Episode 37
கோயமுத்தூரின் புறநகர் பகுதியில் அந்த பெரிய அரண்மனை கம்பீரமாக வீற்றிருந்தது.எங்கும் எதிலும் பணத்தின் பிரதிபலிப்பே தெரிந்த அந்த அரண்மனை யின் தோட்டத்தில் அந்த வீட்டின் தலைவர் தன் துணைவியுடன் அந்த மாலை பொழுதை கழித்துக்கொண்டிருந்தார்.
வயது 80 ஐ நெருங்கிய போதும் அவரின் கம்பீரம் சிறிதும் குறையாமல் கச்சிதமான உடற்கட்டுடன் காணப்பட்டார்.அவரின் மனைவியோ மஞ்சள் பூசிய முகத்துடன் சிறிது சோசகம் முகத்தில் தெரிய தன் கணவரின் அருகில் அமர்ந்திருந்தார்.
தன் கணவர் சந்திரசேகரிற்கு தேவையான காபியை அவர் கைகளில் கொடுத்துவிட்டு அவர் பருக தொடங்கும் வரை பொறுத்தது போல," நல்லா..... குடிங்க அந்த ஒரு வேலை மட்டும் தானே நீங்க சரியா செய்றது," என்று தன் புலம்பலை துவங்கினார்.
தன் மனைவியை கேள்வியின் பொருள் புரிந்த போதும்," என்ன ருக்கு உனக்கு தெரியாததா, எனக்கு காபி னா எவ்வளவு இஷ்டம் னு." என்று அவரை சீண்டினார்.
" ஏங்க நீங்க இங்க காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கறீங்க ஆனால் நம்ம வீடு இருக்குற நிலையை நினைச்சு பார்குறீங்களா?"
" ஏன் மா நம்ம வீட்டுக்கு என்ன அழகா கம்பீரமா இருக்கு ."
" ம்கும்...... வீடு அழகா இருந்தா மட்டும் போதுமா அதுல வாழ்றவங்க நல்லாவும் சந்தோஷமாவும் இருக்க வேண்டாமா? எப்படி இருந்த வீடு யாரு கண்ணு பட்டுச்சோ இப்படி ஆகிடுச்சு."
" எப்படி ஆயிடுச்சு னு புலம்புற நீ? சொல்றத தெளிவா சொல்லு ருக்கு", என்ற சந்திரசேகரின் குரலில் கடினம் கூடியிருந்தது.
" என்னங்க தெரியாத மாதிரியே பேசறீங்க, என் பையன் ராஜகுமார் அவன் மனைவிகிட்ட பேசியே மூனு வருஷம் ஆகுது, என் பேத்தி நிறைமதி சந்தோஷமான பட்டாம்பூச்சியா இந்த வீட்டை சுத்தி வந்த பொண்ணு இப்ப சிரிப்ப மறந்து கடனே னு வாழ்ந்துகிட்டு இருக்கு, எல்லாதுக்கும் மேல என் ஆசைபேரன் சனிக்கிழமை ஆனதும் ஓடி வந்து நம்மளை பாக்குறவன் இங்க வந்தே மூனு வருஷம் ஆச்சு , இதை யெல்லாம் சரிசெய்ய வேண்டிய நீங்களோ இங்க ஜாலியா உட்காந்து காபிய ரசிச்சு குடிச்சிக்கிட்டு இருக்கீங்க." தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
" இப்ப நான் காபி குடிக்குறது உனிக்கு பிடிக்கலையா டார்லிங்? உனக்கு பிடிக்காததை நான் எப்படி செய்வேன் ஸ்வீடி ," என்று கூறி தான் குடித்து முடித்த காபி கப்பை கீழே வைத்தார்.
" ஐய்யே ரொம்ப தான் வலியுது பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடுன கதையா, ஆக வேண்டிய வேலை பார்பீங்களா சும்மா என்னை வம்பிலுத்துகிட்டு," சிவந்த தன் முகத்தை மறைத்தவாறு கூறினார்.
" நீ சொல்றது சரிதான் ருக்கு நம்ம பிள்ளை தான் இப்ப ஊர்ல இல்லையே, அப்ப நான் துள்ளி விளையாடுறதுல என்ன தப்பு," என்று கண்ணடித்தவாரே தன் மனைவியை நோக்கியவர் திகைத்தார்.
" ருக்கு என்னாச்சு ஏன் கண் கலங்குற நான் ஏதாவது உன்னை கஷ்டப்படுத்திடேனா?"
" இல்லைங்க அப்படிலாம் ஒன்னும் இல்லை.நீங்க என்னை கல்யாணம் செஞ்சதுல இருந்து நான் சந்தோஷமாதான் இருக்கேன், ஆனால் இந்த மூனு வருஷமா நம்ம குடும்பம்தில இருக்குற யாரும் சந்தோஷமா இல்லை, இந்த வீடு வெளிய இருந்து பார்க்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கு ஆனால் அங்க உள்ள மனிஷங்க மனசுல சந்தோஷமும் நிம்மதியும் இல்லை. இந்த வீட பழையபடி கொண்டுவர முடியலையே னு ஆதங்கம் தான் எனக்கு." என்று கூறினார்.
" ருக்கு உன்னை நான் எந்த அளவு நேசிக்கிறேனோ அதே அளவு நம்ம குடும்பத்தையும் நேசிக்கிறேன் , எனக்கு அக்கறை இல்லைனு நினைக்கறியா?"
" நான் அப்படிலாம் சொல்லலை என்னோட ஆதங்கத்தை நான் உங்ககிட்ட கொட்டிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க."
" மன்னிப்பு கேட்க நான் மூனாம் மனுஷன் இல்லை ருக்கு, உனக்கே தெரியும் நம்ம முகிலனோட விஷயத்துல என்னால ஏதாவது செய்ய முடியுமானு நான் யோசிக்காம இல்லை. நான் வாரம் ஒரு தடவை முகிலன் கிட்ட பேசிக்கிட்டு தான் இருக்கேன்.அவனோட பேச்சுல இருந்து இன்னும் அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுதான் இருக்காங்க, கணவன் மனைவியா சேர்ந்து வாழ்றவங்களை நம்ம குடும்பத்தோட சேர்க்குறது கஷ்டம் இல்லை மா, அதே சமயம் அவங்களே தனியா இருக்கும்போது அவங்களை இங்க கூட்டிட்டு வர்றது கஷ்டம் ருக்கு," என்ற வருத்தத்தை தெரிவித்தார்.
" அப்ப இதுக்கு என்னதான் தீர்வு?"
" ம் வேற ஏதாவது யோசிக்கலாம், நீ கவலை படாதா, உனக்காக வேணும்ணா நான் முகிலனுக்கு இப்ப கால் பண்ணி பேசறேன், "என்று கூறியவர் தன் மொபைலை எடுத்து முகிலனை அழைத்தார்.
தன் மாமியாரை காண வந்த குருவின் அன்னை இவர்களின் பேச்சை கேட்டு அமைதியாக வந்த வழியே திரும்ப சென்றதை இவர்கள் இருவரும் கவனிக்க தவறினர்.
மலரின் வீட்டிலா அதே நேரம்
வீட்டின் ஹாலில் தன் இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்த தன் மகன் விஷ் ஐ பார்க்கும் போது அவனின் அன்னைக்கு மிகுந்த வேதனையாக இருந்தது, இருப்பினும் அவனுக்கு தனிமை கொடுத்துவிட்டு அவன் அருந்த காபியை எடுத்து வந்து அவனின் அருகே அமர்ந்தார்.
தன் தாயின் அருகாமையை உணர்ந்த விஷ் அவரின் மடி மீது தலை வைத்து படுத்துக்கொண்டான்.
அவனின் முடியை கோதிவிட்ட அவன் தாய்," என்னாச்சு ஏன் இப்படி உடைஞ்சு போய்ட ?"என்று கேட்டார்.
" எப்படிமா இவ்வளவு நடந்திருக்கு உங்களுக்கு என்கிட்ட சொல்லனும் னு தோனவே இல்லையா?, என் நினைப்பே உங்களுக்கு வரலையா?" என்று வேதனையுடன் கேட்டான்.
" விச்சு நீ நினைக்கிற மாதிரி நிலைமை இல்லை பா, உங்க அப்பாகிட்ட தைரியமா பேசின மலர் உள்ளுக்குள்ள ரொம்ப உடைஞ்சு போய்டா, என்னையே அவ கூட வர சம்மதிக்கலை , அப்பறம் அவளை கொஞ்சம் கொஞ்சமா பேசி சம்மதிக்க வைச்சேன், மாப்பிள்ளை ய பத்தி நீ தப்பா நினைச்சுக்குவ னு உங்கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டா, அவளோட மனசுக்கு மதிப்பு கொடுத்து நான் அமைதியா இருந்துட்டேன், எப்படியும் நீ இந்தியா வந்ததும் நேரா இங்க வருவ னு எனக்கு தெரியும், நீயும் அதே மாதிரி வந்துட்ட, போதும் முடிஞ்சதை பத்தி பேசுனது நீ முதல்ல எந்திரிச்சு இந்த காபியை குடி , ஆக வேண்டிய வேலை நிறைய இருக்கு", என்று தன் மகனை தேற்றினார்.
" ஆமா மா நானும் சில முடிவுகள் எடுத்திருக்கேன், அதை செயல் படுத்தனும் ,அப்பறம் மலரை மாப்பிள்ளை கூட இப்பவே அனுப்பி வைக்க போறேன, அதான் அவ மனசு மாறிட்டாலே இன்னும் எதுக்கு காத்திருக்கனும், நீங்க என்ன சொல்றீங்க?"
" நல்லது பா அப்படியே செஞ்சிடுவோம், முதல்ல நீ போய் கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிட்டு வா," என்று அவனை உள்ளே அனுப்பி விட்டு தன் பிரச்சனைகள் கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்திவிடும் என்ற சந்தோஷத்துடன் அடுக்கலை நோக்கி சென்றார்.
மலரை பின் தொடர்ந்து சென்ற முகிலன் அறைக்குள் அமைதியாக அமர்ந்திருந்தான்.அவனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள முடியாத மலரும் அவனை பார்த்த வண்ணம் எதிரில் நின்று கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் சென்றும் மௌனம் கலையாத தன் கணவனை கவலையுடன் நோக்கிய மலர்," என் மேல கோபமா இருக்கீங்களா குரு," என்று கேட்டாள்.
" உங்க மேல கோபப்பட நான் யாருமா, எனக்கு அந்த உரிமைலாம் இல்லை." அமைதியாக அழுத்தமாக வெளிவந்தன வார்த்தைகள்.
" ஏன் இப்படிலாம் பேசுறீங்க, எனக்கு கஷ்டமா இருக்கு ப்ளீஸ், நான் உங்களை எதாவது கஷ்டப்படுத்திருந்தா என்னை மன்னிச்சிடுங்க."
இருகைகளை கூப்பி கண்களில் கண்ணீருடன் நின்ற மலரை பார்த்த குரு வேகமாக அவள் அருகில் சென்று அனைத்துக்கொண்டான்.
" சும்மா உங்கிட்ட கொஞ்சம் விளையாடி பார்த்தேன், பயந்துட்டியா?" என்று சிரித்தபடி வினவிய குருவை கொலை வெறியுடன் நோக்கிய மலர் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு," ப்ராடு, ப்ராடு இரு உன்னை என்ன பண்றேனு " என்று கூறிக்கொண்டே அவனை அடிக்கத்தொடங்கினாள்.
" ஏய் போதும் வலிக்குது அடிக்காத," என்று கூறிய குரு மலரிடமிருந்து தப்பித்து ஓட தொடங்கினான் , அவனை துரத்திக்கொண்டே சென்ற மலர் அவனை பிடிக்க முடியாமல் தடுமாறி கீழே விழ போக அவளை தாங்கிப்பிடித்தான் குரு.
" இப்ப மாட்டுனியா ," என்று கூறி நன்றாக கிள்ளி வைத்தாள் மலர்.
" ஆஆஆஆஆ ராட்சஷி வலிக்குது டி....."
" நல்லா.... வலிக்கட்டும் அதுக்குதான் கிள்ளுனேன்."
" அப்படியா இரு வர்றேன் ," என்று அவளை எட்டிப்பிடித்தான்.அவளை தன் கைகளுக்குள் சிறைபிடித்த குரு காவியம் எழுத தொடங்கினான்.
இவர்கள் இருவரின் சிரிப்பொலி அந்த இல்லம் முழுவதும் எதிரொலிக்க மலரின் சிரிப்பை கேட்ட சந்தோஷத்தில் அந்த இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர் .
மலர் குருவின் மோனநிலையை கலைக்கவென மலரின் கைப்பேசி பாடியது, மலரை எரிக்கும் பார்வை பார்த்த குரு எரிச்சலுடன் மொபைலை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
அதை தயங்கியபடியே வாங்கிய மலர் டிஸ்பிளேயில் குருவின் எண் ஐ பார்த்ததும் குழப்பத்துடன் அவனிடம் மொபைலை நீட்டினாள்.
" என்னாச்சு வதூ... யாரு கால் பண்றா? " என்று வினவியபடி மொபைலை பார்த்த குரு தன்னுடைய எண் ஐ பார்த்ததும் புரியாமல் அடென்ட் செய்து காதில் வைத்தான்.
அந்த பக்கம் பேசிய கௌதம்," டேய் மச்சான் நீ உடனே கிளம்பி இங்க வா ஒரு முக்கியமான விஷயம் பேசனும் ," என்று கூறினான் .
" டேய் எதுவா இருந்தாலும் பரவாயில்லை இப்பவே சொல்லு" என்று கேட்டான்.
அந்த பக்கம் கௌதம் கூறிய செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro