Episode 5
தான் எடுக்கப்போகும் முதல் வகுப்பிற்கு தேவையான நோட்ஸை எடுத்துகொண்டிருந்த மலர் "ஹாய்..."என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவுடன் கண்டது கிட்டதட்ட முகிலனின் மடியில் அமர்திருந்த அந்த அல்ட்ராமாரட்ன் பெண்ணை.
மனதை வாள் கொண்டு அறுத்ததுபோல வேதனை அடைந்தவள் வேகமாக தனது உடமையை எடுக்க மீண்டும் அவளது காதில் விழுந்த வார்தை "ஈவனிங் மீட் பண்ணலாம் டார்லிங்"என்பதே
வேதனையில் கண்கள் மூடி வெளியேர போகும் நேரம்.
"வதூ.... "என்ற முகிலனின் குரல் கேட்டு அவளது கால்கள் அசைய மறுத்தது ,வேகமாக திரும்பியவள் தனது கையை விடுவித்து அவனை முறைத்தாள்.
தவறு செய்த மாணவன் போல தலை யை குனிந்து நின்றான் அந்த கல்லூரியின் கம்பீரமான ஹெ.ஓ.டி கார்முகிலன்.
"யாரது?" ஒற்றைச்சொல்லில் கேள்விகேட்டாள் மலர்.
"ரியா....." தயக்கத்துடன் பதிலலித்தான் முகிலன்.
"ரியா னா? " இம்முறை மலரின் குரலில் லேசாக கோபம் எட்டிப்பார்த்தது.
"சான்ட்ரியா( sandriya)," என்று கூறுகையிலேயே அவனை இடைமறித்த மலர்,"ஓஓஓ ..........செல்ல பேரெல்லாம் கூட வச்சாச்சா?" என்று நக்கலாக கேட்டாள்.
"இல்ல வது எல்லாரும் அப்படி தான் கூப்புடுவாங்க," தன் பேச்சின் விளக்கத்தை கூற முயற்ச்சித்தான் முகிலன்.
"சரி அவளுக்கு உங்ககிட்ட என்ன வேலை?"
"அது வந்து .............,"
"வந்து ?ஏன் இழுக்குறீங்க?"என்று இடையிட்ட மலரைசெல்லமாக மனதிற்குள் திட்டிவிட்டு (பேச விட்றாளா பாரு)
இல்லை அவளுக்கு என்ன புடிக்கும்." என்று ஒருவாறு கூறி முடித்தான்.
" ஓஹோ .........?"
"ஆனா எனக்கு அவள புடிக்காதுடா நெஜம்மா டா.
நம்பு டா நான் அவள அவாய்ட் தான் பண்ணுவேன்,"
மலரிடமிருந்து பதில் இல்லை, அவளது முகம் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் இருந்தது.
இருந்தும் அவளை அழைத்துக்கொண்டேயிருந்தான் முகிலன்," வது,வதூ..., வது குட்டி........"
"யாரது? என் பேரு மலர்வதனி என்னை Ms மலர்வதனி னு தான் எங்க ஹெ.ஓ.டி.கூப்பிடுவாறு?" என்று சந்தர்பம் பார்த்து பழி வாங்கினாள்.
"அது சும்மா உன்னை வம்பிழுக்க கூப்டேன்டா செல்லம்," என்று கொஞ்சினான் அவன்.
"இந்த செல்லங்கொஞ்சுர வேலையெல்லாம் இங்க வேண்டாம்," என்று கோபமாக கூறியவளிடம் முகிலன்," வேற யாரடா நான் கொஞ்ச போறேன்?"
"ஏன் அதான் அவ வரேனு சொல்லிறுக்காளே உங்கள கொஞ்ஞ்ஞ்சுறதுக்கு," என்று இடக்காக கூறிய மலரிடம்,
"சீசீ போயும் போயும் அவளையா?" என்று முகம் சுழித்தான்.
"ஓ.. அப்ப சாருக்கு வேற ஆளு பாக்களாமா.?"என்று அக்கறையுடன் கேட்டாள் மலர்.
" ஆ.... இந்த ஐடியா சூப்பர்....,"
"என்னது? ??????"
" ஐயோ சும்மா சும்மா சொன்னேன்டா.என்ன நம்புமா நான் ராமன் மா."என்று கெஞ்சியவனிடம்
"நான் உங்க ஃபிரன்ட் கூட பேசுனதுகே சாருக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு.
நீங்க இப்படி கொஞ்சி குழாவுவீங்க நான் நம்ம முகி ராமன் தப்பெல்லாம் பண்ண மாட்டார்னு நம்பனும் ஆனா நீங்க எங்களை நம்பாம எங்களை தீக்குளிக்க சொல்வீங்க அப்படிதான?"கோபமாக கேட்டாள் மலர்.
"நான் எப்படா உன்ன நம்பாம இருந்தேன்.?" என்ற முகிலனின் கூற்றை அவள் காதில் வாங்கவே இல்லை.
"உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடி யே அவ உங்களை அந்த கொஞ்சு கொஞ்சுவா? நீங்களும் குடுத்துகிட்டே உக்காங்து இருப்பீங்க.
இதுல ஈவனிங் வேற வர்ரேன்னு சொல்றா ? "என்று பொரிந்து தள்ளினாள் மலர்.
தான் சொல்ல வருவதை கேட்காமல் பேசும் மலரின் கோபத்தை எப்படி சமாளிப்பது என்று தினறிய முகிலன் ஒருதரம் சுற்றி முற்றி பார்த்துவிட்டு பின் வேகமாக அவளை தன்னிடம் இழுத்து அவளது இதழை தன் இதழால் மூடினான்.
முதலில் எதிர்ப்பு தெரிவித்த மலர் பின்பு மெல்ல அடங்கினாள். அவளைவிடுவித்து தன்னோடு அனைத்துக் கொண்டான்.
இருவரம் அமைதியாக அந்த தருணத்தை அனுபவித்துக்கொண்டிருக்க முதலில் பேசியது முகிலன் தான், "அவ பேரு சான்ட்ரியா இங்லீஷ் டிபார்ட்மென்ட்ல தான் கெஸ்ட் லெக்சரரா இருக்கா. என் மேல ஒரு க்ரஷ், ஏய்...அப்படி பாக்காத நான் ஒன்னும் பண்ணல. நான் விலகி விலகி தான் போறேன்டா ஆனா பாரு அவ எப்படி பிஹேவ் பண்றானு. நான் என்னதான் செய்றதுனே தெரியல,"என்று கூறினான்.
தான் முகிலனின் தோள்களில் சாய்ந்து நின்று கொண்டிருப்பதை அப்பொழுது தான் உணர்ந்த மலர் வேகமாக விலகி நின்றாள்.
"ஏன் இப்படி நிக்குறதால இப்ப என்னாச்சு?" என்று மீண்டும் அவளை தன் புறம் இழுக்க மலரோ," ப்ளீஸ் முகி இது காலேஜ்.எனக்கு அடுத்த ஹவர்கிளாஸ் இருக்கு.
உங்ககிட்ட நிறைய பேசனும்,சொல்லனும் .
ஆனா அதுக்கு இப்ப சரியான நேரம் கிடையாது. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க முகி ப்ளீஸ்....." என்று அவன் தாடையை பிடித்து செல்லம் கெஞ்சினாள்.
அவளின் கோப வார்த்தைகளுக்கே கட்டுப்படும் முகிலன் அவளின் இந்த கெஞ்சலுக்கா செவி சாய்க்க மறுப்பான்???
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro