நிலா -1
சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், ஹைவே சாலையில், காற்றுடன் போட்டி போட்ட வண்ணம் பறந்து கொண்டு இருந்தது விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று.
உள்ளே மெளிதான சத்தத்தில் பழைய
பாட்டு ஒன்று ஓடி கொண்டு இருந்தாலும், அதை ஓட்டுபவள் தான் நம் கதையின் நாயகி.
காரின் ஜன்னல் திறந்த நிலையில் இருக்க, அவளது கூந்தல் காற்றின் பாட்டிற்கு அலை அலையாய் அசைந்து கொண்டு இருந்தது. அதை ஒரு கையால் அடக்க முயற்சித்தவள் தோற்று போய் அதை அதன் போக்கில் விட்டுவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தாள். எப்பொழுதும் நிறைந்திருக்கும் சாலை இன்று அனாதையாய் காணப்பட்டது, அவளுக்கு விசித்திரமாக தோன்ற அவளது கரு விழிகளால் சாலையை அலசி கொண்டிருப்பதை தன் நீல நிற கூலிங் கிலாசால் மறைத்து வைத்திருந்தாள். அவளின் ரோஜா இதழ்கலோ அந்த பழைய பாட்டை முணுமுணுத்து கொண்டு இருந்தது.

பக்கத்தில் வைத்திருந்த அவளது அலைபேசி சிணுங்க, அதை அவசரமாய் எடுத்து தன் காதில் வைத்தவள், "வந்துட்டே இருக்கேன்... வை டி போனை" என பதிலை எதிர்பார்க்காமல் அனைத்து விட்டு சாலையில் வேகத்தை கூட்டினாள். அதுவரை சீராக சென்று கொண்டு இருந்த வண்டி திடீர் என்று தாறுமாறாக செல்ல தொடங்கியது. அதை கட்டு படுத்த முயன்றவளின் கட்டுக்கு அடங்காமல், இன்னும் வேகமாக செல்ல தொடங்க, அவளது முகத்தில் கலவரம் குடி கொள்ள ஆரம்பமானது.
அதிவேகத்தில் சென்று கொண்டு இருந்த வண்டி மெதுவாக செல்ல தொடங்கி, பின் நடு சாலையில் சட்டென நின்று போக,
கதவுகளும் கண்ணாடி ஜன்னல்களும் இறுக மூடி கொண்டு திறக்க மறுத்தன. அவள் சுற்றும் முற்றும் பார்க்க ஒரு ஈ, காக்கா கூட கண்ணில் தென் படவில்லை. வண்டியில் இருந்து இறங்க முயற்சித்தவலாள் இறங்க முடியவில்லை. அவளது கைகள் லேசாக நடுங்க தொடங்கிய நேரம், வண்டி மீண்டும் மெல்ல நகர தொடங்கியது. அது வேகம் பிடிக்க, எதிர் திசையில் அதீ வேகத்தில் ஒரு லாரி.
ஒன்றை நோக்கி ஒன்று நெருங்க, தன் கடைசி வினாடிகளை எண்ணத் தொடங்கினாள்.
' ஒன்னு '
' ரெண்டு '
' மூணு '
' நா...' கண்களை இறுக்க மூடி, கடைசி எழுத்தை உச்சரிக்கும் முன் டமால் என்ற சத்தம் அவளது செவிகளை அடைய, அவள் உணர்ந்ததெல்லாம் பச்சை நிற கருவிழிகளையும் தன்னை சுற்றிய ஒருவனின் கரங்களையும், தான். அவள் நடப்பதை சுதாரிக்குமுன் அவளது கண்கள் இருண்டு போனது.
___________!¡¡¡¡!____________
"ம்மாஆஆ" என அலறலோடு எழுந்தவளின் அருகில் அவள் தோழி தாராவும் தன் தந்தையின் நண்பர் ஒருவருடைய மகன் ஹரிஷும் நின்று கொண்டு இருந்தனர்.
"நான் எங்க இருக்கேன்" அவள் சுற்றி முற்றி பார்த்து, திரு திரு வென்று முழிக்க,
அருகில் சென்ற தாரா, அவள் தலையில் நங்கென ஒரு கொட்டு வைக்க வலியில் தலையை தேய்த்தவள் அப்போது தான் உணர்ந்தாள், தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை.
"யேண்டி லூசு உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?, இப்டியா கார ஓட்டுவ?, உனக்கு எதாவது ஆகிருந்தா என்ன பண்றது"
"எப்படி ஆக்சிடன்ட் ஆச்சு?"
"விழுந்ததுல அம்னிஷ்யா பேஷன்ட் ஆகிட்டியா ?"
"விழுந்தேனா...!?"
"அப்போ கன்பார்ம்... என் பேர் என்னனு சொல்லு?" என கேளியாய் கேட்டவளை அவள் அனலாய் பார்க்க,
"சரி..சரி.. முறைக்காத.. ஓவர் ச்பீட்ல போனதால வண்டி கண்ட்ரோல இழந்து... அப்பறம் ஆப்போசிட் சைட்ல செம்ம பாஸ்ட்டா ஒரு லாரி வர...." கதை கேக்கும் குழந்தை போல் ஆர்வமாய் கேட்டு கெண்டிருந்தவள் அவள் பாதியில் நிறுத்தியவுடன் "வர்ர்ர.....??" என்க,
"நான் என்ன காக்கா வடை சுட்ட கதையா சொல்லிட்டு இருக்கேன்...? மறன்துட்டேன்.. கொஞ்சம் பொரு" என கன்னத்தில் கை வைத்து யோசிப்பதை போல் பாவனை செய்தவள், "ஹான் புடிச்சுட்டேன்" என்ற தாராவிடம் "என்ன என்ன சொல்லு" என கண்கள் விரிய கேட்டவளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த தாரா, பின் "லூச திடீர்னு எங்க இருந்தோ ஒருத்தன் பறந்து வந்து ராஜகுமாரன் மாதிரி உன்னை காப்பாத்தவா போறான்..??, ஏதோ உனக்கிருந்த கொஞ்ஜுனு மூலைய வச்சி, கார்ல இருந்து ஜஸ்ட் மினிட்ல குதிச்சி தப்பிச்சுட்ட..." என தாரா கூறி முடிக்க, அவளோ தாரா சொன்ன,
"திடீர்னு எங்க இருந்தோ பறந்து வந்து ராஜகுமாரன் மாதிரி உன்னை காப்பாத்தவா போறான்" என்றதுலேயே உறைந்து போயிருந்தாள். அவள் நிலையை கண்ட தாரா "ஹே, என்னாச்சுடி ஏன் ஒரு மாதிரியா இருக்க?, கை ரொம்ப வலிக்குதா நான் வேணும்னா டாக்டர கூப்பிடவா?" என தாரா கூறியவுடன் தான் தன் வல கையில் கட்டு போட பட்டிருப்பதையும், வலியையும் ஒரு சேர உணர்ந்தவல் "ஆஆஆ" என கத்தினாள்.
"என்னடி இப்போதான் அடிப்பட்ட மாதிரி கத்துற..?, சின்ன பிராக்சர் தான் டாக்டர் இஞ்செக்சன் போட்டுருக்காரு. கொஞ்ச நேரத்துல வலி தெரியாது"
"எப்படி அடி பட்டுச்சு?"
"அதான் சொன்னேன்ல கீழ குதிச்சனு... குதிச்ச போர்ஸ் ஆலதான்" என்ற தாரா, கொஞ்சம் இடை வேளிவிட்டு, "என்ன எல்லாத்தையும் என்கிட்ட கேக்குற உனக்கு நியாபகம் இருக்கு தானே?" என தாரா சீரியசாக கேட்க,
"நியாபகம் இருக்கு" அவள் எங்கோ வெறித்த படி கூறினாள்.
"அப்போ நான் கிளம்புறேன் டி. அம்மா கிட்ட சொல்லாம வந்துட்டேன். நாளைக்கு காலைல வந்து நானே உன்னை கூட்டிட்டு போறேன்.."
"ஹ்ம்ம் சரி"
"ஹரிஷ் அவள பாத்துக்கோங்க இன்னிக்கு ஒரு நைட் மட்டும் தான்.. அங்கில் ஊருல இருந்து வர வரைக்கும்.. நாளைல இருந்து நானே அவ கூட இருக்கேன்.. அப்புறம் இத பத்தி அவர்கிட்ட சொல்லிடாதிங்க டென்ஷன் ஆகிடுவார்" என்றவள் சிறிது யோசித்து விட்டு "பாத்துக்குவிங்கள?" என சந்தேகமாய் கேட்க, அவன் வெறும் தலையை மட்டும் அசைத்து ஆமோதித்தான்.
தாரா அவளின் தலையை ஆதரவாய் தடவி விட்டு, விடை பெற்றால்.
தாரா சென்றவுடன் தன் இல்லாத மூலையை குடைய ஆரம்பித்தாள் அவள். நடப்பவை அனைத்தும் வித்தியாசமாய் தோன்றியது அவளிற்கு. சிறிது நேரம் கண்களை மூடி படுத்திருந்தவள் மருந்தின் வீரியத்தால் தூங்கியும் போனாள்.
___________!¡¡¡¡!____________
பாதை முழுவதும் வெள்ளை மேக கூட்டங்கள் சூழ்ந்திருக்க வழி தெரியாமல் விழித்து கொண்டு இருந்தவளின் கண்முன் ஒரு வெள்ளை இறகு காற்றில் அசைந்து அசைந்து செல்ல, தன்னை அறியாமல் அதை பின்தொடர தொடங்கினாள்.
"நிலா.. நிலா.." எங்கிருந்தோ பரிச்சயமான ஒரு குரல் வர, அது தனது பெயர் தான் என உணர்ந்தவள் நான்கு திசையிலும் சுற்றி முற்றி பார்த்தாள்.
அங்கு யாரும் தென்படவில்லை.
"நிலா..." மீண்டும் அதே குரல் இனிமையான குரல். அந்த குரல் வரும் திசையை உற்று நோக்கினாள். வெள்ளை மேக கூட்டங்களை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. மெல்ல அந்த திசையை நோக்கி செல்ல தொடங்கினாள். இரண்டடி எடுத்து வைத்தவள் தன் கைகளை காற்றில் அசைத்தாள். இப்போது அந்த மேக கூட்டம் கலைந்து மெல்ல மெல்ல ஒரு உருவமாய் தெரிய தொடங்கியது. ஆச்சர்யத்தில் அவளது இமைகள் தானாக ஒரு முறை மூடி திறக்க, இப்பொழுது ஒரு பெண்மணி இவளது முன் நின்று கொண்டு இருந்தார். கிழிந்த ஆடைகளிளும், முகத்திலும், ஆங்காங்கே ரெத்த கறைகள் படிந்திருந்தாளும், கண்களில் அப்படியோரு பொலிவு.
அவரை பார்த்தவுடன் கண்கள் தானாக கலங்கி விட, உதடுகளோ அவளையும் அறியாமல் "அம்மா" என உச்சரித்தது.
அவளை பார்த்து ஒரு புன்னகையை வீசி விட்டு அவளை கடந்து சென்று இரண்டடி முன்னாள் புற முதுகை காட்டி ஒருவித கம்பீரத்தோடு நின்றவரை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
"நினைப்பவை எல்லாம் நிரந்தரம் அல்ல..
புரிந்தவை எல்லாம் புதிராகி போகும்..
முடிச்சுகள் அவிழும் பொழுது
பாதை தெளிவடையும்..
குழம்பாதே...! மறந்தும் அஞ்சாதே...!
நிலைமை கை மீறினால்,
இறுக மூடிக்கொள் கண்களை..
உன்னை காக்க வருவான் இவன்."
அவர் சொன்ன வார்த்தைகளை அவள் புரிந்துகொள்ளும் முன், அவளின் புறம் திரும்பி, அவளது அருகில் பார்த்து மீண்டும் அதே புன்னகையை வீசிவிட்டு காற்றோடு காற்றாக கரைய தொடங்கினார். அவர் பார்வை புரியாமல் தன் அருகில் பார்த்தவளின் பார்வையில் அகப்பட்டதோ ஆணுக்கே உரிதான கம்பிரத்தோடு, அதே பச்சை நிற கருவிழிகளை உடையவன். அவனது கூர் பார்வை இவளது ஆழ் உயிரைத் துளைத்தது. அவர் சொன்ன கடைசி வாக்கியம் அவளது காதில் ரிங்காரமிட்டது.
"நிலைமை கை மீறினால்,
இறுக மூடிக்கொள் கண்களை..
உன்னை காக்க வருவான் இவன். "
"யார் இவன்...?, .
இந்த வார்த்தைகளுக்கான அர்த்தமென்ன...!?"
அவள் தொடர்வாள்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro