Part 60
பாகம் 60
குமணன் மற்றும் கல்பனாவின் இறுதிச்சடங்குகள் முடிந்தது. அனைவரும் ரிஷியுடன் குமணன் இல்லத்திலேயே தங்கினார்கள். இறுதி சடங்கு முடிந்த உடனேயே வீட்டை பூட்டி போட கூடாது என்பதால் ரிஷியுடன் இருக்க நினைத்தான் நிமல். அந்த வீடு, ரிஷிக்கு சொந்தமானது என்பதால் அதை பராமரிக்க லட்சுமியையும் ராமுவையும் நியமித்தான்.
அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்லும் முன், குமணனின் சொத்துக்களையும், பொறுப்புகளையும் வர்ஷினியிடம் ஒப்படைக்க வந்தார் குணசேகரன்.
"ரிஷி மைனர் அப்படிங்கிறதால, எல்லா பொறுப்புகளையும் நீ தாம்மா டேக் ஓவர் பண்ணணும்" என்றார் வர்ஷினியிடம்.
"அம்மா ரூம்லயிருந்து எனக்கு ஒன்னு கிடைச்சிருக்கு அங்கிள்" என்றாள் வர்ஷினி.
"என்னது மா?"
குமணன் கையெழுத்துடன் இருந்த முத்திரைத் தாள்களை குணசேகரனிடம் கொடுத்தாள் வர்ஷினி. தன் கண்களை சுழற்றினான் நிமல்.
"பிளாங்க் பேப்பர்ஸா...? அதுவும் குமணன் கையெழுத்தோடவா...?" தன் கண்களையே நம்ப முடியவில்லை குணசேகரனால். அதே நம்பமுடியாத பார்வையுடன் வர்ஷினியை பார்த்தார்.
"ஆனா, அவர் எதுக்காக, ஸ்டாம்ப் பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டு வைக்கணும்?"
"எனக்கும் ஒன்னும் புரியலை அங்கிள். அவங்களோட சொந்த தேவைக்காக, அம்மா அவர்கிட்ட கையெழுத்து வாங்கியிருக்கலாம்னு நினைக்கிறேன்"
அமைதியானார் குணசேகரன். அவருக்கு கல்பனாவை பற்றி நன்றாகவே தெரியும்.
"இப்போ நான் என்ன செய்யணும்?" என்றார் குணசேகரன்.
வர்ஷினி எதுவும் கூறுவதற்கு முன்,
"எல்லா சொத்தையும் மாமா பேர்ல எழுதிடுங்க" என்றான் ரிஷி.
அங்கிருந்த அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள் என்று கூறத் தேவையில்லை.
"மாமாவோட பேர்லயா? எதுக்கு?" என்றார் குணசேகரன்.
"ஏன்னா, எல்லா சொத்தும் எங்க மாமாவுடையது தான். எங்க அப்பா, அவங்க அப்பாகிட்டயிருந்து எல்லாத்தையும் திருடிக்கிட்டாரு. அவங்களையும் கொன்னுட்டாரு"
அதைக்கேட்டு திடுக்கிட்டார் குணசேகரன். நிமல், குருபரனின் மகனா?
"ஆமாம் அங்கிள். ரிஷி சொல்றது உண்மை தான்" என்றாள் வர்ஷினி.
"அப்படின்னா இவரு, குருபரனோட மகன் நிமலனா?"
ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"இதை ஏன் நீங்க முன்னாடியே சொல்லல?" என்றார் நிமலிடம்.
நிமல் எதுவும் சொல்வதற்கு முன்,
"அவருக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாது, அங்கிள்."
"அப்போ உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றார் குணசேகரன் வர்ஷினியிடம்.
"நிமல் சுடப்பட்ட அன்னைக்கு, அம்மாவும் அப்பாவும் பேசினதை ரிஷி கேட்டிருக்கான்."
"நீங்க உண்மையிலேயே குருபரனோட மகனா?"
ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.
"அவருடையதை அவர்கிட்டயே கொடுத்துடுங்க" என்றான் ரிஷி.
"என்னை தப்பா எடுத்துக்காதீங்க. இதெல்லாம் வழக்கமாக செய்ற ஃபார்மாலிட்டிஸ் தான். எனக்கு கொஞ்சம் டைம் வேணும். ஏன்னா, இது கோடிக்கணக்கான சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு வக்கீலா, நான் அதை செஞ்சி தான் ஆகணும்." என்றார் குணசேகரன்.
"அவர் உண்மையிலேயே குருபரனோட மகன் தானான்னு நீங்க செக் பண்ண போறீங்களா?" என்றாள் வர்ஷினி.
"அதை நான் கெஞ்சி தான் மா ஆகணும்"
"குருபரன் அங்கிளுடைய பவர் ஆஃப் அட்டர்னியை, எங்க அப்பா உங்ககிட்ட கொடுத்தப்போ, அப்பவும் நீங்க செக் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும்..."
"அது சட்டப்படி சரியா இருந்தது"
"அவர் செக் பண்ணட்டும்" என்றான் நிமல்.
"ஸாரி நிமல். நீங்க தான் குருபரன் மகன்னு எனக்கு திடமான ப்ரூஃப் வேணும்"
"உங்களுக்கு எவ்வளவு டைம் வேணுமோ எடுத்துக்குங்க குணசேகரன் சார்" என்று சற்றே நிறுத்தியவன்,
"உங்க பொண்ணு சுபாவை கேட்டேன்னு சொல்லுங்க. என்னை அவ மறந்திருக்கலாம். ஆனா, அவளுடைய பர்த்டேக்கு நான் கிஃப்ட்டா கொடுத்த என்சைக்ளோபீடியா புக்கை அவ இன்னும் பத்திரமா வச்சிருப்பான்னு நினைக்கிறேன்..." என்றான்.
அதைக் கேட்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு போனார் குணசேகரன். ஏனென்றால், அது அவர்கள் மூவருக்கும் இடையில் மட்டுமே நடந்த ஒன்று. நிமல் அவருடைய மகளுக்கு பரிசளித்த விஷயம், அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதற்கு அடுத்த நாள் தான், அவர்கள் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா கிளம்பிச் சென்றார்கள். அதன் பிறகு, அவர்கள் திரும்பி வரவே இல்லை. வேக நடை நடந்து சென்று நிமலை அணைத்துக்கொண்டார் குணசேகரன்.
"எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. நீ நிமலனே தான்... இதையெல்லாம் நான் விதின்னு சொல்லாம வேற எப்படி சொல்றது?" என்று நா தழுதழுத்தார்.
"அப்பாடா... இனிமே உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எல்லாத்தையும் எங்க மாமா பேர்ல எழுதுங்க" என்றார் ரிஷி.
சரி என்று சந்தோஷமாய் தலையசைத்தார் குணசேகரன்.
"வேண்டாம், அங்கிள். அப்படி செய்யாதீங்க" என்றான் நிமல்.
"ஏன், மாம்ஸ்?"
"இரு, ரிஷி... "
"நிமல்..." என்ற வர்ஷினியை கையமர்த்தினான்.
"நீங்க தான் எங்க அப்பாவுக்கும் லாயரா இருந்தீங்க"
"ஆமாம்" என்றார் குணசேகரன்.
"அப்போ எங்களுக்கு இருந்த சொத்து மதிப்பு உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே"
ஆமாம் என்று மறுபடியும் தலையசைத்தார்.
"எங்க அப்பா இறந்த ப்போ, எங்களுக்கு இருந்த சொத்து மதிப்பு எவ்வளவுன்னு உங்களால சொல்ல முடியுமா?"
"கிட்டத்தட்ட நானூறு கோடி"
"எங்க அப்பாவை குமணன் ஏமாத்திட்டார், அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, அதே நேரம், அவர் ஒரு கடுமையான உழைப்பாளி அப்படிங்கிற உண்மையையும் நம்ம ஒதுக்கி தள்ள முடியாது. அந்த உழைப்பால தான், எங்களுடைய சொத்தை அவரு மூன்று பங்கா பெருகியிருக்காரு."
"சந்தேகமில்லாம..." என்றார் குணசேகரன்.
"அதனால, அந்த 400 கோடி போக மிச்ச சொத்தை, ரிஷி பேர்ல எழுதுங்க. அவன் மேஜர் ஆகுற வரைக்கும், வர்ஷினி அவனுடைய கார்ட்டினா இருப்பா"
பெருமூச்சுவிட்டாள் வர்ஷினி.
"அப்போ அக்காவுக்கு ஷேர் இல்லயா?" என்றான் ரிஷி.
வர்ஷினி, நிமலை பார்க்க,
"எங்களுக்கு எந்த ஷேரூம் வேண்டாம்"
"ஏன் மாம்ஸ்? அக்காவுக்கும் எல்லா ரைட்ஸும் இருக்கு"
"மாமா சொல்றது சரி தான். எங்ககிட்ட இருக்கிறதே போதும்" என்ற வர்ஷினி,
அவள் குணசேகரன் பக்கம் திரும்பி,
"நிமல் சொன்ன மாதிரியே செஞ்சுடுங்க, அங்கிள்" என்றாள்.
சரி என்று தலையசைத்தார் குணசேகரன்.
"இருங்க, அங்கிள்" என்றான் ரிஷி.
"இப்போ என்ன?" என்றாள் வர்ஷினி.
"எங்க அப்பா, இவங்க சொத்தை பயன்படுத்தி தான், அதை மூனு பங்காக பெருக்கினார்... கிட்டத்தட்ட நானூறு கோடி...! அந்த நானூறு கோடிக்கு எவ்வளவு இன்டர்ஸ்ட் வருமோ, அதை பதினோரு வருஷத்துக்கு கால்குலேட் பண்ணி மாமாவோட ஷேர்ல சேத்துடுங்க"
அனைவரும் வாயடைத்து போனார்கள். புன்னகை புரிந்தார் குணசேகரன்.
"அவன் குமணனுடைய மகன் ஆச்சே..." என்றார்.
"என்னை எங்க அப்பா கூட கம்பேர் பண்ணாதீங்க, அங்கிள். அவர் யாருக்கும் சல்லிக் காசு கொடுக்க மாட்டாரு. அதை மறந்துடாதீங்க" என்று ரிஷி சொல்ல,
சங்கடமாகிப் போனது குணசேகரனுக்கு. பிள்ளைகள் உண்மையை பேச தயங்குவதில்லை. உள்ளூர சிரித்துக்கொண்டான் நிமல். குமணன் எவ்வளவு தான் குருரமானவராக இருந்தாலும், அவருடைய பிள்ளைகள் சொக்கத்தங்கங்கள்.
"ஒரு நிமிஷம், அங்கிள்" என்றான் நிமல்.
"சொல்லுங்க" என்னுடைய ஷேரை வர்ஷினி பேர்ல எழுதுங்க.
அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வர்ஷினி.
"வேண்டாம் நிமல். அது உங்க குடும்ப சொத்து..." என்றாள் அவசரமாக.
"நீ என் குடும்பம் இல்லயா?" என்றான்.
"நான் அப்படி சொல்லல"
"நம்ம ரெண்டு பேர்ல, யாரு பேர்ல இருந்தாலும் எந்த வித்தியாசமும் இல்ல"
புன்னகையுடன் நின்றிருந்தார் குணசேகரன்.
"நிமல் சொன்ன மாதிரியே, சொத்துக்களை பிரிச்சி, நான் வர்ஷினிகிட்ட கொடுக்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றார் குணசேகரன்.
லட்சுமிக்கு சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு, அனைவரும் இனியவர்களின் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள்.
"நீங்க செஞ்சது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்றாள் வர்ஷினி.
"நான் என்ன செஞ்சேன்?"
"ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க"
"நான் ஏற்கனவே சொன்னேன் நம்ம ரெண்டு பேருக்குள்ள எந்த வித்தியாசமும் இல்ல. நீ இப்போ, கான்ஃபிடன்டா ஃபீல் பண்ணலன்னு சொல்லு?"
"நீங்க என்னோட வாழ்க்கையில வந்ததுல இருந்தே நான் கான்ஃபிடன்டா தான் இருக்கேன். நீங்க தான் என்னுடைய நம்பிக்கை... பணம் இல்ல..."
"நான் தோல்வியை ஒத்துக்கிறேன்" என்று சிரித்தான் நிமல்
"நீங்க குணசேகரன் அங்கிளை, அவரோட பொண்ணுக்கு கொடுத்த கிஃப்ட்டை பத்தி சொல்லி, லாக் பண்ணிங்க பாருங்க, அந்த இடம் சூப்பர்" என்றாள் வர்ஷினி.
"நான் நடந்ததை சொன்னேன்"
"அவரோட பொண்ணு உங்களுக்கு ஃபிரண்டா?"
"ஆமாம். அப்போ நாங்க எல்லாரும் சேர்ந்து விளையாடுவோம்"
"அவளை சந்திக்கணும் உங்களுக்கு தோணலையா?"
"நான் ட்ரை பண்ணேன். ஆனா, அவ எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சதுக்கு அகப்புறம் அவளை சந்திக்க எனக்கு தோணல"
"எப்படிப்பட்டவ?"
"சின்ன வயசுல அவ ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா. இப்போ, வேற மாதிரி ஆயிட்டா"
"வேற மாதிரின்னா?"
"ஆம்பளைங்களோட சுத்திகிட்டு இருக்கா"
"அவளுடைய ஃபிரண்ட்ஸா இருக்கலாம் இல்ல?"
"அவங்க அவளுடைய ஃபிரண்ட்ஸ் இல்ல"
விழி விரிய அவனைப் பார்த்தாள் வர்ஷினி.
"எல்லார்கிட்டயும் ஓட்டிக்கிறா... ரொம்ப சாதாரணமா படுக்கையே ஷேர் பண்றா..."
"என்னது?" என்றாள் அதிர்ச்சியாக
"அதனால அவகிட்ட பேசுற எண்ணத்தை நான் மாத்திக்கிட்டேன்."
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு,
"நல்ல காலம் நீங்க உங்க எண்ணத்தை மாத்திகிட்டீங்க"
"நான் மாத்திக்காம இருந்திருந்தா என்ன?" என்றான் வேண்டுமென்றே.
"என்னது...? என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கு தெரியாதா?"
"என்ன நடந்திருக்கும்?"
அவன் கன்னத்தில் பட்டென்று அறைந்தாள்.
"அவ மத்தவங்க கூட படுகைய ஷேர் பண்றா... அதனால உன் புருஷனும் அதை செய்வான்னு அர்த்தமில்ல. அவளுக்கு வேணா, அது ரொம்ப சாதாரணமான விஷயமா இருக்கலாம். எனக்கு அப்படி இல்ல. அது என் பொண்டாட்டிக்கு மட்டும் சொந்தமான எமோஷன். புரிஞ்சுதா?"
புரிந்தது என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"சரி வா தூங்கலாம்"
"வேண்டாம்"
"ஏன்?"
"மிஸ்டர் நிமலன்... நான் இப்போ உங்க கூட படுகைய ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்"
அவள் திடமான முகபாவத்துடன் பேச முயன்றதை பார்த்து கலகலவென சிரித்தான் நிமல்.
"இது ஆர்டரா மேடம்?"
"ஆமாம்... என்னை யாருன்னு நினைச்சீங்க? என் பேர்ல ஐநூறு கோடி இருக்கு தெரியுமா?"
"ஓ அப்படியா?"
"ஆமாம். என்னோட பைத்தியக்கார புருஷன் தான் எழுதி வச்சான்"
"நான் பைத்தியக்காரனா?"
"இல்லயா? யாராவது ஒரே மூச்சில... ஐநூறு கோடியை எழுதி வைப்பாங்களா?"
"ஏன் மாட்டாங்க? அவன் ஐநூறு கோடியை விட, தன் மனைவியை அதிகமா மதிக்கிறவனா இருக்கலாம். நான் ஏற்கனவே சொன்னேன். நீ தான் என்னோட சொத்து"
வர்ஷினி உணர்ச்சிவசப்பட்டாள் என்று கூறத் தேவையில்லை. அவள் கண்கள் சட்டென்று கலங்கியது.
"ஷ்... நீ அழுததெல்லாம் போதும். அழுகையை நிறுத்து"
"நான் இதுக்கெல்லாம் தகுதியானவளான்னு எனக்கு தெரியல"
"நான் செஞ்சது, உன்னோட கண்ணீருக்கு ஈடாகுமா?"
"ஆகும்... " என்றாள் கண்ணீரை துடைத்தபடி.
"நான் உங்க கூட படுக்கையை ஷேர் பண்ணிக்கலாமா மேடம்?" என்றான் நிமல்.
களுக்கென்று சிரித்து விட்டு, அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தாள் வர்ஷினி.
மறுநாள் காலை
வழக்கம் போல அலுவலகத்திற்கு தயாராகி கீழ்தளம் வந்தான் நிமல்.
"நான் அமெரிக்கா கிளம்பறேன்" என்றாள் அனு.
"எப்ப கிளம்புற?" என்றான் நிமல்.
"நாளன்னைக்கு"
"மறுபடியும் எப்ப இந்தியா வர போற?" என்றாள் வர்ஷினி.
"எப்ப வரப் போறேன்னு தெரியல"
"என்னை மாதிரி அழகான பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு, இந்தியாவிலேயே இருந்துடு" என்றான் ஆகாஷ்
"இது புது விதமான ப்ரபோஸலாயிருக்கே" என்று சிரித்தாள் வர்ஷினி.
"நான் சும்மா தான் சொன்னேன்" என்று அசடு வழிந்தான் ஆகாஷ்.
"கிளம்பறதுக்கு முன்னாடி, ராஜாவைப் பார்க்க மறக்காதே" என்றான் நிமல்.
"இன்னைக்கு லஞ்சுக்கு கூப்பிடிருக்கான். நீயும் நேரா அங்க வந்துடு"
"ஷ்யூர்"
"அம்மா, நீங்களும் எங்க கூட வாங்க" என்றாள் வர்ஷினி பார்வதியிடம்.
"பரவாயில்லடா... நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க"
"நான் வந்து உன்னை கூட்டிக்கிட்டு போகவா?" என்றான் நிமல் வர்ஷினியிடம்.
"ஹலோ நிம்மு... நாங்க எல்லாம் இங்க இருக்கோம். அதை மறக்காதே. உன் பொண்டாட்டிய நாங்க விட்டுட்டு வந்துட மாட்டோம்" என்றான் ஆகாஷ்.
"அவர் பொண்டாட்டிய அவர் கூட்டிட்டு வரணும்னு நினைக்கிறார்" என்றாள் சுதா.
"யு ஆர் ரைட்" என்றான் நிமல்.
"நீயே கூட்டிக்கிட்டு போப்பா உன் பொண்டாட்டிய" என்றான் பிரகாஷ்.
"பரவாயில்லை நிமல். நான் அவங்க கூடவே வரேன்" என்றாள் வர்ஷினி.
"ஓகே. உங்க எல்லாரையும் ராஜா வீட்ல பார்க்கிறேன்."
வர்ஷினியை பார்த்து, நான் கிளம்புகிறேன் என்று அவன் ஜாடை செய்ய சரி என்று புன்னகைத்தாள் வர்ஷினி.
அப்பொழுது அவர்கள்,
"நிமல்ல்ல்ல்ல்..." என்ற புதிய குரலைக் கேட்டு, வாசல் பக்கம் திரும்பினார்கள்.
பென்சில் ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ், லோ கட் டாப்ஸும் அணிந்திருந்த ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் யார் என்று யாருக்கும் தெரியவில்லை, நிமலை தவிர. அவள் குணசேகரனின் மகள் சுபா. சிரித்தபடி நிமலை நோக்கி ஓடிச்சென்று, அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள் அந்தப் பெண்.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro