Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 26

பாகம் 26

"பாக்கலாம்... குமணன் என்ன செய்கிறான்னு. நானும் அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கேன்... ரிஷி" என்றான் நிமல்.

அவன் *ரிஷி* என்றதை கேட்டு வாயைப் பிளந்தாள் வர்ஷினி. ரிஷியோ ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்தான்.

"ரிஷி, உங்க அக்காவோட வாயை மூடு" என்று அவன் கூற, களுக் என்று சிரித்தான் ரிஷி.

"நான் தான் பேசுறேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? என்னோட நம்பர் உங்ககிட்ட இருக்கா?" என்றான் ரிஷி.

"உன்னோட நம்பர் என்கிட்ட இல்ல. ஆனா, ட்ரு காலர் ஐடி இருக்கு" என்றான் நிமல்.

அதைக் கேட்டு தன் தலையில் கை வைத்து கொண்டாள் வர்ஷினி.

"அதை நான் யோசிக்கவே இல்ல" என்று வருத்தப்பட்டான் ரிஷி.

"பரவாயில்ல விடு... நீ எப்படி இருக்க? உன்னுடைய ஸ்டடிஸ் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு...?" என்றான் நிமல்.

"எல்லாம் நல்லா போகுது. நீங்க எப்படி இருக்கீங்க?"

"நான் எப்படி இருக்கேன்னு உங்க அக்காகிட்ட கேட்டுக்கோ"

"நீங்க சொல்றதும் சரி தான். நீங்க ரொம்ப நல்லவர்ன்னு அவ என்கிட்ட சொல்லியிருக்கா." என்று அவன் சிரிக்க, நிமலும் சிரித்தான்.

"அதனால தான், நீங்க எவ்வளவு நல்லவர்னு பார்க்க ஃபோன் பண்ணேன்"

"அப்போ இது, நல்லவன் சர்டிபிகேட் கொடுக்கிறதுக்காண டெஸ்டா?"

"என்னோட சர்டிபிகேட் எதுவா இருந்தாலும் எங்க அக்கா அதைப் பத்தி கவலைப்பட போறதில்ல... அவ தான் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி உங்களையே நெனைச்சுகிட்டு சுத்திக்கிட்டு இருக்காளே"

அவன் பேசியதை கேட்டு சிணுங்கினாள் வர்ஷினி. நிமலோ வாய்விட்டு சிரித்தான்.

"நிஜமாவா?" என்றான்.

"உங்களுக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசாதீங்க, மாம்ஸ்..."

அவன் மாம்ஸ் என்று உரிமையுடன்  அழைத்ததை கேட்டு, புன்னகையுடன் புருவத்தை உயர்த்தினான் நிமல்.

"என்கிட்டயே வாய் ஓயாம உங்களை பத்தி பேசிக்கிட்டே இருக்காளே... அப்போ, உங்ககிட்ட மட்டும் எதுவும் சொல்லி இருக்க மாட்டாளா? என்னை விட அவளை பத்தி உங்களுக்கு தான் நல்லா தெரியும்..."

"நீ எப்பவுமே அவ கூட இருக்கிறதால அவ உன்கிட்ட விடாம பேசிக்கிட்டே இருக்கா... உன்னை விட நான் ஒன்னும் அவளுக்கு க்லோஸ் இல்ல. எல்லாத்துக்கும் மேல, உன் அளவுக்கு எங்களுக்கு பேசுறதுக்கு நேரமே கிடைக்குறதில்ல... "

தன்னை விட நிமல் தான் வர்ஷினிக்கு முக்கியமானவன் என்று ரிஷி நினைத்து விடக்கூடாது என்று எண்ணினான் நிமல். அவன் சின்னப் பையன் இல்லையா...!

"ஆமாம்... "

"அது சரி, திடீர்னு எனக்கு ஃபோன் பண்ணணும்னு உனக்கு ஏன் தோணுச்சி?" என்று நிமல் கேட்க வர்ஷினியை பார்த்தான் ரிஷி. அவள் எதுவும் சொல்லி விடாதே என்று அவனுக்கு சைகை செய்தாள் வர்ஷினி.

அவள் கூறியதை பொருட்படுத்தாமல்,

"அம்மா அக்காவை ரொம்ப அடிச்சுட்டாங்க. அவ அழுதுகிட்டே இருந்தா. உங்ககிட்ட பேசினா, அவ கொஞ்சமாவது சந்தோஷப்படுவான்னு நினைச்சேன். அதனால ஃபோன் பண்ணேன்"

"அய்யோ...." என்று கண்களை மூடினாள் வர்ஷினி.

நிமல் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான். எவ்வளவு தைரியம் இருக்கும் அந்த கல்பனாவிற்கு...?

"மாம்ஸ்... என்னோட அக்கா ரொம்ப நல்லவ. ஆனா, அவ இங்க ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா. என்னால எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்ல முடியல. உங்ககிட்ட பேசுறதுக்கு அவளுக்கு நிறைய டைம் கிடைக்கலங்குறதுக்காக நீங்க அவளுக்கு க்ளோஸ் இல்லன்னு அர்த்தம் இல்ல. அவ உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா. அவளை தயவு செய்து கை விட்டுடாதீங்க. அவளுக்கு உங்களை தவிர வேற யாருமே இல்ல. நீங்க அவகூட எப்பயுமே இருப்பிங்கன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணி குடுங்க...ப்ளீஸ்"

வர்ஷினி மட்டுமல்ல, நிமலும் கூட உணர்ச்சிவசப்பட்டு போனான்.

"ப்ராமிஸ்... நான் எப்பவும் அவகூட இருப்பேன்"

அவன் குரலில் இருந்தே, அவனுடைய நிலையை உணர்ந்து கொண்டாள் வர்ஷினி.

"அக்காகிட்ட ஃபோனை கொடுக்கிறேன்" என்று தன் கைப்பேசியை வர்ஷினியிடம் கொடுத்துவிட்டு,

"நான் தண்ணி குடிச்சிட்டு வரேன்" என்று அங்கிருந்து சென்றான் ரிஷி.

"நிமல்..."

"உங்க அம்மா உன்னை அடிச்சாங்களா?" என்றான் ஆத்திரத்துடன்.

"அதை விடுங்க, நிமல்"

"விட முடியாது" என்ற அவன் குரலில் அனல் தெரித்தது.

"அவங்க வச்சிருந்த முக்கியமான பேப்பர்சை காணோமாம்..."

"காணாம போனா என்ன இப்போ? உங்க வீட்ல எது  காணாம போனாலும் உன்னை தான் போட்டு அடிப்பாங்களா? உங்க அம்மாவுக்கு மட்டும் தான் கோபம் வருமா?"

"நிமல், ப்ளீஸ், கூல் டவுன். ஐ அம் ஆல் ரைட்"

சில வினாடிகளை எடுத்துக்கொண்டு தன்னை ஆஸ்வாஸ படுத்திக் கொண்டான் நிமல். அவன் கோபத்துடன் இருந்தால், வர்ஷினியை அவன் எப்படி சாந்தப்படுத்த முடியும்?

"நீங்க எக்ஸாம் நல்லா எழுதி இருக்கீங்களா?" என்றாள்.

"நல்லா எழுதி இருக்கேன். நாளையோட உனக்கு எக்ஸாம் முடியுதுல்ல...?"

"ஆமாம்"

"எங்களுக்கு நாளன்னைக்கு முடியுது"

"எனக்கு தெரியும்"

"நான் நாளைக்கு காலேஜுக்கு வந்து உன்னை பாக்குறேன்"

"ஆனா, நமக்கு பேச டைம் கிடைக்காது"

"கிடைக்கும்"

"எப்படி?"

"அதை நீ என்கிட்ட விடு. நான் பார்த்துக்கறேன்"

"நீங்க கோவமா இருக்கீங்களா?"

"இல்லன்னு சொல்ல முடியாது"

"ப்ளீஸ், கம் டவுன்"

"நீ ஒரு முத்தம் கொடுத்தா, நான் என்னை கம் டவுன் பண்ணிக்கிறேன்"

"அவ்வளவு தானே... இந்தாங்க" என்று கைபேசிக்கு முத்தமிட்டாள்.

"நான் இப்போ உன் கூட இருந்திருக்கலாம்..."

"எதுக்கு?"

"உன்னுடைய மூடை சரி பண்ண"

"எப்படி பண்ணுவீங்க?"

"விளக்கி சொல்லணுமா?"

"சொல்ல முடியாதா?"

"உன் பிறந்த நாள் அன்னைக்கு என்ன நடந்துச்சின்னு யோசிச்சு பாரு"

"உங்க கன்னித்தன்மையை காப்பாத்திக்க,  நீங்க என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக பார்த்தீங்க..." என்று சிரித்தாள்.

"இன்னைக்கு நான் அதை இழக்க தயங்க மாட்டேன்..." என்று அவன் குரல் உறுதியாய் ஒலித்தது.

அதைக் கேட்ட பொழுது அவளுக்கு மயிர்க்கூச்செரிந்தது.

"ஏன் அமைதியா ஆயிட்ட?"

"ஒன்னும் இல்ல ரிஷி வர்ற மாதிரி இருந்தது"

"சரி, நம்ம நாளைக்கு பார்க்கலாம்"

"ம்ம்ம்"

அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள். புன்னகையுடன் அவள் கன்னத்தை தட்டிக் கொள்ள, கல்பனா அறைந்ததால் கன்றியிருந்த கன்னம் வலித்ததால்,

"ஸ்ஸ்ஸ் " என்றாள்.

மறுநாள்

இறுதியாக கல்பனாவிற்கு ஒரு உபாயம் கிடைத்தது. நகைப் பெட்டியிலிருந்த வைர மோதிரத்தை வெளியில் எடுத்தார். பங்குச் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவருக்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது ஒன்று தான். இதை விற்று பணம் ஈட்ட வேண்டியது... பணம் சம்பாதித்த பின், வேறு ஒன்று வாங்கி விட்டால் போகிறது... என்று நினைத்தார். அதனால், அந்த மோதிரத்தை விற்க ஒரு நகைக் கடைக்கு சென்றார்.

யாரோ அவர் தோளை தட்ட, அவருக்கு மூச்சு நின்று விடும் போல் இருந்தது. பயத்துடன் திரும்பி பார்க்க, அவர் முன் பல்லைக் காட்டியபடி நின்றிருந்தான் கார்த்திக். நிம்மதிப் பெருமூச்சு விட்டார் கல்பனா.

"எப்படி இருக்கீங்க, ஆன்ட்டி?"

"என்னை விடுங்க... நீங்க நல்லா இருக்கீங்களா?" என்றார் கல்பனா.

"எல்லாம் உங்க ஆசீர்வாதம்... இந்த பக்கம் கிராஸ் பண்ணி போகும் போது உங்களை பார்த்தேன். அதான் வந்தேன். நீங்க வைர நகை வாங்க வந்திருக்குறா மாதிரி தெரியுது..."

"ஆமாம்" என்று அசடு வழிந்தார் கல்பனா.

"நல்ல டிசைன் செலக்ட் பண்ண, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?"

ஐயையோ என்று உதறல் எடுத்தது கல்பனாவிற்கு. இங்கு அவர், ஒரு மோதிரத்தை விற்று பணம் திரட்ட பார்த்தால், இவன் என்னடாவென்றால் அவருடைய நிலையை மேலும் மோசமாக்கி கொண்டிருக்கிறான்.

அவன் கல்பனாவை நெக்லஸ் பிரிவிற்கு அழைத்துச் செல்ல, கல்பனாவிற்கு நடுக்கம் ஏற்பட்டது. புகழ் பெற்ற அரசியல்வாதியான காமேஸ்வரனின் மகன் கார்த்திகை தனது கடையில் பார்த்தவுடன், அந்த கடையின் முதலாளி அவனை நோக்கி ஓடிவந்தார். அவரே அவர்களுக்கு புதுப்புது டிசைன்களை காட்டத் துவங்கினார்.

அப்பொழுது கார்த்திக்கிற்கு ஒரு அழைப்பு வந்தது. கல்பனாவை விட்டு விலகி சென்று அவன் பேசினான். பேசி முடித்துவிட்டு, மீண்டும் கல்பனாவிடம் வந்தான்.

"நான் கொஞ்சம் அவசரமா போகணும், ஆன்ட்டி" என்று அவன் கூற, கடவுளுக்கு நன்றி கூறினார் கல்பனா.

அந்த கடை முதலாளியை நோக்கி திரும்பினான் கார்த்திக்.

"அவங்க வாங்குற நகைகளுக்கு  பில்லை எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க" என்றான்.

கல்பனாவின் முகம் பூரிப்படைந்து.

"இல்ல கார்த்திக், அவருக்கு தெரிஞ்சா, ரொம்ப கோவப்படுவார்..." என்றார்.

"அங்கிள்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு அவசியம் இல்ல, ஆன்ட்டி. நம்ம சீக்கிரமே உறவுகாரங்களா ஆக போறோம். நமக்குள்ளயும் சில இரகசியம் இருக்கட்டுமே" என்று சிரித்தான்.

"கடவுளுடைய விருப்பம் அதுவா இருந்தா அப்படியே நடக்கட்டும்" என்றார் கல்பனா.

"அங்கிளும் நீங்களும் மனசு வச்சா எது வேணும்னாலும் நடக்கும்" என்றான் கார்த்திக்.

வர்ஷினிக்கும் அவனுக்கும் நடக்க வேண்டிய திருமணத்தை பற்றி தான் பேசுகிறான் என்று புரிந்தது கல்பனாவிற்கு. அவனுக்கு வர்ஷினியை மிகவும் பிடித்துப் போய் விட்டதை உணர்ந்தார் கல்பனா.

"உங்களுக்கு பிடிச்ச நகையை கூச்சப்படாம வாங்கிக்கோங்க, ஆன்ட்டி" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் கார்த்திக்.

சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார் கல்பனா.

ஒரு பிரசித்தி பெற்ற வாக்கியத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  *கடவுள், கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஆனால் சரியான நேரம் வரும்பொழுது கைவிட்டு விடுவார். நல்லவர்களை அவர் வெகுவாய் சோதிப்பார். ஆனால் எந்த நிலையிலும் நல்லவர்களை கைவிடமாட்டார் *

இப்பொழுது கல்பனாவின் நேரம் நன்றாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால், எப்பொழுதும் அவருடைய நேரம் நன்றாக இருந்து விடாது. இரண்டு நெக்லஸ் செட்களை வாங்கிக்கொண்டு, அந்த கடையை விட்டு சந்தோஷமாய் வெளியே வந்தார் கல்பனா. டிரைவரை பார்க்கிங்கில் இருந்து காரை கொண்டு வரச் சொல்லிவிட்டு காத்திருந்தார்.

அப்பொழுது சில பேர், சில பேரை விரட்டிக் கொண்டு வந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே ரவுடிகளை போல் தெரிந்தார்கள். தன் கார் வருகிறதா என்று படத்துடன் பார்த்தார் கல்பனா. அந்த ரவுடிகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளத் துவங்கினார்கள். அப்பொழுது ஒருவன் தூக்கியெறிந்த கட்டை, கல்பனாவின் நெற்றியை பதம் பார்த்தது. அவருடைய நெற்றி கிழிந்து ரத்தம் கொட்டத் துவங்கியது. மக்கள் இங்கும் அங்கும் ஓடத் துவங்கினார்கள். அவர் நகை வாங்கிய கடையை அவசரமாய் சாத்தினார்கள். அங்கு அவருக்கு உதவ யாரும் இல்லை. அவருக்கு தலை சுற்றியது. அவர் கையிலிருந்த நகைப்பை நழுவி, அருகில் திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடையில் விழுந்தது. அதை அவர் பிடிக்க முயன்று எந்த பலனும் பெறவில்லை.  அவர் புதிதாய் வாங்கிய வைர நகைகளுடன் அவருடைய வைர மோதிரமும் சாக்கடையில் விழுந்தது.

அப்பொழுது அவருடைய கார், அவர் அருகில் வந்து நிற்க. காரில் ஏறி அமர்ந்த அடுத்த நொடி அவர் மயக்கமானார். அவருடைய டிரைவர் அங்கிருந்து காரை கிளப்பிக் கொண்டு சென்றார்.

கல்பனாவிற்கு நிகழ்ந்த அனைத்தையும் அமைதியாய் பார்த்துக்கொண்டு, அங்கு நின்றிருந்த ஒரு காரினுள் அமர்ந்து, கள்ளப் புன்னகை சிந்தி கொண்டிருந்தான் ஒருவன். அவன் வர்ஷினியின் கண்ணீரை பொறுக்க முடியாதவன்... அவளுக்காக வாழ நினைப்பவன்...!

எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் அவர் வர்ஷினியை அடித்திருப்பார்?  அவளுக்கு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரோ... அவன் இருக்கிறான்... எவ்வளவு பிரச்சனைகள் வந்த பொழுதிலும், அவளை நிழல் போல் தொடர்ந்து வந்து அவன் காப்பாற்றுவான்... யாராவது வர்ஷினியை துன்புறுத்த வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு இது தான் கதி... என்று எண்ணியபடி அங்கிருந்து கிளம்பி சென்றான் நிமல்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro