Episode 35
மலரை பிரிந்த நாள் முதல் மன அமைதியின்றி தவிப்புடனேயே குருவின் நாட்கள் கழிந்தது. மலரின் நலனை மலரின் அன்னையின் முலம் அறிந்தாலும் அவளது அருகாமைக்கு குருவின் மனம் ஏங்கியது.
தன்னவளை மூன்று வருடங்களுக்கு பிறகு இன்று நேரில் பார்த்ததாலும் தன் நண்பனிடம் தன் மனதை திறந்து காட்டியதாலும் குரு வின் மனம் அமைதியாக இருந்தது.அவனின் மன கவலைகள் மறைந்து இனிய கனவுடன் கூடிய சுகமான உறக்கம் அவனை ஆட்கொண்டது.
( குரு தன்னை எல்லோரிடமும் கார்முகிலன் என்றே அறிமுகப்படுத்தியதால் அனைவரும் அவனை கார்முகிலன் என்றே அழைக்கின்றனர். மலரை பிரிந்தவுடன் தன்னுடைய குரு அடையாளத்தை அவன் துறந்துவிட்டான். எனவே நாமும் இனி அவனை கார்முகிலன் என்றே அழைப்போம்.)
ஆனால் குருவின் நண்பன் கௌதமோ மிகுந்த யோசனையுடன் காணப்பட்டான்.அவனிற்கு தெரிந்த வரை கார்முகிலன் திறமையானவன், அடுத்தவரை பார்த்தவுடன் மதிப்பிடும் சக்தி கொண்ட புத்திசாலி, தப்பை தயங்காமல் தட்டிகேட்கும் தைரியமானவன், ஆனால் பெண்களின் அருகே நெருங்க தயக்கம் காட்டுவான் .
அப்படிபட்ட தன் நண்பனின் காதல் கதை அவனை ஆச்சரியப்படுத்தியது அவனின் காதலியை அவனுடன் சேர்த்து வைக்கும் கடமை தன்னுடையது என்ற உணர்ந்த அவன் அதற்காக செய்ய வேண்டியதை மனதில் குறித்துக்கொண்டு உறங்கச்சென்றான்.
அடுத்த நாள் காலை கதிரவன் தன் செந்நிற கதிர்களை பூமியின் மீது மெதுவாக அனுப்பி தனது ஆட்சியை நிலைநாட்ட தொடங்கிருந்த நேரம் மலரின் தாய் வழக்கத்தை விட சீக்கிரமாக துயிலெழுந்தார்.
தனக்காக காத்திராமல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வெளியே செல்லும் தன் மகள் , இன்று எழுவதற்கு முன்னரே வேலைகளை பார்க்க துவங்கினார்.
நேரம் வேகமாக சென்றுகொண்டிருந்ததே தவிர மலர் தன்னறையிலிருந்து வெளிவரவில்லை. எப்பொழுதும் 5 மணிக்கு எழும் தன் மகள் இன்று 7 மணி ஆகியும் வெளியே வராதது மலரின் அன்னைக்கு சிறு கவலையை கொடுத்தது. அவளின் அறையை தட்டிப்பார்த்தவருக்கு அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது.
நேரம் 8 ஐ நெருங்கி கொண்டிருக்க தனது அறைக்கதவை திறந்து வெளியே வந்தாள் மலர்.
பேபி பிங்க் நிறத்தில் மெலிதாக கோல்டன் நிற வேலைபாடுகள் கொண்ட சேலையில் முகத்தில் சிறு ஒப்பனையுடன் அழகிய தேவலோக மங்கை யென வந்து நின்ற தன் மகளை கண்ட அந்த தாயின் கண்களிள் ஆனந்த நீர் சுரந்தது.
தன் தாயை நிமிர்ந்து பார்க்க வெட்கி தன்போக்கில் சென்று தன் தாய் தனக்காக செய்து வைத்த காலை உணவை சாப்பிட்டாள்.பின்பு கல்லூரிக்கு செல்லும் முன் தன் தாயாரின் முகத்தை பார்த்து புன்னகையுடன் விடைபெற்ளாள்.
***********
குறித்த நேரத்திற்கு முன்பே கல்லூரிக்கு வந்த கார்முகிலன் மலரின் வருகைக்காக டிபார்ட்மென்டில் காத்திருந்தான்.அவனது கைகள் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்ட கண்கள் வாயிலை நோக்கி தவம் கிடந்தது.
வாயிலில் யாரோ வரும் அரவம் கேட்க சட்டென தலையை கீழே குனிந்து கொண்டான் கார்முகிலன்.தன் தேவதையின் குரலிற்காக தவமிருக்க கேட்டதோ பியூன் கந்தசாமியின் குரல்," கார்முகிலன் சார் பிரின்சிபால் சார் உங்களை வரச்சொன்னாங்க," என்று கூறினான்.
தன் ஏமாற்றத்தை சமாளித்துக்கொண்ட கார்முகிலன்," இதோ வந்துகிட்டு இருக்கேன் னு சொல்லுங்க அண்ணே." என்று கூறிவிட்டு அவரை பின் தொடர்ந்தான்.
கார்முகிலன் அவ்விடம் விட்டு நகர்ந்த ஐந்தாவது நிமிடம் மெல்லிய கொலுசொலியுடன் கண்களில் தேடலுடன் உள்ளே நுழைந்தாள் மலர்வதனி.
அவளின் கண்கள் அந்த டிபார்ட்மென்ட் முழுதும் தேடி அலைந்து பின்பு ஏமாற்றத்துடன் தன் இருக்கையை நோக்கியது.
நொடிக்கொரு முறை வாசலை பார்த்திருந்த மலர் கார்முகிலன் வராததால் ஏமாற்றம் அடைந்தாள்.
இங்கு அரங்கேரிய மௌன நாடகத்தை பார்த்த கௌதம் ஏதும் செய்ய முடியாமல் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தான்.தன் நண்பனின் காதலை பற்றி தெரிந்த கொண்டதை மலரிடம் அவன் வெளிக்காட்ட விரும்பவில்லை.
முதல் வகுப்பிற்கான பெல் அடித்தவுடன் சோர்வுடன் எழுந்து தன் கடமையை செய்ய சென்றாள் மலர்.
மலர் சென்று சிறிது நேரத்தில் அங்கே வந்த கார்முகிலன் தன் நண்பனை நோக்கி," கௌதம். , சார் என்னை கே.வி.என் காலேஜ் க்கு internal இன்டர்னல் எக்ஸாமினரா போக சொல்லிருக்காரு, அவரால போக முடியலையாம் .சோ நான் போய்ட்டு சீக்கிரம் வந்தற்றேன்." என்று கூறி சிறு இடைவேளை விட்டு மலரின் இருக்கையை பார்த்தான், அவளது உடைமைகள் அங்கே இருந்ததை பார்தவன் ஒரு பெறுமூச்சுடன் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு கௌதமிடமிருந்து விடை பெற்றான்.
இரண்டு மணி நேர்த்திற்க்கு பிறகு அங்கு வந்த மலரை கார்முகிலனின் காலி இருக்கையே வரவேற்றது. மனதில் ஏமாற்றம் பெருக தன்னை சமாளித்துக்கொண்டு மாலை வரை மிகவும் கஷ்டப்பட்டு பொழுதை நகர்த்தினாள்.
அன்று கல்லூரி முடியும் நேரம் நெருங்கியும் கார்முகிலன் வராதது மலரிற்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. கடைசி பெல் அடித்தவுடன் வேகமாக எழுந்து தன் இல்லம் நோக்கி விரைந்தாள்.
தனக்காக வாசலில் காத்திருந்த தாயைப்பார்த்து மேலும் அழுகை வர வேகமாக உள்ளேசென்று கட்டிலில் படுத்து அழ துவங்கினாள்.
காலையில் புது மலரென சென்றவள் மாலையில் துவண்டு போன கொடியாய் வீடு திரும்பியது கண்டு குழப்பமடைந்தவர் வேகமாக தன் மகளை காண சென்றார்.
" மலர் மலர் இங்கபாரு என்னாச்சு ஏன் இப்நடி அழற?"
மலரிடமிருந்து பதிலில்லை." என்னனு சொன்னா தானடா தெரியும். காலையில நல்லாதான போன , காலேஜ் ல என்ன நடந்துச்சு?"
" அம்மா......அது வந்து .......நான் இன்னைக்கு எவ்ளோ ஆசையா அலங்காரமெல்லாம் பண்ணிகிட்டு போனேன். உங்களுக்கே தெரியும்ல?"
" ஆமா தெரியும்."
" ஆனா.....ஆனா....."
" என்ன ஆனா......சொன்னாதானே தெரியும்?"
" அங்க காலேஜ்ல குரு வரவே இல்லைமா........." என்று கூறி மேலும் அழ தொடங்கினாள்.
" ஐய்யே.....அசடு இதுக்குத்தான் இந்த அழுகையா, நான் கூட என்னமோ ஏதோ னு பயந்துட்டேன்."
" போங்கமா உங்களுக்கு தெரியாது நான் என் குருவை பாராக்க எவ்ளோ ஆசையா போனேன் தெரியுமா? குரு அங்கே இல்லை னு எவ்ளோ ஏமாற்றம் தெரியுமா?"
"ஓ............அப்ப மாப்பிள்ளை அங்க இல்லை அப்படீனு உனக்கு ஏமாற்றம் ஆயிடுச்சு.? ஆனால் நீ சொல்லாம கொல்லாம வீட்டை விட்டு வந்தா அவரு உன்னை தேடி உன் பின்னாடி வரகூடாது? இந்த ஞாயம் நல்லா இருக்கே, "என்று தன் மகளின் தவறை அழகாக சரியான நேரத்தில் சுட்டிக்காட்டினார்.
" அம்மா........நீங்க எதுக்கு இப்ப அதையெல்லாம் பேசறீங்க?"
" நீங்க பெரிய அறிவாளி உங்களுக்கே எல்லாமே தெரியும். நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியனும் அப்படீங்கிறது இல்லை, நீ அழகா அலங்காரம் பண்ணிட்டு போனது பாக்குறதுக்கு அவரு அங்க இல்லைனு உனக்கு எவ்வளவு ஏமாற்றம், கோபம் எல்லாம் வருது , இத்தனைக்கும் நீ இன்னைக்கு அவருக்காக அவர பார்க்க ஆவலா போற னு அவருக்கே தெரியாது, அந்த மனுஷன பத்தி கொஞ்சம் நினைச்சு பார்த்தியா?
எவ்வளவு ஆசையா உன்னை காதலிச்சு, தைரியமா உன் கழுத்துல தாலிகட்டி சந்தோஷமா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு ,அப்படி இருக்கும்போது நீ சொல்லாம இரண்டு தடவை அவரை பிரிஞ்சு வந்திருக்க அவரோட மனசு என்ன பாடுபட்டு இருக்கும் நீ கொஞ்சமாவது யோசிச்சியா?"
தன் அன்னையின் பேச்சில் இடையிட்ட மலர்," அம்மா அங்க என்ன நடந்திச்சு னு உங்களுக்கு தெரியாது , என்னை அவங்க அம்மா கேட்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டு எப்படி அசிங்கபடுத்தினாங்க தெரியுமா?"
" அவங்க என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும், நீ அவங்களை கேட்டா அவங்க பையனை விரும்புன? அவங்களோட கண்ணோட்டத்துல அவங்க செஞ்சது சரி தான். நீ பண்ணது தான் தப்பு, பெரிசா காதலிச்சா மட்டும் போதாது, அந்த காதல் கைகூட எத்தனை கஷ்டம் வந்தாலும் சேர்ந்து போராடனும், அதை விட்டுட்டு இப்படி கோழை தனமா பயந்து ஓடி வந்து நீயும் கஷ்டப்பட்டு , உன்னை காதலிச்ச ஒரே பாவத்திற்காக அவரையும் கஷ்டப்படுத்த கூடாது." என்று தனது மூன்று வருட ஆதங்கத்தை அன்று கொட்டி தீர்த்தார்.
தான் கூற வேண்டியதை கூறி முடித்தவுடன் மலர் யோசிக்க அவளிற்கு தனிமை கொடுத்துவிட்டு வெளியே சென்றார் அந்த அன்னை.
தன் தாயிடம் இத்தகைய கூற்றை எதிர்பார்காத மலர் அதிர்ச்சியில் இருந்தாள். தனது செயலை பற்றி வேறொருவர் மூலம் தெரிந்து கொள்ளும்போது தான் தன் செயலின் வீரியம் புரியும், மலரின் நிலையும் அதுவாகத்தான் இருந்தது.
இத்தனை நாட்களாக தன் மீது தவறில்லை கார்முகிலனின் அன்னை மீது தான் தவறு அதற்காக முகிலனை பிரிந்தது சரியே என்ற கோணத்தில் யோசித்த மலர் முதல்முறையாக முகிலனின் நிலையிலிருந்து யோசித்தாள்.அப்படி யோசிக்கும்போதுதான் தன் தவறு புரிந்தது.கார்முகிலன் கல்லூரியில் வேலை செய்வதிலிருந்து அவன் தன் குடும்பத்துடன் இல்லை என்பதை உணர்ந்திருந்தே இருந்தாள்.
தனக்காக அவன் எல்லாவற்றையும் ஒதுக்கி இன்று தனியே நின்றுகொண்டிருக்கிறான் என்ற நிலை அவளை மிகவும் வாட்டியது.தன் குருவிற்காக எதையும் தாங்களாம் அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என்ற ஞானோதயம் மூன்று நெடிய ஆண்டுகளுக்கு பிறகு அந்த பேதைக்கு தோன்றியது.தன் முடிவை தன் தாயிடம் தெரிவிக்க விரைந்து சென்றாள்.
தன் தாயிடம் சென்ற மலர்," அம்மா.... நான் போய் குரு வ பார்த்துட்டு வரவா.........?" என்று தயங்கியபடி கேட்டாள்.
" இந்த 3 வருஷமும் எங்கிட்ட கேட்டுக்கிட்டா நீ எல்லாம் செஞ்ச? இப்ப என்ன புதுசா பெர்மிஷன்லாம் கேட்குற?"
" அம்மா ப்ளீஸ் மா....நான் ஏதோ ஒரு கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன் சாரிமா என்னை மன்னிச்சிடுங்க."
மலரை பார்த்து சிரித்த அவள் அன்னை ," எனக்கு தெரியும் என் பொண்ண பத்தி கொஞ்சம் லேட் ஆ தான் வேலை செய்யும், நான் மாப்பிள்ளை க்கு கால் பண்ணி வர சொல்லிட்டேன், நீ போய் ரெஃந்ரெஷ் ஆகு."
" அம்மா.........வர சொல்லகட்டீங்களா.......வாவ் ஐ லவ் யூ மம்மி( i love u mummy.......,)" என்று கூறி அவர் கண்ணத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சிட்டாக பறந்து தன் அறைக்குள் சென்றாள்.
"அசட்டுப் பொண்ணு " என்று கூறி சிரித்திக்கொண்டே தன் மருமகனை வரவேற்க விருந்து தயாரிக்க துவங்கினார்.
தன்னவனிற்காக காத்திருக்கும் ஒவ்வொறு நொடியும் ஒரு யுகமாக கழிந்தது. வாசலில் பெல் அடிக்க வேகமாக சென்று புன்னகையுடன் கதவை திறந்த மலர் அங்கே நின்று கொண்டிருந்தவரை பார்த்ததும் அவளின் சிரிப்பு உதட்டில் மறைய செய்வதறியாது சிலையானாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro