Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Episode 38

சென்னையில் உள்ள பெரிய மண்டபங்களில் ஒன்றான லெஷ்மி மஹால் முழுவதும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் நிறைந்திருந்தனர்.

எங்கும் எதிலும் பணத்தின் ஆளுமை தெரிய அலங்காரங்கள் ஜொலித்தன.அங்கு வந்தவர்களை வரவேற்பதற்காகவே தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தது.அவர்கள் இங்கும் அங்கும் சென்று ஒரு நிமிடம் போலும் ஓய்வெடுக்க முடியாமல் வரவேற்கும் அளவிற்கு மண்டபம் நிறைந்து வழிந்தது.

நடுநாயகமாக போட்டிருந்த அலங்கார மேடையில் கோல்டன் நிற பட்டுடுத்தி அதற்கேற்ப வைரத்தினாலான ஆபரணங்கள் அணிந்து தலைமுதல் கால்வரை நாணத்தால் சிவந்திருக்க , வைரத்தின் மினுமினுப்போடு செந்நிறமும் சேர்ந்து போட்டி போட வானுலக தேவதை பொறாமைபட அங்கு நின்றுகொண்டிருந்தாள் மவர்வதனி.

அவள் அருகினில் உலகை வென்றுவிட்ட  கர்வத்துடன் சந்தன நிற ஷெர்வாணியில் , இளவரசனிற்கு குறையாத அழகுடனும் மலரின் மீது பொங்கி வழியும் காதல் பார்வையுடனும் நின்றுகொண்டிருந்தான் கார்முகிலன்.

இருவருக்கும் இன்று உலகறிய ரிசப்ஷென் நடந்துக்கொண்டிருந்தது.

கீழே அவர்களின் தோழர்களும், தோழிகளும் , உறவினர்களும் அமர்ந்திருக்க அதில் அமர்ந்திருந்த கௌதமின் உள்ளம் ஆனந்தத்தில் திலைத்திருந்தது.அவனின் மனமோ ஒரு வாரத்திற்து முந்திய நிகழ்வை நினைவு கூர்ந்தது.

அன்று மலரின் தாய் குருவிற்கு கால் செய்து வரச்சொன்னவுடன் வேகமாக கிளம்பிய குரு தன் கைபேசியை வீட்டிலே வைத்துவிட்டு சென்றுவிட்டான். அவன் சென்ற சிறிது நேரத்தில் அவன் மொபைல் பாட அங்கிருந்த கௌதம் அதில் மின்னிய குருவின் தாத்தா பெயரை பார்த்ததும் ஆவலுடன் எடுத்து பேசலானான்.

" ஹலோ முகிலா.....? நல்லா இருக்கியா?" தாத்தா

" தாத்தா நான் கௌதம் பேசறேன், அவன் மொபைல வீட்ல வச்சிட்டு போய்டான்."

" ஓ..... அப்படி மறந்து வச்சிட்டு போற அளவிற்கு என்ன அவசரம் கௌதம்."

" அது வந்து தாத்தா....."

" ஏன் என்னாச்சு, சும்மா தைரியமா சொல்லு."

" முகிலன் மலரை பார்க்க போயிருக்கான், மலரோட வீட்டுக்கு."

" ஓ ......அப்படியா? இது எத்தனை நாளா நடக்குது?" குரலில் கோபம் எட்டிப்பார்க்க கூறினார்.

" இல்லை தாத்தா இன்னைக்கு தான் போயிருக்கான்.நேத்து தான் மலரை நேர்ல பார்தான்," தயக்கத்துடன் கூறினான்.

" சரி நீ என்ன பண்ற உடனே........ஆ........ஆ......ருக்கு....., "

" தாத்தா , தாத்தா ........என்னாச்சு உங்களுக்கு  ஹலோ....ஹலோ.... யாராவது பேசுங்களேன்..."

பீப் , பீப் என்று கால் கட் ஆன சத்தமே கேட்டது , அவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய யாரும் எடுக்கவில்லை அதனால் பயந்து உடனே முகிலனிற்கு கால் செய்து நடந்தவற்றை கூறினான்.

இவன் கூறியதை கேட்ட முகில் அதிர்ச்சி அடைந்து உடனே மலரையும் கௌதமையும் அழைத்துக்கொண்டு கோவை வந்து சேர்த்தான்.

அவன் வீட்டின் நுழைந்ததும் அவன் கண்ட காட்சி அவனை பேச்சிழக்க செய்தது, கால் மேல் கால் போட்டு கம்பீர தோரனையில் சந்திரசேகரன் அமர்ந்திருக்க அவரின் அருகில் அவரின் பத்தினி அமர்ந்திருந்தார் முகத்தில் கவலையோடு.

சந்திரசேகரின் முன்னே அவர் மகன் ராஜகுமார பூபதியும் அவர் மனைவி மஹாலெஷ்மியும் குற்றவாளிகள் போல நின்று கொண்டிருந்தனர்.

இதை கண்ட முகிலன்," தாத்தா என்ன இது உங்களுக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை னு நான் பதட்டமா ஓடி வந்தா நீங்க இங்கே எங்க அப்பாவை எதற்கு இப்படி நிக்க வைச்சிருக்கீங்க?"

" அவன் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் எனக்கு பையன் அவன் செஞ்ச தப்புக்கு அவனுக்கு கட்டாயம் தண்டனை உண்டு, உன்னை யாரு இங்க கூப்பிட்டா?" என்று கோபமாக வினவினார்.

" எங்க அப்பா தப்பு பண்ணாறா? அதுக்கு வாய்பே இல்லை, நீங்க சும்மா சொல்றீங்க." என்று கூறினான்.

" ஏன் உங்க அப்பா க்கு தலை ல இரண்டு கொம்பு முளைச்சிருக்கா , தப்பு பண்ணாம இருக்க ," என்றார் கேலியுடன்.

" அப்படியா அப்ப அவர் என்ன தப்பு பண்ணாரு னு சொல்லுங்க."

" நல்லா கேட்டுக்கோ, மனைவியோட பேச்சு எல்லை மீறி போகும் போது அவளை அடக்கனும், அடுத்தவங்க மனசு கஷ்டப்படற மாதிரி வார்த்தைகள் உபயோகிக்கும்போது கண்டிக்கனும், சரி இத செய்ய தவறிட்டா அந்த தவற சரி செய்ய முயற்சி செய்யனும் , இதை எதையுமே உங்க அப்பா செய்யலை."

மௌனமாக நின்ற முகிலனை பார்த்த அவன் தாத்தா," இப்ப உங்க அப்பா க்கு ஆதரவா பேசு பா ஏன் அமைதி ஆகிட்ட,"என்று கூறினார்.

மேலும் அவன் அமைதியாக நிற்க இப்பொழுது அவன் அருகில் நடப்பது அனைத்தையும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த மலரை நோக்கினார்," அம்மா மலர் என் மருமகள் வார்த்தையை விட்டது தப்புதான் , அதுக்காக ஒரு பாவமும் அறியாத என் பேரனுக்கு தண்டனை கொடுக்குறது சரியில்லை, நீ  நடந்ததை மறந்துட்டு உன் வாழ்க்கை யை முகிலன் கூட இந்த வீட்ல ஆரம்பி." என்று கூறினார்.

மலர் அமைதியாக இருக்கவும் , அவர் தொடர்ந்தார்," நான் வேணும்னா என் மருமக செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்கறேன்".

வேகமாக அவர் அருகே வந்த மலர்," நீங்க பெரியவங்க அப்படியெல்லாம் சொல்ல கூடாது, நான் என்ன சொல்றது னு தெரியாதது னால தான் அமைதியா இருந்தேன்.இப்படி ஒரு குடும்பத்துல வாழ எனக்கு கொடுத்து வச்சிருக்கனும், நான் இழந்த என் தாத்தா , பாட்டியா தான் உங்களை பார்க்குறேன்." என்று கூறி முடித்தாள்.

சந்திரசேகரன் தன் மருமகளை நோக்கி," மஹா நீ என்ன சொல்ற?" என்று வினவினார்.

அதுவரை அமைதியாக இருந்த அவர்," மாமா என்னையும் அறியாம நான் மலரை தப்பா பேசிட்டேன், எதுனால னு தெரியாம மலரை எனக்கு பிடிக்காம போயிடுச்சு, உடனே என்னால ஏத்துக்க முடியாது , ஆனா காலப்போக்குல என் மனசு மாறிடும் ." என்று கூறினார்.

" அப்பறம் என்ன ராஜகுமாரா கூடிய சீக்கிரம் நல்ல நாள் பார்த்து கூடிய சீக்கிரம் ரிசப்ஷென் வைக்க பாரு , மலரோட வீட்ல பேசு." என்று அடுத்து நடக்க வேண்டியவை குறித்து கட்டளையிட்டார் அந்த பெரியவர் .

பின்பு ரிசப்ஷென் வேலைகள் தொடங்கின அது சம்மத்தமாக மலரின அண்ணணை  சந்தித்தார் ராஜகுமார பூபதி.

தன் தந்தை யின் செயல் குறித்து வெளிப்படையாக பேசிய விஷ் தான் தனியே தொழில் தொடங்க போவதாக கூறி தன் தந்தை விட்டு பிரிந்ததை கூறினான். தன் தங்கையின் உடைமைகள் அனைத்தும் தன் பொறுப்பு என்று உறுதி அளித்தவன் தன் தந்தையை அனுகவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான்.

வேலைகள் வேகமாக நடக்க இதோ இன்று அவர்கள் உலகத்தோர் முன் தம்பதிகளாக காட்சியளித்தனர்.

இதை எல்லாம் நினைவு கூர்ந்த கௌதம் மெல்ல சிரித்துக்கொண்டே மணமக்களை வாழ்த்த சென்றான்.

நாமும் அவர்கள் நலம் பெற்று வலம் பெற வாழ்த்தி விடைபெறுவோம்.

             💐💐💐 சுபம்💐💐💐

இது எனது முதல் கதை ,நான்  மிகுந்த தயக்கத்துடன் தான் இந்த கதையை தொடங்கினேன் ஆனால் உங்கள் அனைவரின் ஆதரவும் , வோட்களும், கமென்டுகளும் என்னை ஊக்குவித்து எழுத தூண்டியது.

உங்களின் ஊக்குவிப்பினாலே என்னால் இந்த கதையை எழுதிமுடிக்க முடிந்தது.இடையில் அப்டேட் செய்ய தாமதமானதற்கு வருந்துகிறேன் . என் கதைக்கு உங்களின் விமர்சனங்களை வரவேற்கிறேன்.அது என் தவறை திருத்திக்கொள்ள எனக்கு உதவும்.

வாட்பேட் உலகம் எனக்கு பல சகோதரிகளையும், நண்பர்களையும் ஈட்டிக்கொடுத்துள்ளது அவர்களுக்கு நான் மிகவும் கடமை பட்டிருக்கிறேன்.

என் கதைக்கு ஆதரவும் எனக்கு நம்பிக்கையும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளுடன் விடை பெறுகிறேன்.

நன்றி
வணக்கம்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro