் காதல் கணவன். சுமோ, சுகைனா, மாயன், ஈழா நால்வரும் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்கள் தான்.
"நாளைக்கு அந்த அரசனோட பிறந்த நாள்.. அங்க அதற்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கப்போ கண்டிப்பா, நம்பல யாரும் தேடி வர மாட்டாங்க" என்றால் சுசியா.
"எனக்கு இதுல உடன்பாடு இல்லை.. அண்ணா வாக்கு குடுத்திறுக்கக் கூடாது.. இவளால நம்பளுக்குஆபத்து என்று தெரிந்தும் இவளை எதுக்கு நம்ப காப்பாத்தனும்?!" என நிலாவின் பாதத்தை உரசிக் கொண்டிருந்த மாசா அதை விட்டு விட்டு பொரிந்தாள்.
மாசா மாயனின் தங்கை. அண்ணன் மேல் அலாதி பிரியம் கொண்டவள். இருந்தாலும் சமீபகாலமாக அவள் அண்ணன் எடுக்கும் முடிவுகளிள் அவளுக்கு உடன் பாடில்லை.
"உன் அண்ணனுடைய தங்கை நீ.. எப்போதிலிருந்து இப்படி சுயநலமா யோசிக்க ஆரம்பித்த?.. உன் அப்பா எதுக்கு உயிரை விட்டாங்கனு உனக்கு தெரியாதா?!" என சற்றே வார்தையில் அழுத்தத்தை கூட்டினாள் ஈழா.
மாசா அமைதி ஆகி விட்டாள்.
நடுவில் ஏதோ பாத்திரங்களை உருட்டுவது போன்ற சத்தம் அவர்களின் கவனத்தை திருட, திரும்பி பார்த்தவர்களின் கண்ணில் விழுந்ததோ சத்தமில்லாமல் பூனைப் போல் பாத்திரத்தில் இருந்த உணவை வழித்து அமுக்கி கொண்டிருந்த ஒரு ஐந்து வயது சிறுவன்.
பார்க்க அச்சுஅசலாய் சின்ச்சான் போலவே இருந்தவனின் பெயர் பிஜிலி. மாயனின் குட்டி தம்பி. படு சுட்டி. வயதிற்கு மேலான மனப்பக்குவமுடையவன். வாய் அதிகம். அரைஜான் என்றாலும் மனிதர்களை சரியாய் அளந்துவிடுபவன்.
அனைவரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியதை உணர்ந்தவன், "ஈழா அக்கா சரியாதான் சொல்றாங்க.. நம்ப எல்லாரும் ஒரே இனம் தான்.. நீ இப்படி பிரிச்சு பாக்குறது ரொம்ப தப்பு மாசா.. உன்னை அண்ணன் கிட்ட மாட்டிவிடனும்.. சரிதான ஈழா அக்கா" என திருட்டு முழி முழித்துக் கொண்டே சமாளித்தவனை அனைவரும் காரி துப்பி விடாத குறையாய் பார்க்க,
"சரி சரி முறைக்காதிங்க.. அண்ணன் எப்போ வருமோ தெரியல.. அதுவரைக்கும் சாப்பிடாம இருக்க முடியுமா?!.. அதான் கொஞ்சமா சாப்பிடலாம்னு.." என இழுத்தவனின் தட்டை பார்த்தவர்கன் மீண்டும் அவனை 'இது கொஞ்சமா?!' என்பதைப் போல் பார்க்க,
"அட என்ன பா நீங்க சும்மா சும்மா முறைக்கிறிங்க.. வேணும்னா எடுத்து நீங்களும் சாப்பிடுங்க.. நானும் எவ்வளவு நேரம் தான் சாப்பிடாம பசிய அடக்குறது..!?" என்றவன் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்.
தலையில் அடித்துக் கொண்டவர்களின் பார்வை மீண்டும் நிலாவைத் தழுவியது.
அவள் தொடர்வாள்..
__________________________
வெறும் அறிமுகம் என்பதால் சின்ன அப்டேட்.. மனிச்சுக்கோங்க
ஈழா
சுசியா
சுமோ
பிஜிலி இந்த நால்வர் பற்றியும் என்ன நினைக்கிறிங்க?
அடுத்து என்ன நடக்கப் போகுது..?
உங்கள் கருத்தை தெரிவிச்சுட்டு போங்க மக்களே..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro