Episode 30
குரு கூறியவற்றை கேட்ட மலர் ," இப்படியெல்லாம் கூட ஒரு பெண்ணோட சுயகௌரவத்தை பாதிக்கிற மாதிரி செய்வாங்களா?" என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.
அவளுக்கு பதிலளித்த ஷியாம்," நீங்க வேற சிஸ்டர் அவனோட ஒரிஜினல் பிளான்படி நிறைமதியை கடத்தி இரண்டு நாளுக்கு அப்பறம் அவளை பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது , அதுக்கு அப்பறம் இவனே இவனோட ஆளுங்களை விட்டு மதியை பத்தி தப்பு தப்பா ஊருக்குள்ள பரப்பிவிடுறது தான்."
" இப்படி எல்லாம் பண்றதுனால அவனுக்கு என்ன லாபம்?" மலர்.
குரு," இப்படி நம்ம வீட்டு பொண்ண பத்தி தப்பா சொன்னா அவளை கல்யாணம் பண்றதுக்கு யாரும் முன்வர மாட்டாங்களாம். அப்ப இந்த பொறுக்கி நல்லவன் மாதிரி வந்து நம்ம வீட்டு பொண்ண கல்யாணம் பண்ண கேட்பாறாம். நம்மலும் இவரு எவ்ளோ நல்லவரு அப்படீனு இவருக்கு நம்ம நிறைமதிய கல்யாணம் பண்ணி வெச்சிடுவோமாம்."
" இவ்வளவு முன்னெச்சரிக்கையா செயல் பட்டவன் உங்களை எப்படி மறந்தான்?" மலர்.
மலரின் வார்தைகளை கேட்ட குருவின் உள்ளம் பெருமை கொண்டது. தான் வீரன் என்று ஊராரின் கூற்றில் கர்வமடையாத ஆணின் நெஞ்சம் தன் மனம் கவர்ந்தவளின் சிறிய பாராட்டினால் இந்த உலகை வென்றுவிட்ட இருமாப்பு கொண்டது.
தான் கேட்ட கேள்விக்கு குருவிடமிருந்து பதில் வராததால் அவனை நிமிர்ந்து பார்த்த மலர் அவனின் காதல் பார்வையினால் வெட்கம் பெறுகிட தலையை கீழே குனிந்து அமர்ந்து கொண்டாள். ஆணின் பார்வை நேரானதாகவும் பெண்ணின் பார்வை கள்ளத்தனமாகவும் இருப்து காதலின் சிறப்பு. இங்கும் அதை ஒத்த நாடகம் நடந்து கொண்டிருந்தது.
பின் இருக்கையில் நிலவிய அமைதியினால் திரும்பிப்பார்த்த ஷியாம் இருவரின் நிலை கண்டு சத்தமில்லாமல் முன்னால் திரும்பி வாகனத்தில் தன் கவனத்தை செலுத்தினான்.
காரின் ஹாரன் ஒளியில் முதலில் தன்னிலை அடைந்தது மலர் தான். இன்னும் குரு வின் பார்வை தன் மீதிருப்பதை உணர்ந்த மலர் நன்றாக அவன் கையில் கிள்ளினாள்.
" ஆ........ ராட்ஷசி ஏன் என்னை கிள்ளுன? " என்று சத்தமாகவே கேட்டான் குரு.
மலர் தலையில் அடித்துக்கொள்ள , இதை பார்த்த ஷியாம் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சத்தமாக சிரித்தான்.
தன் நண்பனின் சிரிப்பினால் தாங்கள் இருக்கும் சுற்றுப்புறத்தை நோக்கிய குரு அசடு வழியும் பார்வையை மலரின் கோபப்பார்வைக்கு பதிலாக குடுத்தான்.
அதற்கு பிறகு அங்கு அமைதி நிலவியது. ஆனால் மலரின் மனதிலோ குருவின் அன்னையை இப்பொழுது எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வியே பயத்தை வரவழைத்தது.
மலரின் முகத்தில் தெரிந்த பயத்தை கண்டுகொண்ட குரு அவளை தன் அருகே இழுத்து தன் மீது சாய்த்துக்கொண்டான். ஆதரவாக அவள் கைகளையும் பிடித்துக்கொண்டான். குருவின் இச்செயலால் தெளிந்த மலர் நிம்மதியானாள்.
காலையிலிருந்து ஏற்பட்ட பல்வேறு செயல்களினால் சோர்ந்து போயிருந்த மலர் குருவின் ஆறுதலான அணைப்பில் கண் அயர்ந்தாள்.
மலர் உறங்கியதை உறுதி செய்த ஷியாம," குரு மலர திரும்ப இங்க கூட்டிட்டு வரது சரியா??ஏற்கனவே உங்க அம்மா நீ செஞ்ச செயலால மலரை தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க, இதுல ஒருத்தன் மலரை கடத்திட்டு வேற போயிருக்கான் ,அதுக்கு அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க எல்லாம் யோசிச்சியா? இன்னோறு புறக்கணிப்பை மலர் தாங்க மாட்டாங்க."
தன் நண்பனின் கவலையைபுரிந்து கொண்ட குரு," மச்சி ரொம்ப தாங்ஸ்டா. என் மேல நீ காட்ற அன்புக்கு. என்னோட மலரை பத்தி நீ கவலை படறது எனக்கு சந்தோஷம் தான்( என்னோட மலர் னு சொன்னதன் மூலம் நான் அனைத்தையும் யோசிக்காமல் இல்லை என்பதை மறைமுகமாக தெரியப்படுத்தினான் அந்த காதல் கணவன்)
நீ சொன்ன எல்லாத்தையும் நானும் யோசிச்சேன் , ஆனால் இந்த ராத்திரில மலரை கூட்டிட்டு வேற இடத்துக்கு போக சரியா வராது அது மட்டுமில்லாமல் வீட்டில அப்பா இருப்பாங்க அவங்க முன்னாடி அம்மா மலரை உதாசினப்படுத்தவோ அவமானபடுத்தவோ மாட்டாங்க அப்படீனு நினைக்கறேன். எல்லாத்துக்கும் மேல நிறைமதிக்கு பதிலா மலரை கடத்திட்டாங்க அப்படீனு அம்மாவுக்கு தெரியும் சோ அவங்க மலர் கிட்ட வெறுப்பு காட்ட மாட்டாங்க னு நான் நம்புறேன்." என்று நீளமாக பேசினான்.
" உன்னை பத்தி தெரிஞ்சிருந்தும் நான் ஏன் இப்படி யோசிச்சேனு தெரியலை நண்பா?" ஷியாம்.
" ஏய் லூசு சும்மா உளறாம வாடா.நீ அக்கறையால தான கேட்ட அதுனால ஒரு தப்பும் இல்லை." என்று கூறிமுடிக்கவும் அந்த கார் குருவின் வீட்டிற்குள் பிரவேசிக்கவும் சரியாக இருந்தது.மலரை லேசாக எழுப்பிய குரு அவள் எழுந்ததும் கண்களில் வெளியே சுட்டிகாட்டினான். தாங்கள் குருவின் வீட்டிற்குள் நுழைந்துவிட்டோம் என்று தெரிந்துகொண்ட மலர் பயத்தினால் அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
மலரின் பயத்தை புரிந்துகொண்ட குரு," கவலை படாதடா. இந்த தடவை எந்த தப்பும் நடக்காது. அப்படி ஏதாவது நடந்தா நம்ம அந்த நிமிஷமே வெளியேரிடலாம்." என்று தைரியமூட்டினான்.
குருவின் வார்த்தைகள் தந்த தைரியத்தில் காரில் இருந்து இறங்கிய மலர் மீண்டும் குருவின் அருகே வந்து அவனின் கைகளை பிடித்துக்கொண்டாள்.
மூவரும் வீட்டுவாசலை அடைய அங்கு அவர்கள் கண்டகாட்சியில் உறைந்து நின்றனர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro