Episode 34
பொதுவாக மனிதனின் மனம் குழப்பத்திலும் அவசரத்திலும் எடுக்கும் எல்லா முடிவுகளும் தவறானதாகவே இருக்கும் என்ற வாக்கியத்திற்கேற்ப மலரின் மனமும் தன்னை காணாமல் சென்ற கணவனை நினைத்து மலர்ச்சியை தொலைத்து வாடி காணப்பட்டது.
நேற்று தான் எடுத்த முடிவு பற்றி மிகவும் தாமதமாகவே நினைவு கூர்ந்தவள் தன்னுடைய செயலினால் வெட்கி அக்கணமே அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
எங்கும் நிற்காமல் வேக வேகமாக சென்ற மலர் நின்று நிதானித்து பார்கையில் தான் குரு வின் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும் என்று புரியாத நிலையில் அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்து கண்கள் மூடி யோசிக்க துவங்கினாள்.
இங்கே குருவின் அறையிலோ குளித்துவிட்டு வெளியே வந்த குரு எங்கும் மலர் தென்படாததால் அவசரமாக உடை மாற்றிக்கொண்டு கீழே இறங்கி வந்தான்.
மலரை சரியாக யூகித்த குரு நேராக தோட்டத்திற்கு சென்றான் அங்கே அவன் கண்டது ஓட்டமும் நடையுமாக அழுதுகொண்டே வீட்டைவிட்டு வெளியேறிய மலரைத்தான்.
இன்று
தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்த கார்முகிலன் கண்களின் ஓரம் கசிந்த நீரை தன் நண்பன் அறியா வண்ணம் துடைத்தான்.பின்பு தன்னுடைய முகத்தையே நோக்கும் நண்பனிடம் நடந்தவற்றை சுருக்கமாக கூறினான்.
கௌதம்," ஏன்டா சிஸ்டர் போனாங்க? நீ எதுவும் கேக்கலையா?
" எனக்கு ஒன்னுமே புரியலை கௌஸ் நான் குளிக்கப்போகும் போது சிரிச்சிக்கிட்டிருந்த மலர் திடீர் னு ஏன் அழுதுகிட்டே வீட்டை விட்டு போனா னு எனக்கு தெரியலை.
நான் உடனே கிளம்பி அவளை தேடி போனேன். அவங்க வீட்டுக்கு தான் போயிருப்பா அப்படீனு யூகிச்சு அந்த டைரெக்ஷன்ல போனேன்.வழிலயே மலரை சந்திச்சேன்."
"என்னடா சொல்ற ,அப்ப சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்களாம் ல?" கௌதம்
" நான் கூப்பிடாமலோ,சமாதானப்படுத்தாமலோ இருந்திருப்பேன் னு நீ நினைக்கறியா?" குரு.
" அப்ப நீ கூப்பிட்டும் சிஸ்டர் வரலையா? ஏன்டா என்னாச்சு?" கௌதம்.
ஒரு விரக்தி புன்னகை உதட்டில் தவழ நீண்ட பெருமூச்சுடன் தொடர்ந்தான் குரு," நான் மலரோட வீட்டிற்கு போகுற வழியில போனேன்.என் கை மட்டும் தான் ஹான்பாரை பிடிச்சிருந்திச்சு ஆனால் கண் நாலா பக்கமும் அவளை தேடிக்கிட்டே இருந்துச்சு. அவளை எங்கயுமே காணோம் ,அதுக்குள்ள எங்க போயிருப்பா அப்படீ னு யோசிச்சுக்கிட்டே போகும்போது அவ ஒரு பார்க் உள்ளே போகுறத பார்த்தேன். அவளை பின் தொடர்ந்து போய் அவளை வழி மறிச்சு அவகிட்ட பேச முயற்ச்சி செய்தேன்.ஆனால் அவள் என்கிட்ட பேச கூட தயாரா இல்லை , நான் செய்த தப்பு என்ன னு எனக்கு தெரியலை ஆனால் அவ சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுல ஒழிச்சுக்கிட்டே இருக்கு."
"உன்னை ரொம்ப திட்டிடாங்களா ?"
" என்னை திட்டி இருந்தாலோ நாலு அடி அடிச்சிருந்தாலோ கூட பரவாயில்லையே டா ."
வேதனையுடன் தன் நண்பனிடம் கூறுகையிலே அன்று நடந்தவைகள் அனைத்தும் அவன் கண் முன்னால் நிழலாடியது.
தன் மனைவியை பார்தவுடன் சந்தோஷத்தில் குதித்த மனதை அடக்கி வேகமாக அவளை நோக்கி சென்றான் குரு.
அவளின் கைகளை பற்றி அவளின் நடையை தடை செய்ய வேகமாக திரும்பிய மலர் குருவை கண்டதும் சிறு ஆசுவாசமாக உணர்ந்தாள். பின்பு வேகமாக அவளின் கையை விடுவித்துவிட்டு குருவை நோக்கி," குரு நீங்க என்ன காதலிச்சது உண்மையா இருந்தா? என்ன இனியும் நீங்க காதலிப்பீங்க அப்படீங்கிறதுல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா , ஏன் எதுக்கு அப்படீ னு கேட்காம நான் சொல்றத நீங்க செய்வீங்களா?" என்று கேட்டாள்.
வரப்போகும் விபரீதம் அறியாத குரு தன்னவளை நோக்கி ," நீ என்ன சொன்னாலும் செய்ய நான் தயாரா இருக்கேன் அதுக்காக எதுக்கு நம்மளோட காதல் மேல நம்பிக்கை னு யெல்லாம் பேசனும்?" என்று அப்பாவியாக கூறினான்.
தன் கண்களின் கண்ணீரை துடைத்துக்கொண்டு உறுதியான குரலில் ," நம்ம பிரிஞ்சிடலாம், நான் உங்களோட வாழ்க்கையில இருந்து விலகிடலாம் னு முடிவு பண்ணிட்டேன்."
பேரிடி தலையில் விழுந்தது போல உணர்ந்த குரு ," அந்த முடிவை நீ மட்டும் எடுத்தா போதுமா?" என்று வினவினான்.
" நான் இந்த முடிவை நல்லா யோசிச்சுதான் எடுத்திருக்கேன். இந்த ஒரு முடிவால மட்டும் தான் எல்லோரும் சந்தோஷமா இருக்க முடியும்." தன் கண்ணீரை மறைத்து கூறிய மலரை கண்டுகொண்ட குரு அவளின் அருகே சென்று அவளின் கைகளை ஆறுதலாக பற்றினான்," ஏன்டா என்னாச்சு ஏன் இப்படிலாம் பேசற? நான் இல்லாம நீயும் , நீ இல்லாம நானும் வாழ்ற வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் னு நீ நினைக்கறியா? என்ன நடந்துச்சு னு சொன்னாதான தெரியும்."
குருவின் ஆறுதலால் இளகிய மனம் அவன் நடந்ததை கேட்டதும் மீண்டும் முரன்டுபிடித்தது.
கோபமாக குருவை நோக்கிய மலர்," என்ன நடந்துச்சு னு சொன்னாதான் நீங்க என்னை புரிஞ்சுப்பீங்களா இல்லை னா நான் சொல்றதை கேட்க மாட்டீங்களா ?"
தன் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்கிய குரு கோபமாக ," நீ புரிஞ்சுதான் பேசறியா? என்ன நடந்துச்சு ? யார் உன்னை என்ன சொன்னாங்க ? ஏன் இப்படி ஒரு முடிவை நீ எடுத்திருக்க? காலையில சந்தோஷமா தானே இருந்த னு கேட்டா நீ ஏன் என்னமோ பேசுற?"
" அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லனும னு அவசியம் இல்லை, என்னை தயவுசெய்து தனியா விட்ருங்க ப்ளீஸ்." என்று கெஞ்சினாள்.
குருவோ எதுவும் கூறாமல் அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்து நின்றான்.அவனின் பார்வை கோப கனலாக மாறத்தொடங்கியிருந்தது.
குருவின் மாற்றத்தை கண்ட மலர் தான் நினைத்தது நிறைவேற போகுது என்று எண்ணி மேலும் அவன் கோபப்படும்படி சொல் அம்புகளை எய்தாள்," குரு என்னை விட்டிடுங்க . நான் என்னோட வாழ்க்கையை பார்க்க போறேன். என்னை பத்தி நீங்க எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம், தற்கொலை செய்கிற அளவு நான் கோழை இல்லை, என்னோட வாழ்க்கையை நான் நீங்க இல்லாத பாதையில என் வாழ்கையை அமைச்சுக்க போறேன்.குரு நான் ஒன்னும் அந்த அளவு அழகியில்லை , உங்க அளவு அந்தஸ்த்தும் இல்லை , நீங்க நினைச்சா ஆயிரம் அழகிகள் உங்க காலடில வர தயாரா இருக்காங்க , அதுனால நீங்க என் கழுத்துல கட்டின தாலியை மறந்துட்டு உங்க அந்தஸ்த்திற்கு ஏத்த மாதிரி வேற ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கோங்க ." என்று மலர் கூறி முடிக்கவும் குரு வின் இரும்பு கைகள் அவளின் கன்னத்தில் பதியவும் சரியாக இருந்தது.
மலரை கோபமாக நோக்கிய குரு ," இப்ப என்ன நீ என்னைவிட்டு போக போற அப்படிதானே , நீ போகனும் னா தாராளமா போ , அதைவிட்டுட்டு நான் என்ன செய்யனும் னு நீ எனக்கு கட்டளையிட தேவையில்லை. இனி என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது, நீ என்ன செய்ற எங்க இருக்குற இப்படி எந்த வித விஷயங்களும் நான் உன்கிட்ட கேட்க மாட்டேன் ,உன்னை உங்க வீட்டில் பத்திரமாக கொண்டு சேர்க்கும் கடமை என்னுடையது" என்று கூறி அவளின் கை பற்றி இழுத்துக்கொண்டு தன் வாகனம் நோக்கி சென்றான்.
குரு அறைந்ததால் ஏற்பட்ட வலியினால் தன் வலது கையை கன்னத்தில் வைத்து கலங்கிய கண்களுடன் இடது கையை குருவின் கைகளுக்குள் கொடுத்த மலர் அவனின் பின்னே ஒரு குழந்தையென மறுப்பேதும் கூறாமல் சென்றாள்.
இருவரின் நெஞ்சமும் மற்றவருக்காக வருந்த அமைதியாக சென்றது அந்த பயனம்.
மலரின் வீட்டு வாசலை அடைந்த குரு மலர் இறங்கியவுடன் காற்றென பறந்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
இன்று
குரு கூறியவற்றை கேட்ட கௌதம் ," ஏன்டா இப்படி செய்த சிஸ்டர் தான் ஏதோ கோபத்தில சொல்றாங்க னா நீயும் கோபப்படலாமா, நீ கொஞ்சம் விட்டுகொடுத்து போயிருக்களாம் ல?" என்று வினவினான்.
" டேய் நான் இதையெல்லாம் கோபத்துல சொல்லலை, எனக்கு கோபம் வரனும் னு தான் அவ பேசுனா , அதனால தான் இன்னும் வாக்குவாதம் நடந்தா நிரந்தரமா பிரிய நேரிடலாம் னு , நான் கோபமா பேசிட்டு அவளை அவங்க வீட்ல இறக்கிவிட்டுட்டு வந்துட்டேன்." என்று கூறிய தன் நண்பனின் தற்காலிக பிரிவை நினைத்து வருத்தப்படுவதா இல்லை இது நிரந்தர பிரிவுயில்லை என்று மகிழ்வதா என்று புரியாமல் நின்றான் கௌதம்.
" டேய் நீ சொன்ன மாதிரி அவங்களை நீ தொந்தரவு செய்யலையா?அப்படியே எங்க இருக்காங்க னு தெரிஞ்சுக்காம விட்டுட்டியா?"கௌதம்.
இப்பொழுது ஒரு கள்ளச்சிரிப்பு சிரித்த குரு," நான் சொன்ன மாதிரி மலரை எந்த தொந்தரவும் செய்யலை , அவளைபத்தி அவகிட்ட கேட்கவுமில்லை , ஆனால்....."
" என்னடா ஆனா.... நீ இழுக்குறதே சரியில்லையே."
ஹாஹாஹாஹா என்று சத்தமாக் சிரித்த குரு ," மலரோட அம்மா என்கிட்ட தினமும் பேசுவாங்க அவ என்ன செய்றா? எங்க இருக்கா ? அப்படீ னு எல்லா விஷயமும் வந்திடும். அவ காலேஜ் ல வேலை தேடுறது வரை எனக்கு தெரியும் ஆனால் நான் எதிர்பாக்காதது நம்ம காலேஜ் கே அவ வருவானு தான்." என்று கண்களில் காதலுடன் கூறினான்.
" ஏன்டா அதை அவங்க அம்மா உனக்கு சொல்லையா?"
" இல்லைடா மலர் என்ன செய்ய போறா னு அவ யார்கிட்டயும் சொல்றது இல்லை, அவ செஞ்சு முடிச்சதுக்கு அப்பறமாதான் அவங்க அம்மாவுக்கு தெரியும். சோஇன்னைக்கு நைட்தான் அவங்க கால் பண்ணி சொல்லுவாங்க." என்று கூறினான்.
தன் நண்பனின் ஆழமான காதலை கண்ட கௌதம் மலரையும் குருவையுப் சேர்த்து வைக்க வேண்டும் என்று மனதில் உறுதியெடுத்தான்.
அந்த அறையில் சிறு அமைதி நிலவியது. அந்த அமைதியை கலைத்தது குருவின் மொபைல் . தன் மொபைலை நோக்கிய குரு கௌதமிடம் ," டேய் மலரோட அம்மாதான் பேசுறாங்க என்று கூறி ஆன் செய்தான்,
" ஹலோ மாப்பிள்ளை.... நல்லா இருக்கீங்களா? "
" சொல்லுங்க அத்தை, நான்.நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்களா? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?"
" நானும் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை . இன்னைக்கு காலேஜ் ஃபர்ஸ்ட் டேவாம் பா அவ என்கிட்ட சொல்லவே இல்லை காலையில் வண்டி எடுத்துட்டு போகும்போது தான் சொல்றா.." குரலில் வருத்தத்துடன் பேசிய அந்த தாயை சமாதானப்படுத்திய குரு ," அத்தை இன்னும் கொஞ்ச நாள் ல எல்லாம் சரியாகிடும் கவலை படாதீங்க."
" ஆ அப்பறம் இன்னைக்கு காலேஜ் விட்டுவந்து அமைதியா உள்ளே போயிட்டா, அப்பறம் கொஞ்ச நேரம் கழித்து ஒரே அழுகை நிக்கவே இல்லை, அப்பறம் கொஞ்சம் அவளை சமாதானப்படுத்தி தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வெச்சேன்."
" ஓ.... அது ஒன்னும் இல்லை அத்தை மலர் வந்து ஜாய்ன் பண்ணிருக்குர காலேஜ் ல தான் நான் வேலை பாக்குறேன் , ரொம்ப நாள் கழிச்சு என்னை பாக்குறா ஆனால் உரிமையா பேசமுடியலை னு கோபம், இயலாமை , அப்பறம் இத்தனை நாள் அடக்கி வச்சிருந்த உணர்ச்சிகள் எல்லாம் சேர்ந்து அவளை வெடிக்க வெச்சிருக்கும்.அவள் அழுதது நல்லது தான். விடுங்க இனி அவளை நான் பாத்துக்கறேன். நீங்க கவலைபடாம தூங்குங்க." என்று கூறி கால் ஐ கட் செய்தான்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கௌதம் மீண்டும் குருவை நோக்கி," மச்சான் மலரோட அப்பாவும் பெரிய பணக்காரருதான் அப்பறம் ஏன் மலர் தனியா அவங்க அம்மா கூட இருக்காங்க? என்று கேட்டான்."
வெறும் வெற்றுச்சிரிப்பை பதிலாக தந்த குருவை நோக்கிய கௌதம் , "நீ இன்னும் உங்க குடும்பத்தில இருந்து விலகி இருக்குறதுக்கு காரணமும் இதுதானா?" என்று கேட்டான் .
அவனின் கேள்விக்கு பதில் அளிக்கும் வண்ணம் குரு ," கௌதம் எங்களோட காதலுக்கு வில்லனே அந்த பணம் தான் அதனால அந்த சொத்து சுகம் அந்தஸ்த்து எதுவுமே வேண்டாம் , என் மலர் வாழ தகுதியில்லை நீங்க சொன்ன இடத்தில நானும் இருக்க மாட்டேன் னு அப்பவே கிளம்பி வந்துட்டேன். அதுக்கப்பறம் அங்க போகவில்லை. அவங்க வந்து பார்தாங்க ஆனால் என் முடிவுல நான் உறுதியா இருந்ததால அவங்களால ஒன்னும் செய்ய முடியவில்லை.
ஆனால் மலரை பத்தி மலர் தான் சொல்லனும். நான் அவங்க அம்மாகிட்ட அதைபத்தி கேட்கவில்லை." என்று கூறி முடித்தான்.
இரவு வெகு நேரம் பேசியதால் வெளியில் சென்று உணவை முடித்துவிட்டு தத்தமது அறைக்கு உறங்க சென்றனர் நண்பர்கள் இருவரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro