Episode 36
காலையில் கல்லூரியில் ஏமாற்றத்துடன் ப்ரின்சிபாலின் ஆணைபடி வேறு கல்லூரிக்கு சென்ற கார்முகிலன் மாலை தனது அலுவல்களை முடித்துக்கொண்டு வீடு திரும்பினான்.
வீட்டிற்குள் நுழையவும் அவன் மொபையில் ரிங் ஆகவும் சரியாக இருந்தது. டிஸ்பிளேயிலிருந்த மலரின் அன்னையின் எண் ஐ பார்த்ததும் சிறு யோசனையுடனே பேச துவங்கினான்," ஹலோ அத்தை சொல்லுங்க, இந்த நேரத்தில கால் பண்ணிருக்கீங்க?" என்று குரலில் ஆச்சர்யத்துடன் வினவினான்.
" மாப்பிள்ளை சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் இப்ப கூப்பிட்டேன்."
" அப்படியா என்ன விஷயம் அத்தை , உங்களோட குரலே ரொம்ப உற்சாகமா இருக்கு."
" உங்க மலர் உங்களை பார்க்க இன்னைக்கு ஆசையா அலங்காரமெல்லாம் பண்ணிகிட்டு இன்னைக்கு காலேஜ் வந்தாள் ,"என்று தொடங்கி அன்று மாலை நடந்தது முழுதும் கூறி முடித்தார்."
" பாவம் அத்தை மலர் அவளை ஏன் நீங்க திட்டுனீங்க?" என்று வருத்தப்பட்டான் குரு.
" அட என்ன மாப்பிள்ளை நீங்க அவளோட தப்பை புரிய வச்சு அவ கணவனோட சேர்க்குற கடமை எனக்கு இருக்கு ல, அவ புரியாம இதெல்லாம் செய்ரா சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய நேரத்தில சொன்னாதான் நல்லது." என்று தன் பக்க நியாயத்தை கூறினார்.
" அதனால மாப்பிள்ளை நீங்க கொஞ்சம் இங்க வந்தீங்கனா அவளோட மனசு முழுசும் மாறிடும்." என்று தான் கால் செய்த காரணத்தை தயக்கத்துடன் கூறினாள்.
" இதை சொல்ல ஏன் அத்தை தயங்குறீங்க , கிளம்பி வாடா அப்படீனு சொன்னா வரப்போறேன்." என்று அவன் வருவதை உறுதி செய்துவிட்டு கால் ஐ கட் செய்தான்.
மலரை பார்க்கப்போகும் ஆவலில் சில நிமிஷங்களிலேயே தயாராகி மலரின் இல்லத்திற்கு சென்று காலிங்பெல் ஐ அழுத்தினான்.வெகு நேரமாகியும் யாரும் வந்து கதவு திறக்காததால்.மீண்டும் காலிங்பெலை அழுத்த முயல கதவு திறந்தது. திறந்த கதவின் உள்ளே நின்ற அந்த நபரைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான்.அவரை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த தோற்றத்திலே தெரிந்தது.
அவனை உள்ளே அழையாமல் அவர் மீண்டும் உள்ளே செல்ல அவர் தன்மீது கோபத்தில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவன் அமைதியாக வீட்டினுள் நுழைந்தான்.
முன்னதாக மலரின் வீட்டில் கிச்சனில் தன் மருமகனை வயவேற்க இனிப்பு செய்து கொண்டிருந்த மலரின் அன்னையின் செவிகளில் காலிங்பெல் அடித்த சத்தம்கேட்டபின் வேகமாக ஓடிய தன் மகளின் கொலுசு சத்தம் கேட்டது, அதற்கு பிறகு எந்தவித சத்தமும் இல்லாததால் கிச்சனிலிருந்து வெளியே வந்த மலரின் தாய் அங்கே அதிர்ச்சியுடன் நின்ற தன் மகளை பார்தார்,"யாரை பார்த்து இப்படி நிக்கிற மலர்," என்று கேட்டுக்கொண்டே கதவின் அருகே வந்தவர் அங்கே பார்தது கண்களிள் கோபத்துடன் ஆவேசமாக நின்றுகொண்டிருந்த தன் மகனை.
அவனது உடையை பார்ததவர் நேரே விமானநிலையத்திலிருந்து இங்கு வந்திருப்பதை புரிந்து கொண்டார், ஓரிரு நிமிடங்களில் தன்னை சமாளித்துக்கொண்டு, " விச்சு........ வந்திட்டியா....? வா.....வா... ஏன் அங்கேயே நிக்கிற உள்ள வா , மலர் என்ன பார்த்துக்கிட்டு இருக்க அண்ணண உள்ள கூப்பிடாம?" என்று தன் மகளை கடித்துக்கொண்டு விச்சுவை உள்ளே அழைத்தார்.
தன் தாய் கூறிவற்றை மறுபேச்சு பேசாமல் ஏற்றுக்கொண்டு கோபம் சிறிதும் குறையாமல் வீட்டின் உள்ளே வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த விச்சு @ விஷ்வநாதன் அந்த வீட்டை தன் கண்களால் அளந்தான்.
ஒரு சிறிய ஹால் , இரண்டு படுக்கையறைகள் மற்றும் ஒரு சமையலறை கொண்ட சிறிய வீடு தங்கள் வீட்டின் போர்டிகோ வே இதைவிட பெரிதாக இருக்கும்.
அரண்மனை போன்ற வீட்டில் ராணியாக வாழ்ந்த தன் அன்னை இங்கு தனியே வீட்டு வேலைகளை கவனித்திக்கொண்டும், அழகான பட்டாம்பூச்சியாக வலம் வந்த தன் தங்கை இங்கே வந்து படிப்பிற்கும் இதர தேவைகளுக்கும் பார்ட் டைம் வேலை பார்த்துக்கொண்டும் கஷ்டப்படுவதை நினைத்து அவன் கண்கள் கலங்கியது.இதனை எல்லாம் கவனிக்காமல் இந்த மூன்று வருடங்களாக லண்டனில் இரவு பகல் பாராமல் உழைத்த தன் மீது கோபம் கொண்டவன் அதே நேரம் இங்கு நடந்தவைகளை பற்றி தன்னிடம் கூறாமல் மறைத்த தன் தந்தையின் மீது வெறுப்பு கொண்டான்.
வீட்டினுள்ளே வந்தது முதல் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாலும் முகத்தில் வந்த போன பல விதமான உணர்ச்சிகளை கொண்டே தன் மகன் சிந்திக்கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துக்கொண்ட அந்த தாய், அவனிடம் பேச எத்தனிக்க மீண்டும் வாயிலில் மணி அடித்தது, இம்முறை சந்தேகமில்லாமல் வந்திருப்பது குரு என்ற இருவருக்கும் தெரியவர செய்வதறியாமல் இருவரும் கைகளை பிசைந்து நின்றனர்.
வாயில் மணி அடித்ததும் தன் தாயும் சகோதரியும் கதவை திறக்காமல் இருப்பதை பார்த்த விச்சு அவர்களின் முகத்திலிருந்த கலவரத்தை பார்த்து தானே சென்று கதவை திறந்தான.
அங்கே நின்ற குருவை பார்த்ததும் கோபம் தலைக்கு ஏற அமைதியாக உள்ளே சென்றான்.அவனை பின் தொடர்ந்து உள்ளே வந்த குருவை திரும்பி முறைத்த விச்சு சிறிதும் யோசிக்காமல் பளார்...... என்று அவன் கண்ணத்தில் அறைந்தான்.
"அண்ணா........" "விச்சு..........."என்ற குரல்கள் அங்கே எதிரொலித்தன.
அமைதியாக நின்ற குருவை மறைத்து நின்ற மலர் ,"அவரை அடிக்கறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? அவர் என்னோட கணவர் அவர் கிட்ட இப்ப நீ மன்னிப்பு கேட்கறியா? இல்லையா?"
என்று கத்தினாள்.
அவளை அமைதிபடுத்திய குரு," வதூ நீ கொஞ்ச நேரம் பேசாம இரு , விச்சுக்கு என் மேல எல்லா உரிமையும் இருக்கு அவரோட கோபம் நியாயமானது தான் , அவர் நிலையில யாரு இருந்தாலும் இப்படி தான் நடந்துக்கிட்டு இருப்பாங்க, சொல்லு மச்சான் என்ன ஆச்சு ஏன் இவ்வளவு கோபமா இருக்க?" என்று அவனிடம் உரிமையாக வினவினான்.
"அதைதான் நானும் கேட்குறேன் மலரை உன்னோட மனைவியாக்கி உன் கூட அனுப்பி வச்சதுக்கு அப்பறம் நான் சில கம்பெனி பிரச்சனைகளை கவனிக்க லண்டன் போய்டேன்.நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறதா தான் நான் இந்த மூனு வருஷமும் நினைச்சிக்கிட்டு இருக்கேன். இடையில உங்களுக்குள்ள என்ன நடந்துச்சு னு எனக்கு தெரியலை, யாரும் என்கிட்ட சொல்லவும் இல்லை.அந்த அளவு நான் வேண்டாதவனா போய்டேனு நினைக்கும் போது கவலையா இருக்கு." அவனை இடைமரித்து மலர் ஏதோ சொல்ல வர அவளை அமைதியாக இருக்கும்படி சைகைசெய்துவிட்டு," நான் பேசி முடிச்சுக்கறேன்," என்று கூறி மேலும் தொடர்ந்தான்,"அப்படியே உங்களுக்குள்ள பிரச்சினை இருந்தா மலர் ஏன் எங்க வீட்ல இல்லாம இங்க வந்து அம்மாவும் அவளும் தனியா கஷ்டப்பட்றாங்க? என்ன தான் நடந்துச்சு" என்று ஆற்றாமையுடன் வினவினான்.
விச்சுவின் அருகே சென்ற குரு ," விச்சு....என்னை மன்னிச்சிடு எல்லாதையும் உங்கிட்ட சொல்லிருக்கனும், ஆனால் ஒவ்வொரு தடவை நீ போன் பண்ணும்போதும் நான் சொல்லனும் னு தான் நினைப்பேன் ஆனால் உன் குரல்ல தெரியுர சோர்வு ,எங்கிட்ட பேசுறதால வர்ற உற்சாகம் இதனால தான் நான் சொல்லலை, " என்று கூறிவிட்டு ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அவன் மலரை தன் வீட்டிற்கு அழைத்து சென்றது முதல் மலர் குருவை விட்டு பிரிந்தது வரை அனைத்தையும் குற்ற உணர்வோடு கூறி முடித்தான்.
குரு கூறுவதை கேட்க கேட்க விச்சுவிற்கு மறைந்திருந்த கோபம் மீண்டும் துளிர்விட தொடங்க அவனின் சட்டையை கொத்தாக பிடித்து," இதுக்குத்தான் என் தங்கச்சிய லவ் பண்ணியா? அவளுக்கு இப்படி ஒரு பழிச்சொல் வர தான் அவ கழுத்துல தாலி கட்டுனியா?" என்று கத்தினான்.
வேகமாக அவனிடமிருந்து குரு பிரித்த மலர் , "அவர் மேல எந்த தப்பும் இல்லை , அவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்காம நான் தான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன்.
நேர நம்ம வீட்டுக்கு தான் வந்தேன். என்னை பார்த்ததும் அம்மா ஒடி வந்து என்னாச்சு னு கேட்டாங்க, நான் நடந்ததை அவங்ககிட்ட சொன்னேன், அதைகேட்ட நம்ம அப்பா என்ன சொன்னாரு தெரியுமா?" என்று கூறி அமைதியாக இருந்தாள்.
அவளின் அருகே வந்த குரு அவளை மெதுவாக அணைத்து சமாதானப்படுத்த முயன்றான் பின்பு," வேண்டாம் வதூ... உனக்கு கஷ்டமா இருக்கற எதையும் நீ சொல்ல வேண்டாம்." என்று கூறினான்.
அதுவரை அமைதியாக இருந்த மலரின் அன்னை ," அந்த கொடுமையை என் வாயாலயே நான் சொல்றேன். என் புருஷன் எத்தனையோ குடும்பத்திற்கு துரோகம் பண்ணிருக்காரு, யாரையும் எதையும் ஒரு பொருட்டா நினைச்சது இல்லை, அவருக்கு தேவையானதெல்லாம் வெறும் பணம் ,பணம் , பணம் மட்டும் தான், அவரோட உச்சக்கட்ட அட்ராசிட்டிய நான் அன்னைக்கு தான் பார்த்தேன்.
மலர் அவளோட கணவனை பிரிஞ்சு அவளோட அப்பா வீட்டுக்கு வந்தா, அதைப் பத்தி கேட்டதும் நான் துடிச்சுப்போய்டேன் எப்படி மலருக்கு சமாதானம் செய்யறது னு தவிச்சுக்கிட்டு இருந்தப்ப, மலரோட அப்பா அங்க வந்தாரு ," இதை கூறும்போது மலரின் தாய்க்கு அன்று நடந்தது கனவுபோல கண் முன் தோன்றியது.
அன்று
மலர் தன் தாயின் மடியில் தலை சாய்த்து குருவின் வீட்டில் நடந்தவைகளை கூறிக்கொண்டிருந்தாள். அவளை சமாதானப் படுத்திக்கொண்டிருந்த அவள் அன்னையின் குரலை தடுத்தது மலரின் அப்பாவின் குரல்," என்ன ராஜகுமார பூபதி உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாரா? இது எவ்வளவு பெரிய அவமானம் அந்த ராஜகுமார நான் சும்மா விட மாட்டேன், அவரு மேல மான நஷ்ட வழக்கு போட்டு அவரோடு அந்தஸ்த்துக்கு பங்கம் கொண்டு வரேன்.ஹா.....ஹா......ஹா......."இடி முழக்கமென முழங்கிய அவரின் குரலில் தாய் மகள் இருவரும் பயந்து போயினர்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல்," அவனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் , கோடிக்காண சொத்த நஷ்டமா கேப்பேன்.அப்பறம் இந்த ராமநாதன் தான் பெரிய பிசினஸ் மேன் எல்லாரும் என் சொல்லுக்கு தான் கட்டுபடுவாங்க, தொழில் சாம்ராஜியத்தில நான் தான் முடி சூடா சக்கரவர்த்தி, ஹா....ஹா...." என்று வார்த்தையில் அசூயை தெரிய கண்களில் பேராசையுடன் கூறியவரை வெறுப்புடன் நோக்கினாள் மலர்வதனி.
நடுங்கும் குரலில் மலர்," அப்பா...... இது என்னோட வாழ்க்கை அவங்க மேல இப்படி கேஸ் போட்டா அப்பறம் என்னால நிரந்தரமா அங்க போய் வாழ முடியாம போய்டும். அது மட்டும் இல்லை அது என் குரு வோட குடும்பம் அந்த குடும்பத்திற்கு ஒரு அவமானம் வர நான் ஒத்துக்க மாட்டேன்." என்று நடுங்கும் குரலில் தொடங்கி உறுதியான குரலில் முடித்தாள்.
மலரின் தந்தை க்கு இது தன்மான விஷயமாக தோன்ற ," நான் சொல்ற படி கேட்குறதா இருந்தா இங்க இருக்களாம் இல்லை என்றால் உனக்கு இங்கு இருக்க அனுமதி இல்லை." என்று உறுமினார்.
இப்பொழுது மலர் நிமிர்வுடன் தன் தந்தையை நோக்கி," என் குரு வுக்கு எதிரா என்னால எப்பவுமே செயல்பட முடியாது, எங்க தாத்தா எனக்கு குடுத்த வீடு இருக்கு அங்க நான் தங்கிக்கறேன்.இத்தனை வருஷமா என்ன உங்க வீட்டில வச்சிக்கிட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்." என்று ஒரு பெரிய கும்மிடு போட்டு அந்த வீட்டை விட்டு வெளியேர துவங்கினாள்.
அவளை தடுத்து நிறுத்திய அவள் அன்னை ," நானும் உங்கூட வரேன் மலர் நீ தனியா எங்கயும் போக வேண்டாம்.இந்த மனுஷனே அவரோட பணத்தை மட்டும் வச்சு இங்க குடும்பம் நடத்தட்டும்." என்று கூறி தன் மகளுடன் வெளியேறினாள் அந்த அன்னை.
இவை அனைத்தையும் கூறி முடித்ததும் அங்கே அமைதி மட்டுமே இருந்தது. இந்த நிகழ்ச்சியை புதிதாக தெரிந்து கொண்ட விஷ் மற்றும் குரு விற்கு என்ன கூறவதென்றே தெரியவில்லை.
அந்த அமைதியை கலைத்த விஷ் ," மலர் நீ குரு வ அழைச்சுக்கிட்டு உள்ளே போ, அவரு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்." என்று கூறினான்.
குருவிற்கும் அது தேவையானதாக இருந்ததால் பேசாமல் மலரை பின் தொடர்ந்து சென்றான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro