Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

29

ரூபாவை அங்கே எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் உறைந்துநிற்க, மனமுடைந்த பார்வையுடன் இருவரையும் பார்த்துவிட்டு, அவசரமாக அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி, அவ்விடம்விட்டு அகன்றாள் வானதி. என்னென்னவோ எதிர்பார்த்த இதயம் இந்த அதிர்ச்சியைத் தாளாமல் நொறுங்க, சுற்றிலும் நடக்கும் எதையும் கவனிக்க சக்தியின்றி, கண்களை இறுக்க மூடினாள்.

அவள் போவதைக் கண்டும் ஏதும் செய்யத் தோன்றாமல், தன் கைக்குள் நிற்கும் ரூபாவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் திவாகர். நெஞ்சில் பலவித உணர்வுகள் குழம்பிக் குமைந்தன. கண்முன்னால் நிற்பவளை ஏற்கவும் முடியாமல், கண்மறைந்து செல்பவளைத் தடுக்கவும் முடியாமல், மரம்போல் நின்றான் அவன். இன்று அவளிடம் கூறவென்றே தொடுத்துவைத்த வார்த்தைகள் யாவும், அவனது நெஞ்சின் அனலில் பொசுங்கிப்போயின. உயிரே இல்லாமல் கண்கள் மரத்துப்போயின.

ரூபாவோ அவளது உயிரே அவன்தான் என்பதுபோல் இடைவெளியின்றி அவனை இறுக்க அணைத்துக்கொண்டு நிற்க, சுற்றிலும் சலசலக்கும் குரல்களும், பார்வைகளும் துளைக்க, அவளை மென்மையாகத் தாங்கிக்கொண்டு சற்றே மறைவாகச் சென்றான் திவாகர்.

"ரூபா..? நீ.. இங்க எங்கே??"

திக்கித்திணறி வார்த்தைகள் வர, கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள் ரூபா.

"I.. can't.  I just can't."

ஞாபகங்கள் மழைபோலத் தெளிக்க, அவளுடன் காதல்கொண்டு களித்த நாட்களின் நினைவுகளால், குற்ற உணர்வு மேலோங்கியது அவன் நெஞ்சில்.
'எத்தனை எளிதாக இவளை மறந்துவிட்டு இன்னொருத்தியிடம் காதல்செய்யத் தொடங்கிவிட்டோம்... மறக்கவே முடியாத முதல் காதல் என்றெல்லாம் நினைத்துவிட்டு, இப்போது இவளைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் போனது எப்படி? அப்போது நாம் உண்மையில் இவளைக் காதலிக்கவில்லையா என்ன? உண்மையாகக் காதலித்ததால்தான் இன்னும் மறக்காமல் என்னைத் தேடி வந்திருக்கிறாளோ இவள்??'

"ரூபா... அழாத. What happened?"

"திவா... என் உலகம் நீதான். உன்னைவிட்டு என்னால இருக்கவே முடியாதுடா.. உன் ஞாபகங்கள் என்னை தினம்தினம் கொல்லுதுடா. நீ கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னப்ப, என்னால நம்பமுடியல. நம்பவச்சு ஏமாத்திட்டியேன்னு உன்மேல கோபம், ஆத்திரம், எல்லாமே வந்துச்சு. நானும் ஈஸியா உன்னை மறத்துடலாம்னுதான் நினைச்சேன்... ஆனா முடியல. லவ்வால, டிப்ரெஷனுக்குப் போயி, தெரப்பி எல்லாம்கூட போனேன். கடைசியா போன தெரப்பிஸ்ட் தான், உன்னை ஒருதரம் பார்க்கசொன்னார் திவா. என் காதலுக்கு, நம்ம காதலுக்கு, உன்னையே ஒரு முடிவுரை எழுத சொன்னார். என் கண்முன்னாடி, முடிக்காத கதையா நிக்கற என் காதலுக்கு, ஒரு முடிவு வேணும். I need a closure."

அவள் தன்னிடம் காதலை எதிர்பார்த்து வரவில்லையெனப் புரிந்ததும் பெருமூச்செரிந்தான் அவன். மையல் கொண்டபோது ரூபாவிடம் கொண்டிருந்த அந்தப் பிணைப்பு எப்போதோ அற்றுப்போயிருக்க, ஆதியும் அந்தமுமாய் வானதி மட்டுமே மனதில் வானாகி நின்றாள். அந்நிலையில் அது அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

ஆயினும் அமெரிக்க வாழ்க்கையில் கிடைத்த முதிர்வான, முற்போக்கான பார்வையில், ரூபாவின் வலியும் அவனுக்குப் புரிந்தது. அவனும்தான் அந்த ஒரே நாளில் நரகவேதனையை அனுபவித்தானே... எனவே அவளை விலக்கிவிடாமல் ஆறுதலளித்து, தலையை வருடிக்கொடுத்தான்.

"ரூபா.. உன் வேதனை எனக்குப் புரியுது. எதையுமே நான் வேணும்னு செய்யல. வாழ்க்கைன்னா இதுதான் போல, நாம எதிர்பார்க்காத நேரத்துல அப்படியே தலைகீழா மாறிடும். என்னால உனக்கு நடந்த அநியாயத்துக்கு நான் எத்தனைதடவை மன்னிப்புக்கேட்டாலும் தீராது. நாம நிறைய பேசணும். ஆனா இப்ப இல்ல. எனக்குக் கொஞ்சம் டைம் குடு.  I promise I'll give us a proper closure."

"நீ... உனக்குக் கல்யாணம் ஆன.. அந்தப் பொண்ணை... விரும்பறயா?"
தயங்கித் தயங்கிக், கண்களில் ஒரு பயத்தோடு அவள் கேட்க, அவள் மனம் புண்படாமல் இதை எப்படிச் சொல்வதென அவனும் திணறினான்.

"உன்னைத்தவிர யாரையுமே நான் ஏத்துக்கமட்டேன்னு தான் நானும் நினைச்சிட்டிருந்தேன் ரூபா.. ஆனா, வான-- அவளை பார்த்து, பழக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே, அவளைப் பிடிச்சிப்போனது. அதை.. நான் எப்படி சொல்றதுனு... எனக்குத் தெரியல.."

"ஷ்ஷ்.. திவா.. எனக்குப் புரியுது. Indian customs and culture. ஒருத்தரை கல்யாண பந்தத்துல, வாழ்க்கைத்துணையா ஏத்துக்கிட்டா, அப்பறம் மனசாலகூட அவங்களுக்கு துரோகம் பண்ணக்கூடாது. நானும் ஒரு இந்தியப் பொண்ணுதான். I understand. என்மேலதான் தப்பு. என்னால இன்னும் உன்னை, உன் காதலை, கடந்துபோக முடியல. அதுக்குத்தான் உன்னைத் தேடிட்டு வந்தேன்."

"அதுசரி, எப்டி.. நான்.. இங்க இருப்பேன்னு... கரெட்க்டா வந்த நீ?"

"நான் ஏதோ வேகத்துல ப்ளைட் ஏறிட்டேன். உன்னை எப்படித் தேடப்போறேன்னு யோசிக்கவே இல்ல. வந்ததும் பாத்துக்கலாம்னு நினைச்சேன். இப்பதான் ஏர்ப்போர்ட்ல இருந்து வந்துட்டு இருந்தேன். எதார்த்தமா திரும்பிப் பாத்தப்பதான் உன்னைப் பாத்தேன். கடவுள் செயல்தான்! டக்குனு உன்னைப் பாத்ததும்... எமோஷனல் ஆகிட்டேன். சாரி திவா... உன்கூட நிறையப் பேசணும். நான் காத்திருக்கேன் உனக்காக. இங்கதான் 'Madurai Maroitt'ல எடுத்திருக்கேன். ரூமுக்குப் போனதும், நம்பர் தர்றேன். See you soon."

"Sure."

கையை அழுத்தி அவளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, சோர்வாகத் தன் காரை அடைந்தான் திவாகர். கனத்த இதயத்துடன் வீட்டுக்கு வந்து வானதியைத் தேடினான்.

அறைக்குள் அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள் வேகமாக, "வானதி நான் சொல்றதை--" என்றபடி வர, உள்ளே அவளுடன் பானுவும் ஹரிணியும் அமர்ந்திருக்க, அவனது வாக்கியம் முற்றுப்பெறாமல் அந்தரத்தில் நின்றது.

வானதி அவன் பக்கம்கூடத் திரும்பிடவில்லை. பிடிவாதமாக ஜன்னல்புறமே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் அவள்.

அவன் நிலைக்கொள்ளாமல் கால்களை மாற்றிக்கொண்டே நிற்க, பானு நிலமையை அறிந்து ஹரிணியை அழைத்துக்கொண்டு, "நாங்க அப்றம் வர்றோம் வானி... வா ஹரிணி.. அண்ணனும் அண்ணியும் பேசிட்டிருக்கட்டும்.." என நகர எத்தனித்தாள். வானதியோ ஹரிணியின் கையைப் பிடித்துக்கொண்டு, "பரவாயில்ல அக்கா. இருங்க" என அவனைப் பார்க்காமல் அழுத்தமாகக் கூறினாள். இருவரும் திவாகரையே தயக்கமாகப் பார்த்தபடி தவிக்க, திவாகரே அதுபுரிந்து அந்த சூழலைக் கலைக்கும்வண்ணம் வெளியேறிவிட்டான்.

"வானதி.. என்னாச்சு? காலைல போகும்போது நல்லாத்தான போனீங்க?"

பானு கரிசனத்துடன் கேட்க, வானதி பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு, "அ.. அதெல்லாம் ஒண்ணுமில்ல. பேசிட்டு இருக்கப்போ பாதியில எந்திரிச்சீங்களே.. அதான்.. இருக்கச்சொன்னேன்.." என்றாள். பானு அவளை நம்பாமல் பார்த்தாள். வரவழைத்த புன்னகையுடன் ஹரிணியிடம் திரும்பினாள் வானதி.

"என்ன.. என்கூட பேசறதுக்கு மேடம்க்கு நேரமில்லயா?"

ஹரிணி தயக்கமாக சிரித்தாள்.
"அதெல்லாம் இல்ல அண்ணி... உங்க பொறந்தநாளுன்னு, அம்மா பாயாசமெல்லாம் செஞ்சிருக்காங்க அண்ணி.. வாசனை தூக்குது. சாப்பிடப் போலாமா?"

சரியென எழுந்து மூவரும் சாப்பிடச் சென்றனர். மீனாட்சியும் வேதாசலமும் அவளைப் பரிவுடன் அழைத்து அமரவைத்தனர். அவனோ அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு ஏக்கமாக அமர்ந்திருக்க, மற்றவர் அனைவரும் பார்த்தாலும் வானதி பார்க்கவில்லை.

"வாம்மா.. பரீட்சை எப்படி இருந்துச்சு? நல்லா எழுதினயா? முதல் பரீட்சையாச்சே... ஈஸியா இருந்துச்சா? தப்பில்லாம எழுதினயா?"

"ம்ம்.. எழுதினேன் மாமா."

அவள் சோர்வாக இருப்பதைப் பார்த்தவர்கள், பரீட்சையில் ஏதோ சிரமமென்று நினைத்துக்கொண்டனர். அதைப்பற்றிப் பேசாமல் தவிர்த்தவர்கள், வேறு கதைகளைப் பேச, தப்பித்தவறியும் தன்னருகில் அமர்ந்திருந்தவனிடம் ஒருகணமும் கவனம்செலுத்தவில்லை அவள். அவனை இன்னும் ஒருகணம் பார்த்தால் நெஞ்சில் மிச்சமிருக்கும் ஜீவனும் மடிந்துவிடுமென பயந்ததுபோல், உணவருந்திய பின்னரும் அறைக்குள் செல்லாமல் ஹரிணியை அழைத்துக்கொண்டு தோட்டத்தில் உலவச் சென்றுவிட்டாள் வானதி.

பின் மாலை முழுவதும் பின்கட்டில் அமர்ந்துகொண்டே அடுத்தநாள் தேர்வுக்கான பாடங்களைத் திருப்பத் தொடங்கினாள். இரவு உணவுக்குப் பின்னர் அதற்குமேல் தவிர்க்கமுடியாமல் வானதி தன்னறைக்குள் செல்லவேண்டியதாயிற்று.

பொறுமையின்றி அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான் திவாகர். அவள் வந்ததும் வேகமாகக் கதவைப் பூட்டிவிட்டு, "நான் என்ன சொல்லவர்றேன்னு கொஞ்சம் கேட்டாதான் என்ன?" என்றான் அடிக்குரலில். வானதியின் பாராமுகம் தந்த தவிப்பும், ரூபாவிடம் செய்திருந்த சத்தியத்தினால் விளைந்த பதற்றமும் அவ்வாறு வெளிப்பட்டதை அவனாலும் தடுக்க இயலவில்லை.

அலட்சியமாக அவனை விலக்கிவிட்டு நகர முயன்றவளை, கையைப்பிடித்து இழுத்து சுவரோடு சேர்த்து நிற்கவைத்தான் அவன். திடீரென இவ்வளவு வேகத்தை எதிர்பாராமல் திகைத்தாலும், குறையாத கோபத்துடன், "கையை விடப்போறயா, இல்லையா?" என உறுமினாள் அவள்.

"உன்கூடப் பேசணும்."

"ப்ச்.. தேவையில்ல. விடு என்னை!"

கையை அழுந்தப் பற்றியிருந்த அவன் கரத்தை விலக்கி விடுபட முயன்று முயன்று தோற்றாள் அவளும். ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகும் அவனது பிடி இறுகத்தான் செய்தது.

அவளது கோபத்தை ரசிப்பதுபோல் அவளை நெருங்கி வந்து அணைப்பாக நின்றான் அவன்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro