Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 43

பாகம் 43

சுதாவும், வர்ஷினியும் சந்தோஷமாய் ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

"நீ சூப்பரா இருக்கே" என்றாள் வர்ஷினி.

"உன்னை விட ஒன்னும் நான் சூப்பரா இல்ல" என்றாள் சுதா.

அப்பொழுது, வர்ஷினியின் கண்கள் அங்கிருந்த புத்தக அலமாரியின் மீது விழுந்தது... முக்கியமாய், அவளுக்கு பிறந்தநாள் பரிசாக சுதா அளித்த  சமையல்கலை புத்தகத்தின் மீது. அதை எடுத்துக் கொண்டாள் வர்ஷினி.

"என்னுடைய சொத்து எனக்கு கிடைச்சிடுச்சி..." என்று உண்மை அறியாமல், உண்மையை கூறினாள்.

"நீயே வச்சுக்கோ, தாயே" என்றாள் சுதா.

அதை தன் கைப்பையில் திணித்துக் கொண்டாள் வர்ஷினி. அப்பொழுது சுதாவின் அறைக்குள் பதட்டத்துடன் பிரவேசித்தாள் அனு.

"என்ன ஆச்சு, அனு?" என்றாள் வர்ஷினி.

"சுதாவோட பெரியம்மா, ரொம்ப சீரியஸா இருக்காங்க. மூச்சுவிடவே திணறுறாங்க..."

சுதாவும், வர்ஷினியும் பெரியம்மாவின் அறையை நோக்கி ஓடினார்கள். அங்கு ஏற்கனவே அனைவரும் குழுமியிருந்தார்கள். அவரது கட்டிலை நெருங்கி அவர் கையை பற்றிக்கொண்டாள் சுதா.

"பெரியம்மா..." என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவர் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால், அவர் வாயிலிருந்து வார்த்தை வெளியேற மறுத்தது. அப்பொழுது அந்த அறைக்குள் நுழைந்தார் மருத்துவர்.

"நீங்க எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியில இருங்க" என்றார்.

சுதாவையும், அவளுடைய அம்மா கங்காவையும் தவிர, மற்ற அனைவரும் அந்த அறையிலிருந்து வெளியேறினார்கள். அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர், அவர்களை வெளியே வருமாறு சைகை செய்தார்.

சுதாவும், கங்காவும் டாக்டருடன் வெளியே வருவதை பார்த்து அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"இது மைல்ட் அட்டாக் தான். அதிகப்படியான சந்தோஷத்தால ஏற்பட்டிருக்கு. அவங்க ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்கிறதால என்னால எதுவும் நிச்சயமா சொல்ல முடியல"

"எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க டாக்டர்" என்றார் கங்கா.

"அவங்க இதயத்துடிப்பு குறைஞ்சிகிட்டே வருது. அவங்களால ஆபரேஷனை தாங்க முடியாது" என்று நிறுத்தினார்.

அவர் சொன்னதைக் கேட்டு ஓவென்று அழுதாள் சுதா.

"என் பொண்ணு கல்யாணத்தை பாக்கணும்னு எங்க அக்கா ஆசைப்பட்டாங்க. அவங்க ஆசைப்பட்ட மாதிரியே, சீக்கிரம் என் பொண்ணோட கல்யாணத்தை நடத்தலாம்னு ஏற்பாடு செஞ்சோம். அந்த சந்தோஷமே அவங்களுக்கு வினையா முடிஞ்சிடுச்சே..."

"அது தான் அவங்க ஆசைனா, அதை சீக்கிரம் செஞ்சு முடிங்க. ஒருவேளை அது அவங்களை குணப்படுத்தலாம்... இல்லனா, குறைஞ்ச பட்சம், அவங்களுடைய கடைசி ஆசையை நிறைவேத்தின சந்தோஷம் உங்களுக்கு கிடைக்கும்"

கங்காவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் கவலையுடன் தாட்சாயணியை பார்த்தார்.

"கல்யாணத்தை நாளைக்கு வச்சுக்கலாமா?" என்றார் தாட்சாயணி.

பெயர் கூறமுடியாத முகபாவத்துடன் கங்காவின் விழிகள் விரிந்தன.

"நாளைக்கும் முகூர்த்த நாள் தான். உங்களுக்கு ஓகேன்னா நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கலாம்"

"நீங்க நிஜமாத் தான் சொல்றீங்களா?" என்றார் கங்கா.

"ஆமாங்க... இந்த சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் மக்களை சந்தோஷ படுத்துறதுக்காகத் தான். தவிர்க்க முடியாத சூழ்நிலையில அதை மாத்திக்குறதுல தப்பில்ல. தன்னுடைய கடைசி நாளை எண்ணிக்கிட்டிருக்குற ஒரு உயிரை நம்மால திருப்திப்படுத்த முடியும்னா, நிச்சயம் அதை நம்ம செய்யலாம்"

அவர் கூறியதை கேட்டு பேச்சிழந்து போனார் பார்வதி. ஏனென்றால், தாட்சாயணி சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பவர். தன் தங்கையை பெருமையுடன் பார்த்தார் பார்வதி.

"தேவையான ஏற்பாடுகளை, உங்க வீட்லயே செய்யுங்க. நாளைக்கு உங்க வீட்லயே கல்யாணத்தை நடத்திடலாம்" என்ற தாட்சாயணியின் கரங்களை கெட்டியாய் பற்றிக் கொண்டார் கங்கா.

"உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க. இதை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். உங்கள மாதிரி ஒரு மாமியார் என் மகளுக்கு கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம்"

"மனிதத் தன்மையை விட பெருசு வேற எதுவும் இல்ல... ஆக வேண்டிய காரியத்தை பாருங்க... நாங்க கிளம்புறோம். நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கு"

"ஆகட்டுங்க..."

சுதாவும், பிரகாஷும், நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். எதிர்பாராத விதமாய், நாளையே அவர்களுக்கு திருமணம் முடிவாகியிருக்கிறதே..."

அங்கு வந்த அனு, அவன் தலையை தட்டினாள்.

"வாழ்நாள் முழுக்க உட்கார்ந்து அவங்களை பார்த்துகிட்டே இரு. ஆனா இன்னைக்கு, கல்யாணத்துக்கு வேண்டிய வேலைகளை செய்யணும். கிளம்பலாமா?"

அவள் சொன்னதைக் கேட்டு சுதா கன்னம் சிவந்தாள். அனுவை சுதாவிடம் இழுத்துச் சென்றாள் வர்ஷினி.

"இது அனு... நிமல், பிரகாஷோ ஃபிரண்ட்"

"ராஜாவுக்கும்..." என்றாள் அனு.

"உங்களை எனக்கு தெரியும். உங்களைப் பத்தி பிரகாஷ் நிறைய சொல்லியிருக்கார்"

"நிஜமாவா?" என்ற அனு, பிரகாஷை பார்க்க, அவன் ஆமாம் என்று தலையசைத்தான்.

"வேற ஒருத்தர் என்னை மறந்த மாதிரி மறக்காம, நீயாவது உன் கேர்ள் ஃபிரண்ட்கிட்ட என்னை பத்தி சொன்னியே..." என்றாள் நிமலை பார்த்தபடி.

"யாரைப் பத்தி சொல்றீங்க?" என்றாள் சுதா.

"நிமலை தான்... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, வர்ஷினிக்கு அனுவைப் பத்தி சுத்தமா தெரியல..." என்று விழுந்து விழுந்து சிரித்தான் பிரகாஷ்.

அவனைப் பார்த்து முறைத்தாள் அனு.

"அப்படியா, வர்ஷு?" என்றாள் சுதா.

உதட்டை மடித்து ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.

"அப்படின்னா, நீங்க ரெண்டு பேரும் நாளெல்லாம் என்ன தான் பேசிகிட்டு இருந்தீங்க?" என்றாள் சுதா.

"அந்த கேள்வியை மட்டும் யாரும் கேட்கக்கூடாது... ஏன்னா, நமக்கு பதில் கிடைக்காது... அவங்க, அவங்களைப் பத்தியே பேசிகிட்டு இருந்ததால, அவங்களுக்கு வேற யாரை பத்தியும் பேச நேரமே கிடைக்கலயாம்" என்றாள் அனு.

வர்ஷினியின் கண்களால், நிமலின் பக்கம் திரும்பாமல் இருக்க முடியவில்லை... அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

"சுதா, அவங்க அப்படி என்ன தான் பேசிக்கிட்டு இருந்தாங்கன்னு  கேட்டுக்கோ. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தேவைப்படும்" என்று பல்லை கட்டினான் பிரகாஷ்.

"ஏய்... கல்யாணத்துக்கு அப்புறமும் இவன் பேசிக்கிட்டு தான் இருக்கப் போறானாம்..." என்றாள் அனு, விழுந்து விழுந்து சிரித்த படி.

சுதாவின் கன்னம் சிவந்து போனது. பிரகாஷ் தன் தலையை சொறிந்தான். அவன் முகம் போன போக்கை பார்த்து கலகலவென சிரித்தாள் வர்ஷினி. அவள் சிரிப்பில் மெய்மறந்து போனான் நிமல். அவள் அப்படி சிரிப்பதை பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது...!

"வர்ஷு, நீ இன்னைக்கு என் கூட இங்கேயே தங்கேன்..." என்றாள் சுதா.

அந்தக் கேள்வி, வர்ஷினியை விட நிமலை அதிகம் கலவரப்படுத்தியது. வர்ஷினி நிமலை பார்க்க, அவள் என்ன கூற போகிறாளோ என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நிமல். அவளால் அங்கு தங்க முடியாது. அவள் கேட்ட கேள்விக்கு இன்று நிமல் பதில் கூறலாம் அல்லவா?

"இல்ல சுதா, வந்து... அம்மா..." என்று இழுத்தாள்.

அவள் தயங்கியதை பார்த்து ஆச்சரியப்பட்டாள் சுதா. அவளுக்கு தெரியும் அவள் நிமலுடன் பேசுவதில்லை என்று. அப்படி இருக்கும் போது, இங்கே தங்குவதில் அவளுக்கு ஏன் தயக்கம்?

"ஆமாம்ல... உனக்கும் வேலை இருக்கும். சரி நீ கிளம்பு. நான் என் கசின்ஸை வச்சி மேனேஜ் பண்ணிக்கிறேன்" - சுதா.

சரி என்று சந்தோஷமாய் தலையசைத்தாள் வர்ஷினி. அவர்கள், இனியவர்களின் இருப்பிடம் நோக்கி கிளம்பினார்கள். அலுவலகத்திற்குச் செல்ல நிமலுக்கு மனமில்லை. அவன் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தான். அவனுக்கும் வர்ஷினிக்கும் இடையில் நிலவும் இந்த கடினத்தன்மையை உடைக்க அவன் வீட்டில் இருந்தாக வேண்டும்.

இனியவர்களின் இருப்பிடம் பரபரப்பாய் காணப்பட்டது. ஒவ்வொருவரும் இங்கும் அங்கும் ஓடியவாரு இருந்தார்கள். நிமல் பிரகாஷின் அறையை நோக்கி செல்வதை கவனித்தாள் வர்ஷினி. சிறிது நேரத்தில், அவன் பிரகாஷுடன் திரும்பி வந்தான். தனது கைபேசியை வர்ஷினியை நோக்கி நீட்டினான்.

"ராஜா உன்கிட்ட பேசணுமாம்"

அவனிடமிருந்து கைபேசியை பெற்று, காதுக்கு கொடுத்தாள் வர்ஷினி.

"ஹலோ, ராஜா"

"வர்ஷினி... நாளன்னைக்கு  சுதா பிரகாஷுக்கும், உங்களுக்கும் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கேன். நீ நிச்சயம் நிமல் கூட வரணும்..."

"ம்ம்ம்"

கைபேசியை நிமலிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் வர்ஷினி. அவளுக்கு காபி குடிக்க வேண்டும் என்று தோன்றியதால் சமையல் அறைக்கு வந்தாள். அவள் காபி கலந்து முடித்த போது, அவள் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்தாள். அது நிமலாக இருக்குமோ என்று எண்ணிய போது, அவள் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அப்போது,

"ஒரு கப் காபி கிடைக்குமா?" என்று நிமேஷின் குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள்.

"ப்ளீஸ்...?" என அவன் கூற தன் கையில் இருந்த காபி கப்பை அவனிடம் நீட்டினாள், அவனை அங்கிருந்து கிளப்பிவிட்டால் போதும் என்று.

ஆனால், அவள் நினைத்தது நடக்கவில்லை. அவன் அங்கிருந்து செல்ல ஆர்வம் காட்டவில்லை.

"நீங்க நிமலை காதலிச்சிங்க இல்ல...?"

"இப்பவும் காதலிக்கிறேன்..." என்றாள் ஒரு நொடியும் யோசிக்காமல்.

"பாத்தா அப்படி தெரியலயே...?"

"பாக்குறவங்களுக்கு தெரியணும்னு எந்த அவசியமும் இல்ல..." என்றாள் வெடுக்கென்று.

"அவசியம் இல்ல தான்... ஆனா, ரெண்டு பேரும் எதுக்காக டிஸ்டன்ஸ்ல இருக்கீங்க?"

அவனுக்கு பதில் கூறாமல் காப்பியை கப்பில் ஊற்றினாள்.

"நீங்க அவன் மேல கோவமா இருக்கிங்களா...? வேணும்னா, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?"

"தேவையில்ல... என் புருஷன் மேல எனக்கு எந்த கோவமும் இல்ல. அப்படியே இருந்தாலும், நீங்க அதை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. எங்க பிரச்சினையை எப்படித் தீர்த்துக்கணும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்"

காபி குவளையை  எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முயன்ற அவளை வழி மறித்து நின்றான் நிமேஷ்.

"என்னால நம்பவே முடியல... எப்படி குமணனுடைய பொண்ணு, ஒரு அனாதை பயலை காதலிக்க முடியும்?"

தன் கால்களுக்கு கீழ் வேர் விட்டது போல் தோன்றியது வர்ஷினிக்கு.

"நீங்க என்ன சொன்னீங்க?" என்றாள் அதிர்ச்சியாக.

"எங்க பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் அவன் தத்துப்பிள்ளைன்னு சொல்றேன்..."

தன் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது அவளுக்கு. அதிர்ச்சி நிறைந்த அவள் முகத்தைப் பார்த்து,

"நெனச்சேன்... இந்த உண்மையை அவன் உங்ககிட்ட சொல்லியிருக்க மாட்டான்னு நான் நெனச்சேன். இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே, அவன் உங்களுக்கு எவ்வளவு உண்மையானவன்னு... இப்போ தெரிஞ்சுதா, அவன் உங்க மேல வச்சிருக்கிற காதலும் நம்பிக்கையும் எப்படிப்பட்டதுன்னு...?"

வர்ஷினியின் தொண்டை வற்றி போனது. இது உண்மையா? அதனால் தான் சந்திராவும் நிமேஷும் நிமலை அடியோடு வெறுக்கிறார்களா...? அப்படியே இருந்தாலும், இந்த கீழ்த்தரமான ஜந்துவிடம் அவள் நிமலை விட்டுக்கொடுக்க கூடாது.

"உண்மையை நினைச்சு நான் அதிர்ச்சியாகல... ஏன்னா எனக்கு அது ஏற்கனவே தெரியும்..."

"இல்ல, நீங்க பொய் சொல்றீங்க..."

"நான் ஏன் பொய் சொல்லணும்?"

அப்புறம் எதுக்கு அவ்வளவு அதிர்ச்சியானிங்க?"

"ஏன்னா, இதுக்கு முன்னாடி உங்களை மாதிரி ஒரு மனுஷனை நான் பார்த்ததே இல்ல... எப்படி சக மனுஷனை உங்களால இழிவுபடுத்த முடியுது? அவர் வாழ்க்கையைப் பத்திய உண்மையை அவர் என்கிட்ட சொல்லியிருக்க மாட்டார்னு நீங்க எப்படி நினைச்சீங்க? அவரைப் பத்தியும், எங்களோட உறவை பத்தியும் உங்களுக்கு என்ன தெரியும்? என்னோட நிமலை பத்தி எனக்கு தெரியும். உங்களுடைய ஆட்டத்தை எங்களுக்கு நடுவுல ஆட நினைக்காதீங்க"

சமையலறையை விட்டு, கோவமாய்  வெளியேறினாள் வர்ஷினி. அவளுக்கு நிமேஷ் மீது மட்டும் கோபமல்ல, நிமலின் மீதும் தான். எப்படி அவன் இந்த உண்மையை அவளிடமிருந்து மறைக்கலாம்? இதெல்லாம் என்ன...? அவனுடைய வாழ்க்கையில் இன்னும் எத்தனை உண்மைகள் தான் புதைந்து கிடைக்கின்றதோ...! உண்மையிலேயே நிமேஷ் நெருப்பை பற்ற வைத்து தான் விட்டான். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், அவன் கேவலமானவன். ஆனால், அதை செய்யும் சந்தர்ப்பத்தை அவனுக்கு வழங்கியது யார்? இங்கு நிமலின் மீது தவறு இருக்கிறது அல்லவா...?

சமையலறையை விட்டு வெளியே வந்தவள், அங்கு அனு பதட்டத்துடன் நின்றிருப்பதை கவனித்தாள்.  அவர்கள் பேசியதை அனு கேட்டிருக்க வேண்டும். அவளிடம் ஒன்றும் கூறாமல், அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள் வர்ஷினி. காபி குவளையை மேஜை மீது வைத்துவிட்டு அமைதியாய் அமர்ந்தாள். அவளுக்கு காபி குடிக்க வேண்டும் என்ற எண்ணமே போய்விட்டது. அவளை பின்தொடர்ந்து வந்த அனு, அவள் முன் நின்றாள்.

"அவன் சொன்னது உண்மையா?"

அவளுக்கு பதில் கூறாமல் அமைதி காத்தாள் அனு.

"பதில் சொல்ல மாட்டியா?"

"உண்மை தான். நிமல், விஸ்வநாதன், பார்வதி  தம்பதிகளுடைய வளர்ப்பு மகன்"

அதைக் கேட்டு வேதனை அடைந்தாள் வர்ஷினி. விஸ்வநாதனும் பார்வதியும் நிமலை பெற்றவர்கள் அல்ல.

"விஸ்வநாதன் அங்கிளும் பார்வதி ஆன்டியும், ஊட்டியில தான் நிமலை சந்திச்சாங்க. அப்போ தான் நிமலோட அம்மாவும் அப்பாவும் ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்து போயிருந்தாங்க.  நிராதரவான நிமலை, குழந்தை பாக்கியம் இல்லாத இவங்க சென்னைக்கு அழைச்சுக்கிட்டு வந்துட்டாங்க. அப்போ நிமலுக்கு பதினாலு வயசு" என்று நிமலின் கதையைக் கூறி முடித்தாள் அனு.

கட்டிலின் மீது தொப்பென்று அமர்ந்தாள் வர்ஷினி. அவளால் நம்பவே முடியவில்லை. தன் வாழ்க்கையில் சமீபத்தில் இணைந்த அந்த மூவரும் ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள்.

அப்பொழுது, அனுவைப் பார்த்து புன்னகைத்தபடி அந்த அறைக்குள் நுழைந்தான் நிமல். அவள் தன் கண்களால் அவனுக்கு எதையோ உணர்த்திவிட்டு அங்கிருந்து சென்றாள். ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தான் நிமல். கதவை சாத்தி விட்டு, வர்ஷினியினருகில் வந்தான். அவன் அவளிடம் எதுவும் பேசும் முன்,

"அம்மா அப்பாவுக்கு நீங்க வளர்ப்பு பிள்ளையா?" என்ற அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் நிமல்.

அவன் சட்டையின் காலரை பற்றிக் கொண்டாள்.

"சொல்லுங்க நிமல்... உங்க வாழ்க்கை ரகசியத்தை தெரிஞ்சிக்க எனக்கு எந்த அருகதையும் இல்லன்னு நினைச்சிங்களா? நான் உங்களுக்கு யாரு...? உங்க வாழ்க்கையில எனக்கு என்ன இடத்தைக் கொடுத்திருக்கீங்க? நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? இந்த உண்மையெல்லாம் எனக்கு தெரிஞ்சா நான் உங்களை விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சிங்களா?"

இல்லை என்று தலையசைத்தபடி அவளை தொட தன் கையை நீட்டினான். அவன் கையை தட்டி விட்டு பின்னால் நகர்ந்தாள் வர்ஷினி.

"என்னை தொடாதீங்க. இன்னும் என்னென்ன உண்மையெல்லாம் வெளியில வர போகுதோ தெரியல..."

"வர்ஷு, ஐ யம் சாரி"

"ஹெல் வித் யுவர் சாரி..." என்று கத்திவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றாள்.

அனுவின் அறைக்கு வந்தவள், கட்டிலின்  மீது அமர்ந்தாள்.

"நான் கொஞ்ச நேரம் இங்க தனியா இருக்கலாமா?" என்றாள்.

அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தாள் அனு.

"தாராளமா... ஆனா, நான் போறதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போறேன். தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு. நிமல் எப்பவுமே அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும்னு நினைச்சான். அவங்க பேச்சை என்னைக்குமே அவன் மீறி நடந்ததில்ல. முதல் தடவை, உனக்காக அவங்க பேச்சை மீறினான்... ஏன்னா, நீன்னு வரும் போது அவனுக்கு வேற எதுவுமே முக்கியமில்ல. ஏன்னா, அவன் உன்னை ரொம்ப காதலிக்கிறான். உன்னை கவலைப்பட வைக்கக் கூடாதுங்குற ஒரே காரணத்துக்காகத் தான், அவன் இந்த உண்மையை மறைச்சிருப்பான். தயவு செஞ்சு அவனை தப்பா நினைக்காதே. தவறான புரிதல், நம்ம வாழ்க்கையோட அத்தனை சந்தோஷமான நிகழ்வுகளையும் மறக்க வச்சிடும். அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காதே"

அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. கதவைச் சாத்திவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் அனு.

ஓவென்று அழுதாள் வர்ஷினி. ஏன் நிமல் இப்படி எல்லாம் செய்கிறான்? அனு சொல்வது போல் அதற்கு ஏதாவது காரணம் இருந்தால்... அந்த காரணம் என்ன? அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளே தீர்ந்தபாடில்லை... இதில் இது வேறு...

என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. கண்களை மூடி விஸ்வநாதனையும் பார்வதியையும் நினைத்துக்கொண்டாள். அவர்கள் மீது அவள் கொண்டிருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது. அவர்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்கள். அவர்களுக்கு தெரியாமல் தன்னை நிமல் மணந்துகொண்ட பொழுது, அவர்களுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்...? அவனை நன்றி கெட்டவன் என்று நினைத்திருக்க மாட்டார்களா...? இருந்தபோதிலும் அவளை மனமார தங்கள் மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்காகவாவது அவள் அமைதியாக தான் இருக்க வேண்டும்.

சந்திராவும் நிமேஷும் அவளை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாய் புரிந்து போனது, அவர்கள் அவளுக்கும் நிமலுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்கிறார்கள். அவள் இப்படி நடந்து கொண்டால் அவர்கள் ஜெயித்ததாக நினைப்பார்கள். விஸ்வநாதனும் பார்வதியும் கவலைப்பட அவள் காரணமாக இருக்கக் கூடாது. நாளை சுதா, பிரகாஷ் திருமணம் நல்லபடியாக முடியட்டும். அதன் பிறகு நிமலிடம் பேசித் தெளிய வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்தவர் பார்க்கும்படி ஏதும் செய்யக் கூடாது. தன் முகத்தை துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

இதற்கிடையில்,

கலங்கிய கண்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தான் நிமல். அங்கு வந்த அனு, அவன் தோளை தொட்டாள். தன்னை சுதாகரித்துக்கொண்டு புன்னகைத்தான்.

"வர்ஷினி அப்செடா இருக்கா" என்றாள்.

ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.

"நீ அவகிட்ட இதை மறச்சிருக்க கூடாது. இப்ப என்ன நடந்துச்சுன்னு பாரு. நமக்கு வேண்டியவங்களை பத்தி, வேற ஒருத்தர் சொல்லிக் கேட்கும் போது, அது எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா?"

"அவகிட்ட யார் இதைப் பத்தி சொன்னது?"

"நிமேஷை தவிர வேற யார் இதை செய்வா?"

"அவனை கொல்லம விடமாட்டேன்..." என்று சோபாவில் இருந்து எழுந்த அவனைத் தடுத்தாள் அனு.

"போ... போய் அவனை கொன்னுட்டு, வர்ஷினியை தனியா விட்டுட்டு ஜெயிலுக்குப் போ..."

கோபத்தில் பல்லைக் கடித்தான் நிமல்.

"நிமேஷை என்ன கேட்ப? உண்மையை ஏன் சொன்னேன்னா...?  நிமேஷ் மேல கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்ல. எப்படி இருந்தாலும் உண்மை ஒரு நாள் வெளியே வரத்தான் செய்யும். ஆனா, இப்போ அது வெளியே வந்திருக்குற முறை தான் பிரச்சனை. கோவத்துல பிரச்சனை பண்ணி, வர்ஷினியை இன்னும் அப்ஸட் ஆக்காத. அவ ஏற்கனவே குழம்பி போயிருக்கா. கொஞ்சம் பொறுத்திருந்து அவ என்ன செய்றான்னு பாரு."

"ஒவ்வொரு நாளும் பிரச்சனை அதிகமாயிகிட்டே போகுது"

"அப்படின்னா அது முடிவுக்கு வரப் போகுதுன்னு நினைச்சுக்கோ. எப்படி இருந்தாலும் அவளுக்கு இந்த உண்மை தெரிஞ்சு தான் ஆகணும். அவளை டிஸ்டர்ப் பண்ணாம விடு. இந்த கல்யாணம் முடியட்டும். அதுவரைக்கும் அமைதியா இரு"

"நீ போய் அவ கூட இரு"

சரி என்று தலையசைத்துவிட்டு வர்ஷினியை தேடி வெளியே வந்தாள் அனு. அப்பொழுது, அவளுடைய உடைக்கு அளவு கொடுக்க வருமாரு அவளை அழைத்தார் பார்வதி. அங்கு ஏற்கனவே தன்னுடைய உடைக்கு அளவு கொடுத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் முகத்தில் ஒரு வித அமைதி தெரிந்தது. நிம்மதி பெருமூச்சு விட்ட அனு, ராஜாவை அழைக்க நினைத்தாள். அவன் ஒருவனால் தான் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நினைத்தாள் அவள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro