Episode 7
இரண்டு வருடங்களுக்கு முன்பு
பரபரப்பான சென்னை சாலைகளில் மக்கள் தங்களது வேலை இடங்களுக்கும் சிறுவர்கள் பள்ளிகளும் இன்னும் சிலர் கல்லூரிக்கும் விரைந்தவண்ணம் இருந்தனர்.
அந்த ஜெயம் கலைக்கல்லூரியும் தனது முதல் வருட மாணவர்களை வரவேற்க காத்துக்கொண்டிருந்தது.
பிரதீப், "டேய் நம்ம காலேஜ்ல ராகிங் பண்ணா ஃபைன் போடுவாங்கன்னு தெரியும்ல அப்பறம் ஏன்டா இப்படி ராக் பண்ண வெயிட் பண்றீங்க."
சுந்தர்,"அட போடா ஒரு வாரம் கொஞ்சம் கண்டிப்பா இருப்பாங்க அப்பறம் கண்டுக்க மாட்டாங்க. இப்ப ராகிங் செய்யாம எப்ப செய்ய போறோம். சரி அமைதியா இரு அங்க ரெண்டு பொண்ணுங்க வராங்க பாரு அவங்களை கலாய்போம்."
சுந்தர்," ஹலோ ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ஸ் இங்க வாங்க"
அனிதா."என்னடி நம்மளை கூப்புட்றாங்க பயமாயிருக்கு மலரு."என்று தன் தோழியின் காதில் கிசுகிசுத்தாள்.
மலர்,"சும்மா எல்லாதுக்கும் பயப்புடாத அனி அவங்களை பார்த்தா தப்பானவங்களா தெரியல எதையும் தைரியமா சந்திப்போம் வா." என்று தைரியத்துடன் அவர்களை நோக்கி சென்றாள்.
சுந்தர்," சீனியர்ஸ்க்கு விஷ் பண்ணணும் ணு தெரியாதா? "என மிடுக்குடன் கேட்டான்.
மலர்,"அப்படிலாம் இல்லைங்க சீனியர். லேட் ஆகிடுச்சுனு தான் அவசரமா போனோம் சீனியர், குட் மார்னிங் சீனியர்," என வார்த்தைக்கு வார்த்தை சீனியர் போட்டு பேசினாள்.
அனிதா பேச முற்படுகையில் , பதட்டமாக ஒளித்தது பிரதீபின் குரல்," டேய் குரு டா கிளம்பு கிளம்பு மாட்டுன செத்தோம் "என்று கத்தினான்,
அடுத்த நொடி அந்த சீனியர் கூட்டம் அங்கிருந்து பறந்து சென்றது.
அனிதா," என்னடி இது அவனுங்களா கூப்டானுக பேசுனானுங்க திடீர்னு மாயமாய்டானுங்க இங்க என்னடி நடக்குது."என்று குழப்பத்துடன் கேட்டாள்.
மலர்," யாருக்கு தெரியும் ? சரி யாருடி அந்த குரு டெரர் பார்ட்டி யா இருக்குமோ ?" என தன் சந்தேகத்தை கேட்க , அனிதாவோ நக்கலுடன்," யாருக்கு தெரியும் காலேஜ் தொடங்கியேதே இப்பதான் இதுலே சீனியர்ஸ் பத்தி எப்படி தெரிஞ்சுகிறது. சரி வா போலாம் நேரம் ஆயிடுச்சு." என்று கூற இருவரும் வகுப்பறை நோக்கி விரைந்தனர்.
வகுப்பறையில் மற்ற தோழிகள் அவர்களை வரவேற்று, "ஏன்டி லேட்?" என்றும் வினவினர்.
அனிதா," அது ஒரு பெரிய கதை,என நடந்தவற்றை கூறினாள்.யாருடி அந்த குரு ?அவன் பேர கேட்டவுடனே அவ்வளவு பேரும் பறந்துட்டாங்க."
உமா,"குரு நம்ம டிபார்ட்மென்ட் சீனியர் . ரொம்ப டெரரான ஆளு யாரும் எதிர்த்து பேச முடியாது, ஸ்டாஃப்சே ஏம்பா தேவையில்லாம குரு கிட்ட தகராறு பண்றிங்கன்னு தான் சொல்லுவாங்களாம்.தப்பு னு தெரிஞ்சா அடி வெளுத்துருவான்.ரொம்ப கோபம் வரும்,யாராலயும் எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியாது,தனக்கு எது சரினு படுதோ அதை மட்டும் தான் செய்வான்.அவனுக்கு சரினு பட்றது எப்பவுமே சரியாதா இருக்கும்.தப்புக்கு எப்பவுமே துணை போக மாட்டான்."என்று குருவின் அருமை பெறுமைகளை அள்ளி வீசினாள்.
அனிதா,"என்னடி ஓவர் பில்டப் குடுக்குற."என நக்கலடித்தாள்.
மலர்வதனி யின் மனமோ தனது தந்தை யையும், அண்ணணையும் எண்ணியது.மலரின் தந்தை ஒரு தொழிலதிபர், பணம் சம்பாதிக்க எத்தனை தவறான வழியிருக்கிறதோ அத்தனை வழியையும் கற்று தனது ஸ்டேடசை முன்னேற்றி கோடீஸ்வராக வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அண்ணணோ தந்தை க்கு தப்பாமல் பிறந்த வாரிசு. மலர்வதனி தனது பாட்டி வேதவள்ளி மற்றும் தாத்தா வேங்கையனால் 10 வயது வரை வளர்கப்பட்டாள். ரானுவ வீரரான வேங்கையன் தனது நற்பண்புகளான அன்பு,பாசம்,நேர்மை,ஒழுக்கம் இவற்றை தன் பேத்திக்கு ம் போதித்தார்.
மலரின் அப்பாவிடமோ அண்ணணிடமோ நேர்மை ஒழுக்கம் என கூறினாள் அவளை பைத்தியமென்றே கூறுவர் அதனால் அவள் தனது எண்ணத்தை வெளியிடுவது இல்லை.முடிந்த வரை அவர்களை விட்டு விலகியே இருப்பாள்.
அதனால் உமா சொல்வதை கேட்க கேட்க மலர்வதனி யின் மனம் அவன்பால் சாய துவங்கியது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro