Episode 32
குருவை நிதானமாக நோக்கிய அவன் அன்னை," குரு நீ நாளைக்கு மலர நம்ம டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணிட்டு வர." என்று கூறி முடிக்கவும் தன் இருப்பிடத்தைவிட்டு ஆவேசமாக எழுந்த குரு குரலை உயர்தாமல் அதே நேரம் குரலில் கோபம் கொஞ்சமும் குறையாமல் தன் அன்னையை நோக்கி," இது வரைக்கும் நான் உங்களையோ அப்பாவையோ எதிர்த்து ஒரு வார்த்தை பேசினது இல்லை.அப்படி நான் வளர்க்கப்படலை.ஆனா இன்னைக்கு அப்படி ஒரு சூழ்நிலை உங்களால உருவாகிடுச்சு.நீங்க பேசினது எல்லாம் போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க." என்று குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிய கூறினான்.
அவனை இடைமறித்த அவன் அன்னை," நான் சொன்னது ல என்ன தப்பு?உன் மனைவியை யாரோ 2 பேரு கடத்திகொண்டு போயிருந்தாங்க அப்படீ னு நம்ம சொந்தகாரங்களுக்கு தெரியவந்தா நம்மளோட கௌரவம் என்ன ஆகும். உங்க அப்பா தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?" என்று வினவினார்.
இப்பொழுது குரலை உயர்த்திய குரு," அம்மா.. ....... என்று கத்தினான் உங்க கண்ணுக்கு வெறும் ஸ்டேடஸ் மட்டும் தான் தெரியுதா?அவளோட மனசு புரியலையா? என் முன்னாடியே என் மனைவியை பற்றி இப்படி தப்பா பேசுறீங்களே , நான் இல்லாதப்ப என்னலாம் செய்வீங்க?.வாழைப்பழத்தில ஊசி ஏத்திர மாதிரி சர்வசாதாரணமா அவளோட சுயமரியாதைக்கு கலங்கம் சொல்லீட்டீங்க இதுக்கு மேல என் மனைவியை பத்தி ஒரு வார்த்தை நீங்க பேசுனீங்க.... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்."
"இப்ப என்ன ஆச்சுனு நீ இப்படி கத்துற? உனக்கு வேணும் ணா உன் மனைவி உத்தமியா இருக்களாம்.ஆனா ஊர் உலகத்துல யாரும் நம்ப மாட்டாங்க.அவளை மருமகளா நான் ஏத்திக்கிட்டா என்ன யாரும் மதிக்கவும் மாட்டாங்க." என்று கோபத்துடன் கூறினார்.
" அம்மா............." இதுவரை குரு காத்துவந்த பொறுமை மொத்தமும் கரைய அந்த இரவு அதிர கோபத்துடன் கர்ஜித்தான் அவளின் காதல் கணவன்.
" டேய் சும்மா கத்தாத , உண்மை கசக்கத்தான் செய்யும் அதுக்காக பொய் சொல்ல முடியாது. நான் சொல்றதுல ஞாயம் இருக்கிறதால தான் உங்க அப்பா கூட அமைதியா நிக்கிறாங்க." என்று அமைதியாக தான் கூறியதற்கு மறுப்பு தெரிவிக்காத தன் கணவனை தன் புறம் மிக சாதுர்யமாக கொண்டுவர முயன்றார் மஹாலெஷ்மி.
தன் அன்னை கூறியவற்றை கண்டு பொங்கிய கோபத்தை அடக்கிய குரு தன் தந்தையின் பக்கம் திரும்பி ," அப்பா நான் உங்க பையன் , இதுவரைக்கும் நான் எடுத்த முடிவு தப்பானது இல்லை அப்படீ னு நான் நம்பறேன். இதுக்கு மேலயும் நான் சில முடிவுகள் எடுக்காம அமைதியா இருந்தா அப்பறம் நான் என் மலருக்கு ஞாயம் செய்யாதவனாயிடுவேன்."
வேகமாக குருவின் பேச்சில் பாதியில் இடை புகுந்தார் அவன் அன்னை," டேய் நீ இவ்வளவு தூரம் வக்கால்த்து வாங்கி பேசுறியே ஆனா அவள் ஒரு வார்த்தை நான் சொல்றதை மறுத்து பேசுறாளா னு பாத்தியா? அதுக்கு காரணம் என்ன தெரியுமா ?நான் சொல்றத அவளும் புரிஞ்சிக்கிட்டா..."
" அம்மா சும்மா வாய்ல வந்ததையெல்லாம் பேசாதீங்க,நீங்க என்னுடைய அம்மாங்கிறதாலயும் உங்கமேல மரியாதை இருக்குறதாலயும் மட்டும் தான் அமைதியா நின்னுகிட்டு இருக்கா.இதுவே உங்க இடத்தில வேற யாரு இருந்தாலும் மலரோட அனுகுமுறை வேற மாதிரிதான் இருக்கும்."
" டேய் சும்மா அவளோட பக்கம் பேசாத , உன்மையா காதலிச்ச யாரும் தன்னால ஒரு கௌரவ குறைவு வர்றத விரும்ப மாட்டாங்க , தன்னால ஏதாவது தலை குனிவு வந்துச்சுனா தன்னுடைய மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட இருந்து விலகி இருப்பாங்க அதைவிட்டுட்டு இப்படி வெக்கமேயில்லாம வீடு வரைக்கும் வரமாட்டாங்க ." என்று கூறி முடித்தார்.
என்ன சொன்னால் மலரின் தன்மானம் காயப்படும் என்றுணர்ந்த குருவின் தாய் மிக சரியாக தான் எண்ணிய விஷயத்தில் வெற்றி கிட்டிய சந்தோஷத்துடன் அவ்விடம் விட்டு அகன்றார்.
இதுவரை அங்கே நிகழ்ந்தவைகளை கண்டு உறைந்து சிலையென நின்ற மலர் மெதுவாக பூபதி முன் வந்து இருகைகளை குவித்தாள்," சார் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடக்கூடாது எதிர்த்து போறாடனும் அப்படீனு சொன்னீங்க, ஆனா இப்ப இதுக்கு மேலயும் நான் இவர் கூட என் வாழ்க்கையை தொடந்தேன் அப்படீனா என்னோட காதல் பொய் ஆகிடும், வெறும் பணத்திற்காக மட்டும் இவர்கிட்ட வந்த சேர்ந்திட்டா அப்படீனு தான் என்னை அடையாளப்படுத்துவாங்க, அது மட்டும் இல்லாம என்னோட தன்மானத்திற்க்கும், சுயகௌரவத்திற்க்கும் கலங்கம் வந்ததுக்கு அப்பறம் நான் இங்க வெறும் ஜடமாதான் பார்க்கப்படுவேன்."
மலரை இடையில் குறுக்கிட்ட குரு," வதூ.............. இப்படியெல்லாம் பேசாதடா நீ என்னோட ராணி உனக்கு ஒரு கலங்கம் வந்தா பார்த்துட்டு பேசாம போவேனு நீ எப்படிடா நினைச்ச?"
" உங்களோட காதல நீங்க நிரூபிச்சிட்டீங்க இது என்னோட காதல நிரூபிக்க வேண்டிய கட்டம் ப்ளீஸ் குரு நான் எடுக்குற முடிவை நீங்க புரிஞ்சிக்கனும்."
" இல்லை மலர் எந்த வித சூழ்நிலை வந்தாளும் நீ என்னைவிட்டு பிரியரதை நான் அனுமதிக்க மாட்டேன். எந்த கஷ்டம் வந்தாளும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம்.உனக்கு நீ தண்டனை குடுக்கனும் னு நினைச்சா அதை நானும் உங்கூட சேர்ந்து சந்தோஷமா அதை அனுபவிக்கறேன்." என்று மலரிற்கு தான் சலித்தவன் இல்லை என்று நிரூபித்தான் கார்முகிலன் என்கிற குரு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro