Part 38
பாகம் 38
காஞ்சிபுரம்
(பார்வதியின் தங்கை தாட்சாயணியின் இல்லம்.)
தங்களுடைய அம்மா தவிரமாய் யோசித்து கொண்டிருந்ததால், பிரகாஷும், ஆகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டர்கள்.
"என்னம்மா யோசிச்சுகிட்டு இருக்கீங்க?" என்றான் பிரகாஷ்.
"சுதாவோட பேரன்ட்ஸ் அவ கல்யாணம் சென்னையில நடக்கணும்னு ஆசைப்படுறாங்க. ஏன்னா, அவங்க பெரியம்மாவால ரொம்ப தூரம் டிராவல் பண்ண முடியாதாம்..."
"அதனால என்னமா?"
"ஏற்கனவே எங்க அக்கா குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு. அவங்க அதை எல்லாம் இன்னும் சரி செய்யல. நம்ம வேற அவங்களுக்குத் தொல்லைக் கொடுக்கணுமான்னு தான் யோசிக்கிறேன்..."
"உண்மைய சொல்லப் போனா, இந்த நேரத்துல தான் நம்ம அவங்க கூட இருக்கணும். அவங்களுடைய பிரச்சினைகளை சமாளிக்க நம்ம அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம் இல்லயா?" என்றான் பிரகாஷின் தம்பி ஆகாஷ்.
"ஆகாஷ் சொல்றது சரி தான் மா. நம்ம அவங்க கூட இருந்தா, பெரியம்மா நிச்சயம் சந்தோஷம் தான் படுவாங்க. அதோட மட்டும் இல்லாம, வர்ஷினியும் சுதாவும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ். சுதா நினைச்சா, நிச்சயம் வர்ஷினியோட மனசை மாத்த முடியும்"
"ஆமாம்மா. பாசிட்டிவா திங்க் பண்ணுங்க"
"ஆனா, நீங்க ரெண்டு பேரும் ஒரு முக்கியமான நெகட்டிவ் பாயிண்டை விட்டுட்டீங்க"
பிரகாஷும் ஆகாஷும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
"சந்திரா, நிமேஷ், அவங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டாங்க. நிமல்னு வந்துட்டா, சும்மா இருக்க அவங்களால முடியாது. அவனை இன்சல்ட் பண்ண சான்ஸை எதிர்பார்த்துக்கிட்டே இருப்பாங்க. இந்த கல்யாண சந்தர்ப்பத்தை, அதுக்கு அவங்க பயன்படுத்துவாங்க. எங்க அக்காவும் மாமாவும் கவலைப்படுறதை என்னால பாக்க முடியாது"
"அவங்க எங்க இருந்தாலும் அதை செய்வாங்க..." என்றான் பிரகாஷ்.
"பிரகாஷ் சொல்றது சரி தான். நம்ம தான் இருக்கோமே... இது நம்ம வீட்டு கல்யாணம். அவங்களை நம்ம பாத்துக்கலாம். அவங்க நிமலை கஷ்டப்படுத்த நம்ம விடக்கூடாது." என்றான் ஆகாஷ்.
"அது தான் எனக்கு பயமாயிருக்கு. இது நம்ம வீட்டு கல்யாணம். நம்மளால யாரும் கஷ்டப்படக் கூடாது" என்றார் தாட்சாயணி.
"நீங்க பெரியம்மாகிட்ட பேசுங்க. அவங்க எல்லாத்துக்கும் ஒரு சொல்யூஷன் சொல்லுவாங்க. சுதா இன்னைக்கு நைட்டு சிங்கப்பூரில் இருந்து கிளம்பி வரா. நான் அவகிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்றேன். அவ இந்தியா வந்ததுக்கு அப்புறம், பிரச்சனைகள் கொஞ்சம் தீரும்னு நினைக்கிறேன்" என்றான் பிரகாஷ்.
"சரி, நான் அக்காகிட்ட பேசுறேன்"
இனியவர்களின் இருப்பிடம்
தன் தங்கையின் பெயர், ஃபோனில் ஒளிர்ந்ததை பார்த்து, பார்வதியின் முகமும் ஒளிர்ந்தது. தன் தங்கையிடம் பேசும் போதெல்லாம், மனம் லேசாகி விட்டது போல் உணர்வார் பார்வதி. தாட்சாயணியும் அப்படித் தான். அவர்கள் இருவருக்கு இடையிலும் நல்ல ஒரு பிணைப்பு இருந்தது.
"தாச்சு, எப்படி இருக்க?" என்றார் பார்வதி.
"நான் நல்லா இருக்கேன் கா. வர்ஷினி எப்படி இருக்கா?"
"பார்க்க நல்லா இருக்குறா மாதிரி தெரியுது. ஆனா அவ நல்லா இல்ல"
"நீ எதுக்கும் கவலைப்படாதே கா. சுதா இந்தியாவுக்கு வரா"
"நெஜமாவா...? நீ எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயத்தை சொல்லியிருக்க"
"உனக்கு கஷ்டம் கொடுக்கிற விஷயமும் இருக்கு"
"என்ன சொல்ற?"
"சுதாவுடைய பேரன்ட்ஸ், கல்யாணத்தை சென்னையில் நடத்தணும்னு சொல்றாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல, கா"
"அதுல யோசிக்க என்ன இருக்கு? நாங்க சென்னையில இருக்கும் போது நீ ஏன் கவலைப் படுறே? அவங்ககிட்ட சரின்னு சொல்லு"
"ஆனா, அதனால உன் குடும்பத்துல ஏதாவது பிரச்சினை வரலாம், கா"
"நீ சந்திராவையும் நிமேஷையும் பத்தி சொல்றியா?"
"ஆமாம்"
"அவங்களும் நம்ம குடும்பம் தான். அவங்களை விட்டுட்டு நம்மால் எதுவும் செய்ய முடியாது"
"ஏன் சந்திரா இப்படி மாறிட்டான்னு எனக்கு புரியவே இல்ல. நாங்க காலேஜ்ல படிக்கும் போது, அவ ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா"
"காலம் எல்லாத்தையும் மாத்தும். இல்லன்னா, நமக்கு அவங்க சுயரூபம் தெரியாம இருந்திருக்கலாம்..." என்று பெருமூச்சு விட்டார் பார்வதி.
"நீ சொல்றது சரி"
"நீ கல்யாண வேலையை ஆரம்பி"
"ரொம்ப தேங்க்ஸ் கா"
"உனக்காக நான் காத்திருப்பேன்"
அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள்.
விஸ்வநாதனிடம் விஷயத்தை கூறினார் பார்வதி. அவரும் பெருமூச்சு விட்டார். அவருக்கு சந்திராவைப் பற்றி நன்கு தெரியும். வர்ஷினி மாடியில் இருந்து இறங்கி வருவதை கவனித்தார் விஸ்வநாதன். அதை அவர் பார்வதிக்கு கண்களால் தெரியப்படுத்திவிட்டு, அவளை பார்க்காதது போல் இருந்தார்.
"எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலங்க..." என்று பார்வதி சோகமாய் கூறுவதைக் கேட்டு, வர்ஷினியின் நடை வேகம் குறைந்தது. அவள் ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டாள்.
"நம்ம சொந்தகாரங்க எல்லாரும் இங்க வரும் போது, ஏன் வர்ஷினி நிமல் ரூம்ல தங்கலன்னு கேட்டா, நம்ம என்ன பதில் சொல்றது? அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லங்கிற விஷயம், எல்லாருக்கும் தெரிஞ்சிட போகுது. வர்ஷினி, நிமல்கிட்ட பேசுறது இல்லன்னு குமணனுக்கு தெரிஞ்சா, அவர் அவளை இங்கிருந்து கூட்டிகிட்டு போக என்ன வேணும்னாலும் பண்ணுவாரு."
பார்வதி செய்ய நினைப்பது என்ன என்பது விஸ்வநாதனுக்கு புரிந்தது.
"நம்ம ரொம்ப மோசமான காலகட்டத்தில் இருக்கோம், பார்வதி. பிரகாஷ், சுதா கல்யாணம் நடக்குதுன்னு சந்தோஷப்படுறதா, இல்ல வர்ஷினி, நிமலுக்காக வருத்தபடுறாதான்னு எனக்கு புரியல"
"நம்ம வீட்ல தங்கணும்னு தாட்சாயணி கேட்டப்போ என்னால மறுக்க முடியல" என்றார் பார்வதி
"நம்மால எப்படி மறுக்க முடியும்? சுதாவுடைய பெரியம்மா, ட்ராவெல் பண்ற நிலையில இல்லயே... நம்ம அவங்களுக்கு உதவி செஞ்சு தானே ஆகணும்...?" என்றார் விஸ்வநாதன்.
"அதனால் தான் நான் ஒத்துக்கிட்டேன். நம்ம சொந்தகாரங்களை பத்தித் தான் உங்களுக்கு தெரியுமே. அவங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆனவங்க அப்படிங்கிறதால எல்லாரும் அவங்களையே தான் நோட்டம் விட்டுக்கிட்டு இருப்பாங்க"
"நம்ம எல்லாத்தையும் சமாளிச்சு தான் ஆகணும். வாழ்க்கை போற போக்குல போயிகிட்டே இருக்க வேண்டியது தான்..." பெருமூச்சு விட்டார் விஸ்வநாதன்.
அவர்களுக்காக பரிதாப்பபட்ட வர்ஷினி, சுதாவின் திருமணம் முடிவாகி இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டாள். அதைப் பற்றி சிந்தித்தவாறு அமைதியாய் தன் அறையை நோக்கி சென்றாள்.
இப்படிபட்ட இக்கட்டான சமயத்தில் அவள் பிடிவாதம் பிடிக்க கூடாது. ஏனென்றால், இது அவளை தன் சொந்த மக்களைப் போல் நடத்தும், மாமனார், மாமியாரின் கௌரவம் பற்றிய பிரச்சினை. மேலும், மூன்றாம் மனிதர்களின் முன்னிலையில், நிமலை தலைகுனிய வைக்க கூடாது. என்ன இருந்தாலும் அவன் அவளுடைய கணவன். அவன் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்கலாம். ஆனால், அவளால் அப்படி இருக்க முடியாது.
அதைப் பற்றி நினைத்துக் கொண்டு நடந்ததால், அங்கு கீழே விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் கால் தடுக்கி விழப் போனவளை, ஒரு ஜோடி கரங்கள் தடுத்தன. பயத்தில் கண்களை மூடி, அவன் சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் வர்ஷினி. தன் அருகில் இருப்பது யார் என்று உணர்ந்து கொள்ள அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. அவளுடைய ரத்த ஓட்டம் வேகம் எடுக்கத் தொடங்கியது. அவள் மெல்ல கண் திறந்து, தன்னை மறந்து நிமல் அவளை பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டாள். ஏனோ அவன் பிடியில் இருந்து வெளிவர அவளுக்கு தோன்றவில்லை. அவள் கண்கள் அவன் முகத்திலிருந்து அகல மறுத்தன. அவள் மனம் என்றுமே அவனிடமிருந்து விலக நினைத்ததில்லை அல்லவா...!
அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு, அவன் பிடியிலிருந்து வெளிவர முயன்றாள். ஆனால், அவளால் முடியவில்லை. நிமல் மென்று முழுங்கினான். தன் பார்வையை வேறுபக்கம் திருப்பி, அவனிடமிருந்து விலக முயன்றாள்.
"வர்ஷு..." என்று அவள் பெயரை அவன் உச்சரித்த போது, ஏதும் செய்ய இயலாதவளாய் தன் கண்களை மூடிக்கொண்டாள்.
"வர்ஷு, ப்ளீஸ் இப்படி பண்ணாத. நீ என்னை அவாய்ட் பண்றதை என்னால தாங்க முடியல. அது உனக்கும் தெரியும். என் கூட இருந்து எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடு. ஆனா, என்னை விட்டு விலகி போகாதே... ப்ளீஸ், என்னோட பேசு... நீ என்கிட்ட பேசலனா கூட பரவாயில்ல, திட்டவாவது செய். நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன். உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுன்னு தான், உன்னை அடைய எல்லா தப்பையும் செஞ்சுட்டேன்..."
அவனைப் பிடித்து தள்ளிவிட்டு, தன் அறையை நோக்கி ஓடிச் சென்றாள் வர்ஷினி.
"வர்ஷு... என்னை நம்பு வர்ஷு... என்கிட்ட வந்துடு..." என்று பின்னால் இருந்து கத்தினான் நிமல்.
அறையின் கதவை சாத்திக்கொண்டு, தரையில் அமர்ந்து கதவில் சாய்ந்து கொண்டு அழுதாள் வர்ஷினி. நிமலை நம்பாமல் இருப்பதற்காக, தன் கண்ணத்தில் தானே அறைந்து கொண்டாள். அவளுக்கு நிமலை நம்ப வேண்டும் தான். ஆனால் அவன் மன்னிப்பு கேட்டான் என்பதற்காக அவனை நம்பிவிட முடியாதே... என்ன செய்வது என்று புரியாமல் தன் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டாள் வர்ஷினி.
மறுநாள்
தனது கைப்பேசியில் நிமலின் பெயர் ஒளிர்ந்ததை பார்த்து பெருமூச்சு விட்டார் பார்வதி. இப்போதெல்லாம் அவன் கைபேசியின் வாயிலாகத் தான் அவரிடம் பேசுகிறான். உடனடியாக அவன் அழைப்பை ஏற்றார் பார்வதி.
"அம்மா நான் நம்ம டாக்டர் அங்கிள்கிட்ட, வர்ஷினிக்காக அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன். அவளைத் செக்கப்புக்கு கூட்டிக்கிட்டு போங்க. நீங்க அங்க பதினொரு மணிக்கு இருக்கணும்"
"சரி, நான் அவளை ரெடியாக சொல்றேன்"
"நான் அவளுடைய அல்சர் கண்டிஷனை செக் பண்ண, அப்டாமினல் ஸ்கேன் பண்ண சொல்லியிருக்கேன். அதுக்கு தகுந்த மாதிரி போங்க"
"சரி"
"என்னுடைய செக்யூரிட்டி கார்ட்ஸ் உங்களை கூட்டிட்டு போவாங்க"
"எங்களுக்கு செக்யூரிட்டி யா?"
"நம்ம குமணனையும் காமேஸ்வரனையும் குறச்சி எடை போட முடியாது. வர்ஷினி விஷயத்துல நம்ம கேர்லெஸ்ஸா இருக்க கூடாது"
"அவங்க, அவளை ஏதாவது செஞ்சிடுவாங்கன்னு பயப்படுறியா?"
"அவங்க அப்படி செய்யாம இருக்கலாம்... அவங்களுடைய டார்கெட் நான் தான். ஆனா, அவங்க அவளை நம்ம கிட்ட இருந்து பிரிச்சி கொண்டு போக பாப்பாங்க. நம்ம அதுக்கு விடக்கூடாது..."
"நான் ஜாக்கிரதையாக இருப்பேன்"
"எனக்கு தெரியும்மா. செக்கப் முடிஞ்ச உடனே எனக்கு ஃபோன் பண்ணுங்க"
"ஓகே"
அழைப்பை துண்டித்துவிட்டு வர்ஷினியின் அறைக்கு வந்தார் பார்வதி. அவள் அப்பொழுது தான் குளித்து முடித்துவிட்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் கையில் இருந்த துண்டை வாங்கி, அவளை அமர வைத்து, அவள் தலையை துவட்ட துவங்கிய பார்வதியை, வழக்கம் போல அதிசயமாய் பார்த்தாள் வர்ஷினி.
"எனக்கு பொம்பள குழந்தை வேணும்னு ரொம்ப ஆசை. இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும். தலை பின்னி விடுறது, கைக்கு மருதாணி போடுறது, முகத்துக்கு ஃபேஸ் பேக் போட்டு விடுறது... முக்கியமா விதவிதமான டிரஸ் வாங்கிக் கொடுக்கணும்னு ஆசை. ஆம்பள பசங்களுக்கு ட்ரஸ் எடுக்கணும்னா ரொம்ப போர். ஷர்ட், பேண்ட், கோட்டு, ஷர்வானி, சஃபாரி... அவ்வளவு தான். அதுவே பொம்பள பிள்ளைங்கன்னா எவ்வளவு வெரைட்டியான டிரஸ்... அப்பா... பார்க்கவே எவ்வளவு அழகா இருப்பாங்க... எனக்கு மட்டும் பொம்பள பிள்ளை இருந்திருந்தா, அவளுடைய ட்ரஸ்டுக்காக நான் அவகிட்ட சண்டை போட்டிருப்பேன்..."
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தாள் வர்ஷினி. அவள் சிரித்து முடிக்கட்டும் என்று காத்திருந்தார் பார்வதி.
"நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க. நீ எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு தான் எனக்கு ஆசை" என்றார் அவள் கண்ணம் தொட்டு.
உணர்ச்சிவசப்பட்டு அவரை அணைத்துக் கொண்டாள் வர்ஷினி.
"நீங்க என்னுடைய அம்மாவா இருந்திருக்கலாம்..." என்றாள்.
"நான் உன் அம்மா தான். நமக்குள்ள ரத்த சம்பந்தம் இல்லாம இருக்கலாம். ஆனா இதயதால நம்ம ஒன்னு பட்டவங்க. ரத்தத்தை விட இதயத்திற்கு அதிகமாவே தெரியும்."
"நம்ம ரெண்டு பேரும் ஏன் நம்ம ட்ரெஸ்ஸுக்காக சண்டை போடக் கூடாது?" என்றாள் வர்ஷினி புன்னகையுடன்.
"அப்படியா சொல்ற? இப்போ நீ கட்டி இருக்குற புடவை ரொம்ப அழகா இருக்கே... அதை நான் கட்டிக்கிட்டா நல்லா இருக்காது?" என்றார் பார்வதி, தன் கையை நீட்டி அவள் புடவையை பறிப்பது போல பாவனை செய்து.
அதைக் கேட்டவுடன் வர்ஷினியின் விழி விரிந்தது. அவள் கட்டிலை சுற்றி ஓடத் துவங்கினாள். அவள் எதிர்பார்க்காத வண்ணம், பார்வதியும் அவளுடன் சேர்ந்து விளையாடினார். வாய்விட்டு சிரித்த படி அறையைவிட்டு வெளியே ஓடினாள் வர்ஷினி. அவளை விடாமல் துரத்தினர் பார்வதி. அந்த வீடு முழுவதும், அவர்களுடைய கலகலவென்ற சிரிப்பொலி நிரம்பியது. அவர்கள் சிரிப்பு சத்தத்தை கேட்டு அறையை வெளியே வந்த நிமல், வாயை பிளந்து கொண்டு நின்றான், அவர்கள் ஓடிப் பிடித்து விளையாடுவதை பார்த்து.
அங்கு வந்த விஸ்வநாதனை பார்த்து, அதே இடத்தில் மூச்சிறைக்க நின்றாள் வர்ஷினி. அவளை துரத்தி வந்த பார்வதியும் அவள் அருகில் நின்றார். ஒன்றும் புரியாமல், அவர்களை பார்த்து பேந்த பேந்த விழித்தார் விஸ்வநாதன். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, வெடி சிரிப்பு சிரித்தார்கள். இருவரும் கட்டிக்கொண்டு மேலும் சிரித்தார்கள். வர்ஷினியின் சிரிப்பின் அளவு குறைந்தது, நிமல் அவர்களை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்ததை பார்த்த போது. இதைத் தான் அவன் வர்ஷினிக்கு எப்போதும் தர நினைத்தான். அவன் நினைத்தபடியே, அவன் அம்மாவிடமிருந்து அவளுக்கு சந்தோஷம் கிடைக்கத் தொடங்கிவிட்டது. அவர்களுடைய அணைப்பில் தானும் பங்கேற்க வேண்டும் என்று அவன் மனம் துடித்தது. வெகு விரைவிலேயே அது நிகழும் என்று அவன் நம்பினான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro