Episode 31
அந்த வெள்ளை நிற லெக்சஸ் மிதமான வேகத்துடன் குருவின் பங்களாவில் நுழைந்தது.
அதிலிருந்து முதலில் கீழே இறங்கிய ஷியாம் அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.அவனை தொடர்ந்து இறங்கிய குருவும் மலரும் ஷியாமின் நிலைகண்டு புரியாமல் திகைத்தனர்.
அவர்களின் திகைப்பை கலைத்தது குருவின் அன்னையின் குரல்,"என்ன அங்கயே நின்னுடீங்க ? உள்ளே வாங்க உங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கோம்." என்று கைகளில் ஆரத்தி தட்டுடன் அழைத்தார்.
தாங்கள் காண்பது கனவா இல்லை நனவா என்று புரியாமல் நின்றிருந்தவர்களின் கால்கள் நேராக சென்று வீட்டின் வாயிலை அடைந்தது.
அங்கே முகத்தில் மலர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்த தன் அன்னையை நம்ப முடியாமல் பார்தான் குரு, குருவின் பார்வையின் பொருளறிந்த அவன் அன்னை, "என்னடா இந்த அம்மா இவ்வளவு சந்தோஷமா வந்து ஆரத்தி எடுக்குறாங்களே னு பார்க்குறியா முகிலா?" என்று வினவினார்.
தன் அன்னையின் கவலை நிறைந்த குரலை கேட்ட குருவின் மனம் குழம்பியது, இருப்பினும் தன் குழப்பத்தை வெளிகாட்ட இது தக்க தருணமல்ல என்பதை புரிந்து கொண்ட குரு நொடியில் தன்னை மீட்டுக்கொண்டான்," என்ன மா இப்படி சொல்றீங்க ? உங்க எல்லாரோட சந்தோஷமும் எனக்கு ரொம்ப முக்கியம்.நாங்க ரொம்ப டயர்டா இருக்கோம் அதான் டல்லா தெரியுறேன்." என்று சோர்வுடன் கூறினான்.
மறுபேச்சு பேசாமல் வேகமாக ஆரத்தி எடுத்து இருவரையும் அன்புடன் உள்ளே அழைத்தார் ,உடன் வந்த ஷியாம் விடைபெற்று கிளம்ப அதனை மறுத்தவர் அவனை ஹாலில் அமர வைத்து மற்ற இருவரையும் உள்ளே அழைத்து சென்றார்.
வீட்டின் உள்ளே வந்த இருவரையும் நோக்கிய மஹாலெஷ்மி," என்னை மன்னிச்சிடு பா நான் ஏதோ கேட்பார் பேச்சை கேட்டு உங்க இரண்டுபேர்கிட்டையும் கொஞ்சம் கடுமையா நடந்துகிட்டேன். உங்க அப்பா வந்து தான் எனக்கு புரிய வச்சாங்க, "
அவரை இடைமறித்த மலர் ," அத்தை மன்னிப்பு அப்படீனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க, இப்படி திடீர் னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா எல்லாருக்கும் தான் கோபம் வரும்.அதனால தப்பு எங்க மேலயும் தான் இருக்கு." என்று கூறிய மலரை பெருமையுடன் குருவும் பாசத்துடன் அவன் அன்னையும் நோக்கினர்.
மலரின் அருகே வந்த அவர் ," மலர் என் பையனோட தேர்வு எப்பவும் தப்பாது அப்படீனு மறந்து போனது நான்தான் மா." என்று கூறி மலரை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டார்.
இவர்கள் இருவரையும் பார்த்த குரு," அம்மா இப்படியே நிக்க வைச்சே உங்க பாசத்தை பொழியபோறீங்களா?" என்று வினவினான்.
செல்லமாக அவன் முதுகில் அடித்தவர் ," இரண்டு பேரும் போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு சீக்கிரமா வாங்க சாப்பிடலாம்." என்று அவர்களிடம் அன்புக்கட்டளையிட்டார் அந்த அன்னை.
மலரை அழைத்துக்கொண்டு தன்னறைக்கு சென்றான் குரு. அதை அறை என்று சொல்வதை விட தனி வீடு என்ற சொல்வதே சரியாக இருக்கும்.
உள்ளே நுழைந்தவுடன் சிறு வரவேற்பு போன்ற பகுதி,அந்த பகுதியை தாண்டி உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.வரவேற்பறையை அடுத்து. பெரிய ஹால் போன்ற பகுதி , அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தது. ஹாலை அடுத்து ஒரு பெரிய படுக்கை அறை,அந்த அறையே மிகவும் பெரிதாக இருந்தது. எங்கும் செல்வ செழிப்பு நிறைந்த காணப்பட்டது.
குரு திரும்பி மலரிடம்," நம்மளோட அறை எப்படி இருக்கு? உனக்கு பிடிச்சிருக்கா?"என்று வினவினான்.
இதழ்கள் மலரிடம் கேள்விகள் கேட்க, கண்கள் மலரை நோக்க , கைகளோ மலரை அணைக்கும் வேலையை தனதாக்கிக் கொண்டது.
தன் கணவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி தஞ்சம் புகுந்தாள் அந்த மாது.
" எனக்கு இந்த பெரிய வீடு பிடிக்கலை, இந்த விசாலமான அறை பிடிக்கலை, அழகான வேலைபாடுகள் நிறைந்ந இந்த கட்டில் பிடிக்கலை .இதை எல்லாதையும் விட இந்த இடம் தான் ரொம்ப பிடிச்சிருக்கு " என்று கூறி அவன் மார்பில் முகம் புதைத்தாள் மலர்.
அவளின் முகத்தை தன் கைகளிள் ஏந்தி அவளின் கண்ணோடு கண் நோக்கினான் அவன்.குருவின் கண்களின் தாக்குதலை தாங்காத மலரின் கண்கள் மெல்ல மூடிக்கொண்டன.
மூடிய விழிகள் அவனை வா வா என்று அழைக்க, நடுங்கிடும் இதழ்கள் பற்றிக்கொள்ள துனை தேட , மெல்ல தன் இணையினை சேர்ந்தது குருவின் இதழ்கள்.
" ஒரு மௌனம் பரவும் சிறு காதல்
பொழுதில்
கிலியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையின் இசையில் எதுவும் இனிமையடி
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதய புதரில் சிதறி சிதறி வழிவது ஏன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் கரைவது ஏன்
உருகாதே உயிரே
விலகாதே மலரே
உன் காதல் வேரை காண வேண்டி வானம் தாண்டி உனக்குள் நுழைந்து ........
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ.........
காதல் காதல் பிறந்ததோ........
தங்களின் தனி உலகில் சஞ்சரித்த அவ்விருவரையும் குரு வின் கைபேசி அழைப்பு நிகழ்விற்கு கொண்டு வந்தது.
தங்களின் நிலை கண்டு வெட்கிய அவ்விருவரும் மற்றவரின் முகம் நோக்க தயங்கி வேறுபுறம் திரும்பி நின்று கொண்டனர்.
தன் கைபேசியின் அழைப்பை ஏற்ற குரு," ஹலோ அம்மா சொல்லுங்க...."
"...................………......"
" இதோ ஒரு 10 நிமிஷத்தில வந்திருவோம்."
மலரை நோக்கிய குரு ," ஷியாம் கிளம்பிட்டானாம் வதூ , நமக்காக அப்பா வெயிட் பண்றாங்களாம் அம்மா நம்ம இரண்டு பேரையும் சீக்கிரமா கீழ இறங்கி வர சொன்னாங்க." என்று கூறினான்.
" நம்ம வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா?ஆனா குரு எனக்கு மாத்துரதுக்கு வேற டிரெஸ் இல்லையே? இப்ப என்ன செய்யரது ?" என்று வினவினான்.
அவளை பார்த்து சிரித்த குரு அவளை அங்கிருந்த மற்றொரு அறைக்கு அழைத்து சென்றான்,அந்த அறையில் நிறைய மரவேலைபாடுகளுடன் கூடிய அலமாரிகள் இருந்தது. அதில் ஒன்றில் முழுவதும் பெண்ணிற்க்கு தேவையான அனைத்து வகை உடைகளும் இருந்தது.
அதை பார்தத மலர்," இதெல்லாம் யாரோடது என்று வினவினாள்."
" இதெல்லாம் என்னோட தேவதைக்கு நான் பார்த்து பார்த்து வாங்கினது.எப்பலாம் எனக்கு பிடிச்ச உடையை பார்க்குறேனோ அப்பலாம் உடனே வாங்கிடுவேன் "என்று கூறினான்.
அதில் ஒரு பெண்ணிற்கு தேவையான அனைத்து உடைகளும் இருந்தது.
" உனக்கு எந்த டிரெஸ் பிடிச்சிருக்கோ அதை போட்டுக்கோடா ,நான் ரூம்ல வெயிட் பண்றேன் " என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் குரு.
மீண்டும் ரூமிற்கு வந்த குரு அங்கிருந்த தன்னை சுத்தம் செய்து கொண்டு ஒரு கரு நிற ஷார்ட்ஸ் வெள்ளை நிற டீ ஷெர்ட் அணிந்து கொண்டு தன் மனைவிக்காக காத்திருந்தான்.
சிறு அசைவு கேட்டு நிமிர்ந்து நோக்கிய குரு கரு நீல நிற புடவையில் உடலெங்கும் வெளிர் நீல நிற சிறிய பூக்கள் தெளித்திருக்க தேவதையென அங்குவந்த மலரை இமைக்காமல் பார்தான்.
சந்தன நிற உடலிற்கு அந்த புடவை மேலும் அழகு சேர்த்தது. குருவின் நிலையை கவனியாத மலர் அவனிடம்," என்னங்க வாங்க ரொம்ப நேரமாயிடுச்சு கீழ போகலாம்," என்றவனை அழைத்து வாசல் நோக்கி சென்றாள்.
மலரின் அழைப்பில் தன்னிலை ஆடைந்த குரு வேகமாக தன்னை சமாளித்துக்கொண்டு அவளுடன் இணைந்து கொண்டான்.
இருவரும் கீழே இறங்கி வந்த காட்சியை பார்த்த ராஜகுமார பூபதி மனதிற்குள் தன் மக்களின் பொருத்தத்தை எண்ணி பெருமை கொண்டார்.
இருவரையும் வரவேற்ற அவர் மலரிடம் திரும்பி ,"அம்மா மருமகளே எந்த ஒரு பிரச்சனையையும் நேரா எதிர் கொள்ளனும் , சும்மா பயந்து போயா அந்த இடத்தை விட்டு நகர்துட்டா பிரச்சனை அதிகமாகுமே தவற ஒரு போதும் குறையாது." என சிறு அறிவுறை கூறி சாப்பிட அழைத்து சென்றார்.
பூபதி யின் பேச்சால் மலர் வெட்கமடைந்தாள்.ஆனால் தைரியம் நிறைந்த தன்னால் தன்னுடைய காதலின் தடைகளை எதிர்க்க சக்தி மட்டும் இல்லாததை எண்ணி வருந்தினாள்.
பிறகு அமைதியாக இரவுஉணவை முடித்துக்கொண்டு அனைவரும் வீட்டின் வெளியே லானில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
எப்பொழுதும் குருவின் வீட்டில் இரவு உணவு அனைவரும் ஒன்றாக தான் உண்ண வேண்டும்.அது எழுதப்படாத சட்டம்.அதற்குபின் தோட்டத்தில் அனைவரும் அமர்ந்து , அன்றைய நாளில் நடந்தவற்றை பற்றி பகிர்ந்துகொள்வார்கள்.
இன்றும் அவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் குரு வின் அன்னை," ஆமா மலர் உன்னை கடத்தினவங்க உன்னை ஒன்றும் துன்புருத்தலை யே ?" என்று வினவினார்.
" இல்லை அத்தை எனக்கு மயக்க மருந்து கொடுத்து தான் கடத்துனாங்க, நான் கண்ண முழிச்சு பார்க்கும் போது என்னை கட்டி வச்சிருந்தாங்க." என்று பதிலளித்தாள்.
"அப்ப நீ மயக்கமா இருந்த நேரத்தில என்ன நடந்துச்சு அப்படீனு உனக்கு தெரியாது."
தன் அன்னை எதையோ பேசிக்கொண்டிருக்கிறார் என்று இதுவரை சரியாக கவனிக்காத குரு அவரின் கடைசி வாக்கியத்தை கேட்டு திடுக்கிட்டான்.
" அம்மா நீங்க என்ன சொல்ல வரீங்க?"குரலில் சிறு கண்டிப்பு எட்டிப்பார்க்க கேட்டான்.
" நான் ஒன்னும் சொல்லலை பா .சும்மா தான் பேசிகிட்டு இருக்கேன்" என்று கூறிய அவர், மலரை நோக்கி நீ சொல்லுமா என்று கூறினார்.
தயங்கிம பலர் அமைதியாக ," இல்லை எனக்கு தெரியாது "என்று கூறினாள்.
" நீ கண்ணு முழிச்சு பார்க்கும்போது அங்க யாரெல்லாம் இருந்தாங்க?"
" இரண்டே இரண்டு பேர் மட்டும் தான் இருந்தாங்க, வேற யாரும் இல்லை."
மிகவும் அமைதியாக நிதானமாக குருவை நோக்கிய அவனின் தாய் ," குரு நாளைக்கு நீ மலரை நம்ம டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணிட்டு வந்திடு." என்று கூறினார் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro