Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

1

வேறே கொத்த பூமி பை உன்னானா....
ஏதோ விந்த்த ராகமே விண்ணானா...
வேறே கொத்த பூமி பை உன்னானா....
ஏதோ விந்த்த ராகமே விண்ணானா...
பலிகே பால கூவதோ.. குலிகே பூல கொம்மதோ.. கசிரே வெண்ணிலம்மதோ.. ஸ்னேகம் சேஸா...

மாலை மங்கத் தொடங்கிய நான்கு மணி வேளையில், காரில் அந்தத் தெலுங்குப் பாடல் மென்மையாக ஒலித்துக் கொண்டிருக்க, அதனோடு தாளம் தவறி, வார்த்தையும் சரியாக வராமல் ஏதோ உளறிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் அந்த இருபத்தாறு வயது இளைஞன்.

"டேய் டேய்...காது கிழியுது...எதுக்குடா புரியாத பாட்டுப் போட்டு நீயும் தப்புத் தப்பா பாடி உயிரெடுக்கற... தமிழ் பாட்டு தான் வையேன்!"

அருகில் அமர்ந்திருந்து அர்ச்சனை பண்ணியவர் அவன் அம்மா.

அதை லட்சியம் செய்யாமல் மேலும் கர்ணகொடூரமாக உச்சஸ்தாயியில் அவன் இழுத்துப் பாட, அவன் அம்மா காதைப் பொத்திக்கொண்டு திரும்பி 'பார்த்தீங்களா?' எனத் தன் கணவனுக்கு ஜாடை காட்டினார்.

"விடு விடு.. தமிழ்ப் பாட்டைப் பாடி அதையும் கொலை பண்ணாம இருக்கானே.. அதுவரைக்கும் சந்தோஷம். நான் பெத்த மகனே, கொஞ்சம் வேகமாப் போடா.. நாம போறதுக்குள்ள ட்ரெயின் வந்துடப் போகுது.."

"ஏன்ப்பா.. எவ்ளோ ரம்மியமான சாங் இது... மெலடிய ரசிச்சிட்டே ஸ்லோவா போகாம, வேகமாப் போ, வேகமாப் போன்னு இப்டி டார்ச்சர் பண்றீங்களே? உங்க யாருக்குமே இசை ரசனையே கிடையாதா??"

அவன் தந்தை 'அடேங்கப்பா..' என்பதுபோல் ஆயாசமாகப் பார்த்தார்.

"ம்க்கும்.. இந்த வேகத்துக்குப் போகணும்னா நேத்து சாயங்காலமே கிளம்பியிருக்கணும். இளவட்டமாச்சே, கொஞ்சம் வேகமா ஓட்டுவியேன்னு உங்கப்பா உன்கிட்ட காரைக் குடுத்தா, நீ மாட்டுவண்டிக் கணக்கா ஓட்டுறயே??"

தன் பங்கிற்கு அவனது அன்னையும் பொரிந்து தள்ள, இருவரையும் முறைத்தபடி கியரை மாற்றி வேகமேற்றினான் அந்த ஆடவன்.

"என்னவோ இங்கிலாந்து மகாராணியே வந்து இறங்கற மாதிரி இவங்க குடுக்கற அலப்பரை இருக்கே! ஏம்மா? அந்த குட்டி ராட்சசி வர்றதுக்கு வண்டி அனுப்புனா பத்தாதா? நாமளே குடும்பமா போய் வரவேத்தா தான் அந்த அறுந்தவாலு வருவாளா?"

"அடி வாங்குவ படுவா! அவளே வருஷத்துக்கு ஒருதடவை தான் ஊருக்கே வர்றா.. புள்ளைய ஸ்டேஷனில போய் கூட்டிட்டு வராம, ஆள் அனுப்புவானாம்... வண்டி அனுப்புவானாம்... ஏன், தொறைக்கு அதவிட முக்கியமான வேலை என்னவோ?"

"ம்ம்.. அவளாவது ஒழுங்கா படிச்சு இப்ப ஐ ஏ எஸ் பரிட்சைக்குப் படிச்சிட்டு இருக்கா. நீ இன்னும் என்கூட சேர்ந்து ஊரு சுத்திட்டு தானடா இருக்க?"

அம்மாவும் அப்பாவும் ஒருசேரத் தங்கள் மகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வர, இவர்களிடம் வாயைக் கொடுத்து வாழ முடியாது என்று புரிந்துகொண்டு சரணாகதி ஆனான் அவன்.

உள்ளுக்குள் ஒரு வருடமாகப் பிரிந்திருக்கும் தங்கையைக் காணும் ஆர்வம் அலாதியாக இருந்தாலும், வெளியே அக்மார்க் அண்ணன்போல் அவளைத் திட்டிக்கொண்டும் குறைகூறிக் கொண்டும் மட்டுமே இருப்பான் அவன்.

பெற்றோரும் தம்மக்கள் இருவர்மீதும் சமமான அன்பு கொண்டிருந்தாலும், மூத்தவனிடத்தில் கண்டிப்பாகவும் இளையவளிடத்தில் பாசமாகவும் இருப்பதுபோல் காட்டிக்கொள்வர்.

சிரிப்புப் பேச்சுக்களுடன் சிவகங்கை நகரத்து ரயில் நிலையத்துக்கு அவர்களது கார் விரைந்து கொண்டிருக்க, சட்டென ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் ஒரு திருப்பத்தில் அதிவேகமாக வந்த லாரி இவர்களை மோதிச் சாய்க்க, நிலையிழந்து சாலையை விட்டுக் கீழே கவிழ்ந்தது கார்.

புழுதி பறக்க, காரின் கண்ணாடிகள் அழுத்தத்தினால் உடைந்து நொறுங்க, நிலையிழந்து உள்ளே அமர்ந்திருந்த மூவரும் அலறினர்.

அதிர்ச்சி தந்த மயக்கத்தில் அன்னையும் தந்தையும் இருக்க, கால் ஆக்ஸிலேட்டரில் சிக்கிக்கொள்ள, தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

உடலெங்கும் காயம்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருக்க, வரண்ட நாவும் சுழலும் கண்களும் அவனை இழுக்க மூச்சைத் திரட்டி பயங்கரமான கத்தலுடன் உதவிக்குரல் எழுப்பினான் அவன்.

உடைந்திருந்த கண்ணாடி வழியே அவன் நிமிர்ந்து பார்த்தபோது, கண்மூடும்முன் கடைசிக் காட்சியாய் தங்களை இடித்த வாகனம் மீண்டும் அதிவேகத்தில் தங்களை நோக்கி விரைவதையே கண்டான்.

****************************

அங்கிருந்து சுமார் பத்து மைல் தொலைவில், ஆளரவமற்ற சிவகங்கை ரயில் நிலையத்தில் தான் மட்டும் தனியாக, மாலை இருள் சூழும் நேரத்தில், தன்னை அழைக்க வரும் குடும்பத்தாருக்காகக் கைக்கடிகாரத்தையும் ஸ்டேஷன் வாசலையும் மாறிமாறிப் பார்த்தபடி காத்திருந்தாள் வானதி.

_________________________________

Welcome and Thanks to all readers of மெய்மறந்து நின்றேனே, யாதுமாகி, தாரமே தாரமே, and வண்ணங்கள் உன்னாலே.

Also, the fresh readers who read this book first, welcome.

My name is Madhu_dr_cool.
A medico by chance, and a writer by choice.

Started writing since New Year 2020, maybe that's why this year sucks like this🤣

To the people who are genuinely interested in my stories, you are ALWAYS welcome to advocate for your favourite characters and story parts with me. You can even fight and argue with me, I promise I'll never mind. But people who are here just to waddle, please don't impose your authority on me. I update whenever I feel like updating.

பணிகளுக்கிடையே ஒரு மாறுதலுக்காக நான் எடுத்த துறையே இந்த எழுதும் வேலை. நான் முழுநேர கதாசிரியர் அல்ல என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். எனவே அத்தியாயங்களுக்காக அவசரப்படுத்தும் வேலை வேண்டாம். எனக்காக நான் எழுதுகிறேன். நீங்களும் படிக்கலாம். அவ்வளவே!

Without further ado, let's get into the story....

முதல்முறை ஒரு மர்மமான கதைத்தலத்தை எடுத்திருக்கிறேன். (ஹாரர் கிடையாது. ஜஸ்ட், சஸ்பென்ஸ் மட்டும்தான்) லைட்டான கதைதான். கூடவே கொஞ்சம் பெண்ணியமும், காதலும். (வழக்கம்போல!)

வழக்கம்போலவே எழுத்துப்பிழைகள் இருக்காது. எனக்கு சிவகங்கை, மதுரை பாஷை அவ்வளவா தெரியாது. (நம்ம கோயமுத்தூருங்கோ!!) சோ, மதுரை ஸ்லாங் தெரிஞ்சவங்க, please dm me and help!!

புது முயற்சி, எனவே கண்டிப்பாக படித்துவிட்டுக் கருத்துக்களைச் சொல்லவும்! நன்றி!

Madhu_dr_cool

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro