Part 53
பாகம் 53
"நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்" என்றார் பார்வதி.
அதைக் கேட்டவுடன் நிமலின் முகம் மலர்ந்தது. பார்வதி நிமலின் பக்கம் திரும்பி,
"நான் வர்ஷினியையும் கூட்டிகிட்டு போலாம்னு இருக்கேன். என்ன சொல்ற?" என்றார்.
நிமலுக்கு நன்றாக தெரியும், பார்வதி வேண்டுமென்றே தான் தன்னை வம்புக்கு இழுக்கிறார் என்று.
"நீயும் அம்மா கூட போயிட்டு வா, வர்ஷு..." என்றான் சர்வசாதாரணமாக அதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல.
"ஆனா, நிமல் தனியா இருப்பாரு, மா. அடுத்த தடவை நானும் நிமலும் உங்க கூட வறோம்... சரி தானே நிமல்...?" என்றாள் வர்ஷினி.
"யா... ஷ்யூர்" என்றான் விழிகளை விரித்தபடி.
சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் பார்வதி. அவரை பின்தொடர்ந்தாள் வர்ஷினி.
"வர்ஷு..."
"சொல்லுங்க, நிமல்"
"நீ என்னோட காயத்துக்கு டிரஸ்ஸிங் பண்ணி விடவே இல்லயே..."
"நான் எப்பவும் சாயங்காலதுல தானே செய்வேன்..." என்றாள் முகத்தை சுருக்கி.
"ம்ம்ம்"
"உங்களுக்கு ஏதாவது வேணுமா?"
"ஆரஞ்சு ஜூஸ்..."
"கொண்டு வரேன்"
சமையல் அறைக்கு சென்ற வர்ஷினி, சிறிது நேரத்தில் ஆரஞ்சு பழ சாற்றுடன் திரும்பி வந்தாள். அதை நிமலிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது,
"நீ இப்போ ஃப்ரீயா இருக்கியா, வர்ஷ?" என்றான் சீரியசாக.
"என்னங்க விஷயம்?"
"எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். கொஞ்சம் வர முடியுமா?"
"ரொம்ப அவசரமா?"
"ஆமாம். அவசரம் தான்"
"அம்மா கோவிலுக்கு போறாங்க. அதுக்கப்புறம் நான் ஃப்ரீயா தான் இருப்பேன். அவங்களை அனுப்பிட்டு வரேன்"
"ஓகே. சீக்கிரம் வா"
அவள் அங்கிருந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போது அவன் கூறியதை கேட்டு நின்றாள்.
"நான், உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன்" என்றான்.
அவனை நோக்கித் திரும்பி, அழகிய புன்னகையை அவன் மீது வீசி விட்டு சென்றாள் வர்ஷினி. அப்படி என்ன உதவி நிமலுக்கு தேவைப்படுகிறது என்று எண்ணியபடி, கீழ் தளம் வந்தாள் வர்ஷினி. ஒருவேளை அது அலுவலகம் சம்பந்தப்பட்டதாக இருக்குமோ...? இருக்கலாம்.
கோவிலுக்கு செல்ல தயாரானார் பார்வதி. அவரிடம் பூக்கூடையை வழங்கி, அவரை வழியனுப்பி வைத்தாள் வர்ஷினி. நிமல் கேட்ட உதவியை செய்ய, அவர்கள் அறையை நோக்கி விரைந்தாள்.
கண்களை மூடி படுத்திருந்தான் நிமல். வர்ஷினி கதவை சாத்தி தாளிட, கண் திறந்தான்.
"என்ன ஹெல்ப் உங்களுக்கு வேணும்?" என்றாள்.
"முதல்ல இங்க வந்து என் பக்கத்துல உட்காரு"
வர்ஷினி அவன் பக்கத்தில் அமர, அவனும் எழுந்து அமர்ந்து கொண்டான்.
"நீங்க எதுவா இருந்தாலும் படுத்துகிட்டே சொல்லலாமே..."
அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் வர்ஷினி. அவள் முகத்தில் வந்து விழுந்த குழல் கற்றையை, அவன் ஒதுக்குவதை அவள் உணர்ந்தாள். அவன் எதற்காக தன்னை அழைத்தான், அவனுக்கு தன்னிடமிருந்து என்ன உதவி தேவைப்படுகிறது என்று எதுவும் கூறாமல் அமைதியாய் இருந்த நிமலை நோக்கி, மெல்ல தன் கண் இமைகளை உயர்த்தினாள். அவன் தன் விரலால் அவள் காது மடலை வருடி கொடுத்தான்.
"நி... மல்... நீங்க ஏதோ ஹெல்ப் கேட்டீங்க..." என்று திணறினாள்.
மெல்ல அவள் காதருகில் குனிந்து, ரகசியமாய்,
"உன்கிட்ட இருந்து எனக்கு இந்த ஹெல்ப் தான் வேணும்..." என்ற
அவனை திகைப்புடன் ஏறிட்டாள் வர்ஷினி.
"உன்னுடைய நெருக்கம்... நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் ரொம்ப மிஸ் பண்ணது... என் பக்கத்திலேயே இரு, வர்ஷு..."
மெல்ல தன் கன்னத்தை அவள் கண்ணத்தில் உரசினான். வர்ஷினிக்கு ஆயிரம் வாட் மின்சாரம் பாய்வது போல் இருந்தது. அவள் இடையை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்துக்கொண்டான்.
"டாக்டர்... உங்களை... ரெஸ்ட் எடுக்க சொன்னார்..." என்று அவனுக்கு நினைவூட்டினாள்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும், ரெஸ்ட்லெஸ்ஸா இருந்த நான், இப்போ ரெஸ்டில் தான் இருக்கேன்... உன்னுடைய நெருக்கம் என்னை ரெஸ்டில் வைக்கும்..." என்று அவள் கழுத்தில் முத்தமிட, இருக்கமாய் கண்களை மூடிக்கொண்டாள் வர்ஷினி.
"நீங்க இப்படி செய்யக் கூடாது. நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க. நீங்க ஏதாவது செஞ்சா அது உங்களை இன்னும் பலவீனமாக்கும்.. உங்களுடைய ஸ்டிச்சசை பிரிக்காம நீங்க இதெல்லாம் செய்யக்கூடாது"
நிமிலின் முகத்தில் தளிர் போன்ற புன்னகை துளிர்த்தது.
"நான் என்ன செய்யறேன்?" என்றான்.
"நீங்களும், நானும்..." தான் உளறிக் கொட்ட எண்ணியது என்ன என்பதை உணர்ந்து கண்களை திறந்தாள்.
"இல்ல, நான் வந்து..."
"ஒரு முத்ததால என் உடம்பு பெருசா ஒன்னும் பாதிக்காது..."
"முத்தமா...?"
"நீ என்ன நெனச்ச?"
ஒன்றுமில்லை என்று அவசரமாய் தலையசைத்தாள். மீண்டும் அவள் கழுத்தில் இதழ் பதித்து அவளை நிலைகுலையச் செய்தான் நிமல். இருவரும் அரை மயக்க நிலைக்கு தள்ள பட்டனர்... அந்த நெருக்கம் தந்த மயக்கத்தில் ஒருவரை ஒருவர் பிடித்து நிறுத்த படாத பாடுபட்டார்கள். இதழ் பரிமாற்றம் அரங்கேறியது. இருவருக்குமே பின்வாங்கும் எண்ணமே தோன்றவில்லை.
தனது காயத்தையும், வலியையும் மொத்தமாய் மறந்தான் நிமல். அவன் தான், தன்னை குணப்படுத்தும் அருமருந்தை அடைந்து விட்டானே. அதை பாதியிலேயே விட்டு விட அவனுக்கு விருப்பமில்லை... மனமும் இல்லை... வர்ஷினியை கட்டிலில் கிடத்த அவன் முயன்ற போது, சுய நினைவு பெற்றாள் வர்ஷினி. அவன் செய்ய நினைப்பது என்ன என்பதை உணர்ந்து அவனை பிடித்து தள்ளி விட்டு அங்கிருந்து எழுந்து ஓடினாள்.
"வர்ஷுஷுஷு..." அவளுடைய பெயர் கதறலாய் ஒலித்தது.
அதே இடத்தில் அப்படியே நின்றாள் வர்ஷினி. மூச்சிரைக்க, முறுக்கேறிய நரம்புகளுடன், கை முட்டியை இறுக்க மூடி தலையை குனிந்த படி அமர்ந்திருந்தான் நிமல்.
அவனை அப்படி பார்த்த பின் அங்கிருந்து செல்ல வர்ஷினிக்கு தைரியம் கிட்டுமா என்ன? மீண்டும் அவனிடமே ஓடிச்சென்று, அவன் காயத்தை தொட்டுவிடாமல் அவனை அணைத்துக் கொண்டாள். அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டு, இறுக்கமாய் அணைத்து அவள் தோளில் சாய்ந்து கொண்டான். அவன் தலையை மெல்ல கோதி விட்டாள் வர்ஷினி.
"உங்களுக்கு வலிக்கலயா?"
அவளின் அணைப்பில் இருந்தபடியே,
"சொர்க்கம், வலியை தராது" என்றான்.
"ரிலாக்ஸ் நிமல்..."
"ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்"
"என்ன வேணும் உங்களுக்கு?"
"நீ தான்... நான் உன்னை முழுசா உணரணும்... உனக்கு என்னை உணர்த்தணும் "
"நிச்சயமா செய்யலாம்... ஆனா இப்போ இல்ல. நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க"
"நிச்சயமா ரெஸ்ட் எடுத்துக்கறேன்... நம்ம கன்ஸுமேஷனுக்கு அப்புறம்..."
"என்னது...?" என்று அதிர்ந்தாள் வர்ஷினி.
அவன் மடியை விட்டு அவள் இறங்க முயன்றாள். நிமலின் இரும்பு கரத்தில் இருந்து வெளிவர அவளால் இயலவில்லை.
"நான் சொல்றதைக் கேளுங்க, ப்ளீஸ்"
அவன் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.
"உங்க ஸ்டிச்சஸ்..."
"அப்போ, என் கூட கோவாப்பரேட் பண்ணு. என்னை கஷ்டப் படுத்தாத..." என்று அவளை தனலில் இட்டான். அவனுடைய விடாப்பிடியான பிடிவாதம் தெள்ளன விளங்கியது
"அம்மா வந்துடுவாங்க"
"ஷ்ஷ்ஷ்..."
"ஆனா, நிமல்..."
அவள் இதழ் மீது இதழ் ஒற்றி, அவளை பேச விடாது செய்தான் நிமல்.
அவன் காயப்பட்டவனா...? இந்த நிமிடம் அவனை காண்பவர் சத்தியம் செய்தாலும் அதை நம்ப மாட்டார்? அவனுக்கு காயம் வலிக்க வில்லையா? அதைப் பற்றி எல்லாம் யார் கவலைப்பட்டது? அவன் மிகவும் பலவீனமாய் இருந்தானே...? அப்படியா? இன்று போல் அவன் என்றுமே வல்லமையுடன் இருந்ததில்லை. பாவம் வர்ஷினி, அவளால் தன் கணவனை தடுத்து நிறுத்த முடியவில்லை... சிறிது நேரத்திற்குப் பின், அவனை தடுக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. அவனுடைய மென்மையான தொடுதல்கள், அவளுக்குள் காட்டுத்தனமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அவர்கள் தங்கள் திருமணத்தை இனிமையாய் நிறைவு செய்தார்கள். வியர்வைத்துளிகள் நிரம்பியிருந்த அவள் நெற்றியில் புன்னகையுடன் முத்தமிட்டான் நிமல். அவன் கன்னத்தில் பட்டென்று அறிந்தாள் வர்ஷினி.
"எனக்கு வலிக்கல டா... நம்பு..." என்று அவன் கூறியது உண்மையா, பொய்யா என்பது நமக்கே கூட விளங்கவில்லை.
"நம்ம இப்படி செஞ்சிருக்க கூடாது" என்றாள் சிணுங்கலுடன்.
"ஆனா, செஞ்சுட்டோம்..." என்று சிரித்தான் நிமல்.
"இதுக்கு அப்புறம் என்கிட்ட வந்திங்க, நான் பொல்லாதவளா ஆயிடுவேன்... ஸ்டிச்சஸ் பிரிக்கிற வரைக்கும் தூரமா இருங்க"
"இன்னைக்கே இதைப் பிரிக்க சொல்லி, டாக்டர்கிட்ட கேட்கலாம்னு இருக்கேன்"
"உதை வாங்கப் போறீங்க நீங்க..."
மீண்டும் அவள் அவனை கன்னத்தில் அறைய, சிரித்தான் நிமல்.
"தேங்க்ஸ்..."
"எதுக்கு?"
"நல்ல அம்மா, அப்பாவையும், குடும்பத்தையும் எனக்கு கொடுத்ததுக்காக"
"அப்போ எனக்கு? நான் நல்ல ஹஸ்பண்ட் இல்லயா? என்னால நீ சந்தோஷமா இல்லயா?"
"மக்கு... உங்களால தான் எனக்கு எல்லாமே கிடைச்சிருக்கு. அந்த லிஸ்டுல நீங்க வர மாட்டீங்க. நீங்க என்னோட நிமல் "
"ஆமாம். நீ என்னோட வர்ஷு... என்னோட வைஃப் "
"போய் குளிச்சி ஃபிரெஷ் ஆயிட்டு வாங்க. அம்மா வந்துட போறாங்க"
"நான் ஏற்கனவே செம்ம ஃபிரெஷா தான் இருக்கேன்..." என்று அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
இவனை என்ன செய்வது என்பது போல் புன்னகைத்தாள் வர்ஷினி.
கடைசியில் தான் நினைத்ததை சாதித்து விட்டான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro