நேர்காணல்
வணக்கம் லட்டூஸ்,
இது என் முதல் நேர்காணல்😂
ஓவரா நினைக்காதீங்க😂😂🤣சும்மா எழுத்தாளர்களுக்கிடையே நடந்தது.
சிரிப்பு வந்தாலும் ஏதோ ஒரு ஓரத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது❤.
1.தாங்கள் தங்கள் எழுத்தை உணர்ந்தது எப்படி ?
பள்ளியில் கட்டுரை எழுவதில் ஆர்வம் அதிகம் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள் இருப்பதாக தமிழ் ஆசிரியர் கூறுவார்.அதனாலே பேச்சுப்போட்டிகளில் பங்கேற்பவருக்கும் நானே எழுதிக் கொடுத்த நாட்களும் உண்டு...பேசுபவரை விடவும் நான் எழுதிக் கொடுத்ததை ரசித்ததாக ஆசிரியர் கூறுவார்...
என் பள்ளி நாட்கள் தான் என் எழுத்தை உணர்ந்த நாட்கள் என்பேன்😍
2. தங்களை ஊக்கப்படுத்திய முதல் நபர் ?
என் இயற்பியல் ஆசிரியர் நான் தமிழ் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டால் முதல் ஆளாக இருப்பவர்.
கட்டுரை கவிதை நானே கலந்து கொள்ளா விட்டாலும் பல நல்ல வார்த்தைகள் கூறி என் பெயரை கொடுத்து விட்டு வந்துவிடுவார்.
3. தங்கள் எழுத்தின் மூலக்காரணங்கள் ஏது ?
தமிழின் மேல் உள்ள காதல் என்பேன்.
அன்னைத் தெரசா போல் ஆக வேண்டும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று 9ம் வகுப்பு படிக்கும் போது உளறி அம்மாவிடம் அடிவாங்கி அடுத்த நாள் எனக்கு பேய் தான் பிடித்து விட்டது என்று மந்திரிக்க கூட அழைத்து சென்றிருக்கிறார்.
சமூக சேவையில் ஒரு நாட்டம்.
என் கட்டுரைகளில் கூட சமூக கருத்துகள் அதிகம் இருக்கும்.
4. தொடர்கதை எழுதும்போது கதை முடிவை முன்னதாகவே தீர்மானித்துவிட்டு எழுதுகிறீர்களா ?
தீர்மானித்தது வேறு முடிவு வேறு...
கதையை அதன் போக்கில் விட்டுவிடுவேன் ஆனால் கூற நினைத்த கருத்துகளை கண்டிப்பாக கூறிவிடுவேன்.
5. தொடர்கதை எழுவதற்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது ?
கனவின் மூலம் தான்...எழுத்தாளர் என்று என்னை நானே நினைத்துக் கொண்ட நாட்களிலிருந்து கனவுகளில் கதைக்கான கரு மட்டும் தான் வந்து கொண்டிருக்கிறது..
6. எழுத்துக்கு என்ன சிறப்பு இருப்பதாக தாங்கள் எண்ணுகிறீர்கள்
நாம் கூற வந்த கருத்தை எளிதில் ஒருவருக்கு புரிய வைத்து விடலாம்.
பேச்சில் அந்த சிறப்பு இருக்காது...
எழுத்துக்கள் மட்டுமே மக்களை எளிதில் சென்றடையும் என்பது என் கருத்து.
7. கவிதைகள் எப்படி இருக்கவேண்டும் ?
நான் எழுதுவதை என்றுமே நான் கவிதை என்றதில்லை..அதற்கு நானே ஒரு பெயர் வைத்துக் கொள்வேன்.
வள்ளுவனைப் போல் இரண்டடியில் கூற வந்த கருத்து நச்சென்று அனைவரின் மனதிலும் பதிய வேண்டும்.
8. தங்களை மனதார கவர்ந்த ஓர் எழுத்தாளர் ?
கல்பனா ஏகாம்பரம்- நான் வாட்பேட் வந்த புதிதில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்.
பெரிய எழுத்தாளர்கள் புத்தகங்களை நான் வாசித்ததில்லை.
9. விமர்சனங்களை தாங்கள் கண்டு கொள்ளும் விதம் ?
ஒரு எழுத்தாளரை ஊக்குவிப்பது விமர்சனம் என்பது என் கருத்து.
அந்த விமர்சனம் எதிர்மறையாக வந்தால் கண்டிப்பாக மனம் வாடுவேன். முதல் முறை தான் கஷ்டமா இருக்கும் போகப் போக பழகிவிடும் என்பது போல் தான் இருக்கிறது...ஆனாலும் அனைவரை போலவும் எளிதில் கடந்துவிட முடியவில்லை....எங்கோ மனதின் ஒரு ஓர்த்தில் அந்த எதிர்மறை விமர்சனத்திற்காக மனம் வருந்திக் கொண்டு தான் இருக்கும்...
அந்த வருத்தத்தை அடுத்த கதையின் வித்தாக நினைத்து என்னால் முயன்ற அளவு நல்ல கதைகளை கொடுக்க முயற்சி செய்வேன்.
10. ஓர் கவிதையே எத்தனை மணி நேரத்தில் எழுதுகிறீர்கள் ?
சிலர் கொடுத்த உடனே எழுதி விடுவர்..
சிலருக்கு நேரம் தேவைப்படும்...
எதையும் காலநேரம் வைத்து கணக்கிட நான் விரும்பவில்லை..
கவிதை நன்றாக வந்திருக்கிறதா மனதுக்கு பிடித்திருக்கிறதா என்பது போதும்.
11. எழுத்துக்கும் தங்களுக்குமான நெருக்கம் தமிழ்மொழி ஈர்ப்பா ?
அப்படியும் சொல்லலாம்...
ஏனோ தமிழின் மேல் தீராக்காதல் அதற்காக இலக்கியங்களை கரைத்து குடித்தேன் என்றால் நிச்சயமாக இல்லை..
தமிழ் பிடிக்கும் அதற்கு முதல் காரணம் என் தமிழ் ஆசிரியர்.
எழுத்துக்கள் மூலம் தான் ஒருவரை எளிதில் கவர முடியும் அதனால் கூட ஈர்ப்பு என்று சொல்லலாம்.
12. தாங்கள் பிற எழுத்தாளருக்கு சொல்ல விரும்புவது ?
பிறருக்காக எழுதாமல் உங்கள் மனதுக்கு பிடித்த விதத்தில் எழுதி உங்கள் வாழ்க்கையில் இன்னும் பல சிகரங்களை தொட வேண்டும் என பிராத்தனை செய்து கொள்கிறேன்.
எதற்காகவும் கலங்க வேண்டாம்
இன்று நம்மை கலங்க வைத்தவர் என்றாவது ஒருநாள் கலங்குவார் வருந்துவார்...
தெய்வம் நின்று கொள்ளும்❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு வாரமாக மூஞ்சிப்புக்கில் ஏதோ ட்ரெண்டிங் கேள்வி என்று வரிசையாக எழுத்தாளர்கள் கேள்விகளை கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
மூஞ்சிப் புக்கில் எனக்கு பதில் சொல்லும் அளவு என் கதைகள் யாரையும் கவரவும் இல்லை என்னை யாருக்கும் தெரியவும் தெரியாது😁.
இங்கு இருக்கும் ஒரு சிலர் என் கதைகளை படித்திருக்கலாம்...
உங்களுக்கு ஏதேனும் என்னிடம் கேட்க வேண்டும் என நினைத்தால் கேளுங்கள்(கண்டிப்பா கேட்கணும் சொல்லிபுட்டேன்)
நான் எழுதிய கதைகளில் உங்களுக்கு பிடித்தது எது ? , உங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் எது ?
நாவல்கள் என்றில்லையென்றாலும் சிறுகதைளில் உங்களுக்கு பிடித்தாலும் கூறலாம்😊
நான் படிக்கவே இல்லையே உங்கள் கதைகளைனு சொல்லிடாதீங்க...மீ பாவம்☹️
நன்றி
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro